வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஹெலன் குமாரி


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜெயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவர், இவரது வீட்டுக்கருகில் மேட்டுத் தெருவிலுள்ள புனித அன்னம்மாள் பெண்கள் பாடசாலையில் படித்தார். பாடசாலையில் படிக்கும் போதே நடனத்தில் தேர்ச்சி பெற்றார். பாடசாலையில் நடைபெறும் விழாக்களில் நடனமாடிக் கலந்து கொண்டார்.

இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது, "மனோரஞ்சித கான சபா" ராஜேந்திரா மாஸ்டர் இவரை கலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மனோரஞ்சித கான சபாவில் கலை நிகழ்ச்சிகளை அளித்து வந்தார். பின்னர் பிரபல சிங்களத் திரைப்பட நடன இயக்குநர் ரொனால்ட் பெர்னாண்டோவிடம் மேற்கத்தைய நடனத்தையும் கற்று வந்தார். சிங்கள திரைப்பட இயக்குநர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் 1970 ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் எம். வி. பாலனுடன் இணைந்து நடனமாடினார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடியுள்ளதோடு நடன இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சின் உதவியுடன் எம்.வி.பாலன் தயாரித்த மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான லெனின் மொராயசின் "நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனாலும், இத்திரைப்படம் திரைக்கு வரும் முன்னரே இதன் திரைப்படச்சுருள் 83 ஜுலை கலவரத்தில் தீக்கிரையானது. அதே போன்று காமினி பொன்சேகாவுடன் இவர் இணைந்து நடித்த "இளைய நிலா" திரைப்படத்தை நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்திருந்தார். அதுவும் ஜூலைக் கலவரத்தில் எரிந்து போனது.
பிரபல எழுத்தாளர் மானா மக்கீன் தயாரிப்பில் உருவான "டயல் எம்-போர்-மேடர்" என்ற நாடகமே இவரது முதல் தமிழ் மேடை நாடகமாகும். அவர் தயாரித்த விட்னஸ்-போர்-த பிரசிகியூசன் என்ற நாடகத்திலும் நடித்துப் பார்ராட்டைப் பெற்றார்.
கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் ஆனந்தா புரடக்சன்சு தயாரித்த பல நாடகங்களில் ஹெலன்குமாரி நடித்திருக்கிறார். அவரது தயாரிப்பில் உதயகுமார் கதை வசனத்தில் தயாரான ‘தாலிக்கொடி’, நீர்கொழும்பு முத்துலிங்கம் மாஸ்டரின் உண்மை பேசும், உதயகுமாரின் ராம் ரஹீம் ரீட்டா, போன்ற நாடகங்கள் கொழும்பின் டவர், லும்பினி, கதிரேசன் மண்டபங்களில் பல முறை மேடையேறியன.

ஆர்.ராஜசேகரனுடன் இணைந்து ‘வெள்ளி நிலா காலாலயம்’ என்ற அமைப்பை ஏற்று நடத்தினார். "முக்கோணத்தில் மூவர்" கலாலயத்தின் முதல் நாடகமாக மேடையேறியது. அதைத் தொடர்ந்து "ஒன்று எங்கள் ஜாதியே", "கெரி ஒன் டிரக்டர்" போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. "கெரி ஒன் டிரக்டர்" என்ற நகைச்சுவை நாடகம் ரூபவாகினியில் பல முறை ஒளிபரப்பப்பட்டது.

வெள்ளி நிலா கலாலயத்தின் நிறுவனர் ஆர். ராஜசேகரையே இவர் 1985 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு விக்ரம், கார்த்திகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

ஆடி என்னும் பெயா் எப்படி வந்தது?



ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந்தினைப் பயன்படுத்த வேண்டும்.

அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?



நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

சிவன் கோயில்களில்

“நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இவ்வாறு சொல்ல வேண்டியது எந்த ஆலயங்களில்?

சிவன் கோயில்களில்

"நம: பார்வதீ பதயே" என்பதற்கு என்ன விளக்கம்?

பார்வதிதேவிக்கு பதியாக இருப்பவர் என்று அர்த்தம்.

இதில் பதி என்பதற்குரிய பொருள் என்ன?

கணவர்

பார்வதி தேவியின் கணவராக இருப்பவர் யார்?

பரமசிவன்.

பார்வதியின் அதிபதி யார்? பரமசிவன்

இவரை ஏன் “பார்வதீபதி’ என்கிறார்கள்?

அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால்

தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் இவரை எப்படி அழைப்பார்கள்?

நம: பார்வதீ பதயே என்பது ஏன் ?

“திருஞானசம்பந்தர்” ஊர் ஊராக “ஹர ஹர” நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து ஜனங்களும் “அரோஹரா” என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. “என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும்! அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்” என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார்.

இப்போது “நம: பார்வதீபதயே!” என்று ஒரு பெரியவர் சொல்ல, உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு “”ஹர ஹர மகாதேவா” என்று சொல்கிறார்கள்.

அறநெறி பாடசாலை ஆசிரியருக்குரியது



16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன?

“கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே”

16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன?

சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலர வைத்து அவர்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் விரிவடைய வைக்கும் கல்வியை வழங்குவதே ஆகும்.

16260) அறநெறிக் கல்வியின் “குறிக்கோள் வாசகம்” என்ன?

சிறார்களின் மனம் ஏற்றுக்கொள்கின்ற பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு தெரிந்துகொள்ளவும் ஒழுக்கந்தரும் பழக்கங்களை வளர்ந்துக்கொள்ளவும் மனதிலும் உணர்விலும் அறிவிலும் நீதிநெறி வழியிலும் ஆன்மீகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் பயிற்சி யளித்து வழிகாட்டி ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதே ஆகும்.

16261) அறநெறிக் கல்வியின் குறிக்கோள்கள் எத்தனை? பத்து

16262) அந்த பத்து குறிக்கோள்களும் எவை?

1.இந்து வாழ்ககை முறைகளை கற்கவும் அதன்படி வாழவும் சிறுவர்களுக்கு உதவுதல்,

2. கடமை, பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்தை பதிய வைத்தல்

3. உள்ளார்ந்த மனித மதிப்புகளின் புரிதலுக்கும் நடைமுறைக்கும் ஊக்கமளித்தல்

4. ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அடக்கியாளவும் ஒழுக்கத்தை பேணவும் பயிற்சியளித்தல்

5. சிறார்களின் எண்ணம், சொல், செயலில் தூய்மையும் ஒற்றுமையும் இருக்க வழிகாட்டுதல்,

6. சரியானதற்கும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காண்பதற்காக உள்ளிருக்கும் தெய்வீகத்தை பின்பற்ற பயிற்சியளித்தல்,

7. கடவுளுக்குச் சேவை செய்வதற்கான வழிமுறைகளையும் அருளாளர்களது வாழ்க்கையையும் போதனைகளையும் பின்பற்றி சுயநலமற்ற சேவையை வழங்க பயிற்சி அளித்தல்

8. இந்து கலாசாரப் பண்பாட்டுக் கூறுகளில் அறிவு மற்றும் ஆளுமை விருத்திக்கு பயிற்சியளித்தல்,

9. நம்பிக்கைகளுக்கும் மனித குலங்களுக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து சிறார்கள் நன்கு அறிந்திருக்க உதவுதல்,

10. நேர் விளைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால தலைவர்களாக வளர்வதற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களை வளர்க்க உதவுதல்

16263) அறநெறிக் கல்வி மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமைகளை எத்தனை நிலையங்களில் மலரச் செய்கிறது?

ஐந்து

16264) அந்த ஐந்து நிலைகளையும் தருக

1. புத்தி சார்ந்த நிலை

2. உடல் சார்ந்த நிலை

3. உள்ளம் சார்ந்த நிலை

4. மனம் சார்ந்த நிலை

5. ஆன்மீக நிலை

16265) அறநெறிக் கல்வி வழங்குகின்ற அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16266) அந்த ஐந்து அடிப்படைக் கற்பித்தல் நுட்பங்களும் எவை?

1. அமைதியாக அமர்தல்

2. பிரார்த்தனை

3. இசை மற்றும் குழுவாகப் பாடுதல்

4. கதை கூறல

5. குழுச் செயற்பாடுகள்

16267) உயர் கற்பித்தல் நுட்பங்கள் எத்தனை?

ஐந்து

16268) அந்த ஐந்து உயர் கற்பித்தல் நுட்பங்களையும் தருக

1. தியானம்

2. யோகா (சூரிய நமஸ்காரம்)

3. தலைமைத்துவப் பயிற்சி

4. சேவைத் திட்டங்கள்

5. கருத்தரங்குகள்

16269) அறநெறி பாடசாலை எத்தனை பிரிவுகளாக இயங்குகிறது?

நான்கு

16270) அந்த நான்கு பிரிவுகளும் எவை?

பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, இளைஞர் பிரிவு

16271) பாலர் பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 1,2

16272) எத்தனை வயது பிள்ளைகள்? 5,6,7

16273) கீழ்ப்பிரிவுக்குள் அடங்குகின்ற வகுப்புகள் என்னென்ன? 3,4,5

16274) எத்தனை வயது பிள்ளைகள்? 8,9,10

16275) மத்திய பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன? 6,7,8

16276) என்னென்ன வயது பிள்ளைகள்? 11,12,13

16277) மேற்பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னென்ன?9,10,11

16278) என்னென்ன வயது பிள்ளைகள்?14,15,16

16279) இளைஞர் பிரிவுக்குள் அடங்கும் வகுப்புகள் என்னெனன? 12,13

16280 ) என்னென்ன வயது பிள்ளைகள்? 17,18,19

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

MGR and Pattakkannu Thiyagarajah

பட்டக்கண்ணு நகை மாளிகையின் அதிபர் எஸ். ஏ. தியாகராஜா காலமானார். 1967 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜீ. ஆர் இலங்கைக்கு வந்தார். அவரையும் அவருடன் சரோஜாதேவியையும் இலங்கைக்கு வரவழைத்த பெருமை அவரையே சாரும். அதுபற்றி தியாகராஜா கூறியதை மீட்டிப் பார்க்க வேண்டிய தருணம் இதுவென்று எ ண்ணுகின்றேன்.
சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். இவர்களை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புது செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தோம். எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே

முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது. ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை.

அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812