திங்கள், 27 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

(விநாயகப் பெருமான்)


8017) இறைவனை அவரது பல வித நாமங்களையும் சொல்லி ஓம்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதை என்னவென்று கூறுவர்
அர்ச்சனை

8018) அர்ச்சனையில் ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் என்ன செய்வார்கள்?
ஒவ்வொரு புஷ்பம் அல்லது பத்திரம் சமர்ப்பித்தல் மரபு.

8019) அர்ச்சனையின் பின் என்ன செய்யப்படும்?
வேதபாராயணம், தேவபாராயணம், விநாயகர் துதி பாராயணம் செய்யப்படும்.

8020) இவ்வாறு பாராயணம் செய்த பின் என்ன செய்யப்படும்?
அர்ச்சகருக்குரிய தாம்பூல தட்சிணைகளை வழங்கி விருந்தினர், அடியவர், ஏழைகள் ஆகியோருக்கு உணவிட்டு அதன்பின் உணவருந்துவது முறை.

8021) மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சம் சதுர்த்தி நாட்கள் யாருக்குரியது?
விநாயகருக்குரியது

8022) இந்த நாட்களை எவ்வாறு அழைப்பர்?
மாத சதுர்த்தி

8023) மாதந்தோறும் விரதமிருக்க விரும் புவோர் என்ன செய்யலாம்?
ஆவணி சதுர்த்தியிலே பூஜை வழிபாடு களுடன் சங்கல்ப பூர்வமாக ஆரம்பித்து இந்த விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.

8024) சங்கல்ப பூர்வமாக என்பது என்ன?
இன்ன காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள் வேன் என்று உறுதியாக நினைப்பது சங்கற்ப பூர்வமாக எனலாம்.

8025) இந்த சதுர்த்தி விரதத்தை எவ்வ ளவு காலம் அனுஷ்டிக்க வேண்டும்?
21 வருடம் விரதமிருப்பது நன்று.

8026) 21 வருடம் விரதமிருக்க இயலாத வர்கள் என்ன செய்யலாம்?
7 வருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது 21 ற்கு குறையாமல் மாத சதுர்த்தி விரத மிருந்து, அதையடுத்து வரும் ஆவணி சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விநாயக சஷ்டி

8027) கார்த்திகை மாதத் தேய் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரையிலான 21 நாள் அனு ஷ்டிக்கப்படும் விரதம் எது?
விநாயக சஷ்டி.

8028) மஹா விஷ்ணுவுக்கு சாபம் ஏற்பட் டது எதனால்?
முன்பொரு சமயம் பொய்ச் சாட்சி சொன்னதால்.

8029) விஷ்ணு யாரை வணங்கியதால் சாபம் நீங்கப் பெற்றார்?
விநாயகரை.

8030) இச்சாபம் நீங்கப் பெற்றது எப்போது?
மார்கழி மாத வளர்பிறை சஷ்டி நாளான விநாயக சஷ்டி அன்று ஆகும்.

8031) இந்நாளை இறுதியாகக் கொண்ட 21 நாள் விரதத்தை என்னவென்பர்?
பெருங்கதை விரதமென்பர்.

8032) இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது முதல் 20 நாளும் உணவு உண்ணலாமா?
ஒரு பொழுது மட்டும் போசனம் செய்யலாம். இரவு பால் பலம் அல்லது பலகாரம் உட்கொள்ளலாம்.

8033) தினமும் விநாயகருக்கு எவற்றை நிவேதனம் செய்யலாம்?
இளநீர், கரும்பு, அவல், மோதகம், எள்ளுருண்டை.

8034) இவற்றை நிவேதனம் செய்து என்ன செய்யலாம்?
பெருகதை, விநாயகர் புராணம் போன்றவற்றை படிக்கலாம். அல்லது கேட்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

8035) விநாயகரின் சரிதம் கூறும் நூல் எது?
பெருங்கதை

8036) இறுதி நாளில் என்ன செய்யலாம்?
விசேஷ பூசை வழிபாடுகள் செய்து உபவாசமிருந்து மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

திங்கள், 20 செப்டம்பர், 2010


அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

ஆய கலைகள் 64

7982) நீரில் நடத்தலை என்னவென்பர்? ஜல ஸ்தம்பம்

7983) காற்றில் நடத்தலை என்னவென்பர்? வாயு ஸ்தம்பம்

7984) திட்டி ஸ்தம்பம் என்பது எதனை? கண் பயிற்சி

7985) வாக்கு ஸ்தம்பம் என்பது என்ன? வாய்ப் பயிற்சி

7986) சுக்கில ஸ்தம்பம் என்பது என்ன? இந்திரியக்கட்டு

7987) கன்ன ஸ்தம்பம் என்பது என்ன? மறைந்தவற்றைக் காணுதல்

7988) கடக ஸ்தம்பம் என்பது என்ன? யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்

7989) அவஸ்தைப் பிரயோகம் என்பது என்ன? ஆத்மாவை இயக்குதல்

விநாயகர் விரதம்
7990) மும்மணிகளைப் போல் விநாயகருக்குரிய மூன்று சிறப்பான விரதங்களைத் தருக? சுக்கிர வார விரதம், சதுர்த்தி விரதம், விநாயக ஷஷ்டி விரதம்.

7991) வாரந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சுக்கிரவார விரதம்

7988) மாதந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சதுர்த்தி

7992) வருடத்தில் ஒரு தடவை அனுஷ்டிக்கும் விரதம் எது? விநாயக ஷஷ்டி விரதம்

7993) சுக்கிரவார விரதம் எப்போது அனுஷ்டிக்கப் படுகிறது? வெள்ளிக்கிழமை தோறும்

7994) இந்த விரதத்தை எப்போது ஆரம்பிப்பது நல்லது? வைகாசி மாத வளர்பிறையில் வரும் முதலாவது வெள்ளிக்கிழமையில்

7995) இவ்விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்கலாம்? இரவு ஒரு நேரம் பால் பழம் அல்லது பலகாரம் உட்கொள்வது நன்று. இயலாதவர்கள் ஒரு நேர உணவு உண்டு விரதமிருக்கலாம்.

7996) விநாயகப் பெருமான் உற்பவமானது எப்போது? விநாயக சதுர்த்தியன்று

7997) இந்த விரதத்தை எப்போது அனுஷ்டிக்க வேண்டும்? ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தித் திதியன்று

7998) அந்த நாளில் சதுர்த்தி எந்த வேளையில் நிற்க வேண்டும்? மத்தியானத்தில்

7999) ஆவணி சதுர்த்தி விரதம் பற்றி எந்த புராணத்தில் சிறப்பித்து கூறுப்பட்டுள்ளது? கந்தபுரணத்தில்

8000) இந்த விரதத்தைப் பற்றி பஞ்சபாண்டவர் களுக்கு உபதேசித்தது யார்? சூத முனிவர்

8001) பாண்டவர்களுக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது எதனால்? துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால்

7999) பாண்டவர்கள் காட்டிலே மிகுந்த கஷ்டமும் மன வேதனையும் அடைந்திருக்கும் நிலையில் யாரை சந்திக்கிறார்கள்? சூத முனிவரை

8000) சூதமுனிவரிடம், தமது கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ வழி கேட்டவர் யார்? தருமர்

8001) அதற்கு வழியாக சூதமுனிவர் உபதேசித்தது எதனை? விநாயக சதுர்த்தி விரதத்தை

8002) சூதமுனிவர் தருமரிடம் வேறு என்ன கூறினார்? இந்த விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்ற வர்களின் வரலாற்றை.

8003) இந்த விரதத்தை அனுஷ்டித்து தமயந்தி அடைந்த பலன் என்ன? நளனை அடைந்தது.

8004) கிருஷ்ணர் அடைந்த பயன் என்ன? ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் பெற்றுக் கொண்டது.

8005) இராமன் அடைந்த நன்மை என்ன? சீதையை மீட்டது

8006) இந்திரன் அடைந்த பயன் யாது? சுரப் பகையை வென்றது

8007) பகீரதன் பெற்ற பலன் யாது? கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது.

8008) இந்த விரதத்தை பாண்டவர்கள் அனுஷ்டித்ததால் அடைந்த பயன் என்ன? உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றது.

8009) இஷ்டசித்திகளை பெற, நினைத்த காரிய சித்தியை விரும்புவோர் எந்த விரதத்தை கைக்கொள்ளலாம்? விநாயக சதுர்த்தி விரதத்தை

8010) விநாயக சதுர்த்தி அன்று முதன் முதலில் என்ன செய்ய வேண்டும்? அதிகாலையில் துயிலெழுந்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடு பட வேண்டும்.

8011) மத்தியானம் உணவு உண்ணலாமா? ஒரு பொழுது உண்ணளாம்

8012) இந்த உணவில் எந்த எண்ணெய் சேர்க்கக் கூடாது? நல்லெண்ணெய்

8013) இரவில் உணவு உண்ணலாமா? பட்டினி இருக்க முடியாதவர்கள் பால் பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

8014) விநாயக சதுர்த்தி பூஜையின் போது நிவேன தனங்களாக படைக்கக் கூடியவை எவை? அறுசுவை உணவும் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை.

8015) இவை ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையாக நிவேதனம் செய்ய வேண்டும்? 21. (வெள்ளரிப் பழத்தை 21 துண்டுகளாக வெட்டி வைக்கலாம்)

8016) விநாயக சதுர்த்தி பூஜையில் இடம்பெறும் இன்னொரு முக்கிய அம்சம் என்ன? 21 பத்திரம், 21 புஷ்பம், 21 அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சனை செய்தல்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

(ஆய கலைகள் அறுபத்து நான்கு)


7948) கவி புனையும் ஆற்றல் பெற எவற்றை படிக்க வேண்டும்?

காவியங்களை

7949) அலங்காரம் என்பது என்ன?

அலங்கரித்தல்

7950) மதுர பாடணம் என்பது என்ன?

மொழித் தேர்ச்சி

7951) நிருத்தம் என்பது என்ன?

நடனம்

7952) சத்தத்தைக் கொண்டு அறிதலை என்னவென்பர்?

சத்தப்பிரமம்

7953) வேணு என்பது என்ன கலை?

புல்லாங்குழல் ஊதும் கலை

7954) கால நிர்ணயப் பயிற்சி எது?

தாளம்.

7955) எறியும் அல்லது பாணப் பயிற்சி என்பது என்ன?

அஸ்திரப் பரீட்சை

7956) கனகப் பரீட்சை என்பது எதனை?

தங்கத்தை சோதிக்கும் அறிவு

7957) இருதப் பரீட்சை என்பது எதனை?

தேர் ஓட்டும் பயிற்சி

7958) கஜப் பரீட்சை என்பது என்ன?

யானை ஏற்றம்

7959) அகவப் பரீட்சை என்பது எதனை?

குதிரை ஏற்றம்

7960) இரத்தினப் பரீட்சை என்பது எதனை?

இரத்தினக் கல் சோதிக்கும் திறனை

7961) மண்ணை சோதிக்கும் திறனை என்னவென்பர்?

பூமிப் பரீட்சை

7962) சங்கார மவிலக்கணம் என்பது என்ன?

படைகளை வழிநடத்தும் திறன்

7963) ஆகருடணம் என்பது என்ன?

கவர்ச்சிக்கலை

7964) பேய்களை ஏவுதலை என்னவென்பர்?

உச்சாடணம்

7965) வித்தையின் மூலம் அதிர்ச்சியினை உண்டாக்கலை என்பன வென்பர்?

வித்து வேடணம்

7966) மதன சாஸ்திரம் என்பது என்ன?

காதல் கலை

7967) மோகனம் என்பது என்ன?

மயங்கச் செய்யும் கலை

7968) மற்றவர்களை வசீகரித்தலை

என்னவென்பர்?

வசீகரணம்

7969) ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றும் கலையை என்னவென்பர்?

இரசவாதம்

7970) காந்தருவ வாதம் என்பது என்ன?

குழுவாத்தியப் பயிற்சியை

7971) மிருகம், பறவை, ஊர்வன என்பவற்றை வசீகரிக்கும் ஆற்றலை என்னவென்பர்?

பைபீலவாதம்

7972) துக்கமுள்ள மனதை தேற்றும் பயிற்சியை என்னவென்பர்?

கவுத்துகவாதம்

7973) தாது வாதம் என்பது என்ன?

தாது பயிற்சியை

7974) விஷத்தை முறிக்கும் பயிற்சியை என்னவென்பர்?

காரூடம்

7975) முட்டி என்பது என்ன?

கைரேகை சாஸ்திரம்

7976) ஆகாயப் பிரவேசம் என்பது என்ன?

ஆகாயத்தில் மறைத்தலை

7977) ஆகாயத்தில் நடந்து செல்வதை என்னவென்பர்?

ஆகாய ஸ்தம்பம்

7978) பரகாயப் பிரவேசம் என்பது என்ன?

மறு உடம்பில் பிரவேசித்தல்

7979) அதிசயமானவற்றை வரவழைத்தலை என்னவென்பர்?

இந்திரஜாலம்

7980) மகேந்திரஜாலம் என்பது என்ன?

ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்

7981) அக்னி ஸ்தம்பம் என்பது என்ன?

நெருப்பில் நடத்தலை

திங்கள், 6 செப்டம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

ஆயகலைகள் அறுபத்து நான்கு


7229. ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அருளிச் செய்தவர் யார்?
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி.


7230. ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தருக.

அகர விலக்கணம், இலிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாஸ்திரம், ஜோதி சாஸ்திரம், தரும சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுர பாடணம், நாடகம், நிருத்தம், சத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அஸ்திரப்பரீட்சை, கனகப் பரீட்சை, இருதப் பரீட்சை, கஜப் பரீட்சை, அசுவப்பரீட்சை, இரத்தினப் பரீட்சை, பூமிப் பரீட்சை, சங்கார மவிலக்கணம், மல்யுத்தம், ஆகருடணம், உச்சாடணம், வித்து வேடணம், மதன சாஸ்திரம், மோகனம், வசீகரணம், இரவசாதம், காந்தருவ வாதம், பைபீலவாதம், கவுத்துகவாதம், தாதுவாதம், காரூடம், நட்டம், முட்டி, ஆகாயப் பிரவேசம், ஆகாயஸ் தம்பம், பரகாயப் பிரவேசம், அதிரிசியம், இந்திரஜாலம், மகேந்திர ஜாலம், அக்கினி ஸ்தம்பம், ஜல ஸ்தம்பம், வாயு ஸ்தம்பம், திட்டி ஸ்தம்பம், வாக்கு ஸ்தம்பம், சுக்கில ஸ்தம்பம், கன்ன ஸ்தம்பம், கடக ஸ்தபம், அவஸ்தைப் பிரயோகம்.


7231. அகரவிலக்கணம் என்பது என்ன?
எழுத்துக் கூட்டும் பயிற்சி.


7232. இலிதம் என்பது என்ன?
கையெழுத்துப் பயிற்சி


7233. கணிதம் என்பது என்ன?
எண் பயிற்சி


7234. வேதத்திற்கு பொருள் யாது?
இந்து நெறி.


7235. புராணத்தால் குறிப்பிடப்படுவது யாது?
இந்துக்கடவுளின் வரலாறு


7236. வியாகரணம் என்பது என்ன?
இலக்கணம்


7237. நீதி சாஸ்திரம் என்பது எதனை?
நீதி அறிவுத்திறனை.


7238. ஜோதிடத்திறனை என்னவென்று அழைப்பார்கள்?
ஜோதிட சாஸ்திரம்.


7239. தரும சாஸ்திரம் என்பது என்ன?
சட்டத்திறன்.


7240. யோக சாஸ்திரத்தின் மூலம் எதனை அறிந்துகொள்ளலாம்?
யோகப் பயிற்சிகளை.


7241. வேதத்தின் நடைமுறைப் பயிற்சிகளை எதன் மூலம் அறிந்துகொள்ளலாம்?
மந்திர சாஸ்திரம் மூலம்.


7242. சகுன நிமித்தம் பற்றி அறிய எதை கற்றுக்கொள்ள வேண்டும்?
சகுன சாஸ்திரத்தை


7243. சிலை அமைக்கும் பயிற்சிகளை பெற கற்றுக்கொள்ள வேண்டியது எதை?
சிற்ப சாஸ்திரம்


7244. வைத்திய சாஸ்திரம் எதனைக் கூறுகின்றது?
மருந்துகள், நோய் பற்றிய அறிவுகளை


7245. சாமுத்திரிகா இலட்சணம் பற்றி எதில் அறிந்துகொள்ளலாம்?
உருவ சாஸ்திரத்தில்

7246. உருவசாஸ்திரம் என்பதன் பொருளாக எதனைக் கொள்ளலாம்?
உருவத்தால் அறிதலை.

7247. சரித்திர அறிவுகளை பெற எதனை படிக்கலாம்?
இதிகாசங்களை.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812