திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாரியம்மன்

கே.ஈஸ்வரலிங்கம் 9823) சிவனிடமிருந்து பிரிந்த சக்திகள் எத்தனை? நான்கு 9824) அந்த நான்கு சக்திகளையும் தருக பவானி, விஷ்ணு, காளி, துர்க்கை 9825)அந்த சக்தி துர்க்கையாக செயல்படுவது எப்போது? போரிலே 9826) காளியாக செயல்படுவது எப்போது? கோபத்தில் 9827) புருஷர்களிடத்தில் என்னவாக செயல்படுகிறார்? விஷ்ணுவாக 9828) இன்பத்தில் என்னவாக செயல்படுகிறாள்? பவானி 9829) சக்தி மூர்த்தங்களுள் கிராம தேவதையாக கருதப்படுபவள் யார்? மாரியம்மன் 9830) காவல் தெய்வமாக கருதப்படுபவள் யார்? மாரியம்மன் 9831) மாரியம்மனின் சிறப்பை குறித்து கூறும் போது பெரியோர் எவ்வாறு கூறுவர்? மாரியல்லது காரியமில்லை 9832) மழை தரும்தெய்வம் எது? மாரி 9833) மழையின் இன்றியமையாமையை மிக உயர்வாக குறிப்பிடுபவர் யார்? திருவள்ளுவர் 9834) திருவள்ளுவர் மழையின் இன்றியமையாமை குறித்து எந்த அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்? வான் சிறப்பில் 9835) மழையில்லாவிடில் என்ன நடக்கும்? பயிர்கள் வாடும் 9836) மாரித்தாயின் கருணையில்லாவிடில் என்ன நடக்கும்? உயிர்கள் வாடும் 9837) இது நமது பிரதி உபகாரத்தைக் கருதிப் பொழிவதில்லை? அது எது? மழை 9838) அதேபோல் கைமாறு கருதாமலேயே நம்மீது கருணை பொழிகின்றவள் யார்? அன்னை 9839) மாரியம்மனை ஆகமங்கள் என்னவென்று அழைக்கின்றன? சீதலாதேவி 9840) அன்னையின் அருள் எத்தகைய தன்மை வாய்ந்தது? குளிர்ச்சியானது 9841) அன்னை எவற்றையெல்லாம் தணிக்கும் ஆற்றல் கொண்டவள்? காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சநியம் என்ற கொடிய வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவள். 9842) மக்களுக்கு உடல் வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அம்மை, வைசூரி 9843) அம்மை, வைசூரி போன்ற நோய்களைப் போக்கும் கண்கண்ட தெய்வம் யார்? மாரியம்மன் 9844) மும்மூர்த்திகளும் யார்? பிரம்மன், விஷ்ணு, உருத்திரன் 9845) உலகின் முதல் தத்துவம் எது? சக்தி தத்துவம் 9846) இந்த மும்மூர்த்திகளுக்கும் வலிமையைத் தருபவள் யார்? சக்தி 9847) சக்திகள் எத்தனை வகைப்படும்? ஐந்து 9848) அந்த பஞ்ச சக்திகளையும் தருக சித்சக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி 9849) மூர்த்திகள் எத்தனை வகைப்படும்? ஐந்து 9850) அந்த பஞ்ச மூர்த்திகளையும் தருக? பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் 9851) இந்த பஞ்ச மூர்த்திகளாக திகழ்பவள் யார்? சக்தி

மாத்தளை மாரியம்மனின் மாசிமக பஞ்சரத பவனி

சீருள் சுரக்கும் ஆதிபராசக்தியானவள் வாழை, கமுகு போன்ற கனிச் சோலைகளுக்கு மத்தியில் அழகு மலை அடிவாரத்தில் மலை வளமும், கலை வளமும், மாண்புற்று விளங்கும் மாத்தளை மாநரில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மனாக திவ்விய சிம்ஹாசனத்தில் வீற்றிருந்து அருள் சுரக்கும் திருத்தலமே மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். இலங்கையில் பல திருக்கோயில்களில் பெரிய அளவிலான இராஜ கோபுரங்களுடன் காணப்பட்டாலும் இலங்கை திருநாட்டில் மிக உயர்ந்த இராஜ கோபுரம் அமையப்பெற்ற திருத்தலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமாகும். ஆனால் அதனை மிஞ்சும் வகையில் இப்பொழுது மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு நோக்கி 108 அடி நவதள நவகலசம் கொண்ட நவதள இராஜ கோபுரம் அமைக்கப்பெற்று வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது. இவ்வாறு புகழ் பெற்ற மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசிமக மகோற்சவம் இருப்பத்தைந்து நாட்களுக்கு நடைபெறும். இவ் உற்சவம் கடந்த 02-02-2013 காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 25-02-2013 காலை 7.30 மணிக்கு மேல் பஞ்சரதபவனி இரதோற்சவம் நடைபெறும். தேர்த்தினத்தன்று ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீசிவனம்பாள், ஸ்ரீமுத்து மாரியம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகள் சர்வலங்காரப் பூஷிதைகளாக அதிவிசித்திர விநோதமாக பஞ்சரதங்களில் ஆரோகணிக்கப்பட்டு, வெளி வீதி உலா (நகர்வலம்) நடைபெறும். 26-02- 2013 மாலை 3.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், இரவு கொடியேற்றமும், நடைபெறும். 27-02-2013 பகல் சண்டேஸ்வரி உற்சவமும் நடைபெறும். 01-03-2013 இரவு ஸ்ரீ வைரவர் பூஜை நடைபெறும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு 108 அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெறுவதோடு, தினமும் பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாலயம் கொழும்பிலிருந்து 90வது மைல் கல் தொலைவில், மலைப்பிரதேசமான மத்திய மாகாண கண்டி இராஜதானியிலிருந்து 16வது மைல்கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. வடக்கையும் மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகர் விளங்கி வந்திருக்கின்றது. மாத்தளை என்னும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பெருந் தொகையானவர்கள் மாத்தளையில் குடியமர்த்தப்பட்டமையால் ‘மஹாதலயக்’ (பெருங் கூட்டத்தவர்) எனும் பொருள்பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதே போன்று பண்டுகாபய மன்னனின் மாமன் (மாவல்) கிரிகண்ட சிவ இளவரசன் இப்பகுதியில் வசித்து வந்தமையால் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் ‘சூளவம்சம்’ எனும் சிங்கள காவியத்தில் இப்பிரதேசம் ‘மஹாதிபெதேச’ எனக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப் பேதங்கள் மருவி காலப் போக்கில் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் வரலாற்று ஏட்டுச் சுவடுகள் சான்று பகர்கின்றன. ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட போது ‘தலைமன்னார்’ ‘அரிப்பு’ இறங்குதுறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர். இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர். எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீமுத்து மாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்பவரின் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வ மரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக்கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றன. இத்தகைய சக்தி வாய்ந்த அன்னை முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று அமைக்கக் கிடைக்கப் பெற்றது பெரும் பாக்கியமே. அன்று மாத்தளை நகரம் சிறு கிராமமாகவும் வண்டித்தடம் பதித்த போக்குவரத்து சாலையாகவும் விளங்கியது. இது திருகோணமலைவரை செல்லும் பாதையாகும். அத்துடன் எமது மக்கள் சமய வழிபாட்டுடன் கலைகளையும் பேணி பாதுகாத்து வந்ததுடன் பயபக்தியாகவும் வளர்த்தார்கள். அதில் முக்கியமானது காமன்கூத்து, இது இந்த அம்பிகையின் பதியில் வருடம் தோறும் முன்பு நடாத்தி வந்ததாகவும் அது மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக சமய வழிபாட்டுடன் ஒரு கலாசார கேந்திரதலமாக அந்த ஆலயம் இருந்தமைக்கு பல சான்றுகள் உள்ளன. இவ்வலயத்தில் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பலியிடல் நடைபெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகோற்சவத்தின் போது இரதம் வெளிவீதி செல்வதற்கு முன் பலி பூஜை கொடுத்த பின்பு இரதம் வெளிவீதி செல்வது வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் பலியிடல் பூஜையை மாற்றியமைத்து புது முறையாக சாம்பல் பூசனியை வெட்டி பலி பூசையாக செய்து இரத்தங்களை இழுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உயிர் பலியிடலை நிறுத்தி சாம்பல் பூசணிக்காயை வெட்டி பலி பூசை செய்யும் மரபினை இவ்வாலயத்தில் ஏற்படுத்திய பெருந்தகை முத்தையாபிள்ளை கந்தசாமியாவார். 1955ம் ஆண்டளவில் க. குமாரசாமியார் தலைமை பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாகவும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும் 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம்திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டியதை மறுக்க முடியாது. அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அறங்காவல் சபையினர் மாத்தளை மாவட்டத்தில் இந்து சமய பணிகளை முன்னெடுத்து செயல்படுவதோடு இந்து சமயத்தை வளர்ப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுவருவதை காண முடிகிறது.ஆகவே இம்முறையில் மலையகத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் சமய சமூக மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்து மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயமாக தெய்வ நம்பிக்கையோடு நல்ல சமூகமொன்று உருவாகும்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தரும் பித்ருதேவதா (மக) நட்சத்திரம்

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் kகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபீட்சமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன் பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். எந்த சுப நிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுப நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மஹா ஸ்நானம்” என்கிறது சாஸ்திரம். கும்பகோணம் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகி, உலகமே அழியும் தருணம் ஏற்பட இருந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த பிரம்மன், சிவபெருமானிடம் முறையிட, அதற்கு ஈசன் “நீ எதற்கும் கலங்காதே. பிரளயம் ஏற்பட்டாலும் மீண்டும் அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்” என்று கூறி ஒரு கும்பத்தை கொடுத்து, “இதில் நீ படைத்த அனைத்து ஜீவராசிகளின் மூல காரணமாக இருக்கும் வித்துக்களை இதனுள் வைத்து விடு. அத்துடன் புராணங்களையும், மந்திரங்களையும் அதனுடன் வைத்து பூஜை செய். பிறகு அந்த கும்பத்தை மேரு மலையில் வைத்து விடு. அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பிரம்ம தேவரிடம் சிவபெருமான். சிவபெருமானின் உத்தரவின்படி செய்தார் பிரம்ம தேவர். சில நாட்களுக்கு பிறகு மிகப் பெரிய பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது. மேருமலையில் பிரம்மன் பூஜித்து வைத்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்து ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் சிவபெருமான் ஒரு வேடன் உருவத்தில் வந்து, அந்த கும்பத்தை நோக்கி அம்பு ஏய்த போது, கும்பத்தின் கூம்பு போன்ற கோணப்பகுதி உடைந்தது. அந்த கும்பம் தண்ணீரில் மிதந்து வந்த இடமும், வேடன் உருவத்தில் சிவபெருமான் கும்பத்தின் ஒரு மூக்கு போன்ற கோணப்பகுதி உடைத்த இடமும் ஒரே இடம் என்பதால் அந்த இடத்திற்கு “கும்பகோணம்” என்று பெயர் உண்டானது. gooனீliஜீலீ சீatriசீony கும்பம் உடைந்த போது அதில் இருந்து அமுதமும் வெளியேறியது. அந்த அமுதம் நனைத்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி, அதில் சர்வேஸ்வரர் ஐக்கியமானார். இதனால் அந்த சிவலிங்கம், “ஆதி கும்பேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தின் மூக்கு உடைந்த இடம் என்பதால் கும்பக்கோணம். “குடமூக்கு” என்ற பெயரும் பெற்ற ஸ்தலம் ஆகும். மாசி மகம் அன்று கும்பகோணத்தில் விசேடமாக கொண்டாடுவார்கள். அதேபோல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. மாசி மகத்திற்கு சக்தி அதிகம் மாசி மகத்திற்கு சக்தி அதிகம் என்பதை மற்றவர்கள் உணர்வதற்கு முன்னே புண்ணிய நதிகள் என்று சொல்லக்கூடிய கங்கை, காவேரி, யமுனை போன்ற பல புண்ணிய நதிகள் உணர்ந்தார்கள். ஒருவருடைய கஷ்டத்தை கேட்டுக்கொண்டே இருந்தால் கேட்பவர்களுக்கும் அந்த கஷ்டம் வரும். அதனால்தான் நம் முனோர்கள் கூறுவார்கள், “ஒருவரை பார்த்து “ஐயோ பாவம்” என்றால், சொல்பவர்களுக்கு ஈரேழு ஜென்ம பாவங்கள் தேடி வரும். அந்த அளவில் சக்தி படைத்தது துஷ்ட தேவதை. துஷ்ட தேவதைதான் கஷ்டத்தை தருவது. இந்த துஷ்ட தேவதை மனிதர்களிடம் மட்டும் தன் வேலையை காட்டுவதில்லை. பலருடைய பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதிகளிடத்திலும் தன் வேலையை காட்டியது. ஆம், பலருடைய கர்மாக்களை புண்ணிய நதிகள் நீக்கியதால், நதி தேவதைகளின் உடல் கருமையாக மாறி கஷ்டத்திற்கு ஆளானார்கள். இந்த நிலை தீர என்ன செய்ய வேண்டும்? என்று சிவபெருமானிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன், “நீங்கள் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கும்பகோணம் மகா மகக்குளத்தில் நீராடினால், உங்கள் பாவங்கள் நீங்கும்.” என்றார். சர்வேஸ்வரன் கூறியது போல், மகாமககுளத்தில் நீராடி தங்களுடைய பாவத்தை போக்கிக்கொண்டார்கள் அந்த புண்ணிய நதி தேவதைகள். கிhakthi ஜிlanலீt பாவம் தீர கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதியில் குளித்தால் ஒருவருடைய கர்மாக்கள் நீங்கும் என்பார்கள். ஆனால் அங்கேயே பிறந்தவர்களின் கர்மபயன் தீர வேண்டும் என்றால், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால்தான் நீங்கும் என்கிறது புராணம். எப்படி மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாதோ, அதுபோல்தான் “எந்த புண்ணிய நதிக்கரையில் பிறந்தவர்களாக இருந்தாலும், மகாமககுளத்தில் நீராடினால்தான் கர்மாக்கள் நீங்கும்” என்கிறது சாஸ்தரிம். புண்ணிய நதியில் நீராடினால் கர்மபயன் நீங்குமா? என்ற சந்தேகத்தோடு நீராடக்கூடாது. இதற்கு ஒரு கதை இருக்கிறது. ஒரு முனிவர் இருந்தார். அவர் பல வருடங்களாக மக்களுக்கு உபதேசங்கள் செய்து வந்தார். ஒருநாள் கருடன் பறக்கும்போது தன் சிறகு இழந்து, அந்த முனிவர் காலில் வந்து விழுந்தது. இதை கண்ட முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அந்த கருடன் மேல் தெளித்தார். உடனே அது வலிமை பெற்று பறந்து சென்றது. இதை கண்ட பக்தர்கள், “சாமி உங்களிடம்தான் நாங்கள் தினமும் உபதேசம் கேட்கிறோம். எங்களுக்கும் உடல் உபாதை வந்த போது, நீங்களே எங்களை குணப்படுத்தி இருக்கலாமே” என்றார்கள். அதற்கு அந்த முனிவர், அந்த கருடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னிடம் சரண் அடைந்தது. நான் அதை குணப்படுத்துவேனா அல்லது மாட்டேனா? என்ற சந்தேகம் அந்த கருடனுக்கு இல்லை. அதனால் அந்த கருடன் குணம் அடைந்தது. ஆனால் என் மேல் உங்களுக்கு சந்தேகம் இருந்தது. எனக்கு சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் அதிகமாகவே இருப்பதால், நன்மைகள் கிடைக்க தாமதமாகிறது. குழம்பிய மனம் குப்பைக்கு சமமானது. நம்பிக்கையோடு இருந்தால்தான் எல்லாமே நன்மையாக முடியும்” என்றார் அந்த மகான். ஆம்..... அதுபோல மகாமக குளத்தில் நீராடினால் கர்மவினை நீங்குமா? என்ற சந்தேகத்துடன் குளித்தால் நீங்காது. நீங்கும் சுபிட்சம் ஏற்படும் என்று ஆணித்தரமாக நம்பவேண்டும். அப்படி நம்பினால்தான் நன்மைகள் நிழல் போல் தொடர்ந்து வரும். தாட்சாயினி அம்மன் தக்ஷன் தனக்கு சக்திதேவியே மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பி வரம் பெற்றார். அதன்படி சிவனின் கட்டளையை ஏற்று ஈஸ்வரி, இமயமலைச் சாரலில் காளிங்க நதியில் ஒரு வலம்புரிச் சங்காக மாறி தவம் இருந்தார். மாசி மாதம் பெளர்ணமி அன்று, அந்த பக்கமாக வந்த தக்ஷன் கண்ணில் வெண்மையான வலம்புரி சங்கு தெரிந்தது. அந்த சங்கை தன் இரு கரங்களால் எடுத்தவுடன் அந்த வலம்புரி சங்கு குழந்தையாக மாறியது. அந்த பெண் குழந்தைக்கு தாட்சாயினி என்று பெயர் வைத்தான் தக்ஷன். சிவபெருமானுக்கும் தக்ஷனுக்கும் ஏற்பட்ட தகராறில் தாட்சாயினி தீக்குள் விழுந்தாள். ஆனாலும் இறைவியின் உடல் உறுப்புகள் விழுந்த பகுதிகள் எல்லாம் சக்தி பீடங்களாக உருவெடுத்து உலகம் முழுவதும் தோன்றி உலக நாயகியாக பக்தர்களை காக்கிறார். மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீ விஷ்ணு பகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்!

அணிகலன்கள் அணிவதன் பயன்

9802) நம் உடல் ஆரோக்கியத்தைப் பேண உருவானவை எவை? நகைகள் 9803) அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் என்ன? இலங்கை, இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது என்பதாலாகும். 9804) தங்கம் அணிவதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்பதாலும் ஆகும். 9805) தாயாகி தாலாட்டுப்பாட பெண்ணுக்கு கணவன் தரும் பரிசு சின்னம் எது? தாலி 9806) எதையும் காதோடு போட்டுக் கொள் வெளியில் சொல்லாதே என்பதற்காக பெண்கள் அணியும் ஆபரணம் எது? தோடு 9807) முதலில் சமையலை அறியும் மனித உடலில் உள்ள உறுப்பு எது? மூக்கு 9808) மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்தும் ஆபரணம் எது? மூக்குத்தி 9809) கணவன் மனைவியை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக அணியப்படும் அணிகலன் எது? வளையல் 9810) எதிலும் கைத்திறன் காண்பிக்க அணியப்படும் அணிகலன் எது? மோதிரம் 9811) கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக அணியப்படும் அணிகலன் எது? ஒட்டியாணம் 9812) பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம் காலில் அணியும் நகைகளை எதில் அணிகிறோம்? வெள்ளியில் 9813) காலில் அணியும் நகைகளை வெள்ளியில் அணிவதற்கு காரணம் என்ன? தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகளை தங்கத்தில் அணிவதில்லை. 9814) வெள்ளியினால் நம் உடலுக்கு நன்மை என்ன? வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். 9815) வெள்ளிக்கொலுசு அணிவதால் கிடைக்கும் நன்மை என்ன? வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொண்டு இருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. 9816) திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம் எது? மெட்டி 9817) பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் உடலில் எந்த பகுதியில் இருக்கிறது? கால் விரல்களில் 9818) கால் விரல்களில் மெட்டி அணிவதால் ஏற்படும் நன்மை என்ன? வெள்ளியில் இருக்கும் காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும். 9819) மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மை என்ன? டென்ஷன் குறையும், இனிமையான பேச்சுத் திறன், அழகான குரல் வளத்திற்கு உதவும். 9820) மோதிரம், மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் என்ன? இன விருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்த உதவும். 9821) விரல்களில் மோதிரம் அணிவதால் ஏற்படும் வேறு நன்மைகள் என்ன? இதயக் கோளாறுகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்க உதவும். 9822) எந்த விரலில் மோதிரம் அணியக் கூடாது? சுண்டு விரலில்.

திருக்குறள் மனனப் போட்டி

தமிழர் நற்பணி மன்றம், தமிழ் மொழியின் முதன்மை நூலாகவும் உலக பொதுமறை நூலாகவும் போற்றப்படும் தெய்வப்புலவர் என அழைக்கப் படும் திருவள்ளுவர் பெருந்தகையால் இயற்றப்பட்ட திருக்குறளை இன்றைய மாணவ சமுதாயம் கற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே திருக்குறள் மனனப் போட்டியை நடத்த உள்ளது. எதிர்வரும் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை கொழும்பு 15 அளுத்மாவத்தையிலுள்ள அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் இப்போட்டி நடைபெறும். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் காலை 8.30 மணிக்கு போட்டி மண்டபத்துக்கு சமுகமளிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

புதன், 6 பிப்ரவரி, 2013

9761) நவக்கிரகங்களில் சிவாம்சம் கொண்டவர் யார்? சூரியன் 9762) சூரியனார் தை மாதத்தில் எந்ததிசையை நோக்கி பயணத்தை தொடங்குகிறார்.? வடதிசையை 9763) சூரியனார் வடதிசையை நோக்கி பயணிப்பதை என்ன காலம் என்று கூறுவார்கள்? உத்ராயண புண்ணிய காலம் 9764) சூரியன் தை மாதத்தில் எந்த ராசியில் இருப்பார்? மகர ராசியில் 9765) நவக்கிரகங்களில் சக்தியின் அம்சமாகத் திகழ்பவர் யார்? சந்திரன் 9766) தைப்பூச நாளில் சந்திரனுக்கு என்ன நடக்கும்? ஆட்சி பலத்தோடு சஞ்சரிப்பார் 9767) சந்திரனார் தைப்பூச நாளில் எந்த ஆட்சி பலத்தோடு எந்த ராசியில் சஞ்சரிப்பார்? கடக ராசியில் 9768) மகரத்தில் இருக்கும் சூரியனும் கடகத்தில் இருக் கும் சந்திரனும் ஒருவருக் கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வது எப்போது? தைப்பூச நாளில் 9769) சூரியனும் சந்திரனும் இவ்வாறு பார்த்துக்கொள்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டுகளிக்க பரம் பொருளான சிவன் நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுதலாகும். 9770) இறைவன் தனித்து ஆடுவது எப்போது? திருவாதிரையில் 9771) சிவபார்வதி இணைந்து ஆடுவது எப்போது? தைப்பூச நாளில் 9772) நடனமாடினால் என்ன ஏற்படும்? மகிழ்ச்சி 9773) தைப்பூச திருநாளை ஏன் வழிபாட்டுக் குரிய நாளாக நிர்ணயித்தனர்? நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால். 9774) இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் என்ன? குழந்தை 9775) அம்மையப்பரான சிவபார்வதி மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக் குழந்தை யார்? முருகன் 9776) பெற்றாருக்குரிய தைப்பூசம் திருநாள் எப்படி முருகனுக்கு உரியதாகியது? பெற்றோர் மகிழ்ந்திருந்த தைப்பூசம் ள்ளைக்கு சிறப்பான நாளாக அமைந்தது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812