திங்கள், 26 செப்டம்பர், 2011

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய நவராத்திரி விழா

தெஹிவளை, களுபோவில, ஸ்ரீ போதிருக்காராம வீதி, 3/1/1 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி எதிர்வரும் 28 ஆம் 29 ஆம் திகதிகளில் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் 30 ஆம், 01 ஆம், 02 ஆம் திகதிகளில் ஸ்ரீ இலட்சுமி அம்மனுக்கும் 03 ஆம் 04 ஆம், 05 ஆம் திகதிகளில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் பூஜைகள் நடைபெறும்.

எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 8 மணிக்கு விசேட பூஜை வழிபாடும் 10 மணிக்கு மானம்பூ விழாவும் 10.30 மணிக்கு வித்தியாரம்பமும் (ஏடு தொடக்குதல்) இடம்பெறும்.

அன்று பி. ப. 2.30 விசேட பூஜை நடத்தப்படுவதுடன் சகல தெய்வங்களுக்கும் தீபாராதனை செய்யப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் ஸ்ரீ துர்க்கா, ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி நகர வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த மஞ்சத் திருவிழா ஊர்வலம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீ சரணங்கர வீதி வழியாக சென்று ஆஸ்பத்திரி வீதி, வில்லியம் மில் சந்தி வரை சென்று காலி வீதியூடாக ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு சென்று பின் காலி வீதி வழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் ஒழுங்கை வழியாக ஆலயத்தை வந்தடையும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வைரவர் மடை நடைபெறும். இவை யாவும் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகளின் ஆசியுடன் இடம்பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

பிள்ளையார் கதை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு




இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆற்றும் பல்வேறு செயற்திட்டங்களுள் பல்துறை சார்ந்த நூற் பதிப்புக்களும் அடங்குகின்றன. அண்மையில் இத்திணைக்களத்தின் மூலம் “பிள்ளையார் கதை” எனும் சிறுகைநூலொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்துப்பொது மக்கள் ஆகியோருக்கு இலவசமாக விறியோகிக்கப்படுகின்றது.

அழகிய நால்வர்ண விநாயகப் பெருமானின் அட்டைப் படத்துடன் இப்புத்தகம் அமைந்துள்ளது. நூலில் பிள்ளையார் கதை, கதைப் பொழிப்பு, போற்றித் திருவகவல், விநாயகர் அகவல், வருகைக் கோவை, காரிய சித்தி மாலை என்பன அடங்கியுள்ளன. திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் இந்நூலுக்கு வழங்கியுள்ள வெளியீட்டுரையில் இந்நூல் பரவலாகக் கிடைப்பதில்லை என்ற இந்து மக்களின் கோரிக்கைக்கு அமையவே திணைக்களத்தால் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பூரணையும் கார்த்திகை நட்சத்திரமும் கழிந்த மறுநாள் பிரதமை முதல் மார்கழி மாதச் சுக்ல பட்ச ஷஷ்டி ஈறாக இருபத்தியொரு நாட்கள் பிள்ளையார் கதைக் காப்பு இந்து ஆலயங்களில் விரதமாக அநுட்டிக்கப்படுவதாகும். இக்காலங்களில் பிள்ளையார் கதை ஆலயங்களில் படிக்கப்படுவதோடு பொருள் சொல்லி விளங்கப்படுத்தப்படும்.

பக்தர்கள் பிள்ளையார் கதையைப் பக்தி சிரத்தையோடு கேட்டு மகிழ்வர். இந்நூலில் அடங்கும் பிள்ளையார் கதையின் பாடல் வரிகளுக்குரிய பொழிப்பினை மிகவும் எளிய தமிழ் நடையில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதி வழங்கியுள்ளார்.

விநாயகப் பெருமானின் பக்தர்கள் பயன் பெறும் பொருட்டு திணைக்களம் இந்நூலை இலவசமாக விநியோகிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் திணைக்களத்திற்கு நேரிற் சமுகமளித்து பெற்றுக்கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் 10 x 7 அங்குல அளவுள்ள கடிதவுறையில் தமது சுய முகவரியை


எழுதி முப்பது ரூபா (30/=) பெறுமதியுடைய முத்திரையை ஒட்டி அதனை வேறொரு கடிதவுறையில் வைத்து,

பணிப்பாளர்,

இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,

248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04

என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இக்கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் “பிள்ளையார் கதை - இலவச வெளியீடு” என எழுதப்பட்டிருத்தல் வேண்டும்

கே. ஈஸ்வரலிங்கம்,
(தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்)


(புரட்டாதி சனி)

8674) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இருவர்

8675) ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்கள் இருவரின் பெயர்களையும் தருக. இராவணேஸ்வரன், சனீஸ்வரன்.

8676) அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதி தவறாதவர் யார்?
சனீஸ்வரன்

8677) சனீஸ்வரனின் தினம் எது?
சனிக்கிழமை

8678) சூரியபகவானின் மனைவி யார்?
சாயாதேவி

8689) சாயாதேவியிடம் தோன்றியவர் யார்?
சனீஸ்வரன்

8680) சனீஸ்வரன் எப்போது தோன்றினார்?
புரட்டாதி மாத முதற்சனி வாரத்தன்று.

8081) சனிபகவானை வேறு எவ்வாறு அழைப்பர்?
சாயாபுத்திரன்

8682) சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு என்ன பலன் கிடைக்கும்?
நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும்

8683) சாயாபுத்திரனின் உடன்பிறப்புக்கள் யார்?
சாவர்ணிமனு, பத்திரை

8684) சனிக்கு அதிபதி யார்?
மகாவிஷ்ணு

8685) சனிக்கிழமைகளில் என்ன பாராயணம் செய்யலாம்?
விஷ்ணு சகஸ்ரநாமம்

8686) சனி பகவானுக்குரிய தானியம் எது?
கறுப்பு எள்.

8687) சனீஸ்வரன் பெற்ற பதவி என்ன?
கிரகபதவி

8688) சனீஸ்வரர் யாரை வழிபட்டு கிரக பதவி பெற்றார்.
காசிக்குச் சென்று விசுவாதிரை

8689) எந்த கோயில்களில் சனி வழிபாடு செய்வது நல்லது?
சிவன் கோயில்களில்

8690) சிவன் கோயில்களில் சென்று சனி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது என்று ஏன் கூறப்படுகிறது?
சனீஸ்வரன் தாசி விசுவாதிரை வழிபட்டு கிரகபதவி பெற்றதால்

8691) சனிதோஷம் உள்ளவர் கள் புரட்டாதி மாதத்து சனிக்கிழமைகளில் என்ன செய்ய வேண் டும்?
காலையில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) விட்டு விளக்கேற்றி அசர்ச்சனை செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

8692) சனீஸ்வரனை வழிபட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
சிவ விஷ்ணுக்களை வழிபட்டு பிரார்த்தித்து கோளாறு பதிகம், தேவாரம் ஓடி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

8693) சனீஸ்வரனின் வாகனம் எது?
காகம்

திங்கள், 19 செப்டம்பர், 2011

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் ...

கொழும்பு - 15, மட்டக்குளி, கதிரான வத்த, எக்கமுத்துபுர ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் அண்மையில் நடைபெற்றது. இவ் உற்சவம் கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அன்று தொடக்கம் உற்சவகாலம் முடியும் வரை தினமும் அம்பாளுக்கு ஸ்நபன அபிஷேகமும் வசந்த பூஜையும் நடைபெற்றதுடன் வேட்டைத் திருவிழா, சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை, தேர்த்திருவிழா, தீ மிதிப்பு தீர்த்த உற்சவம் திருவூஞ்சல் திருவிழா, வைரவர் மடை என்பன நடைபெற்றன.

வைரவர் மடையின் போது இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவி நல்கி வருபவர்களும் ஆலய உற்சவத்தை சிறப்பு நடத்த உதவியவர்களும் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா பாடி, வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய நிர்வாக சபையின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆலய பிரதமகுரு ரவீந்திர குருக்கள், சோமசுந்தர தியாகராஜா குருக்கள், கலாநிதி ஸ்ரீ ரங்குநாதன், சந்திரகுமாரன், அன்டனி, கே. பத்மராஜா, முருகையா, தர்மராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

அமரசேகரன் பஞ்சலிங்கம், யோகேந்ரன், மயில்வாகனம் திருமதி ரமேஸ், ராதாகிருஷ்ணன், ஸ்ரீதரன், பூசாமி கமலேஸ்வரன் ஆகியோர் சந்தன மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

இவ்வாலயத்தில் அறநெறி பாடசாலையை நடத்தி வரும் வள்ளுவர் அறநெறி மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவருமாகிய கே. பத்மராஜா தலைமையில் ஆலய நிர்வாக சபையினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஆலய நிர்வாக சபையினர் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருவதால் இங்கு கெளரவிக்கப்பட்ட
கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8670. இறைவனை பூஜிக்க பூக்களை பயன்படுத்துவது ஏன்?

மலர்கள் அழகானவை பல வண்ணங்களில் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் அவற்றின் வாழ்க்கையோ மிகவும் குறுகியது. அவை தம்மிடமுள்ள தேனை வண்டுகளுக்கு கொடுத்து விடுகின்றன. மலர்கள் குறுகிய கால வாழ்விலும் பிறருக்கு இனிமை தந்து தியாக உணர்வுடன் சேவை செய்கின்றன.


8671. ஆண்டவனுக்கு பழங்களை படைப்பதன் தத்துவம் என்ன?

பழங்கள் தம்மிடமுள்ள சத்துகளை மனிதனும் பறவைகளும் விலங்குகளும் வாழ உணவாகக் கொடுக்கின்றன. பழத்தை பறிக்காமல் விட்டுவிட்டாலும் அது கனிந்து உதிர்ந்து மண்ணுடன் கலந்து தனது சதையை புழுபூச்சிகளுக்கும் வித்தை மண்ணில் மீண்டும் உயிர்ப்பிக்கவும் கொடுத்து உதவுகிறது.

இயற்கையின் வடிவங்களில் தியாக உணர்வைக் காட்டும் அற்புதமான சின்னங்களாக மலர்களும் கனிகளும் விளங்குவதால்தான் ஆண்டவனுக்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுகின்றன.


8672. ஹோமம் என்பது என்ன?

நமக்கு மழையைக் கொடுத்து வெப்பத்தையும் தந்து வளமையும் செழுமையும் அருளும். தேவர்களுக்கு நாம் அந்த அருளை வேண்டிச் செய்யும் பிரார்த்தனை தான் ஹோமம்.


8673. ஹோம அக்னியில் பட்டுப்புடவை, ரத்தினம், நெல் போன்றவற்றைப் போடுவது விரயமாகாதா?

வயலில் நெல் விதையை அள்ளி வீசி விதைப்பதன் தத்துவம் புரியாத ஒருவரை அருமையான நெல் மணிகளை சேற்றில் வீசி வீணடிக்கிறார்கள் என்றுதான் சொல்வான். விவசாயி செய்யும் செயலால் ஒவ்வொரு நெல்லும் பலநூறு நெல் மணிகளைக் கொடுக்கும். அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது அந்த விவசாயிக்கும் விஷயம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

ஹோமத்தில் நாம் வேண்டிக் கொள்ளும் செல்வங்களை பாவனையாக இடும் போது அதுபல மடங்காக நமக்கு பிரதிபலனை அளிக்கிறது. எனவே அது வீணாவதும் இல்லை விரயமாவதும் இல்லை.

திங்கள், 5 செப்டம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர், ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

8653) திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் அனைத்து இடங்களிலும் வாழை மரம் கட்டுவது ஏன்?

மனிதன் தலைமை பெற வேண்டும். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு பல வழிகளிலும் பயன்தர வேண்டும் என்றும் அவன் குலம் வழியாக தழைக்கவும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சுபகாரியப் பந்தலில் வாழை மரம் கட்டுகின்றனர்.

8654) முக்கனிகளுள் எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடிய கனி எது?

வாழை

8655) வாழையின் சிறப்பியல்பு என்ன?

வாழை தன்னை அழித்துக் கொண்டு பிறருக்கு கனி தரும்.

8656) மணமக்களை வாழ்த்தும் போது எவ்வாறு வாழ்த்துவார்கள்?

ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோட வேண்டும்.

8657) நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை எவை?

உப்பு, மஞ்சள் தூள், அல்லது மஞ்சள் கிழங்கு, ஒரு நிறை குடம் தண்ணீர், குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம்.

8658) உப்பு எந்த தெய்வத்தின் அம்சம்?

மகாலட்சுமியின்

8659) மஞ்சள் எந்த தெய்வத்தின் அம்சம்?

அம்மனின்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812