புதன், 24 ஜூன், 2015


தேர்தல் இடாப்புகளை தமிழில் வெளியிட திணைக்களம் நடவடிக்கை எடுக்காதா?


அரசியல்வாதிகள் பெற்றோருக்கு உதவ வேண்டும்

2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள் வதற்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கடந்த ஐந்தாண்டு கால தேர்தல் இடாப்பில் தமது பெயர். தேர்தல் தொகுதி> கிராம சேவகர் பிரிவு ஆகிய விபர ங்களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
அதாவது 2010ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை உள்ள விபரங் களை இணைத்து அனுப்பும்படி கோரப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இராஜகிரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இந்த விபரங்களை பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் பெருமளவில் வருகின்றனர். தேர்தல் திணைக்களத்தில் இதற்குரிய விண்ணப்பப்படிவம் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தாங்களாகவே பார்த்து அந்தந்த ஆண்டுக்குரிய விபரங்களை எழுதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இங்கு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான அனைத்து வாக்காளர் இடாப்புகளும் தனிச் சிங்களத்திலேயே உள்ளன. இந்த விவரங்களை பெற வருகின்ற பெற்றோர்கள் மத்தியில் சிங்களமொழி எழுதஇ வாசிக் கத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இங்கு இவர்கள் படுகின்ற பாடு பெரும்பாடாக உள்ளது.
தேர்தல் திணைக்களம் தமிழ் மொழியில் தேர்தல் இடாப்புகளை தயாரிக்க இன்னும் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தெரிய வில்லை. எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வளர்ந்து எல்லாம் கணனி மயமாகிவிட்ட இந்த கால கட்டத்தில் மக்கள் இவ்வாறு புத்தகங்களை புரட்டி தேடி கஷ்டப்பட மேண்டுமா? இவற்றை இலகுவாக பெறுவதற்குரிய எளிய நடவடிக்கை முறையொன்றை தேர்தல் திணைக்களம் அறி முகப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாதா?
தேர்தல் காலங்கள் நெருங்கும் போது வாக்கு வேட்டையாட வீடு வீடாக தேர்தல் இடாப்புகளை சுமந்து வரும் அரசியல் வாதிகளாவதுஇ தமது கட்சி அலுவலங்களில் இந்த வாக்காளர்கள் இடாப்புகளை வைத்து பொது மக்களுக்கு உதவி செய்ய நடவடி க்கை எடுக்கக் கூடாதா?
தமிழர் நற்பணி மன்றம்

செவ்வாய், 23 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11385) பஞ்ச குமாரர்கள் எவை?
விநாயகர், முருகர். வீரபத்திரர், பைரவர், சாஸ்தா

11386) பஞ்ச நந்திகள் எவை?
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி, மகா நந்தி, தர்ம நந்தி

11387) பஞ்ச மூர்த்திகள் எவை?
விநாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு

11388) பஞ்சாபிஷேகம் எவை?
வில்வ இலை கலந்த நீர், இரத்தினங்கள் போடப்பட்ட நீர், பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர், கிராம்பு, கொரேசனம் கலந்த நீர், விளாமிச்சை வேர், சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம். 

11389) பஞ்ச என்றால் என்ன?
ஐந்து

11390) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11391) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11392) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

செவ்வாய், 16 ஜூன், 2015

பஞ்ச கிருத்தியங்கள்

11376) பஞ்ச என்றால் என்ன? 
 ஐந்து

11377) பஞ்சபூதத் தலங்கள் எவை?
காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல். திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

11378) பஞ்ச உலோகங்கள் எவை?
செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம்

11379) பஞ்ச புராணம் எவை?
தேவாரம். திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

11380) பஞ்சலிங்கத் தலம் எவை?
அர்கேசுவரர் லிங்கத் தலம், பாதாளேஸ்வரர் லிங்கத் தலம், மரனேஸ்வரர் லிங்கத் தலம், மல்லிகார்ச்சுனர் லிங்கத் தலம், வைத்திய நாதேஸ்வரர் லிங்கத் தலம்.

11381) பஞ்சபட்ஷிகள் எவை?
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்

11382) பஞ்ச கங்கை எவை?
ரத்தின கங்கை, தேவ கங்கை, கையிலாய கங்கை, உத்திர கங்கை, பிரம்ம கங்கை

11383) பஞ்சாங்கம் எவை?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம். கரணம்

11384) பஞ்சர ரிஷிகள் எவை?
அகத்தியர். புலஸ்தியர். துர்வாசர், ததீசி, வசிஷ்டர்

செவ்வாய், 9 ஜூன், 2015

பூக்களை மொய்க்கும் வண்டுகள் போல் - நல்ல
பாக்களை ரசிக்கும் உள்ளங்கள் உள்ளவரை
தமிழும் வளரும் தமிழ் கலையும் வளரும்

திங்கள், 8 ஜூன், 2015

திருமணத்தின் ஏழு அடிகள்

(11362) திருமணத்தின்போது அக்னியை சுற்றி எத்தனை அடிகள் நடப்பார்கள்? ஏழு அடிகள். (11363) சம்ஸ்கிருதத்தில் இதை என்ன என்று கூறுவார்கள்? சப்தபதி. (11364) ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று தனது பிராத்தனையைச் சொல்கிறான். (11365) முதல் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? பஞ்சமில்லாமல் வாழ வேண்டும். (11366) இரண்டாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? ஆரோக்கியமாக வாழ வேண்டும். (11367) மூன்றாம் அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும். (11368) நான்காவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும். (11369) ஐந்தாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெறவேண்டு. (11370) ஆறாவது அடியில் என்ன பிராத்தனையை சொல்கிறான்? நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடரவேண்டும். (11371) ஏழாவது அடியில் என்ன பிரார்த்தனையை சொல்கிறான்? தர்மங்கள் நிலைக்க வேண்டும். (11372) இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் என்ன நடக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது? அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும். (11373) நாம் வீதியில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவருடன் சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். (11374) இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் என்ன நடக்கும்? இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷயமமான விஷயம். (11375) இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்து தர்மத்தில் என்ன செய்தார்கள்? அதை ஒரு சம்பிரதாயமாக வைத்தார்கள்.

செவ்வாய், 2 ஜூன், 2015

(11358) விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக்கூடாது?

“விரதம்” என்ற சொல்லுக்கு ‘கஷ்டப்பட்டு இருத்தல்’ என்று பொருள். நாள் முழுக்க தெய்வ சிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது “விரதம்”. “பசி” என்ற நினைப்பு வரும்போதெல்லாம் ‘தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்’ என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு “உபவாசம்” (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால்,. பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம். (11359) தாரக மந்திரம் என்றால் என்ன? ‘தாரக’ என்ற சொல்லுக்கு நுண்ணிய, நுட்பமான, உயர்ந்த என்று பொருளுண்டு. இறைவனுடைய திருநாமத்தை அதற்குரிய பீஜாட்சர மந்திரத்துடன் சேர்த்து உச்சரித்தால் சக்தி அதிகம். உடனடியாக பலன் கிடைக்கும். இத்தகைய உயர்ந்த மந்திரத்தையே ‘தாரகமந்திரம்’ என்பர். இவற்றைப் புத்தகத்தைப் பார்த்துப் படித்து ஜெபிக்கக் கூடாது. உச்சரிப்பு பிழை ஏற்பட்டால் எதிர்மறை பலன்கள் ஏற்படும். தெரிந்தவர்களிடம் முறையாக கற்று உச்சரிப்பது நல்லது. ராமநாமத்திற்கு தாரகமந்திரம் என்றொரு பெயர் உண்டு. (11360) அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தலாமா? அமாவாசை பிதுர் வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுப நிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுப நிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்த பிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுப நிகழ்ச்சி நடத்துவதே நல்லது. (11361) எவர் சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா? கூடாது. மண் அகல், வெண்கலம், வெள்ளி, தங்கம் இவற் றினால் ஆன விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். இரும்பு உலோகம் பூஜை சம்பந்தமான விஷயங்களில் கூடாது. எவர் சில்வர் இரும்பிலிருந்து தயாரிக்கப்படுவதால் இவ்விளக்குகள் விலக்கத்தக்கன.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812