செவ்வாய், 31 ஜூலை, 2018

அட்சய திரிதியை



அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் என்ன?
எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது,


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன? இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான தருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.


பூரியசஸ் மன்னருக்கு மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் எது? திரிதியை.


திரிதியை “அட்சய திரிதியை” ஆனது எப்படி?
அந்த நல்ல நாளில் செய்யும் தான தருமங்கள் “அட்சய பாத்திரம்” போல அளவற்ற பலனைக் கொடுக்கும் என்பதால் திரிதியை தினத்தை “அட்சய திரிதியை” என்று சொல்லும் வழக்கம் வந்தது.


“அட்சயம்” என்ற சொல்லுக்குாிய பொருள் என்ன?
இந்து மதத்தை பொறுத்தவரை “வளருதல் அல்லது என்றுமே குறையாதது” என்னும் பொருளே “அட்சயம்”,


பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்தது எப்போது?
அக்ஷய திருதியை அன்று


பரசுராமர் அவதரித்தது எப்போது?
அட்சய திருதியையன்றுதான்.


அக்ஷய திருதியை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
நவன்ன பர்வம்


அக்ஷய திருதியை எந்த நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது?
ரோஹிணி நட்சத்திரத்துடன்

ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம்




ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும்.

ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்று சொல்வார்கள். சிலர் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்று சொல்வார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் ஆடி மாதத்து அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற பின்னிப் பிணைந்துள்ளன.

அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள்.உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

“ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி படித்தால் முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

நமக்கு என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும் அப்படியிருக்கும்போது ........?








ஆசிரமம் ஒன்றிலிருந்த சீடன் ஒருநாள் ஆசிரம வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தான். மரம் நன்றாக வளர வேண்டுமென்பதற்காக `ஆண்டவரே, இந்த மரக்கன்று சீக்கிரம் வளர வேண்டும். எனவே நிறைய மழை பெய்ய வேண்டும்' என்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளின்படி இறைவன் மழை பொழியவைத்தார். மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இடைவிடாமல் பெய்த மழையால் அந்த மரக்கன்று நீரில் நன்றாக ஊறியிருந்தது. இதைக் கண்டு பயந்த சீடன், `இறைவா, மழை பெய்தது போதும். மழையை நிறுத்திவிட்டு வெயில் அடிக்கும்படிச் செய்யும்..!' என்று வேண்டினான். சீடனின் வேண்டுகோளுக்கிணங்க மழை நின்றது, வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் அந்தச் செடி வாடத் தொடங்கியது. இதைக் கண்டு சீடன் பதறிப்போனான்.
உடனே இறைவனிடம் சென்று மீண்டும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தான். `இறைவா... வெயிலும் வேண்டாம் மழையும் வேண்டாம்; பனி பொழியட்டும்!' - சீடனின் விருப்பப்படி பனி பெய்தது. மழை, வெயில், பனி என தட்பவெப்பநிலை ஏகத்துக்கும் மாறியதால் அந்தச் செடியால் தாக்குபிடிக்க முடியாமல் பட்டுப்போனது. இதனால் மனவேதனையடைந்த சீடன் ஆசிரம குருவிடம் போய், `இந்த இறைவனுக்கு கருணையே கிடையாது. அவரால் நான் நட்டுவைத்த செடி பட்டுப்போனது' என்று புலம்பினான். `என்ன நடந்தது..?' என்று சீடனிடம் விவரமாகக் கேட்டறிந்தார் குரு. அதையடுத்து சீடனிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது `தன் படைப்பில் எதற்கு எப்போது என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். நீ உன் சுயநலத்துக்காக அதை மாற்ற நினைத்து வேண்டுகோள் வைத்தால் இப்படித்தான் நடக்கும்' என்று கூறினார். குருவிடம் பேசியதையடுத்து அந்த சீடனுக்கு தெளிவு வந்தது. நேராக ஆசிரம வளாகத்தில் புதிதாக ஒரு மரக்கன்றை நட்டுவைத்தான். உடனே இறைவனிடம் `இறைவா இந்த மரக்கன்றை நீரே பார்த்துக் கொள்ளும்' என்று ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தான் சீடன். இறைவனின் விருப்பத்துக்கே விட்டுவிட்டதால் அந்த மரக்கன்றை பெரிய மரமாக வளரச் செய்து, அது பலன் கொடுக்கவும் அருள்பாலித்தார். நம் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது ........?

பிதுர் தர்ப்பணம்




அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசையும் தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும் தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும் பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும் தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி அமாவாசையன்று `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர். விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.

காகங்களுக்கும் ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம் `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர்.



தர்ப்பணம் செய்வது எப்படி!

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்

பாவம் நீங்கும்:

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

ராமேசுவரத்தில் நீராடுவது?

ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள். ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இன்று ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

ஆடி அமாவாசை விரதம் என்றால் என்ன?

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் காலம் எனப்படும். மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்.சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. அம்மாவாசை அன்று மட்டும் அல்ல தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.

திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவாசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு


தென்கிழக்காசியாவின் மலேசியத் திருநாட்டிற் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து எம்பெருமான் முருகவேளின் மகோன்னத புகழை உலகுக்கு அறியச் செய்யும் வகையில் முருகபக்தி மாநாடுகளை உலகெங்கும் நடாத்திவரும் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருப்பீடம் 2012 ஆம் ஆண்டில் முதலாவது முருகபக்தி மாநாட்டினை மலேசியாவிலும் இரண்டாவது முருகபக்தி மாநாட்டினை 2014 இற் சுவிற்சர்லாந்திலும் 2016 ஆம் ஆண்டு மூன்றாவது முருகபத்தி மாநாட்டினைத் தென்னாபிரிக்காவிலும் சிறப்புற நடாத்தியதோடல்லாமல் 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஏழாம் நாள் நடைபெற்ற மூன்றாவது முருகபக்தி மாநாட்டின் வைபவத்தில் மலேசியா திருமுருகன் திருவாக்குத் திருப்பீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் நான்காவது முருகபக்தி மாநாட்டினை ஈழத்திரு நாட்டின் இந்து மத அலுவல்கள் அமைச்சுப் பொறுப்பேற்று நடாத்தும் வகையில் ஞானச் செங்கோல் கையளிக்கப்பட்டது. 


இச் சீர்மிகு நிகழ்வு “நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு – 2018” ஆக இந்து மத அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயக் கலையரங்கில் 2018 ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மூன்றாம் நான்காம் மற்றும ஐந்தாம் திகதிகளில் நிகழ்ந்தேற முருகப் பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.


“உலகெங்கும் கோயில் கொண்டு விளங்கும் பெருமானின் அருட்புகழை வேதாகம புராண இதிகாச இலக்கிய பன்னிரு திருமுறை சித்தர்நெறி என முருக ஆராதனையின் பன்முக ஆய்வின் வண்ணம் பக்திநெறியை நிலைநிறுத்தல்” என்கின்ற பிரதான நோக்கினையும் முருக வழிபாட்டின் உண்மை நெறியை உலகறியச் செய்தல் முருகப் பெருமான் வழிபாட்டினையும தத்துவங்களையும் உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்லுதல் உலகின் பல பாகங்களில் வாழும் முருக பக்தர்களை ஒருங்கிணைத்தல் முருகப்பெருமான் குறித்த பல்துறை ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைப் படைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் களமமைத்துக் கொடுத்தல் மாநாட்டிற் படைக்கப்படும் விவாதிக்கப்படும் செய்திகளை நூல்வடிவிற் பதிவு செய்தல் இளந்தலைமுறையினரிடையே முருக வழிபாடு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் முதலான இதர நோக்கங்களை முன்னிறுத்தியே இம் முருகபக்தி மாநாடுகள் உலகளாவிய ரீதியில முன்னெடுக்கப்படுகின்றது.


நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டிற் பங்கெடுக்கும் அருளாளர்கள் வரிசையில் புரவலரும் மாநாட்டுக் குழுவின் அருட்தலைவரும் மலேசிய திருமுருகன் திருவாக்குத் திருப்பீட முதல்வருமாகிய தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்களும் இந்தியத் திருநாட்டிலிருந்து திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சீர்வளர் சீர்ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் அவர்களும் சிரவணபுரம் கௌமார மடாலய மடாதிபதி முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களும் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீன சீர்வளர சீர்சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் அவர்களும் ஈழமணித் திருநாட்டின் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களும் வருகைதந்து அருளுரை வழங்கவுள்ளதோடு சிவாச்சாரியார்களின் ஆசியுரைகளும் இம் மாநாட்டைப் பக்திமயமாக்கவுள்ளன.

மேலும் இம் மாநாட்டின் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமாகிய கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி (Dr) பொ.சுரேஷ் அவர்களும் மேனாள் மலேசியத் துணை அமைச்சர் தான்ஸ்ரீ-டத்தோ க.குமரன் அவர்களும் மலேசியா சக்தி அறவாரியத் தேசியத் தலைவர் திருக்கயிலைச் செல்வர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வேந்தரும் இந்துப் பண்பாட்டு நிதியத் தலைவருமான பேராசியர் சி.பத்மநாதன் அவர்கள் மற்றும் எம் நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புகழ்பூத்த பேராசிரியர்களும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்கள் இந்திய தேசத்துப் புலமையாளர்களாகப் பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் முனைவர் சிவஸ்ரீ எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார் அவர்கள் பேராசிரியர் சிவகுமார் அவர்கள் முதுமுனைவர் திரு சக்திவேல் முருகனார் அவர்கள் முதலானோரும் புத்திஜீவிகள் நிர்வாகிகள் சமூக சமய ஆர்வலர்கள் ஆலய அறங்காவலர்கள் அறநெறிப்பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலதிறத்தோரும் இம்மாநாட்டைச் சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்தரங்கம் சிறப்புப் பேச்சுக்கள் ஆகியனவும இம் முருகபக்தி மாநாட்டை அலங்கரிக்கவுள்ள நிலையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தலைமையில் “அருணகிரி அமுதம்” என்னும் தலைப்பில் இடம்பெறவுள்ள கருத்தரங்கத்தில் பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் ‘திருப்புகழ்’ என்னும் தலைப்பிலும் கந்தரனுபூதி என்னும் தலைப்பில் இசைக்கவி ரமணன் அவர்களும் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் கந்தரலங்காரம் பற்றியும் சிலாகிக்கவுள்ளனர். மேலும் சிறப்புப் பேச்சுக்கள் வரிசையில் “குமரகுருபரர் அருளிய கந்தர் கலிவெண்பா” – பேராசிரியர் சோ.மீனாட்சிசுந்தரம் “திருமந்திரமும் திருப்புகழும்” – முனைவர் சிவஸ்ரீ எஸ்.பி.சபாரத்தின சிவாச்சாரியார் “நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை” – பேராசிரியர் சிவகுமார் “அருணகிரிநாதர் அருளிய அருந்தமிழ் இன்பம்” – முதுமுனைவர் திருசக்திவேல் முருகனார் “கந்தபுராணத்தின் நூற்பயன்” – கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன் “பரமகுருவின் பாத நிழலில்” - இசைக்கவி ரமணன் ஆகியவை அரங்கங்காணவுள்ளன.
அரங்கை அலங்கரிக்கவிருக்கும் கலை நிகழ்வுகள் வரிசையில் திருமதி பவானி குகப்பிரியா அவர்களது நெறியாள்கையிற் தியாகராஜர் கலைக் கோயில் வழங்கும் “குறவஞ்சி” நாட்டிய நாடகமும் ஸ்ரீமதி கிருத்திகாதேவி அவர்களின் நெறியாள்கையில் டிவைன் ஃபைன் ஆர்ட்ஸ் சபா குழுவினர் வழங்கும் நடனாஞ்சலியும் லேடர் கமர்சியல்ஸ் & ஸ்ரீபனா நாட்டியப் பள்ளி வழங்கும் “கந்த வைபவம்” ஆகிய நடன நிகழ்வுகளும் இம் மாநாட்டின் அரங்கங்காணவுள்ளன.

மேலும் சரஸ்வதி அறநெறிப் பாடசாலை கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி வட கொழும்பு இந்து பரிபாலன சபை அறநெறிப் பாடசாலை பத்மாவதி அறநெறிப்பாடசாலை ஜிந்துப்பிட்டிக் கதிரேசன் ஆலய அறநெறிப் பாடசாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் அறநெறிப் பாடசாலை மாணவர்களது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும்
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் சீடர் பேராசிரியர் அனந்தராமன் அவர்களின் பக்தி இன்னிசைக் கச்சேரி இசைப் பேரறிஞர் நா.வி.மு.நவரட்ணம் நுண் இசைமாமணி என்.பரந்தாமன் ஆகியோரது தெய்வீக இசையரங்கு மிருதங்க வித்துவான் வட்டுக்கோட்டை-பம்பலப்பிட்டி பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மாவின் இசை அரச்சனைக் குழுவினர் வழங்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி இசைச் செல்வர் ஐதராபாத் பா.சிவா அவர்களும் மாணவர்களும் வழங்கும் காவடிச் சிந்தும் கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்களும் இன்னிசை நிகழ்வு மட்டக்களப்புக் காயத்திரிபீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார் திருப்புகழிசை செல்வி எம்.எஸ்.பாலஷரவன் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரம்மஸ்ரீ க.சுவாமிநாத சர்மாவின் இசை அர்ச்சனைக் குழுவினருடன் இணைந்து வழங்கும் தெய்வீக இசையமுது ஆகிய இசை வெள்ளமும் மாநாட்டரங்கிற் பிரவாகிக்கவுள்ளது.
மேலும் இம் முருகபக்தி மாநாட்;டை முன்னிட்டுக் கந்தர் கலிவெண்பா – நா.ஏகாம்பரம் உரை கந்தபுராண அசுர காண்டம் - பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் உரை கந்தபுராணம் மகேந்திர காண்டம் - பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய் சாஸ்திரிகள் உரை வள்ளி திருமணப்படலம் - ஆறுமுகநாவலர் உரை சூரபத்மன் படலம் ஸ்ரீமத் வே.சிதம்பரப்பிள்ளை உரை மயூரகிரி புராணம் - மா.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை உரை திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சி உரை – சோ.அருளம்பலம் உரை கந்தரனுபூதி – அ.முத்துத்தம்பிப்பிள்ளை உரை கந்தரலங்காரம் - திருவிளங்கம் உரை கந்தரலங்காரம் - வைத்தியலிங்கம் உரை கந்தபுராண கலாசாரம் - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் கட்டுரைகள் குருநாத சுவாமிபிள்ளை விடுதூது உரையுடன் சுப்பிரமணிய பாராக்கிரமம் மாவை புராணம் அருணகிரிநாதர் அருளிய ஈழத்து முருகன் திருப்புகழ்கள் சுப்பிரமணிய மகோற்ச பத்ததி சுப்பிரமணிய ஆலய நித்திய பூஜா விதி – அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் சண்முக சகஸ்ரநாமம் கந்தசஷ்டி புராணம் திருச்செந்தூர் கலிவெண்பா பெரிய புராணமும் தமிழகப் பண்பாட்டு நெறிகளும் திருப்படைக் கோயில்கள் முருகபக்தி மாநாட்டுச் சிறப்பு மலர் ஆகிய நூல்களும் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியத்தினால் வெளியிடப்படவுள்ளன.

மேலும் ஓலைச் சுவடியில் இருந்து கதிர்காம மாலை எனும நூல் வெளியீடும் திருமுருகன் ஆலயத் திருமேனிகள் கந்தபுராணம் கதிர்காமத் திருத்தலத் திருப்புகழ்ப் பாடல்கள் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆகியனவூம நூல்கள் மற்றும் இசைவட்டுக்களாக வெளியீடு செய்யப்படவுள்ளன.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812