திங்கள், 28 நவம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


8788) தாரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

மகிழ்ச்சி

8789) தாய்க்குப் பின் மனைவி என்று சொல்லாமல், தாய்க்கு பின் தாரம் என்று ஏன் சொல்லி இருக்கிறார்கள்?

தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதனால்தான்.

8790) ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது, அது என்ன தெரியுமா?

மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை ‘தாரம்’ என அழைப்பர்.

8791) இந்த மந்திரத்தை உச்சரிப்போர் அடையும் பயன் என்ன?

பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர்.

8792) ஆன்மிகத்தில் உயர்ந்த சந்தோஷம் எது?

முத்தியை அடைவது

8793) காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வதை என்னவென்று கூறுவார்கள்?

சூரிய நமஸ்காரம்

8794) இயற்கை வழிபாட்டில் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடு.

8795) உலகின் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடுதான். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.

(கிரகங்கள்)

8796) வியாழன் என்ற குரு கிரகம் மனித உடலில் எதனை கட்டுப்படுத்துகிறது?

மூளையை

8797) மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும் வீணாவதற்கும் காரணமாக இருப்பது எந்த கிரகம்? சுக்கிரன்

8798) நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் கிரகம் எது?

சனி

8799) சுவாசத்தை கட்டுப்படுத்துவது எது?

புதன்

8800) செவ்வாய் கிரகம் நமது உடலில் எதனை ஆட்சி செய்கிறது?

இரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும்

8801) ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு எது குறைவாக இருக்கும்?

சிவப்பு அணுக்கள்

8802) இவ்வாறு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும் நபர் சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரை திருமணம் முடித்தால் என்ன நடக்கும்?

பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் சரியாக இருக்காது.

8803) லக்னத்தில் எந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என கூறப்படுகிறது?

பொதுவாக லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால்

8804) செவ்வாயின் நட்புக் கிரகங்கள் எவை?

சூரியன், சந்திரன், குரு.

சனிப்பெயர்க்சி சிலன கூறும் இதழ்



வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் எதிர்வரும் 2011.12.21 ஆம் திகதி காலை 7.24 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

துலா ராசிக்கு இடம்பெயரும் சனி பகவான் 2012.03.26 ஆம் திகதி பின்னோக்கி மீண்டும் கன்னி ராசிக்குச் சென்று 2012.12.16 ஆம் திகதி பிற்பகல் 2.44 வரை துலா ராசியிலிலேயே சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி துலா ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்,
மேஷ ராசிக்கு கண்ட சனியும்.
கடக ராசிக்கு அர்த்தாஷ்டமி சனியும்
கன்னி ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
துலா ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்
விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்
மகர ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும்
மீன ராசிக்கு அஷ்டம சனியும்
டைபெறவுள்ளது.

இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக ரிஷபம், சிம்மம், தனுசு நேயர்கள் அனுகூலமான பலன்களை அடைவார்கள்.

மிதுனம், கும்பம் ராசி நேயர்களுக்கு மத்தியமமான பலன்கள் ஏற்படும்.

இவ்வாறு சனிப் பெயர்ச்சி பலன்கள் அக்கு வேறாக கணித்து திறம்பட தந்துள்ளார் தமிழ்நாடு, சென்னை, வட பழனி முருகு ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளரும் தமிழகத்தில் ‘நலம் தரும் ஜோதிடம்’ எனும் மாத இதழை வெளியிட்டு வரும் ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்.

இவர் கணித்துக் கூறியுள்ளதை தொகுத்து மாதாந்த, நாளாந்த பஞ்சாங்கக் கலண்டர்களை (நாட்கட்டிகளை) தனி மனிதனாக நின்று வருடாந்தம் வெளியிட்டு வரும் யுனிலங்காஸ் வே. பாலேந்திரா ‘சனிப் பெயர்ச்சி’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் மாதாந்த இதழ்களுக்கு சற்றும் சளைக்காத வண்ணம் அழகுற, சிறப்புற இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திலிருந்து கொண்டு வரும் பொருளொன்றை இலங்கையில் வாங்குவதாக இருந்தால் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் விலையில் மும்முடங்கு பெறுமதியான விலையை கொடுத்துத்தான் வாங்க வேண்டுமாம். ஆனால் இந்த சனிப் பெயர்ச்சி இதழ் 80 ரூபா என்ற மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆலயமொன்றின் மூலஸ்தானத்தில் கொலு இருக்கும் சனீஸ்வரனின் திருவுருவச் சிலையுடன் இராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் திருவுருப் படங்கள் இந்த இதழின் முன் அட்டையை அலங்கரித்திருக்கிறது.

சனி பகவானைப் பற்றியும் அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஜீவன சனி, ஏழரை சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என சனியின் வகைகளைப் பற்றியும் இவ்வாறான சனிகளின் பலாபலன்களையும் இவர் விரிவாக இந்த இதழில் கூறியுள்ளார். அதுபோல் சனி மாற்றத்தால் ஒவ்வொரு ராசிகாரருக்கும் ஏற்படக்கூடிய பலாபலன்களையும் இவர் கணித்துள்ளார். உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என சகல பிரிவினருக்கும் இந்த சனிப் பெயர்ச்சியினால் ஏற்படும் பலாபலன்கள் இதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 21 நவம்பர், 2011

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்






(சந்திரன்)

8777) நவக்கிரகங்களில் தயிர், நுங்கு, பனி போன்று வெண்மையானவன் சந்திரன்

8778) சந்திரன் எதிலிருந்து தோன்றியவன்? பாற்கடலில்

8779) சந்திரனின் சின்னம் எது? முயல்

8780) சந்திரன் வேதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறான் ஸோமன்

8781) ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு ஜாதகருக்கு மூல பாலமாவது எது? சந்திர பலம்

8782) உடலுக்கு காரகனாவான் யார்? சந்திரன்

8783) ஜனன லக்னத்தைந் கொண்டு பலன்கள் சொல்லும் போது எந்த லகுன த்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது?

சந்திர சலக்னத்தை

8784) உலக வாழ்வுக்கு எது முக்கியம்? சரீரபலம் சரீர பலத்திற்கு எது அடிப்படை? மனவளம்

8785) சரீரபலம், மனவளம் இரண்டையும் அடைய தேவையானது எது? சந்திரன் பலன்

8786) நம் சுபீட்சங்களுக்கு தாயகமாக விளங்குபவன் யார்? சந்திரன்

8787) சந்திரன் எதற்கெல்லாம் காரகனாகின்றான்? கடல் கடந்த பயணத்திற்கு, கலை சுவை நிறைந்த ரசணைக்கு, அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூ'ணி அம்பாள் ஆலய திருப்பணிக்கு உதவி கோரல்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் வேண்டுவார் வேண்டுவதை மெய்யன்பர்களுக்கு வாரி வழங்கும் திருத்தலமாகவும் சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுவதுமான நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 29, 30, 31 ஆம் திகதிகளில் பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று திருப்பணி வேலைகள் பாரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகம முறைப்படி இவ்வாலய கும்பாபிஷேகம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திருப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் உட்பிரகார ஓட்டுக்கூரை பழுதடைந்துள்ளமையால் நிரந்தர சீமெந்துக் கூரையிட்டு ஓட்டினால் மேற்கூரை அமைத்தல்.

இந்த சீமெந்து கூரை திராவிடச் சிற்ப வேலைப்பாடுகளுடன் நவீனமயப்படுத்தப்படுவதுடன் பூவேலைப்பாடுகளுடனான தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

அம்பாளின் அற்புத அலங்காரத் தோற்றம் கொண்ட 80 திருவுருவச்சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. ஆலய சுற்றுமதில் புதுப்பிக்கப்பட்டு 4 அடி உயரமும் 550 அடி நீலமும் கொண்ட கர்ணகூடு சாலகரதும் அமைக்கப்படும்.

ஆலய உட்பிரகாரத்துக்குள் நுழைந்து அண்ணாந்து பார்த்ததும் அம்பாளின் அருள் மகிமையும் அன்பும் அமைதியும் அனைவர் உள்ளங்களிலும் நிறைந்தோடும் வண்ணம் சித்திரவேலைப்பாடுகளுடன் 25 கமலங்கள் அமைக்கப்படவுள்ளன.

மணிமண்டபம் இளைப்பாற்று மண்டபம் என ஆலயத்தின் பெருமைகளை புலப்படுத்தும் வண்ணம் மண்டபங்கள் பலவும் அமைக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்வேறு திருப்பணிகள் கூடிய விரையில் ஓரிரு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டி இருப்பதால், இதற்கு உதவ விரும்புவோரிடமிருந்து உதவிகள் கோரப்படுகின்றன. இத் திருப்பணிகளை முடிக்க 5 கோடி ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. உதவிகளை பொருளாளர், ஸ்ரீ நாகபூசுணி- அம்மன் கோயில், நயினாதீவு” என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். அல்லது யாழ்ப்பாண இலங்கை வர்த்தக வங்கி (கணக்கு இல: 1060012330), கொழும்பு வர்த்தக வங்கி (01242628501), ஊர்காவற்றுறை இலங்கை வங்கி (007687860) வைப்புச் செய்யலாம்.

கிராண்ட்பாஸ், டிவாஸ்லேனில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகரஜோதி பூiஜ



கொழும்பு, கிராண்ட்பாஸ், டிவாஸ்லேன் அருள்மிகு ஸ்ரீஞான வைரவர் சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மகரஜோதி மண்டல பூஜைப் பெருவிழா கார்த்திகை மாதம் முதலாம் நாளன்று ஆரம்பமானது. இவ்வாலயத்தில் எதிர்வரும் 2011-01-15 ஆம் திகதி வரை 60 தினங்களுக்கு மண்டலபூஜை நடைபெறும்.

மண்டலபூஜை காலத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு இவ்வாலயத்தில் 18 விதமான விசேட பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி பம்பா கன்னிமூல கணபதி பூஜையும் 26ம் திகதி விஷேடதான்ய அலங்கார பூஜையும், 27ஆம் திகதி மாலை 5 மணிக்கு பால் அபிஷேகமும், 2011-12- 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விஷேட த்ரவிய மஹா யாகமும் 2011-12-03 ஆம் திகதி மாலை 4 மணிக்கு விஷேட 108 சங்காபிஷேகமும் 2011-12-04ஆம் திகதி மணிகண்ட அலங்காரமும் 09ஆம் திகதி இராஜ அலங்காரமாக சமய சமூக சேவையாளர் கெளரவமும் இடம்பெறும். 10ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு அஷ்டோத்திதரசத (108) சங்காபிஷேகமும் 14 ஆம் திகதி புஷ்பாலங்கார பூஜையும் 17 ஆம் திகதி விஷேட விஷ¤க்கனி அலங்கார பூஜையும் இடம்பெறும்.

23 ஆம் திகதி தன அலங்கார பூஜை நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு சம்ஹார வேட்டைத்திருவிழாவும் 25 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நெய் அபிஷேகமும் 30 ஆம் திகதி கற்பூர ஆழி ஜோதி பூஜையும் 2012-01- 01 ஆம் திகதி மாளிகைப்புரத்து மஞ்சமாதா பூஜையும் 04ம் திகதி பாதபூஜையும் 06 ஆந் திகதி கருப்பண்ணசாமி கருத்தசாமி பூஜையும் 07ம் திகதி ஸ்ரீ ஆஞ்சநேய பூஜையும் 15ஆம் திகதி மாலை 6.42க்கு மகரஜோதி பூஜையும் 16ஆம் திகதி ஸ்ரீ ஞான பைரவ மடையும் இடம்பெறும்.

2012- 01-28 ஆம் திகதி மாலை 7 மணிக்கு விசேட பூஜையின் நிறைவில் சபரிமலை பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாலயத்திலிருந்து எதிர்வரும் 2012-12-11ஆம் திகதி திருகோணமலைக்கும் 18 ஆம் திகதி ரம்பொடைக்கும் திருத்தல யாத்திரை மேற்கொள்ளப்படும். வியாகரண சிரோண்மணி சாகித்ய வியாகரணச்சாரிய பிரதம ஆதீன கர்த்தா பிரம்மஸ்ரீ இரா.

பால கிருஷ்ண ஐயர் சுந்தராம்பாள் தம்பதிகளின் நல்லாசியுடன் சர்வதேச இந்துமத பீடத்தலைவரும் ஜனாதிபதியின் இந்துமத இணைப்பாளருமான தேசபந்து சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் ஜேபி தலைமையில் பூஜைகள் யாவும் இடம்பெறும்., இவ்வாலயத்தில் 2012-12-05 ஆம் திகதி வரை விரத முத்திரை, மணி மாலை அணிவிக்கப்படும். இது 25வது வருட சபரிமலை யாத்திரை என்பதால் உபயங்கள் செய்பவர்களுக்கு விசேட ஞாபகார்த்த சின்னங்களும் கெளரவங்களும் அளிக்கப்படும்

கொழும்பு, ஆமர்வீதி, பெரடைஸ் பிளேஸ்ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்






கொழும்பு மாநகரில் வர்த்தக நிலையங்களும் தொழிலகங்களும் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்புமிக்க ஆமர் வீதியில், பெரடைஸ் பிளேஸில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மஹா காளியம்பாள். மிகவும் பழமையான சின்னஞ்சிறு மடாலயமாக இருந்த இந்த ஆலயம், இன்று ஆகம விதிகளுக்கமைய அமைக்கப்பட்டவர் பெரும் ஆலயமாகத் திகழ்கிறது.

இங்குள்ள அம்பாளின் அருள் மகிமை உணர்ந்து இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இவ்வாலயத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன், ஆலய திருப்பணி வேலைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

இங்குள்ள பக்தர்களினதும் இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களினதும் உதவியுடன் சுமார் மூன்று கோடி ரூபா செலவில் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ரவி சங்கர் ஸ்தபதி பக்தியும் கலைவண்ணமும் மிளிரும் வண்ணம் இவ்வாலயத்தை அமைத்து வருகிறார். இவ்வாலயத்தில் திரிதள இராஜ கோபுரம் அமைக்கப்படுவதுடன், விசாலமான மண்டபமும் அமைக்கப்படுகிறது.

ஆகம விதிப்படி, மத ஆசாரப்படி கலை அலங்காரத்துடன் நவீன வசதிகளோடு தாராளமான இடவசதி கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012-03-25ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

2012-03-23ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகும். 24ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

2011-05-11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகப் பூர்த்தி நடைபெற்று 12ஆம் திகதி முத்தேர்த்திருவிழாவும் 13ஆம் திகதி பால்குட பவனியும் 14ஆம் திகதி வைரவர் மடையும் நடைபெறும்.

ஆலய முன்னாள் போஷகர் பிரதிஷ்டை சிரோன்மணி நவாலியூர் சாமி விஸ்வநாத குருக்களின் ஆசியுடன் அவரது புதல்வர் பிரதிஷ்டா பூஷணம் வெங்கட சுப்பிரமணியம் கும்பாபிஷேக கிரியைகளை நடத்திவைப்பார். ஆலய பிரதம குரு சுசீந்திர குருக்களும் இதில் கலந்துகொண்டு கிரியைகளை நடத்துவார்.

இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு “ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்” என்ற இறுவட்டு (விளி) ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் பின்னணிப் பாடகர்களான டி. எம். எஸ். பால்ராஜ், ஸ்ருதி, முகேஸ் ஆகியோருடன் சாம்பசிவமணிக் குருக்களும் இந்த இறுவட்டில் காளி அம்பாளின் அருள் மகிமையை உணர்த்தும் திருப்பாடல்களை பாடியுள்ளார். இந்த இறுவட்டில் அம்பாளின் புகழ்மணக்கும் ஏழு திருப்பாடல்கள் உள்ளன. ஜெய்ச்சா என அழைக்கப்படும் ஜெயச்சந்திரன் இதற்கு இசை அமைத்துள்ளார்.

கிராமத்து மண்வாசனை கமழும் வண்ணம் தென்னிந்திய பக்தி திரையிசைப் பாடல்களுக்கு ஒப்பானதாக இப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இறுவட்டு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு 200 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது.

அம்பாளின் புகழ் மணக்கும் இந்த இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10ஆம் திகதி கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெற்றது. கொழும்பு வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலரும் தொழிலதிபருமான ஈஸ்வரன், கொழும்பு, முகத்துவாரம் ஸ்ரீ விஷ்ணு ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் தொழிலதிபருமான தேசமான்ய துரைசாமி, தொழிலதிபர் சுப்புராமன், பிரைட்டன் ரெஸ்ட் உரிமையாளர் செல்வராஜ் அருள் ஜுவலர்ஸ் உரிமையாளர் கணேச பெருமாள் ஆகியோர் இந்த இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறும் போது எல்லாம் வல்ல ஸ்ரீ மகா காளி அம்மனின் அருள் மணக்கும் மேலும் இரண்டு இறுவட்டுகளை (விளிக்களை) வெளியிடவுள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.

இதுவரை ஆமர் வீதியெங்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருந்த ஸ்ரீ அம்பாளின் அருள்மகிமை இந்த இறுவட்டு மூலம் எல்லோரது உள்ளங்களில் மட்டுமன்றி இல்லங்களிலும் ஒலிக்க வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இறுவட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் அம்பாளின் அருள்மகிமையை பரப்ப உதவுவதுடன், ஆலய கும்பாபிஷேகத்துக்கும் உதவி செய்தவர்களாவீர்கள்.

திங்கள், 14 நவம்பர், 2011

அறநெறி அறிவுநொடி

(தீபம்)

8759) ஒளி எதனை குறிக்கிறது?

அறிவையும் ஞானத்தையும்.


8760) இருள் எதனை குறிக்கிறது?

அறியாமையையும் அஞ்ஞானத்தையும்.


8761) எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும் ஒளிமயமானவனாகவும் விளங்குபவன் யார்?

இறைவன்.


8762) தினசரி வீட்டில் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?

நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது.


8763) பிரார்த்தனைக்கேற்ற காலங்களாக விளங்கும் அதிகாலை, மாலை நேரங்களை என்ன காலம் என்று கூறுவார்கள்?

சந்தியா காலங்கள்.


8764) ஆன்மீக மார்க்கத்தில் இவ்வுலகத்தில் பற்றை ஏற்படுத்தும் வாசனைகளாக கருதப்படுபவை எவை?

எண்ணெயும் திரியும்.


8765) தீபம் மூலம் உணர்த்தப்படும் தத்துவம் என்ன?

தீபம் ஒளிரும் போது எண்ணெயும் திரியும் சிறிது சிறிதாக அழிவது போல் ஞானத்தினால் நம் பற்றுகள் எல்லாம் அழிகின்றன என்றும் ஞானம் அவற்றை அழித்த பிறகே ஓய்கிறது என்பதையும் தீபம் மூலம் உணர்த்தப்படுகிறது.


8766) மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தீபம் ஏற்றிவிட்டு தொடங்குவது ஏன்?

ஞானாக்கினியான இறைவன் அங்கு இருந்து அவை சிறப்பாக நடைபெற அருள்புரியட்டும் என்ற எண்ணத்தினால் தான்.


8767) இறைவன் ஒளிமயமானவன் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள நடத்தப்படும் திருவிழா எது?

திருக்கார்த்திகைத் திருவிழா.


8768) ஒளிதரும் சுடரைத் தாங்கும் பொருளை என்னவென்பர்?

விளக்கு


8769) நமது குறிக்கோள் தெளிந்த அறிவு கிடைக்க நம் முன்னோர் ஏற்பாடு செய்த வழிமுறைகளில் ஒன்று எது?

ஒளி வழிபாடு.


8770) ‘விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும்’ என்று கூறியவர்? திருமூலர்


8771) ‘தவராஜ சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

திருமூலர்


8772) விளக்கினை ஏற்றிப் பிறவி வேதனையை அறுத்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8773) தன் வீட்டுப் பொருட்களை எல்லாம் விற்றும் விளக்கேற்றுவதை தவறாமல் செய்துவந்தவர் யார்?

கணம்புல்ல நாயனார்.


8774) விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இவர் என்ன செய்தார்?

வீடுகளில் கூரை போடுவதற்கு உதவும் கணம்புல்லை விற்று விளக்கேற்றி வந்தார்.


8775) ஒருநாள் கணம்புல் ஒன்றும் விற்கப்படாததால் இவர் எதனைக் கொண்டு விளக்கேற்றினார்?

கணம்புல்லைக் கொண்டு.


8776) கணம்புல் நீண்ட நேரம் எரியாமல் அணைந்துவிடும் என்ற எண்ணத்தில் இவர் என்ன செய்தார்?

தன் தலைமுடியை அவிழ்த்து எரித்தார்.

அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீட மகரNஜhதி விழா



அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தாபீடம் நடத்தும் 29வது ஆண்டு 48 நாட்கள் மண்டல பூஜை மகரஜோதிப் பெருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகும். அன்றுகாலை 6 மணி முதல் மஹா கணபதி ஹோமந் தொடர்ந்து, விரத முத்திரை மாலை அணிதல் இடம்பெறும். அன்று முதல் தினமும் காலை 6 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி, ஐயப்பன் கவச பாராயணம், ருத்ரபாராயணம் என்பன நடைபெறும். மாலை 6 மணி முதல் ஸ்ரீ ஐயப்பன் திருவிளக்குப் பூஜை, ஸ்ரீ ஐயப்பன் கவச பாராயணம், விஷேட ஐயப்பன் பஜனை 18 படி விசேட தீபாராதனை, ஹரிவராசனம், நடை சாத்துதல், அருட் பிரசாதங்கள் வழங்கல் என்பன இடம்பெறும்.

பிரதி புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் விசேட நவோத்தர ஸஹஸ்ர (1008) மஹா சங்காபிஷேகம், விஷேட மலையாள பூஜை, அன்னதான பூஜை இடம்பெறும். புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 9 மணக்கு ஹரிவராசனம் இடம்பெறும்.

இவ்வாலயத்தில் 2011.12.04 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹிஷ சம்காரம் வேட்டைத் திருவிழாவும் எதிர்வரும் 09 ஆம் திகதி மாலை 5 மணிக்கு (உயிருள்ள) நாகராஜானுக்கு பூஜையும், 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தீபஜோதி – தீச்சட்டி வழிபாடும், 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு பால் காவடிப் பெருவிழாவும் பால்குட பவனியும், 24 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மஹா யாகாரம்பமும் இடம்பெறும். இந்த மஹா யாகம் 24 ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு இடம்பெறும்.

2011.01.01 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மஹாயாக பூர்த்தி, மஹா பூர்ணாகுதி, 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஐயப்ப சுவாமி ரதபவனிப் பெருவிழாவும் 2011.01.03 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் தீர்த்தத் திருவிழாவும் 2011.01.05 ஆம் திகதி மாலை 6 மணிக்கு கருப்பண்ண சுவாமி பூஜையும் இடம்பெறும்.

கப்பித்தாவத்தை பிரம்மஸ்ரீ பா. ஷண்முகரெத்ன சர்மா, கனடா சாம்பசிவ சோமாஸ்கந்த சிவாச்சாரியார், இணுவில் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், அவுஸ்திரேலிய சிவஸ்ரீ இராமச்சந்திரன் குரு, திருகோணமலை சிவஸ்ரீ ரவிச்சந்திரக் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் கிரியைகள் நடைபெறும்.

தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன 23வது குரு மஹா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை ஆதீன 2வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோரின் அருளுரைகளும் இங்கு இடம்பெறும்.

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் சாம்பசிவ ஸ்ரீ மணி கண்ட சர்மா பூஜைகளை நடத்துவார்.

ஆலய குரு சிவஸ்ரீ இ. சபாரெத்தினக் குருக்களும் இதில் கலந்து கொள்வார். பிரம்மஸ்ரீக்களான நித்தியானந்த சுதானந்த சர்மா, ந. ஜெகதீஸ்வர சர்மா, சி. பாலசுப்பிரமணிய சர்மா, மோகன காந்த சர்மா ஆகியோர் கா. சாதகாசிரியார்களாக விளங்குவார்கள். 2012.01.04 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குரு பீடாதிபதியின் 29 வது ஆண்டு பீடரோஹண விழா (குருபூஜை) நடைபெறும்.

ஸ்ரீ சாஸ்தா பீட ஆஸ்தான வித்துவான்களான இராஜமாணிக்கம் ரவிச்சங்கர் குழுவினரும் விமல் – சிவா குழுவினரும் என். புண்ணியமூர்த்தியும் மங்கள இசை வழங்குவார்கள்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812