வியாழன், 26 டிசம்பர், 2013

இராமாயணம

கே. ஈஸ்வரலிங்கம் 10487) கும்பகர்ணனின் மகன் யார்? கும்பன் 10488) ஜனகரின் தம்பி யார்? குசத்வஜன் 10489) மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை யார்? குசத்வஜன் 10490) பரத் சத்ருக்கனின் மாமனார் யார்? குசத்வஜன் 10491) தசரதரின் பட்டத்தரசியர் யார்? கெளசல்யா, கைகேயி, சுமித்திரை 10492) ஜனகரின் மனைவி யார்? சுநைனா 10493) சீதையின் தாயாரின் பெயர் என்ன? சுநைனா 10494) அகல்யையின் கணவர் யார்? கெளதமர் 10495) அகல்யையின் மகன் யார்? சதானந்தர் 10496) சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர் யார்? சதானந்தர் 10497) மதங்க முனிவரின் மாண வன் யார்? சபரி 10498) ராமனை தரிசித்தவர் யார்? சபரி 10499) போரில் தசரதர் தேவர்களுக்கு உதவியவர் யார்? சிம்பராசுரன் 10500) வடக்கு திசையில் சீதையை தேடச் சென்றவர் யார்? சதபலி 10501) கழுகரசன் ஜடாயுவின் அண்ணன் யார்? சமபாதி 10502)சீதையைக் காண அங்கதனின் படைக்கு வந்தவர் யார்? சமபாதி 10503) ராமனின் மனைவி யார்? சீதா 10504) சீதாவுக்குரிய வேறு பெயர்கள் என்ன? ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனக்குமாரி, மைதிலி.

திங்கள், 16 டிசம்பர், 2013

திருநீறு

கே. ஈஸ்வரலிங்கம் 10473) திருநீறு என்பது என்ன? திருநீறு சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். 10474) திருநீறு வேறு எவ்வாறு அழைக்கப்படும்? விபூதி, ஐசுவரியம் என்றும் கூறப்படும். 10475) திருநீறு உணர்த்தும் தத்துவம் என்ன? எத்தகையினராக இருந்தாலும் மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார் எனும் தத்துவத்தை இது உணர்த்துகிறது. 10476) மனித உடலில் மிக அதிகமாக சக்தி வெளிப்படும் பாகம் எது? மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கி யமான பாகம்.அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதேபோல் உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸ்தானம் ஆகும். 10477) திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? திருநீறு அணிவதால் தடையற்ற இறை சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல் வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலமும் இரத்த ஓட்டமும் சீர்படும். 10478) நெற்றியில் திருநீறு பூசுவது ஏன்? சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழி யாக கடத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்யும். அதனால் தான் நெற்றியில் திருநீறு பூசு கிறார்கள். இதனால்தான் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்பார்கள். 10479) சைவ சமய மக்களுக்கு மிக முக்கியமான மூன்றும் எவை? சைவ சமய பெருமக்களுக்கு திருநீறு, உருத் திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமை யாதவையாகும். 10480) விபூதி என்பது என்ன? பசுவின் சாணத்தை எடுத்து அத னை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். 10481 விபூதி தரிப்பதால் விளை யும் வேறு நன்மைகள் என்ன? விபூதி தரிப்பதால ஆன்மீக சம்பந்தமான நன்மைகள் விளை வதுடன், உடல் நலம் சார்ந்த நன்மைகளும் உண்டா கும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினி யும் கூட. அதனை உடல் முழுவதிலும் பூசுவதால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறு கிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர் க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது. 10481) திருநீறின் பெருமையை பாடியவர் யார்? திருஞானசம்பந்தர் 10482) திருநீறின் பெருமையை திருஞான சம்பந்தர் எந்த பதிகத்தில் பாடினார்? தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். 10483) திருநீறு அணியும் போது கூற வேண்டிய மந்திரம் எது? சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்ற ஏதாவ தொரு பஞ்சாட்சர மந்திரம் 10484) திருநீறை எவ்வாறு அணிய வேண்டும்? பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி நெற்றி முழுவதும் அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடு களாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். 10485) திரிபுண்டரிகமாக திருநீற்றினை அணிய பயன்படும் விரல்கள் மூன்றும் எவை? ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும், 10486) திருநீறை எந்த திசையை நோக்கியபடி அணிதல் வேண்டும். முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். உடலுக்கும் உயிரிற்கும் இம்மை யிற்கும் மறுமைக்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாமும் அணிந்து உயர்வடைவோம்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

இராமாயணம்

கே. ஈஸ்வரலிங்கம் 10452) இராமனின் அருளால் சாபம் நீங்கப் பெற்றவர் யார்? அகல்யை 10453) இராமனுக்கு போர் களத்தில் ஆதித்ய ஹருதயம் உபதேசித்த மாமுனிவர் யார்? அகத்தியர் 10454) இராவணனிடம் இராமனைப் பற்றி கோள் சொன்னவன் யார்? அகம்பனன் 10455) இராமனின் அம்புக்கு தப்பிப் பிழைத்த அதிசய இராட்சஷன் யார்? அகம்பனன் 10456) வாலி, தாரையின் மகன் யார்? அங்கதன் 10457) கிஷகிந்தையின் இளவரசன் யார்? அங்கதன் 10458) அனுசூயா என்ற பத்தினியின் கணவர் யார்? அத்திரி 10459) இராம தரிசனம் பெற்றவர் யார்? அத்திரி 10460) இராவணன் மகன் யார்? இந்திரஜித் 10461) இந்திரஜித் யாரால் அழிந்தான்? லட்சுமணனால் 10462) மேகநாதன் என்ற பெயரை உடையவன் யார்? இந்திரஜித் 10463) இராவணனின் தம்பிகள் யார்? கரன், தூஷணன் 10464) இராமனின் கையால் அழிந்தவர்கள் யார்? கரன், தூஷணன் 10465) ஜனஸ்தானம் என்ற இடத்துக்கு அதிபதிகள் யார்? கரன், தூஷணன் 10466) தலையும் காலும் இல்லாத அரக்கன் யார்? கயந்தன் 10467) இராமனால் வதைக்கப்பட்டவன் யார்? கயந்தன் 10468) கந்தவர் வடிவம் பெற்று இராம லட்சுமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவர் யார்? கயந்தன் 10469) வேடர் தலைவன் யார்? குகன் 10470) படகோட்டி யார்? குகன் 10471) இராவணனின் தம்பி யார்? கும்பகர்ணன் 10472) எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன் யார்? கும்பகர்ணன்

செவ்வாய், 3 டிசம்பர், 2013

காலியில் அருள்பாலிக்கும் கதிர்வேலாயுத சுவாமி

தென் மாகாணத்தின் எழில் அழகை இன்னும் மெருகூட்ட அதன் தலைமை நகராக காணப்படும் காலியூரில் அற்புதமான கடல் பார்க்கும் சுவாமியான எம் பொருமான் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி வீற்றிருக்கிறார். ஜாதி, மத பேதமின்றி குறிப்பாக பெளத்த மதத்தவர் விரும்பி வணங்கும் அளவிற்கு அனைத்து மக்களுக்கும் நாமிருக்க பயமேன் என நிமிர்ந்து நிற்கும் எம் பெருமான் அருள்பாலிக்கின்றார். 1790 ஆம் ஆண்டு தேவகோட்டை செட்டியார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் கோவில் இந்த ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலாகும். இக்கோவில் மட்டுமல்லாது உனவட்டுன பிள்ளையார் கோவிலும் இதன் பின் அமைக்கப்பட்டது. இலங்கையில் மேலும் பல கோவில்கள் அமைக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட செட்டிமார் தமது வியாபாரத்தை இந்த காலி ஊரிலேயே முதன் முறையாக ஆரம்பித்தார்கள். இவர்கள் பர்மா ஊரிலிருந்தே அரிசி இறக்குமதி செய்தார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியை கிட்டங்கி என்ற இடத்திலும், டெல்பட்டவுன் வோட்ஸ் வீதி என்ற இடத்திலும் களஞ்சியப்படுத்தி வியாபாரிகளிடையே விநியோகித்தார்கள். இக்காலகட்டத்திலேயே இவர்கள் பர்மாவில் பர்மா டீக் எனப்படும் தேக்க மரக்கட்டைகளை கொண்டு வந்து ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலை நிர்மாணித்தார்கள். இதன் பின் இவர்கள் தமது வருவாயை கொண்டு வங்கித் தொழில், நகை அடகு பிடிக்கும் தொழில் என்பன மேற்கொண்டார்கள். செட்டியார்களாலேயே நிர்வகிக்கப்பட்ட இக்கோவில் 1956 இதற்கு முன் வைரவன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், சொக்கலிங்கம் செட்டியார், பழனியப்பச் செட்டியார், ராமசாமி செட்டியார் ஆகியோரால் சிறப்பாக பரிபாலிக்கப்பட்டது. 1956 இதிலிருந்து 1981 வரை பெரிஸ்டர் சோமசுந்தரம் செட்டியாரால் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் 1981 இதிலிருந்து கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பு தற்போது உள்ள பிரிபாலன சபையான கருப்பன் செட்டியார் அண்ணாமலை செட்டியார் ஏ. எஸ். சீ. முத்தப்பச் செட்டியார் (ஜே.பி.), கே. மாணிக்கம் செட்டியார் (ஜே.பி.) சின்னையா ராமனாதன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவிலில் ஆடிமாதம் நடக்கும் ஆடிவேல் திருவிழா தான் தென் மாகாணத்திற்கே முதன்மை வகிக்கிறது. இத்திருவிழாவில் சுவாமி வீதி வலம் வரும் ரதமே இலங்கையிலேயே பெரிய ரதமாக காணப்படுகிறது. 1973 ஆம் ஆண்டின் பின் இந்த ரதம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 1983 இல் நடந்த இனக் கலவரத்தில் இந்த ரதம் தீக்கிரையாகி சேதமடைந்தது. இன்று வரை அதை மீள்திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.இக்கோவிலில் நகராத்திரி திருவிழா, கந்தசஷ்டி திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பூஜைகள் என்பன விமர்சையாக நடைபெறுகின்றன. கதிர்காமத்திற்கு பயணிக்கும் யாத்திரிகள் தென் மாகாணத்தில் அமைந்துள்ள முதல் முருகன் கோவிலான இக்கோவிலை தரிசித்து விட்டே அவர்களது பயணத்தை தொடர்வர். புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட வியக்குமளவிற்கு இக்கோவிலின் உட்புறமாக வரையப்பட்டுள்ள வண்ணச் சித்திரங்களும் அற்புதமான தேக்கு மர வேலைப்பாடுகளும் முருகனை தரிசிக்க வருபவரை மெய்மறக்கச் செய்கின்றன. இவை இக்கோவிலின் ஒரு விசேட அம்சமாகும். இக்கோவில் நம்மவர்களால் மட்டுமன்றி வெளிநாட்டவர்களாலும் போற்றப்படுகிறது.

கே. ஈஸ்வரலிங்கம்

(10440) இரவில் உணவில் சேர்க்கக் கூடாதவை யாவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் (10441) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தைப் பரிமாறலாமா? கூடாது. (10442) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளையோ, அப்பளத்தையோ அல்லது உப்பையோ பரிமாறலாம். மூக்குத்தி (10443) மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் ஏற்படும் நன்மைகள் எவை? உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. (10444) தங்கத்துக்கு உள்ள ஆற்றல்கள் என்ன? உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கக்கூடிய ஆற்றல் உண்டு. (10445) ஏன் பெண்கள் மட்டும் மூக்குக் குத்திக்கொள்கிறார்கள்? ஆண்களின் மூச்சுக் காற்றைவிட பெண்களின் மூச்சுக் காற்றுக்கே சக்தி அதிகம் என்பதால் (10446) மூக்குக் குத்துவதால் உண்டான வேறு நன்மைகள் யாவை? சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்த ரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத் தடுமாற்றம் போன்றவற் றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. பொது (10447) விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்? மாலைநேரம் வழிபாட்டிற்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பாள் என்பது ஐதீகம். அந்தச் சமயத்தில் பெண்கள் விரித்த கூந்தலுடன் நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன் மாலை 5.30 மணிக்குள் தலைவாரி, பூ வைத்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள் வது சிறப்பைத் தருமென்பது சான்றோர் வாக்கு. (10448) கோயில்களில் மணி அடிப்பது எதற்காக? மணிச் சத்தம் அதிம்ம் போது ‘ஓம்’ என்ற பிரணவம் எழுகிறது. ஆத்மார்த்த சிந்தனையுடன் இறைவனுடன் கருத் தொருமித்துக் கேட்டால் இந்த நாதத் தைக் கேட்கலாம். இதற்கு ‘எல்லாம் நானே’ என்பது பொருள். இருப்பவை யாவும் இறைவனே என்ற பொருளை உணர்த்து வதே மணியோசை. (10449) திருமணமான பெண்களை ‘திருமதி’ என அழைப்பது ஏன்? திருமணத்திற்கு முன் ஆண்கள் பொறுப்பற்றவர்களாக வீண் செலவுகள் செய்பவர்களாக இருப்பார்கள். திருமணத்தின் பின் அவள் அவர்களைத் திருத்திவிடுகிறாள். கணவனின் வரம்புமீறிய செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இல்லத்தில் லட்சுமிகடாட்சம் ஏற்படுகிறது. இவ்வாறு திருவையும் மதியையும் இணைத்து அவள் திருமதி என அறியப்படுகிறாள். (10450) கோயிலுக்குச் சென்றால் நேராக வீட்டுக்குத் தான் வரவேண்டுமென்பது ஏன்? நாம் கோயிலுக்குச் சென்று மனத்தின் மாசுக்களைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால் நமது புனிதத் தன்மை பாதிப்பிற்குள்ளாகாத இடங்களுக்குச் செல்வது தவறில்லை. ஆலயத்திற்குச் செல்லும் முன் ஆண்ட வனுக்குப் படைக்கப்படுகின்றனவற்றை ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே நன்மை பயக்கும். (10451) புதுமனைகளின் திருஷ்டி பூசணிக்காய் தொங்க விடுவதன் நோக்கம் என்ன? கண்ணூறு கழித்தல் என்பது எமது பண்டைய மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநலமும் உல்நலமும் பாதிக்கப்படுகின்றனவென்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. திருஷ்டிதோஷம் என்பது இதுவே, இவ்வளவு அழகாக வீடு கட்டியுள்ளார்களே என யாராவது பொறாமையோடு பார்த்தால் திருஷ்டிதோஷம் ஏற்படும். தொங்கவிடப்படும் பூசணிக்காயும் அதில் வரையப்பட்டிருக்கும் வடிவமும் பார்ப்போர் கவனத்தைத் திசைதிருப்பும் புது வீட்டை முழுமையாகப் பார்ப்பதிலி ருந்து அவரது கவனம் சிதறும். இதன் காரணமாக திருஷ்டி தோஷம் குறையும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812