திங்கள், 25 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8613 விட்டகுறை தொட்ட குறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?


பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்ட குறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு அங்கு அநாதையாக விட்டு விட்டால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விடும் என்றும் கூறுகின்றனர்.

இது தவறான அர்த்தமாகும். தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தக் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தாற்போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருளாகும்.


8614 ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்பதன் பொருள் என்ன?

ஆயிரம் முறை பொய் சொல்லி திருமணம் செய் என்பதே உண்மையான பழமொழியாகும். காலப் போக்கில் ‘போய்சொல்லி’ என்ற வார்த்தை பொய் சொல்லி என மாற்றப்பட்டுவிட்டது.

பழங்காலத்தில் சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர் அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள் பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று நல்ல வரன்தான். நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம் என சொல்லி வலியுறுத்துவர். இதைத்தான் ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் என்று குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழி மருவி ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் எனக் கூறப்படுவதால் பலர் மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வருகின்றனர்.

திங்கள், 18 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(மண்டலம்)

8605) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?

48 நாட்கள்

8606) ஒரு தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தால் அதனைத் தொடர்ந்து எத்தனை நாட்கள் பூஜிக்க வேண்டும் என்பார்கள்?

48 நாட்கள்

8607) ஒரு தெய்வத்தை ஒரு மண்டலம் பூஜிக்க வேண்டும் என்று கூறுவதேன்?

சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அச்சுவினி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத் தொகையான 48 ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும் ராசிநாதர்களும் நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

(திரிபுண்டரம்)

8608) இறைவனை தியானித்து தண்ணீருடன் சேர்த்து குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்வார்கள் இதற்கு என்ன பெயர்?

திரிபுண்டரம்

8609) இந்த மூன்று கோடுகளும் எத்தகைய பலனை அளிக்கக் கூடியது?

மூன்று வகை பாவங்களைப் போக்கவல்லது

8610) முதல் கோட்டில் அமைந்துள்ளவை எவை?

அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, கிரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை, மஹா தேவன்.

8611) இரண்டாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

உகாரம், தட்சிண அக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திர தேவதை, இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன்.

8612) மூன்றாவது கோட்டில் அமைந்துள்ளவை எவை?

மகாரம், ஆலஹனீயம், பரமாத்மமா, தமோ குணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலை நேர மந்திர தேவதை, சிவன்

தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருப்பணி

அவன் இன்றி அணுவும் அசையாது என் பதை உணர்வு பூர்வமாக உணர்ந்த இந்துக்கள் ஆதிகாலம் தொட்டு இயற்கைக்கு மதிப்பளித்து இயற்கையை போற்றி வணங்கி வருகின்றனர். உலகெங்கும் வாழ்ந்த இந்துக்க ளைப் போல் கொழும்பு, தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி மாவில ஒழுங்கையில் வாழ்ந்த இந்துக்களும் 1980 ஆண்டுக்கு முன்பிருந்து ஒரு மரத்தின் கீழ் கல்லை வைத்து வழிபட்டு வந்தனர்.

1980ம் ஆண்டுக்கு முன் இங்கு 80 இந்து குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. 1983ம் ஆண்டுக்குப் பின் மேலும் பல குடும்பங்கள் இங்கு வந்து சேர்ந்தன் விளைவாக இங்கு பலகை யால் மடாலயம் அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு பலகையாக இருந்த மடாலயம் கல்லால் கட்டி 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

2000ம் ஆண்டு பேஸ்லைன் வீதி பெருந் தெருவாக்கப்பட்டது. மேம்பாலமும் அமைக் கப்பட்டதுடன் மாடி வீடமைப்புத் திட்டங்களும் இங்கு உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக மேலும் பலர் இங்கு வந்து சேர 2005ம் ஆண்டு இங்குள்ள மக்கள் ஒன்றுகூடி இவ்வா லயத்தை விஸ்தரித்து அமைக்க தீர்மானித்தனர். இதற்கமைய 2005-02-10ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் ஆலயம் தரைமட்டமாக்கப் பட்டது. மறுநாளான 11ம் திகதி ஆலயத்தை புனரமைக்க அடிக்கல் நடப்பட்டது.

தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகளை சிற்ப சிந்தாமணி விஸ்வஸ்ரீ செ.ச. சந்தனகுமார் ஸ்தபதி மேற்கொண்டு வருகிறார். ஆலயத்தில் ஆரம்ப காலத்திலிருந்து வந்த விநயாகப் பெருமானின் திருவுருவச் சிலையும் அம்பாளின் திருவுருவச் சிலையும் பின்னப் பட்டிருப்பதால் இத்திருவுருவச் சிலைகளுக்கு பதிலாக புதிய திருவுருவச் சிலைகளை பிரதி ஷ்டை செய்ய ஆலய திருப்பச் சபையினர் திருவுளங்கொண்டனர்.

இவ்வாலயத்தில் சிவன், துர்க்கை, முருகன், மஹாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படு கின்றன. இவ்வாலயத்தின் திருப்பணிகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ். செல்லச்சாமி, பொ. இராதகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாரத லக்ஷ்மன் பிரேமச் சந்திர, மனோ கணே சன் ஆகியோர் உதவியுள்ளனர்.

இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் பிரதி ஷ்டை செய்யப்படவுள்ள 2 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைக்கு மேல் மாகாண சபை உறுப்பினர் தயாகாந்த பெரேரா நிதியுதவி அளித்துள்ளார்.

ஆலய மூலஸ்தானம் அர்த்த மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் வசந்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு 60 பிள்ளைகளுடன் இவ் வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாணிவித்தியா அறநெறி பாடசாலை இவ் வாலயம் புதுப்பொலி வுடன் விஸ்திரமாக்க உதவியது.

இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 2011.08.26ம் திகதி நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபை தலைவர்: எம். முருகேசன் (பரமு), செயலாளர்: ஆர். விஜயகுமாரன் (விஜயன்), பொருளாளர்: ஆ. குமரன், உபசெயலாளர்: பீ. சிரஞ்ஜீவன், நிர்வாக சபை உறுப்பினர்கள்: கே. கணேஷ், பீ. முருகேசன், எம். சுரேஷ், கே. அசோக், எஸ். நேசன், எம். கணேஷ், ஆனந்தா.

திங்கள், 11 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8595) ‘ராம’ என்ற மந்திரத்தை வால்மிகி முதலில் எவ்வாறு உச்சரித்தார்?

மரா

8596) ராம அல்லது மரா என்பதன் பொருள் என்ன?

பாவங்களைப் போக்கடிப்பது

8597) ராமனுக்குள் சீதா அடக்கம் என்பதால் சீதை தனதாக்கிக் கொண்ட பெயர் என்ன?

ரமா

8598) ‘ரமா’ என்பதன் பொருள் என்ன?

லட்சுமி

ராம மந்திரம் எத்தகையது?

லட்சுமி கடாட்சத்தை வழங்கவல்லது.

8599) ராம மந்திரம் எது?

ஸ்ரீ ராம ஜெயம்

8600) ராம மந்திரத்தை எழுதுவதாலும் சொல்வதாலும் ஏற்படும் நன்மை என்ன?

எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.

8001) ராமன் என்ற சொல்லில் ‘ரா’ என்பதன் பொருள் என்ன?

இல்லை

8602) ‘மன்’ என்பதன் பொருள் என்ன?

இல்லை

8603) ‘ராமன்’ என்பதன் பொருள் என்ன?

இது போன்ற தலைவன் இதுவரை இல்லை.

8604) வெற்றிலைக்கு ஏன் வெற்றிலை என்பது பெயர் வந்தது?

எல்லாக் கொடிகளும் பூவிடும் காய் காய்க்கும். ஆனால் வெற்றிலை கொடி பூக்காது. காய்க்காது. உண்ணக் கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும் அதனால் தான் அது வெற்றிலை ஆயிற்று.

திங்கள், 4 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி





கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


தாம்பூலம்



8586) வெற்றிலையில் நுனியில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?

லட்சுமி

8587) வெற்றிலையின் நடுவில் யார் இருப்பதாக கூறப்படுகிறது?

சரஸ்வதி

8588) காம்பில் யார் வாசம் செய்வதாக கூறப்படும்?

பார்வதி தேவி

8589) சுபநிகழ்ச்சிகளில் விருந்துக்குப் பிறகு வெற்றிலை பாக்கு கொடுப்பது ஏன்?

வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இருப்பதால்

8590) தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து எவை வெளிப்பட்டன?

ஐந்து பசுக்கள்

8591) அந்த ஐந்து பசுக்களின் பெயர்களையும் தருக?

நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை

8592) இந்த ஐந்து பசுக்களும் எந்த நிறங்களைக் கொண்டிருந்தன?

பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு

8593) பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து விதமான கவ்வியங்களும் தருக.

கோமயம் (சாணம்), கோமூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய்

8594) இந்த ஐந்து கவ்யங்களயும் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகத்தை என்னவென்பர்?

பஞ்சகவ்ய அபிஷேகம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812