திங்கள், 24 ஜூன், 2013

இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம்

இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தைப் போக்கும் முதல் தெய்வம் எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர். காக்கும் கடவுள் என்று மகா விஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள் இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான். ஆனால் விநாயகப்பெருமான் ‘டேக் இட் ஈசி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அவருக்கும் கோபம் வரும். ஆனால் அதை அவர் கோபமாக செய்யமாட்டார். வேடிக்கையாக செய்து முடிப்பார். எதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நமக்கெல்லாம் தெரிந்த ‘ஞானப் பழம்’ கதை சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு இப்படி நிறைய இருக்கிறது. ஔவையின் வாழ்க்கையில் இப்படித்தான் ஒரு சம்பவம் அது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். தம் பூலோக கடமை முடிந்து கைலாயம் புறப்படுகிறார். அவரின் நண்பரான சேரமான் பெருமானும் உடன் வர, சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலும், சேரமான் பெருமான் குதிரையிலும் ஆகாய மார்க்கமாக புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த சமயம் விநாயகர் வழிப்பாட்டில் இருந்த ஔவைக்கு இந்த காட்சி தெரிகிறது. உடனே சிவப்பெருமானை காண சுந்தரரையும், சேரமான் பெருமானையும் பின்தொடர்ந்து கைலாயம் அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால், விநாயகர் வழிப்பாட்டை அவசர அவசரமாக செய்கிறார். ஔவை. இதனை உணர்ந்த விநாயகப் பெருமான், ‘ஔவையே... பதறாதே. நான் இருக்கிறேன் அல்லவா நீ அமைதியாக பூஜை செய்’ என்றார். ஔவை தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் முறையாக வழிப்பாட்டை தொடங்கி செய்து நிறைவு செய்கிறார். விநாயகப் பெருமானும் ஔவைக்கு தந்த வாக்குக்கு ஏற்ப, கைலாயத்தை சுந்தரரும், சேரமான் பெருமானும் அடைவதற்கு முன்னதாகவே, சிவபெருமான் அன்னை பார்வதியின் முன்பாக ஔவையை அழைத்து வந்து சேர்க்கிறார் விநாயகப் பெருமான். ஔவை சிவபார்வதியை வணங்குகிறார் பிறகு சுந்தரரரையும் சேரமான் பெருமானையும் வரவேற்கிறார். ஔவை தங்களுக்கு முன்னதாகவே சிவகைலாயத்தில் ஔவை நிற்பதை கண்ட சுந்தரரும் - சேரமான் பெருமானும் இது விநாயகப் பெருமானின் திருவருள் என்று வியந்து போற்றுகிறார்கள். இப்படியாக நமக்கு இஷ்ட தெய்வம் எதுவானாலும் நம் கஷ்டத்தை தீர்க்கும் முதல் தெய்வம் விநாயகப் பெருமான்.

சிவன்

கே.ஈஸ்வரலிங்கம் 10115) நடராஜப் பெருமானுக்கு ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதை எண்ணவென்று அழைப்பார்கள்? ஆனித்திருமஞ்சனம் 10115) ஆனித்திருமஞ்சனம் விசேஷமாக எங்கு கொண்டாடப்படும்? சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் 10116) ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் யார்? பதஞ்சலி மகரிஷி 10117) பதஞ்சலி மகரிஷி யாரின் அம்சம்? ஆதிசேஷனின் 10118) பஞ்ச சபைகளும் எவை? ரத்தின சபை, கனக சபை, ரஜித சபை, தாமிர சபை, சித்திர சபை 10119) ரத்தின சபை எங்கு உள்ளது? திருவாலங்காட்டில் 10120) கனகசபை எங்கு உள்ளது? சிதம்பரத்தில் 10121) ரஜிதசபையை வேறு எவ்வாறு அழைப்பர்? வெள்ளி சபை 10122) வெள்ளிசபை எங்குள்ளது? மதுரையில் 10123) திருநெல்லியில் உள்ளது எது? தாமிரசபை 10124) திருக்குற்றாலத்தில் உள்ளது எது? சித்திரசபை 10125) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா தாண்டவம், 10126) சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்? பிரம்ம தாண்டவம் 10127) ஆனந்த தாண்டவம் தலம் எங்குள்ளது? சிதம்பரம், பேரூர் 10128) அஜபா தாண்டவம் தலம் எங்குள்ளது? திருவாரூர் 10129) சுந்தரத் தாண்டவம் தலம் எங்குள்ளது? மதுரை 10130) ஊர்த்துவ தாண்டவம் தலம் எங்குள்ளது? அவிநாசி 10131) பிரம்ம தாண்டவம் தலம் எங்குள்ளது? திருமுருகன் பூண்டி 10132) சிவனின் தாண்டவங்கள் எத்தனை? ஐந்து 10133) இந்த ஐவகை தாண்டவங்களும்எதனை உணர்த்துகின்றன? ஐந்தொழில்களை 10134) ஐந்தொழில்களையும் தருக. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் 10135) ஐ வகை தாண்டவங்களையும் தருக. காளிகா, கவுரி, சங்கார, திரிபுர, ஊர்த்துவ 10136) படைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? காளிகா 10137) காத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? கவுரி 10138) அழித்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? சங்காரம் 10139) மறைத்தல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? திரிபுர 10140) அருளல் தொழிலுக்குரிய தாண்டவம் எது? ஊர்த்துவ 10141) தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது எது? மார்கழி 10142) காலைச் சந்திக்கு சமமானது எது? மாசி 10143) உச்சி காலத்திற்கு சமமானது எது? சித்திரை 10144) மாலைக் காலத்திற்கு சமமானது எது? ஆனி 10145) இரவுக்கு சமமானது எது? ஆவணி 10146) அர்த்த யாமத்துக்கு சமமானது எது? புரட்டாதி 10147) ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனத்தை எவ்வாறு அழைப்பார்கள்? ஆனி உத்திரம் 10148) ஆனி உத்திரத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்? ஆனித் திருமஞ்சனம் 10149) தில்லையில் எத்தனை சபைகள் உள்ளன? ஐந்து 10150) அந்த ஐந்து சபைகளையும் தருக சித்சபை, கனக சபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை. 10151) கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் என்ன? ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். அப்படி பார்க்கும்போது, கண்களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல்நிலையில் பாதிப்பு உண்டாக்குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். இதைத் தான் கல்லினால் அடிபட்டால் கூட அது விரைவில் ஆறிவிடும். ஒருவர் கண்ணடி (கண் திருஷ்டி) பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதை அறிந்த நம் முன்னோர்கள் கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்லடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்ற பழமொழிக்கு விளக்கம் இப்போது புரிந்திருக்குமே! 10152) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.

திங்கள், 10 ஜூன், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10093) சிவபெருமானின் பஞ்ச குமாரர்கள் யார்? யார்? கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார், பைரவர் 10094) பைரவர் என்பது எந்த மொழி சொல்? வடமொழிச் சொல் 10095) பைரவர் என்பதற்குரிய பொருள் என்ன? மிகவும் பயங்கரமானவர் 10096) பைரவருக்கு இந்த பெயர் எவ்வாறு ஏற்பட்டது? எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைவர் என்பது பெயராயிற்று 10097) பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் எது? நள்ளிரவாகும் 10098) பைரவரின் வாகனம் எது? நாய் 10099) சனிபகவானுக்கு குரு யார்? பைரவர் 10100) கோயிலுக்குச் செல்வது ஏன்? கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால் யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு. ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் ஓம் என்ற பிரணவ மந்திரம் காற்று மண்டலத்தில் அதிர்வுறும் விதத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அந்த மந்திர ஒலி பெரிய அளவில் கலந்திருக்கும் கருவறையில் இருக்கும் விகரஹத்திற்கு ஆறுகால பூஜையும், அபிஷேகமும் நடத்தும் போது காற்று மண்டலத்தில் எதிர்மின்னோட்டம் அதிகரிப்பதோடு காற்றுமண்டலம் ஈரப்பதம் அடைகிறது. இந்த மின்னோட்டம் பிராணவாயுவுடன் கலக்கிறது. அதை சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு சீராகி ஆரோக்கியம் மேம்படுகிறது. இயற்கை வளம் மிக்க ஆறு, மலை, கடல், அருவி, வனம், சோலை ஆகிய பகுதிகளில் எதிர் மின்னோட்டம் அதிகமாக இருப்பதால்தான், அங்கு செல்லும் போது நமக்கு புத்துணர்வு உண்டாகிறது. அங்கு தரப்படும் பிரசாதம் மூலம், உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதை அனுசரித்துத்தான் ஒளவைப்பாட்டி ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அழகாகச் சொல்லி வைத்தாள். 10102) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா? சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன்கிடைக்கிறது. பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம். 10102) கோயிலில் செய்யக் கூடாதவை எவை? கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது, சுவாமிகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது, பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, முதல் அபச்சாரம் பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது, வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது, ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும், பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு, இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது, இருட்டில் பூஜை செய்யவும் கூடாது, குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம், ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது, சாஸ்திரம் கூறாத இடத்தில் நமஸ்காரம் செய்தால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும், கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது, முறைப்படி ஸ்நானம் செய்யாமலோ, முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு அணியாமலோ செல்வது குற்றமாகும். பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் போகலாகாது.

திங்கள், 3 ஜூன், 2013

(ஆகாயம்)

கே.ஈஸ்வரலிங்கம் 10076) பஞ்ச பூதங்களும் எவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் 10077) இந்த ஐந்து இயற்கை பூதங்களையும் எவ்வாறு அழைப்பர்? மஹா பூதங்கள் 10078) இந்த பஞ்ச பூதங்களில் வீட்டில் இருக்க §ண்டிய பூதங்கள் எவை? பஞ்ச பூதங்களும் 10079) பஞ்ச பூதங்களும் வீட்டில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன? நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும். 10080) நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களும் தடையின்றி வழங்குவதற்கு உதவும் பூதம் எது? ஆகாயம் 10081) மனிதனின் கேட்கும் திறமை எதைப் பொறுத்து உள்ளது? ஆகாயத்தை 10082) வீடு எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும்? இனிய மென்மையாக ஒலிக்கின்ற அமைதியான இடமாக இருக்க வேண்டும். 10083) வீட்டின் எந்த திசையில் ஆகாயம் ஆட்சி புரிகிறது? வடகிழக்கு 10084) நன்மைகளை ஊக்குவிக்கும் கொஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்? திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். 10085) நிம்மதியாக தன்னைத்தானே அறிந்துகொள்வதற்கு வீட்டின் எந்த திசை சிறந்தது? வடக்கு 10086) தியானம், யோகா செய்வதற்கு வீட்டின் எந்தத் திசை சிறந்தது? வடகிழக்கு 10087) கல்வி, நற்காரியங்கள் செய்வதற்கும் வீட்டின் ஏற்ற திசை எது? வட கிழக்கு (வாயு) 10088) வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு பஞ்சபூதங்களில் எந்த பூதத்துடன் கூட்டுறவு கொண்டது? அக்னியுடன் 10089) இவ்வாறு கூட்டுறவு கொண்டதற்கு காரணம் என்ன? காற்று நெருப்பை ஊக்குவிக்கும் என்பதாலாகும் 10090) வாயு, அக்னி ஆகிய இரண்டு பூதங்களுடைய குணம் என்ன? சதா அசைந்து கொண்டிருப்பது 10091) இது மனிதனால் எவ்வாறு அறியப்படுகிறது? தொடும் உணர்வினால் 10092) வீட்டின் வட மேற்கு பகுதியின் ஸ்தானதிபதி எது? ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812