செவ்வாய், 22 மே, 2012

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் 9166. ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதை என்ன வென்பர்? கண்திருஷ்டி. 9167. ஒருவர் நம்மை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? அப்படி பார்க்கும்போது கண் களில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் நம் மனம் மற்றும் உடல் நிலையில் பாதிப்பு உண்டாக் குவதை விஞ்ஞானபூர்வமாக கண்டறிந்துள்ளனர். 9168. இவ்வாறு கண்திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப் பாக இருக்க கூறப்பட்ட பழமொழி எது? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. 9169. கண் திருஷ்டி பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த நம் முன்னோர்கள் என்ன செய்து வைத்தார்கள்? கண்ணூறு கழித்தல் என்ற பரிகாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். 9170. சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது? ஒன்பது. 9171. அந்த ஒன்பது விஷயங்களும் எவை? ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன்-மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம். ஊறுகொடவத்தை ஸ்ரீமஹா பத்திரகாளியம்மன் திருக்கோயிலின் தேர்த்திருவிழா ஊறுகொடவத்தை சாத்தம்மா என்ற தோட்டத்தின் ஊர் எல்லையில் அந்நியர் இலங்கையை ஆண்ட காலத்திலிருந்து அரச மர நிழலில் கொட்டில் ஆலயம் போல் தொட்டிலிட்டு தோன்றிய ஆலயம் ஸ்ரீமுனீஸ்வரா ஆலயம் வெள்ளை நாகமொன்றும் கரும் நாகமொன்றும் காடு மண்டிக்கிடந்த இந்த ஆலயச் சூழலைச் சுற்றி அன்று வலம் வந்தன. ஆரம்ப காலத்தில் கல்லொன்றை வைத்து வணங்கி வந்தவர்கள் காலப் போக்கில் திருவுருவப் படங்களையும் படிப்படி யாக திருவுருவச் சிலை களையும் வைத்து வழி படத் தலைப்பட்டனர். சின்னஞ்சிறு கொட்டி லாக மடாலயமாக இருந்த ஆலயத்தில் எஸ். ஆறுமுகம் குரு அம்மா தம்பதிகள் ஆரம்ப காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் அம்மாளின் திருவடியை எய்தபின் இவர்களின் புதல்வியாகிய திருமதி நல்லம்மா இவர்களது பணியைத் தொடர்ந்து வந்தார். இந்த ஆலயம் ஊர் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் இதன் மகிமை மங்கிப் போய் இருந்தது. இதை உணர்ந்த இறைவன் இதனை ஊரின் முன்புறத்திற்கு கொண்டு வர திருவுளம் கொண்டார். இதற்கமைய ஆலயத்தை சாத்தம்மா தோட்டம் ஆரம்பமாகும் இடத்திற்குக் கொண்டுவர திருமதி நல்லம்மா எண்ணங் கொண்டார். இதற்கமைய இவர், தான் வசித்து வந்த சாந்தம்மா தோட்டத்தில் உள்ள 55/2 ஆம் இலக்கத்தைக் கொண்ட வீட்டை மடாலயமாக அமைத்து வழிபட்டு வந்தார். அன்று முனீஸ்வரரர் ஆலயத்தைச் சுற்றி வந்த நாகம்மா அதன் பின் இங்கும் வலம் வரத் தொடங்கினாள். இவ்வாறு இவரது இல்லத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தலைப்பட்ட பின் இவருக்கு அம்பாளின் அருள் வரத் தொடங்கியது. இவர் குறி சொல்லவும் தலைப்பட்டார். மடாலயமாக இருந்த இந்த ஆலயத்தை சிறுக, சிறுக ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டியெழுப்ப முனைந்த போது இவரை அறியாமலே ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் இங்கு வந்து குடிகொண்டு விட்டாள். இங்கு வருடாந்தம் நேர்த்தியாக திருவிழாக்கள் நடந்தேறின. 1998 ஆம் ஆண்டு தை மாதம் இங்கு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனையடுத்து இவ்வாலயத்தை நாடிவரும் பக்தர் கூட்டமும் சிறுசிறுகப் பெருகியது. அயலில் உள்ளவர்கள் தங்கள் பொருள் ஏதாவது திருட்டு போனால் அல்லது காணாமல் போனால் இவ்வாலயத்தை நாடி வந்து இந்த நல்லம்மாளின் அருள் வாக்கு கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நல்லம்மாவின் இரண்டாவது மகனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிட்டியுள்ளதால் அவருக்கும் அவ்வப்போது அருள்வாக்குக் கூறும் ஆற்றல் உண்டு என்று அவர் கூறுகிறார். மடாலயமாக இருந்த ஆலயம் இன்று ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இங்கு 2004 ஜூனில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜூன் 6ம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்வாலயத்தின் முதலாவது வருஷாபிஷேகப் பெருவிழா கடந்த 16 ஆம் திகதி மாலை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இங்கு தினமும் அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மனுக்கு விசேட அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பேலியாகொடை ஸ்ரீபூபால விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெறும். அன்று காலை 9.00 மணிக்கு பால்குட பவனி ஊறுகொடவத்தை அருள்மிகு ஸ்ரீமகா பத்திரகாளியம்மன் திருக்கோவிலை அடைந்தவுடன் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுவதுடன் மகேஸ்வரபூஜை நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்படும். எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முத்தேர் பவனி இடம்பெறும். ஆலயத்திலிருந்து புறப்படும் அலங்கார சித்திரத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஊறுகொடவத்தை மேம்பாலம் வழியாக திரும்பி ஊறுகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, வழியாக முதலாம் நவகம்புற ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு சென்று களனிதிஸ்ஸ மின் நிலையம் ஊடாக இரண்டாம் நவகம்புர ஸ்ரீமகா காளியம்மன் கோவிலுக்கு சென்று பேஸ்லைன் வழியாக ஆலயத்தை வந்தடையும். சிவஸ்ரீ சண்முகரட்ண குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீகாந்த குருக்கள், பிரம்மஸ்ரீ சாந்தகுமார் சர்மா, கோவில் பூசகர் ஏ. செல்வநேசன் ஆகியோர் வருஷாபிஷேக கிரியைகளை செய்வார்கள். பம்பலப்பிட்டி பழைய கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் மங்கள வாத்திய குழுவினர் மங்கள வாத்தியம் இசைப்பர். எதிர்வரும் 27ம் திகதி தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

செவ்வாய், 15 மே, 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் வாழை 9148) முக்கனிகளும் எவை? வாழை, மா, பலா 9149) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கும் கனி எது? வாழை 9150) முக்கனிகளுள் அதிக பயன்தரக்கூடியது எது? வாழை 9151) தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும் மரம் எது? வாழை 9152) திருமணப் பந்தலில் மட்டுமல்லாது சுப காரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் கட்டப்படுவது எது? வாழைமரம் 9153) திருமணப் பந்தலில் எதற்கு அடையாளமாக வாழை மரம் கட்டப்படுகின்றது? வாழை, தன்னை அழித்துக்கொண்டு, பிறருக்கு கனி தருவது போல், தம்பதியர் ஒருவருக்கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். 9154) திருமணப் பந்தலில் வாழை மரம் கட்டுவதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? குடும்ப விருத்திக்காகவும் 9155) வாழையில் பயன்தரக்கூடியவை எவை? இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் 9156) ஒரு மரக்கன்றை நட்டால் அதன் குலம் தழைக்கும் வண்ணம் மிளிரக் கூடியது எந்த மரம்? வாழையடி வாழையாக தழைக்கக்கூடியது வாழை 9157) சுப காரியங்களில் வாழை மரம் கட்டுவது ஏன்? மனிதன் தலைமை பெற வேண்டும், தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வகைகளிலும் பயன்தர வேண்டும். அவன் குலம் வழி வழியாக தழைக்க வேண்டும் என்பதற்காக. 9158) ‘ஆல் போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்’ என்று வாழ்த்துவது யாரை? மணமக்களை 9159) வாழைமரம் கட்டுவதை எதன் புலப்பாடாக கருதலாம்? மணமக்களை ஆல்போல தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தின் புலப்பாடாக வாழை மரம் கட்டுவதை கருத வேண்டும். 9160) திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவதுடன் வேறு என்ன தொங்கவிடப்படும்? மா விலை 9161) மாவிலைக்கும் வாழை இலைக்கும் விஞ்ஞான ரீதியாக உள்ள ஒற்றுமை என்ன? மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஒட்சிசனை வெளியேற்றும் தன்மை உண்டு. 9162) விழாக் காலங்களில் வாழை மரமும் மாவிலை களும் தோரணங்களாக வாயிலிலும் மணப் பந்தலிலும் கட்டும் பழக்கம் எப்படி ஏற்பட்டது? பண்டைய காலங்களில் இன்று போல் மின்சார வசதி கிடையாது அதனால் திருமணக் கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி அற்ற நிலை. அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ஒட்சிசன் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதென்றே இவ்வாறு செய்யப்பட்டது. 9163) வாழை இலையை மட்டும் பறித்துக் கட்டினால் என்ன நடக்கும்? விரைவில் வாடிவிடும். 9164) வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள்? இலையை மட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும் என்பதால் ஆகும். 9165) மரத்தோடு சேர்த்துக் கட்டும் போது என்ன நடக்கிறது? தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும். சரித்திரத்தில் இடம்பிடித்துள்ள கோலாலம்பூர் கண்ணாடிக் கோயில் ணீலக சரித்திரத்தில் முதல் இடம் பெற்ற கண்ணாடிக் கோவில் கோலாலம்பூரில் ஜோகர் பாருவில் இருக்கிறது. சிங்கப்பூரையும் ஜோகர் பாரு நகரத்தையும் இணைப்பது கடலின் மீது கட்டப்பட்ட பாலம் தான். மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள். உருண்டை வடிவ உலகில் கண்ணாடி பதிக்கப்பட்ட ஆலயம் மலரும் வண்ணம் அழகுற அமைத்து கண்களை உருளச் செய்தது அதிசயமாகும். இது உலக மக்கள் இந்துவாகப் பிறந்தவர்கள் அனைவரும் மகிழ்வுறும் விசயமாகும். தொடக்கத்தில் சிறிய குடிசையாக இருந்து, கால ஓட்டத்தில் ஜோகூர் பாருவில் அமைந்த மிகப் பெரிய ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட முதல் மலேசியக் கோவில் என்பது சிறப்பம்சம். இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயமே! கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோவில் கோபுரமும், நுழைவாயிலும் எங்கும் உள்ளது போல் சாதாரணமாகத் தான் தோன்றின. ஆனால் உள்ளே சென்ற போது பிரமிப்பு ஏற்படுகிறது. எங்கும் கண்ணாடிகள் மயம் சிறு சிறு கண்ணாடிகள்! ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! தூண்களிலும், மேலே விதானம் முழுவதுமே கண்ணாடிக் கூரை தான். அத்தனை கண்ணாடிகளும் சேர்ந்து ஒளித் துண்டுகளைப் பிரதிபலிக்க எங்கேயோ ஒரு மாயபுரியில் இருப்பது போல் பிரமை. கீழே மழமழ தரை அவற்றில் அத்தனை கண்ணாடிகளும் பிரதிபலிக்கின்றன. இந்த மாயங்களை செய்த அதிசய மனிதர் பார்வைக்கு சாதாரண மனிதர் போல் இருந்தார். கோவிலுக்கு வந்தால் காவி ஆடை அணிகிறார். அவர் புறத்தோற்றம் எதுவுமில்லா முனிவர், உள்ளொளி உள்ளவர். காளியம்மன் கோவிலை மிகப் பெரிய தலமாக்க தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்தவராவார். அவர் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் எனப் பெயரிடப்பட்டது. சுமார் 21 ஆண்டுகள் பலவித தடைகள், போராட்டங்கள் ஆகியவற்றைக் கடந்து காளியம்மன் அருளால் இங்கு காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. பூஜையிலிருந்து தொடங்கி கோவிலுக்கு நிதி திரட்டும் வரை இவரே செய்கிறார். அவரது திருப்பெயர் தான் சின்னத்தம்பி சிவசுவாமி. 1967 இல் பிறந்தவர். மலேசியாவில் பட்டப் படிப்பு படித்து கல்வித் துறையில் சேர்ந்து 18 வருடங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரது 16 ஆவது வயதிலேயே ஓர் அதிசயத் திருப்பம் நடந்தது. மனத்தில் உள்ள ஒரு விரதத்தை முடிப்பதற்கு அருள் மிகு இராஜகாளியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்தார். அவரது பெற்றோரும் அதைக் கண்டு மகிழ்ந்தார்கள். அப்போது தொடங்கியது தான் அவரது தவ யாத்திரை. இப்பொழுது எல்லாச் செயல்களிலுமே கடவுளின் நேர் பார்வையின் முன்பாகவே செய்வது போல் எல்லாம் செய்து வருகிறார். உரிய வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். திருமதி வசந்தி அடிகள் என்பது மனைவியின் பெயர். மூன்று குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகும் அவர் கோவில் கடமைகளை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அதிசய சுவாமியின் மனத்துள் மகாகாளியைப் பற்றி தோத்திரங்கள் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். கோவில் கடமைகளைத் தவிர அவர் ஆசிரியர் தொழிலையும் செய்து வருகிறார். இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்த போது தாஜ்மஹாலையும் இன்னும் பிரசித்தி பெற்ற பல கோவில்களைப் பார்த்திருக்கிறார். எல்லாமே அமைப்பிலும் அழகிலும் எல்லாரையும் கவர்ந்து இழுத்தன. பின்னர் இவர் பர்மாவுக்கும் சென்றிருக்கிறார். அங்கே உள்ள கோவில்களில் இந்தக் கண்ணாடி அமைப்பைத் பார்த்திருக்கிறார். அதில் சிறிய அமைப்பாகத் தெரிந்தது. சிவசுவாமிக்கு இது பெரிய கனவை உண்டாக்கியது. அந்த வேலைப்பாடு செய்த பர்மிய தொலாளிகளைச் சந்தித்தார். அவர்கள் குடும்பங்களை ஜோகர் பாருவுக்குக் கொண்டு வந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார். தகுந்த ஊதியமும் கொடுத்தார். பிரமாண்டமாக கோயிலை அமைத்தார். இவ்வாறு அமைந்த கண்ணாடிக் கோவில் உலகப் புகழ் பெற்றது. 10 இலட்சம் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில் கட்டுவதற்கான தொகை 30 இலட்சம் ரிங்கட் (இந்தியப் பண மதிப்பில் ரூ. 11.76 கோடி). கோவிலின் 95 சதவீதம் விதானம், ஸ்தூபிகள், தூண்கள், ஆகியவற்றுக்கான பத்து இலட்சம் வர்ணமயமான கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஜொகர் சுல்தான் 1922 இல் இதைக் கட்டுவதற்கான நிலத்தைக் கொடுத்தார். இந்தக் கோவில் 1996 இல் புனரமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் குளிர் சாதனம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநூறு பக்தர்கள் தரிசிக்கலாம். ராஜ காளியம்மன் கோவிலில் சிவன், விஷ்ணு, பெரியாச்சி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு குருமார் துறவிகள் என சிலைகள் பல இரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது மானசீக குருவாக யார் உளரோ, அவரையும் இங்கு தரிசிக்க ஏற்றவாறு அமைத்துள்ளார்கள். பகவான் இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாயிபாபா, சுவாமி இராகவேந்திரர், இராமலிங்க அடிகள், இயேசு நாதர், புத்தர், நபிகள் மற்றும் துறவிகள் சிற்பங்களையும் கண்ணைக் கவரும் வடிவில் அமைத்திருப்பதாக ஆலய அறங்காவலர் குருஜி சின்னத்தம்பி குறிப்பிடுகிறார். பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை 2010 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தக் கோவிலைப் பாராட்டி எழுதியுள்ளது. 1996 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர். ஆகம விதிப்படி தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் தவறாது நடைபெறுகின்றன. ஆஸ்தான குருவாக சின்னத்தம்பி விளங்குகிறார். இவர் நாள்தோறும் நடத்தும் ஆன்மீகப் பேச்சுக்களை ஏராளமான பக்தர்கள் வந்து கேட்டவண்ணம் உள்ளனர். தங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கும் இவரிடம் தீர்வு பெற்றுச் செல்கின்றனர். 2001 ஆம் ஆண்டு ‘நயனயுதம் நல்வாழ்வுக் கழகம்’ என்னும் அமைப்பு நிறுவி கோவிலை நிர்வகித்து வருகிறார். ஆலயத்தை ஒட்டிய மூன்று மாடிக் கட்டடத்தில் இலவச சேவையாக சமயக் கல்வி, பாடசாலைக் கல்வி, கணனிக் கல்வியோடு தற்காப்புக் கலையும் சொல்லித் தருகிறார். இந்திய பாரம்பரியக் கலைகளான சங்கீதம், பரதம், தபேலா இவற்றோடு வேலைவாய்ப்பு மையம், தரும காரியங்கள், போட்டி நிகழ்ச்சிகள், பஜனை உலா ஆகியனவும் இங்கே இலவசமாக நடத்தப்படுகின்றன. கண்களுக்கு விருந்தாக வசீகரத் தன்மையுடன் கூடிய அருள் தரும் இராஜ காளி அம்மன் ஆலயம் கண்ணாடி பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு அமைந்துள்ளது. இது மனதிற்கும் அமைதி தரவல்லதாக அமைந்திருப்பது வியப்புக்குரியது. 2008 ஆம் ஆண்டில் நேபாள அரசி இங்கு வருகை தந்தார். அவர் ஆலயத்தைக் கண்டு வியந்து சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் பதிப்பதற்காக மிகவும் சக்தி வாய்ந்த மூன்று இலட்சம் உருத்திராட்ச மணிகளை நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக ஆலயம் அமைந்திருத்தல் சாலச்சிறந்தது. அதன் சேவைகள் அறிவை, மனதை, உடலை வளப்படுத்துமானால் மனக்குறையின்றி மக்கள் வாழ்வது திண்ணம். இராஜகாளியம்மன் ஆலயத்தை அழகுற அமைத்த ஆலய விற்பன்னர்களுக்கும் ஆலயத்தை அமைக்கப் பாடுபட்டவர்க்கும் இராஜகாளியம்மன் அருளாசி என்றும் கிடைக்கும். நாமும் தரிசித்து அம்மன் அருள் பெறுவோம்.

திங்கள், 7 மே, 2012

அறநெறி அறிவுநொடி 9128) வித்தியாரம்பம் எப்போது செய்யலாம்? விஜயதசமியில் அல்லது வேறு நல்ல நாளில். 9129) வித்தியாரம்பம் செய்ய என்ன செய்ய வேண்டும்? ‘ஹாரி ஸ்ரீ கணபதியே. நம’ எனவும் குரு வாழ்க குருவே துணை’ எனவும் கூற செய்ய வேண்டும். 9130) இவ்வாறு கூற செய்தபின் என்ன செய்ய வேண்டும்? பின்னர் குருவை வணங்க செய்து, கணபதி, சரஸ்வதி தேவியை வணங்கி அரிசியில் அரி என்னும் எழுத்தை எழுத செய்ய வேண்டும். 9131) காது குத்துதலை எவ்வாறு அழைப்பர்? கர்ணபூஷணம் 9132) நல்ல விஷயங்களை செவியின் வழியே செலுத்த வேண்டும் தீய விஷயங்களை உள்ளே செலுத் தாமல் துளை வழியே வெளியே செலுத்த வேண் டும் இதனை உணர்த்துவதற்காக செய்யப்படும் சடங்கு என்ன? காது குத்தல் 9134) பூணூல் என்னும் சடங்கு எத்தனை வயதில் நடத்தப்பட வேண்டும்? ஏழு வயதில் 9135) பூணூல் அணிவிக்கும் சடங்கை என்னவென்று கூறுவார்கள்? உபநயன கிரியை 9136) உபநயனகிரியை செய்யாதவர்களுக்கு என்ன செய்து வைக்க வேண்டும்? தீட்சை 9137) குழந்தைகள் குருவுடன் இருந்து கல்வி பயிலும் காலம் எது? குரு குலவாசம் 9138) குறிக்கோள் பகர்தலை என்னவென்று கூறுவர்? சங்கற்பம் 9139) காலத்தையும் இடத்தையும் செயலையும் விளக்கி பிரார்த்திப்பதை என்னவென்பர்? சங்கற்பம் 9140) உடம்பையும் உள்ளத்தையும் சுத்தி செய் வதன் பொருட்டு நடத்தப்படுகின்ற சடங்கு எது? புண்யாவாசனம் 9141) புண்யாவாசனம் எவ்வாறு செய்யப்படும்? தண்ணீரை (புனித நீராக சுத்தி செய்து) திருவருள் பெருக்காக கருதி மணமக்கள் மீது தெளிந்து அவர்களை புனிதமாக்க வேண்டும். 9142) சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்து கடவுள் பணியை மேற்கொண்டு ஆன்மீக நெறியில் நிலை நிற்க வேண்டுமென தம்பதியினர் சங்கற்பம் ஏற்பதை குறிப்பது எது? சஷ்டியப்த பூர்த்தி 9143) சஷ்டியப்த பூர்த்தியை வேறு எவ்வாறு அழைப்பர்? அறுபதாம் ஆண்டு நிறைவு விழா 9143) எண்பது அல்லது எண்பத்து நான்காவது ஆண்டில் செய்யும் சடங்கு எது? சதாபிஷேகம் 9144) எண்பது வயதிற்கு மேல் வாழ்ந்தவர்களை என்ன வென்று கூறுவார்கள்? ஆயிரம் பிறை கண்டவர்கள் 9145) மனிதன் இறந்தபின் அவரது புத்திரர்கள் செய்யும் கிரியை எது? அபரக்கிரியை 9146) அபரக் கிரியை எதற்காக செய்யப்படுகிறது? ஆன்மா நலம் அடைதற்பொருட்டு 9147) புத்திரன் என்பதன் அர்த்தம் என்ன? பத்தென்னும் நகரத்தில் தந்தை விழாமல் கரையேற்றுபவன்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812