ஞாயிறு, 15 நவம்பர், 2020

சிவசக்தி ஐக்கியம்

கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-, மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி. நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும். அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள். குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன், -மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறை (அறநெறி அறிவு நொடி)

)ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் என்ன செய்யப்படும்? சுத்தம் செய்யப்படும் ) சுத்தம் செய்யப்பட்டு பின் என்ன செய்யப்படும்? ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் அமிழ்த்தி வைக்கப்படும். ) எந்த ஜலவாசத்தில் வைக்கப்படும்? அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து வைப்பார்கள். ) புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை எவ்வளவு காலம் ஜலவாசத்தில் வைப்பார்கள்? ஒரு மண்டலம் ) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்? 48 நாட்கள் ) ஜலவாசத்தில் இருக்கும் சிலை என்னவாகும்? குளிர்ந்து உறுதியாக உருவாகும். ) இவ்வாறு ஜலவாசத்தில் வைப்பதால் அறிவியல் படி எதனை அறியலாம்? சின்னமான சிலையா அல்லது வழிபடத்தக்க சிலையா என்று அறியலாம் )சின்னமான சிலை என்று எவ்வாறு அறியலாம்? ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். ) இவ்வாறு செய்வதால் என்ன நன்மை? பின்னமான சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. ) குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வதால் என்ன நடக்கும்? அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். ) அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை என்ன? ஜலவாசம். ) 48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக என்ன செய்வார்கள்? தானிய வாசத்தில் வைப்பார்கள். ) தானிய வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கப்படும். ) இதனை என்னவென்று அழைப்பார்கள்? தான்ய வாசம். ) தான்ய வாசத்தில் எத்தனை நாட்கள் வைக்கப்படும்? இதுவும் 48 நாட்கள் தான். ) நவ தானியங்களோடு இங்கு வேறு என்ன வைக்கப்படும்? நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ) மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் எத்தனை ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்? ஆறு ) அந்த ஆறு வாசங்களும் எவை? ஜலவாசம், தான்ய வாசம், ரத்ன வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயன வாசம் ) ஜலவாசம், தான்ய வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்? நவரத்தினங்களில் மூழ்க வைக்கப்படும் ) நவரத்தினங்களில் மூழ்க வைப்பதை என்னவென்று சொல்வார்கள்? ரத்ன வாசம். ) ரத்ன வாசம் செய்தபின் என்ன செய்யப்படும்? தன வாசம் செய்யப்படும் ) தன வாசம் எப்படி செய்யப்படும்? பொற்காசுகளில் மூழ்க வைக்கப்படும் ) தன வாசம் செய்த பின் என்ன செய்யப்படும்? வஸ்திர வாசம், ) வஸ்திர வாசம் எப்படி வைக்கப்படும்? பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்ய வைக்கப்படும். ) இறுதியாக எந்த வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும்? சயன வாசத்தில் ) சயன வாசத்தில் வைக்கப்படுவதை என்னவென்று அழைப்பார்கள்? ஹம்சதூளிகா மஞ்சம் ) சயன வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ) இந்த ஆறு வாசமும் எத்தனை நாட்கள் செய்யப்படும்? 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் ) இவற்றில் இப்போது எத்தனை வாசத்தால் முடித்துக் கொள்ளப்படுகிறது? இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. ) எனினும் தான்ய வாசத்தில் வேறு என்ன செய்யப்படுகிறது? தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது. ) இந்த தான்ய வாசம் ஏன் செய்யப்படுகிறது? நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும் என்பதாலாகும். ) நவதானியத்தில் இருந்து என்ன வெளியாகும்? வெவ்வேறு விதமான வெப்பம் ) இந்த வெவ்வேறு விதமான வெப்பம் என்ன செய்யும்? சிலையை தாக்கும். ) 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் என்ன நடக்கும்? அவை உடைந்து விடும். ) அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் என்ன நடக்கும்? சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். ) அதைப் போல ரத்தின வாசத்தில் என்ன நடக்கும்? வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். ) அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் என்ன நன்மையை பெறும்? தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். ) 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகள் என்ன செய்யப்படும்? பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர் கண்கள் திறக்கப்படும். ) இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைப்பதால் ஏற்படும் நன்மை என்ன? குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வரப்படும். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. ) இந்த வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்? 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலை வைக்கப்படும். ) புஷ்பாதி வாசம் என்பது எவ்வாறு செய்யப்படும்? பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை வைக்கப்படும். ) புஷ்பாதி வாசம் செய்யப்படுவதால் ஏற்படும் நன்மை என்ன? அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறும். ) புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக என்ன செய்யப்படும்? தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படும். ) சயனாதி வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்? நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடப்படும். ) இந்த வாசத்தில் என்ன செய்யப்படுகிறது? சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. ) இத்தனைக்குப் பின் என்ன செய்யப்படும்? கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. ) கண் எவ்வாறு திறக்கப்படும்? தகுந்த பூஜைக்கு பின் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படும். ) கண் இவ்வாறு யாரால் திறக்கப்படும்? தலைமை ஸ்தபதியால் ) அந்த சிலைக்கு தெய்வீகத் தன்மை ஊட்டப்படுவது எப்போது? கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடக்கும் யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. ) கடைசியாக செய்யப்படும் வாசம் என்ன? ஸ்பரிசவாதி ) ஸ்பரிசவாதியத்தில் என்ன செய்யப்படும்? ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படும். ) இந்த காரியத்தை யார் செய்வார்? கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.

ஐப்பசி மாதப் பௌர்ணமி (அறநெறி அறிவு நொடி)

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் உரிய தனிச்சிறப்பு என்ன? அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுவதாகும். சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுவது எப்போது? ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் எது? அரிசி ஐப்பசி மாத பௌர்ணமி தினத்திற்குரிய சிறப்பு என்ன? வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பவது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் என்ன நடக்கும்? அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும் அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது எந்த மதம்? நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது எது? அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் யார்? ஈசன். அன்னத்தை சாமவேதத்தில் எப்படி அழைக்கப்படுகிறது? அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' இதன் பொருள் என்ன? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே ஆகும். உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை எது? அன்னம்தான் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்? உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகநடத்தப்படுகிறது. ஐப்பசி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பா்? துலா மாதம் புரட்டாதி மாதம் யாருக்குரியது? பெருமாளுக்கு ஐப்பசி மாதம் யாருக்கு உரியது? ஈசன், முருகன் ஐஸ்வரியங்களை அள்ளித் தரும் மாதம் எது? ஐப்பசி தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கியமான விரதம் எது? கந்த சஷ்டி கந்த சஷ்டி எந்த மாதத்தில் வரும்? ஐப்பசி ஐப்பசியில் வேறு என்ன விரதம் வரும்? கேதார கௌரி விரதம் தீபாவளி பண்டிகை எந்த மாதம் வரும்? ஐப்பசி முருகப்பெருமானுக்கு எப்போது விரதம் கடைபிடிக்கப்படுகிறது? நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது எதனை குறிக்கிறது? வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர விரதம் என்பது எது? கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும்.

நவராத்திரி விழா

வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது. துர்க்கை தேவி நெருப்பின் அழகு, ஆவேசப்பார்வை, வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக் குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜய தசமியாகும். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவதுர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள். லட்சுமி தேவி மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம், விஷ்ணு பிரியை, கிரியாசக்தி, லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட் சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர் கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர். சரஸ்வதி தேவி வைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம், பிரம்மபிரியை, ஞான சக்தியான சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூலநட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடுசெய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்ச மாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜய தசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பலகுழந்தைகள் கல்வியை அன்று தான் தொடங்குவார்கள். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பெண்கள் அணியும் அணிகலன்களுக்கு காரணங்கள் (அறநெறி அறிவு நொடி)

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும் அலங்காரம் முழுமடைய அணிவிக்க வேண்டியது என்ன? தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் பெண்ணுக்குத் தரும் பரிசு சின்னம் என்ன? தாலி -எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே என்பதற்கு அணிவிக்கப்படுவது எது? தோடு மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்த அணிவிக்கப்படுவது என்ன? மூக்குத்தி கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? வளையல் கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? ஒட்டியாணம் - எதிலும் பெண் கைத்திறன் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? மோதிரம் ஆலிலை தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது எது? ஆலமரம் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து ஞானம் தருபவர் யார்? தட்சிணாமூர்த்தி பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை எந்த மரத்துக்கு கீழே அமர்ந்து செய்வார்கள்.? ஆலமரத்துக்கு ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற மரம் எது? ஆலமரம் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் படுத்திருப்பவன் யார்? கண்ணன் கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்றபடியால் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி என்ன? வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை ஆலிலைக்கு வேறு சக்தி என்ன? சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும் கண்ணன் படுக்க ஆலிலையை தேர்ந்தெடுக்க வேறு காரணம் இருக்கா? வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை என்பதாலும் சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருப்பதாலாகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால் என்ன நடக்கும்? அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. ஆலிலை தொடர்பில் இவற்றின் மூலம் புலப்படுவது என்ன? கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான் ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு போதிக்கும் பாடம் என்ன? அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

நவராத்திரி (அறநெறி அறிவு நொடி)

நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது எந்த காலத்தில்? சோழர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக நவராத்திரி விழா மாறியது எந்த காலத்தில்? நாயக்கர் காலத்திலிருந்து தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தியது எந்த காலத்தில்? நவராத்திரி காலத்தில் தான் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை வழங்கியவர் யார்? மன்னர் திருமலை நாயக்கர் தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது எது? ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை மன்னர் திருமலை நாயக்கர் வழங்கியதால் தான். நவராத்திரி நாட்களில் பெண்கள் எந்த பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்? கன்யா நவராத்திரி பண்டிகையை யார் முதன் முதலில் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது? ராமர் நவராத்திரி விரதத்தை ராமபிரான் கடைப்பிடித்த பிறகு என்ன நடந்தது? அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது. இவ்வாறு எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? தேவி பாகவத்தில் நவராத்திரி நாட்களில்தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம் எது? நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுவது எதற்கு? அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, கொலு வைதப்பதன் அர்த்தம் என்ன? அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்று அர்த்தம் ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால், பிறகு எவ்வளவு காலம் கொலு வைக்க வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நவராத்திரியில் எதில் கோலம் போட வேண்டும்? அரிசி மாவால் அரிசி மாவால் கோலம் போடுவதால் ஏற்படும் நனமை என்ன? குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும் நவராத்திரி நாட்களில், சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால் என்ன நடக்கும்? எதிர்மறையான விளைவுகளே உருவாகும்

மலர்ந்தும் மலராத தமிழ் நாடக விழா

கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கலைஞர்களை வலுவூட்ட "டவர் மண்டப அரங்க மன்றம்" சகோதர மொழி நாடகங்களை மேடையேற்றியது போல் "தமிழ் நாடக விழா 2020" விழாவை நடத்த ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்கள், 5 நெடுநாடகங்கள் மேடை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்ளவிருந்தனர். அதற்கமைய தமிழ் நாடக விழா கடந்த 3ஆம் திகதி டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்தன தலைமையில் மருதானை எல்பிஸ்டன் அரங்கில் ஆரம்பமாகி நடந்து வந்தது. 2020 ஒக்டோபர் 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” என்ற நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. ஒக்டோபர் 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி”யும் மேடையேற்றப்பட்டன. "கண்ணகி கலாலயம்" படைப்பாக ஆ.இளங்கோவின் கதை, வசன, இயக்க, நடிப்பில் ச.பிரதீப்குமார் தயாரிப்பில் கடந்த (04 - 10 - 2020) ஞாயிற்றுக்கிழமை "நிதர்சனம்" குறுநாடகம் மேடையேறியது. எமது கலைஞர்களின் அடிப்படை பிரச்சினைகளை நகைச்சுவை கலந்த தொணியில் இந் நாடகம் படைக்கப்பட்டிருந்தது. கலாபூஷணம் கே. செல்வராஜன் இயக்கத்தில் சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்ரேஜ் வழங்கிய "சந்தேக கனவுகள்" நாடகத்தில் கலாபூஷணம் மல்லிகா கீர்த்தி, பூ. மார்கிரட், எஸ். சரவணா, ஆர். சசிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். கணவன் மனைவிக்கிடையே காலம் காலமாக தொடர்ந்து வரும் சந்தேகப் பேயை விரட்டும் விதமான கதையாக இது அமைந்திருந்தது. ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் கதை வசனம் எழுதியிருந்தார். இதற்கான இசையை ஏ. சந்திரதாஸ் வழங்கியிருந்தார். ஒப்பனை மல்லிகா கீர்த்தி, அரங்க நிர்வாகம் மற்றும் தயாரிப்பு கலைஞர் பொன் பத்மநாதன் . ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை”யும் மேடையேற்றப்பட்டன. இந்நிலையில் நாட்டில் பரவுகின்ற கொரோனா வைரஸ் காரணமாக டவர் மண்டப அரங்க மன்றம் நடத்தி வந்த தமிழ் நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என டவர் மண்டபம் அறிவித்தது. கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அரசாங்க உத்தரவின் பிரகாரம் டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளா நாயகம் டக்களஸ் சிறிவர்தனவின் தலைமையில் நிருவாக சபை கூடி இந்நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தந்தது. மீண்டும் நாட்டில் சுமுகமான நிலைவரம் வரும்போது அதனை மீண்டும் தொடர்ந்து மேடையேற்றவும் இந்நிருவாக சபை முடிவு செய்துள்ளது. இதனை கலைஞர்ளுக்கும் பார்வையாளர்களுக்கும் மக்களுக்கும் அறிவித்துக் கொள்வதாக டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) கலாநிதி. சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார். ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரசபணிக்காக மட்டும்”, பி.சிவபிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19”, ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறவிருந்தன. 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஒக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஒக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஒக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவிருந்தன. கே. ஈஸ்வரலிங்கம்

தமிழ் நாடக விழா -2020

டவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலையமாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் நாடக விழாவை நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சிங்கள நெடு நாடகங்கள், குறுநாடகங்கள், சிறுவர் நாடகங்கள் என 70துக்கும் மேற்பட்ட நாடகங்கள் மருதானை டவர் அரங்கிலும் எல்பின்ஸ்டன் அரங்கிலும் மேடை ஏற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந் நிறுவனத்தின் தமிழ்த் துறை பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் செயற்பாட்டால் கடந்த 3ஆம் திகதிமுதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் தமிழ் நாடக விழா நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும் 5 நெடுநாடகங்களும் மேடை ஏறுகின்றன. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்கின்றனர். கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. இந்த நாடக விழாவில் கடந்த 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” கடந்த 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இன்று 5ஆம் திகதி இன்று ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "இப்படி ஒரு நாள்" என்ற நாடகத்தில் நடிக்கும் நடிகையான செல்வராஜ் லீலாவதி நாடகத்துறையில் 16 வருடம் அனுபவமுள்ளவர். சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், நாடக எழுத்தாளர் என்ற எல்லா பிரிவுகளிலும் தேசிய மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர். அரங்கச் செயற்பாட்டாளரான இவர் , 2019 ஆம் ஆண்டு சிறிலங்கா, ஜப்பான் சிநேகபூர்வ விருதான "புங்கா" விருதை வென்றவர். இந்நாடகத்தில் நடிக்கும் முருகேசு அஜந்தன் சாந்தகுமார் நாடகத்துறையில் 16 வருடம் அனுபவம் பெற்றவர், அரங்க ஒளியமைப்பு தொடர்பாக சர்வதேச அளவில் பயிற்சிகளை மேற்கொண்டவர். இத்துறைக்காக அரச மற்றும் இளைஞர் விருதுகளை வென்றவர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். நாடகங்களையும் இயக்கியுள்ளார் நாடக உபகரணங்கள் காட்சி வடிவமைப்புகளிலும் கைத்தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 6 ஆம் திகதி நாளை ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரச பணிக்காக மட்டும்”, பி.சிவா பிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19” ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன. "அரச பணிக்காக மட்டும்" என்ற நாடகத்தில் சிரேஷ்ட கலைஞர் ரஞ்சனி ராஜ் மோகன்,கலை ஸ்ரீ, தேவர் முனிவர்,விஜய், ஸ்ரீ பாலன், திவாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீங்களும் இந்த நாடகத்தைப் பார்த்தால், வித்தியாசமான ஒரு அனுபவத்தைப் பெற்ற பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும் என்று இதற்கு கதை வசனம் எழுதிய கலைஞர் மொழிவாணன் குறிப்பிட்டுள்ளார். 7ஆம் திகதி நாளை மறுதினம் ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறுகின்றன. நெடும் நாடகங்கள் 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஓக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஓக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஓக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவுள்ளன. இலவசமாக நடத்தப்படவுள்ள இவ்விழாவில் தமிழ் நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரசிகபெருமக்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கே. ஈஸ்வரலிங்கம்

நவராத்திரி கொண்டாட்டத்தின் நோக்கம்

ஒரு மனிதனுக்கு உடல்வலிமை, பராக்கிரமம், தீர்க்காயுள், புத்திபலம், ஞானம், மனோசக்தி என்று எல்லாவித அம்சங்களும் இருந்தால் தான் வெற்றியாளராகத் திகழமுடியும். இவற்றைப் பெறவே தேவியைப் பலவிதமான வடிவங்களில் நவராத்திரி காலங்களில் பூஜிக்கிறோம். முதல் மூன்று தினங்கள் பிரதமை முதல் திரிதியை வரையில் மகேஸ்வரனிடமிருந்து தோன்றிய மகேஸ்வரி, குமரப்பெருமானிடமிருந்து தோன்றிய கவுமாரி, வராகமூர்த்தியிடமிருந்து அவதரித்த வராஹி ஆகியோரை பூஜித்து மேற்கண்ட பலன்கள் அனைத்தையும் பெறுகிறோம். வாழ்வுக்கு பொருள் அவசியம் தேவை. எனவே, நான்காம் நாளான சதுர்த்தி முதல் மூன்று நாட்கள் வாழ்வில் வளம் தரும் திருமகளை குறித்த வழிபாட்டினைத் துவங்கவேண்டும். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீதேவி, விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வைஷ்ணவிதேவி, இந்திரனிடமிருந்து தோன்றிய இந்திராணி மூவரையும் துதிக்க செல்வவளமும், பொருள்வளமும் பெற்று மகிழலாம். கடைசி மூன்று நாட்களான சப்தமி திதி முதல் நவமி திதி வரை மகா சரஸ்வதியைக் குறித்த வழிபாட்டினை செய்ய வேண்டும். நரசிம்மரின் சொரூபமாகிய நரசிம்ஹி, சண்ட முண்டர்களை வதம் செய்த சாமுண்டி, தயாளசிந்தை, ஞானம், வித்தை, கலைகளை அருளும் சரஸ்வதி தேவி ஆகியோரை வழிபாடு செய்ய ஞானம் உண்டாகும். எட்டாவது நாளே துர்க்காஷ்டமியாக மகிஷனை சம்ஹாரம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. நவதேவியர் வழிபாட்டினை ஒன்பது நாட்களும் செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாவது வழிபாடு செய்தல் அவசியம். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள் இரவில் பராசக்தியை பல வடிவாகப் பூஜித்து விழா நடத்தி வருகின்றனர். முதல் மூன்று நாட்கள் மலைமகள் அல்லது பார்வதி ஆராதனை நடைபெறும். பார்வதி அருள் வடிவம்; அவள் ஞானசொரூபி, கண்ணோட்டம், ஈகை, அன்பு, ஒப்பரவு முதலியவை அமைந்தவள். இவளது நிறம் பச்சை அல்லது நீலமாகும். இது வளமையையும் செழுமையையும் குறிக்கும். அவளது அருளும் அனுக்கிரகமும் பெறும் குறிக்கோளுடனேயே நவராத்திரியில் முதல் மூன்று நாளும் பராசக்தியைப் பூஜிக்கின்றோம். லட்சுமி சிவப்பு அல்லது பொன்னிற வடிவினள். சிவப்பு நிறம் அழகு, செம்மை, தியாகம், முதலியவற்றைக் குறிக்கும். செல்வத்துக்கு லட்சுமி அதிதேவதை, ஆதலால், பொருள் வளர்ச்சி நோக்குடன் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் நவராத்திரியில் நடுநின்ற மூன்று நாட்களில் லட்சுமி தேவியை பூஜிக்கின்றனர். இறுதி மூன்று நாட்களில் கலைமகளைப் பூஜிக்கின்றனர். இவள் வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள். வெள்ளை நிறம் மாசின்மை, வாய்மை, தூய்மை முதலிய அங்குணங்களைக் குறிக்கிறது. இவள் கலைகள் அனைத்துக்கும் அதிதேவதையாவள். அவள் படிகம் போன்ற நிறத்தினள்; பவளச் செவ்வாயினள். இவையனைத்தும் பரிசுத்தத்தின் அறிகுறியாகும். ஞானவளர்ச்சியை விரும்புவோர் கலைமகள் விழாவைக் கொண்டாடுவர். புதிய கலைகளைப் பத்தாம் நாள் விஜயதசமியன்று தொடங்கிப் பயில ஆரம்பிப்பர். பள்ளிக்கு சேர்த்தல் முதல் பரமயோக ஞானக் கலைகள் வரை பயிலத் தொடங்குவது விஜயதசமி நாளேயாகும்.

குலதெய்வ வழிபாடு (அறநெறி அறிவு நொடி)

பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது எந்த தெய்வம்? அவர்களது குலதெய்வம் மட்டுமே. அதற்குக் காரணம் என்ன? பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலதெய்வம் எவ்வாறு போற்றப்படுகிறது? குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறது. தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி எந்த தெய்வத்திற்கு உண்டு? குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு. இவ்வாறு யார் என்று குறிப்பிடுகின்றனர்? சான்றோர்கள் ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை எது செய்யும்’ என்றும் சொல்வார்கள்? குலதெய்வம் குலதெய்வம் குறித்த ஆன்மிக ரகசியம் என்ன? ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது. குலதெய்வத்திற்குரிய சிறப்பு சக்தி என்ன? அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்? எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். அதில் ஏதாவது சிறப்பு உண்டா? ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம். தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது எது? பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் இவர்களை எவ்வாறு அழைப்பர்? வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி அந்த நிலையில் குலதெய்வம் என்பது எவ்வாறு இருக்கும் என கருதப்படுகிறது? ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்குமா? கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியுமா? முடியாது. ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு எத்தனை தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம்? மூன்று அந்த மூன்றும் எது? அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமா? அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் என்ன நடக்கும்? நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் என்னசெய்யலாம்? வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும். குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி யார் குறிப்பிடப்பட்டுள்ளார்? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே எவ்வாறு அழைக்கப்படுகிறது? ‘குலதெய்வம்’ முன்னோர்கள் என்றால் இங்கு யாரை கணக்கில் கொள்ள வேண்டும்? தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை என்னவென்று சொல்வார்கள்? ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் யாராக இருந்து இருந்திருப்பார்கள்? வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள்.

பாரதி விழாவில் ஈஸ்வரலிங்கம்

7/10/2020 கொழும்பு பாரதி கலா மன்றம் அதன் தலைவர் கலாபூஷணம் த.மணி அவர்கள் தலைமையில் பாரதி விழாவை நடாத்தியது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக பாரதி கலா மன்றம் பாரதி விழாவை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. பி.பி. தேவராஜ் கலந்து சிறப்புரையாற்றினார். கலாபூஷணம் வைத்தமாநிதி அவர்களும் உரையாற்றினார். கவிதாயினி சுபாஷிணி பிரணவனின் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் ராதா மேத்தா, எஸ். தனபாலன், பாரதி சித்தன், கலாபூஷணம் முஹம்மத் அலி, எஸ்.ஏ.கரீம், கவிதா பாரதி, என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடினர்.நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் ஈஸ்வரலிங்கம் தொகுத்து வழங்கினார். பொன் பத்மநாதன் நன்றியுரை வழங்கினார்.

சனி, 14 நவம்பர், 2020

ஈஸ்வரலிங்கம்

கலைஞன் க. பாலேந்திரா

பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞன் க. பாலேந்திரா 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆடிக்கலவரத்தால் இங்கிலாந்தை நாடிச் சென்று குடியேறியவர் கலைஞர் க. பாலேந்திரா. மேடை நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவருக்கு, கடந்த 47 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வெற்றி கண்டு வரும் ஒரு இயக்குனர் க. பாலேந்திரா . தான் கற்ற கல்விக்கு ஏற்ப பொறியியல் துறையை முழு நேரத் தொழிலாக செய்து வருகின்ற இவர் , யாரிடமும் எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தனது சொந்த செலவில் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வருகின்றவர் இவர். இலங்கையில் தமிழ் மேடை நாடகத்துறை யின் வளர்ச்சி கேள்விக்குரியாகியுள்ள தருணங்களில் தொடர்ந்து பல மேடை நாடகங்களை மேடையேற்றி வெற்றி வருகின்ற பாலேந்திரா, யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு வருடா வருடம் நடந்து வரும் தேசிய நாடக விழாக்களே ஆரம்ப அனுபவங்களை கற்றுத் தந்த கலைகூடங்களாகத் திகழ்ந்தன. 1972ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலங்களில் இந்த பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் "நுட்பம்" என்ற சஞ்சிகை வௌியிட்டு வந்தது. இந்த இதழின் ஆசிரியராகவும் இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவருக்கு கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. இவரை கலையுலகுக்கு அறிமுகப்படுத்தியது சுஹைர் ஹமீட் தயாரித்த ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமே ஆகும். இந்த நாடகத்தில் இவர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். அரசியல் கூட்டணிகளின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் திரையிட்டு கோடியிட்டு காட்டிய இந்நாடகம் 01.07.1973ல் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் 1974ல் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றப்பட்டது. 1974ல் தாசீசியஸின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட அலெக்சி அபுசோவின் ‘பிச்சை வேண்டாம்’ , ‘கந்தன் கருணை’ போன்ற நாடகங்களில் இவர் நடித்தார். இவர், ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ ஆகிய நாடகங்களின் பிரதிகளை எழுதி நெறியாள்கையும் செய்திருந்தார். இவர் முதன்முதலாக தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம் "மழை". இந்த மழை நாடகம் 27.10.1976ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேற்றப்பட்டது. இலங்கையின் பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழுகின்ற பல நாடுகளிலும் மேடையேற்றுப்பட்டு பட்டை தீட்டப்பட்ட ஒரு நாடகம் இது. இந்நாடகம் 22.07.2010 அன்று சென்னையில் மேடையேற்றப்பட்டது. பாடசாலை, கல்லுாரி, பல்கலைக்கழகம், இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றுக்கு அவ்வப்போது நாடகங்களை மேடையேற்றி வந்த ஒரு மாபெரும் கலைஞர் இவர். இவ்வாறு தொடர்ந்து நாடகங்களை மேடையேற்றி வந்த இவருக்கு , இதற்கென ஒரு அமைப்பு தேவையென்ற எண்ணம் எழத் தொடங்கியது. இதன் விளைவாக தமிழ் "அவைக்காற்று கலைக்கழகம்" என்ற அமைப்பை 1978ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் ஈழத்து நாடகாசிரியர்களான குழந்தை ம. சண்முகலிங்கம், மாவை நித்தியானந்தன், சி. சிவசேகரம், சி. மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச. வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களை ேமடையேற்றி வந்தார். தமிழக நாடகாசிரியர்களான இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘பசி’, ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘சுவரொட்டிகள்’, ஞான ராஜசேகரனின் ‘மரபு’, அம்பையின் ‘ஆற்றைக் கடத்தல்’ மற்றும் பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, ரஞ்சித்ராய் சௌத்திரியின் ‘பாரத தர்மம்’ போன்ற நாடகங்களை இவர் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து மேடையேற்றினார். இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் ‘கண்ணாடி வார்ப்புகள்’, பிரெக்டின் ‘யுகதர்மம்’, கார்சியா லோர்காவின் ‘ஒரு பாலை வீடு’, செக்கோவின் ‘சம்பந்தம்’, வஸ்லோ காவலின் ‘பிரத்தியேகக் காட்சி , தரிசனம், பெக்கற்றின் ‘எப்போ வருவாரோ’, ஏரியல் டோப்மனின் ‘மரணத்துள் வாழ்வு’, இயூஜின் அயனஸ்கோவின் ‘இடைவெளி’, ஹரோல் பின்டரின் ‘போகிற வழிக்கு ஒன்று’ ஆகிய நாடகங்களையும் பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார். பாலேந்திராவின் நாடகங்களில் மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் 19-80இல் இலங்கையில் மட்டும் 30 தடவைகள் மேடையேறியது. இவரின் நாடகங்களில் ‘இயக்க விதி 3’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் "ஆறு நாடகங்கள்" என்ற நூலை அச்சடிப்பதற்காக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பகல் இரவுக்குக் காட்சிகளாக மேடையேற்றப்பட்டன. ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள். இந்த நாடகங்களில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவரது நாடகங்கள் இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. நாடகக் கலையிலுள்ள சகல நுணுக்களிலும் கைதேர்ந்த இவருக்கு இவரது துணைவியார் ஆனந்தராணி இவரது கலைத்துறை முயற்சிகளுக்கு பெரும் துணையாக இருந்து உதவி வருகிறார் . இவரது நாடகங்களும் அவை மேடையேற்றப்பட்ட ஆண்டுகளும் வருமாறு ச 01 இவர்களுக்கு வேடிக்கை 1974 02 கிரகங்கள் மாறுகின்றன 1974 03 தூரத்து இடிமுழக்கம் 1976 04 மழை 1976 05 பலி 1978 06 நட்சத்திரவாசி 1978 07 ஒரு யுகத்தின் விம்மல் 1978 08 கண்ணாடி வார்ப்புகள் 1978 09 பசி 1978 10 புதிய உலகம் பழைய இருவர் 1978 11 ஒரு பாலை வீடு 1979 12 இடைவெளி 1979 13 யுகதர்மம் 1979 14 நாற்காலிக்காரர் 1979 15 முகமில்லாத மனிதர்கள் 1980 16 திக்கு தெரியாத காட்டில் 1980 17 இயக்க விதி -3 1980 18 சுவரொட்டிகள் 1980 19 சம்பந்தம் 1980 20 அரையும் குறையும் 1981 21 மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் 1981 22 துக்ளக் 1982 23 மரபு 1982 24 வார்த்தையில்லா நாடகம் 1983 25 பார்வையாளர்கள் 1985 26 எரிகின்ற எங்கள் தேசம் 1986 27 வேடரை உச்சிய- வெள்ளைப்புறாக்கள் 1991 28 பாரத தர்மம் 1991 29 பிரத்தியேகக் காட்சி 1991 30 தரிசனம் 1991 31 தப்பி வந்த தாடி ஆடு 1992 32 துன்பக் கேணியிலே 1992 33 நம்மைப் பிடித்த பிசாசுகள் 1993 34 இரு துயரங்கள் 1993 35 ஐயா இலெக்சன் கேட்கிறார் 1994 36 போகிற வழிக்கு ஒன்று 1994 37 மலைகளை அகற்றிய மூடக் கிழவன் 1996 38 ஆற்றைக் கடத்தல் 1996 39 எப்போ வருவாரோ 1997 40 அயலார் தீர்ப்பு 1997 41 அவசரக்காரர்கள் 1997 42 மெய்ச்சுடரே 1997 43 பெயர்வு 1998 44 ஒரு பயணத்தின் கதை 1998 45 பரமார்த்த குருவும் சீடர்களும் 1999 46 பார்வைக் கோளாறு 2000 47 காத்திருப்பு 2001 48 வேருக்குள் பெய்யும் மழை 2002 49 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 2003 50 அவன்.அவள் 2003 51 திக்கற்ற ஓலம் 2003 52 பெருங்கதையாடல் 2004 53 அரசனின் புத்தாடை 2004 54 சர்ச்சை 2006 55 மலைகள் வழிமறித்தால் 2006 56 பாவி? 2007 57 எல்லாம் தெரிந்தவர்கள் 2008 58 மரணத்துள் வாழ்வு 2009 59 படிக்க ஒரு பாடம் 2009 60 ஒற்றுமை 2010 61 இது ஒரு நாடகம் 2010 62 தர்மம் 2010

மலையகம் தந்த சிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கார்மேகம்

மலையகம் தந்த சிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்.எம்.கார்மேகம் மலையகத்தில் புத்திஜீவிகள் தோன்றி தங்களின் அறிவை பயன்படுத்தி மலையக சமூகத்திற்கும், கல்விக்கும், மலையக மேம்பாட்டிற்கும் கலை, இலக்கியத்துறைக்கும் பெரும் சேவையாற்றியவர்கள். இவர்களில் பலர் புலம்பெயர்ந்து சென்றதாலும் சிலர் நகரங்களை நோக்கி சென்றதõலும் மலையக கல்வியும் மேம்பாடும் மலையக அபிவிருத்திகளும் பின் தள்ளப்பட்டன. அந்த வகையில் மலையகத்தில் புத்திஜீவிகளை கொண்ட தலைமை உருவாக வேண்டும் என்று போராடிய மலையகத்தில் ஒரு எழுத்து போராளியாகத் திகழ்ந்த எஸ்.எம். கார்மேகம் அவர்களும் புலம்பெயர்ந்து தமிழகம் சென்றதையும் கவனிக்கத்தக்கது. மலையகத்தில் புத்திஜீவிகளை கொண்ட பலமான தலைமை உருவாக வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் ஒரு புதிய மலைகயம் உருவாகும். அந்த நாள்தான் மலையக மக்கள் அறிவோடும் தெளிவோடும் சிந்தித்து தமது இலக்குகளை அடையலாம். கடந்த காலங்களில் மலையக மேம்பாட்டிற்காக, எழுத்து மூலமும், பத்திரிகைத்துறை மூலமும் சேவையாற்றி வந்தவர்களில் மூத்த பத்திரிகையாளர் அமரர் எஸ்.எம்.கார்மேகம் குறிப்பிடத்தக்க ஒருவராவார். அந்த வகையில் இவர் மலையகத்தில் பூத்த ஒரு மலர், அறிவு ஜீவி, மூத்த பத்திரிகையாளர், வீரகேசரி, தமிழக தினமணி போன்ற பத்திரிகைகளில் துணை ஆசிரியராக கடமையாற்றியவர். சென்னை வீரகேசரி மற்றும் கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சியும் போன்ற நூல்களின் ஆசிரியர், மலையக சிறுகதைகள், அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு இவர் தமிழகத்தில் காலமானார். அவரை பற்றிய சில நினைவுகள்... மலையக மக்களை தோட்டக்காட்டான் வடக்கத்தியான் என சிலர் எள்ளி நகையாடிய ஒரு காலம் இருந்ததுதான். மலையகத்தவன் என்று கூறிக்கொள்வதில் வெட்கப்பட்ட படித்த சிலரும் இருந்த காலமும் இருந்தது. தம்மை மலைநாட்டான் என்று எங்கும் அடையாளப்படுத்தியவர் திரு. கார்மேகம். வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் மலையக எழுத்தாளர்களை எழுதத்தூண்டி மலையக எழுத்தாளன் என தனது சக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் எனும் புனைபெயரில் தேயிலையின் கதை எனும் கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் எனும் புனை பெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் எனும் கட்டுரையைஎழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவரும் இவரே. ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவரும் இவரே. ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவரது மலையகம், சார்ந்த கட்டுரைகளை மறு பிரசுரம் செய்தன. பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இவரது கட்டுரைகளை தொடர்ந்து மறுபிரசுரம் செய்தது. வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்தப்பட்ட முதல் நான்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிவர உதவினார். வீரகேசரியில் இருந்து நூல் வடிவில் வெளிவந்த முதல் நூல் கதைக்கனிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்நாட்டை விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்'எனும் இவருடைய கட்டுரை இம்மக்களின் கண்ணீர் காவியமாகும். தனது எழுத்தை பல துறைகளுக்குப் பயன்படுத்தி மலையக மக்களின் துன்பத்தை, சோகத்தை, துயரத்தை, ஏக்கப் பெருமூச்சை இலக்கியமாக்கியவர். மித்திரன் வாரமலரில் "தந்தையின் காதலி' அழைக்காதே நெருங்காதே', ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். நண்பர் கார்மேகம் 23 வருடங்கள் வீரகேசரியில் சிறந்த முறையில் பணியாற்றினார். இவர் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் அரசியல்வாதிகளோடும் தொழிற்சங்கவாதிகளோடும் புத்திஜீவிகளோடும் வர்த்தக பெருமக்களோடும் அவர் ஏற்படுத்திக் கொண்ட நட்பு அவருக்கு நன்மதிப்பை தந்தது. இவர் வீரகேசரியில் பெருநிதி பெருமாள். மூக்கையாபிள்ளை தமிழோவியன் போன்றோரின் உந்துதலாலும் ஊக்கத்தாலும் வீரகேசரி நிர்வாகத்தோடு பேசி தோட்ட வட்டாரம் எனும் பகுதியை 1960 ஆண்டு ஆரம்பித்தார். அதன்பிறகு அப்பகுதியை தோட்ட மஞ்சரி என பெயர் மாற்றம் செய்தார். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக மலையக சிறுகதைப் போட்டிகளை நடத்தி மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். இவரது பத்திரிகைத்துறை திறமை அனுபவங்களை கவனத்தில் கொண்டு இலங்கை இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் இந்திய பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கொட்டக்கலை கல்மதுரை தோட்டத்தில் 19.11.1939 ஆம் ஆண்டு பிறந்த அமரர் எஸ்.எம்.கார்மேகம் அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டக்கலை கல்மதுரை தோட்டத்தில் 19 நவம்பர், 1939 பிறந்த எஸ். எம். கார்மேகம் அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னாளில் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். எஸ். எம். கார்மேகம் (நவம்பர் 19, 1939 - ஜனவரி 18, 2005) இலங்கையைச் சேர்ந்த ஒரு மலையக எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக, எழுத்து மூலமும், பத்திரிகைத்துறை மூலமும் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி போன்ற பத்திரிகைகளில் துணை ஆசிரியராக கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னை பதிப்பில் 1988 முதல் 1997வரை தலைமை துணையாசிரியர் தொடங்கி, வார வெளியீடுகளின் ஆசிரியர் பணிவரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். பின்னர் அவரது மகன்களான முரளிதரன், சிறீதரன் ஆகியோரின் உதவியுடன் சென்னை வீரகேசரி என்ற இதழை வெளிக் கொணர்ந்தார். இரு இதழ்கள் வெளிவந்த சென்னை வீரகேசரி பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வெளிவரவில்லை. கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி போன்ற நூல்களின் ஆசிரியர். மலையக சிறுகதைகள் அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர். வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் மலையக எழுத்தாளர்களை எழுதத்தூண்டி மலையக எழுத்தாளன் என தனது சக எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் எனும் புனைபெயரில் தேயிலையின் கதை எனும் கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் எனும் புனை பெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் எனும் கட்டுரையைஎழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர். ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவரது மலையகம், சார்ந்த கட்டுரைகளை மறு பிரசுரம் செய்தன. பாரிசிலிருந்து வெளிவரும் ஈழநாடு இவரது கட்டுரைகளை தொடர்ந்து மறுபிரசுரம் செய்தது. வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்தப்பட்ட முதல் நான்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிவர உதவினார். வீரகேசரியில் இருந்து நூல் வடிவில் வெளிவந்த முதல் நூல் கதைக்கனிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்நாட்டை விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் அவர்கள் புறப்பட்டு விட்டார்கள் எனும் இவருடைய கட்டுரை இம்மக்களின் கண்ணீர் காவியமாகும். மித்திரன் வாரமலரில் தந்தையின் காதலி அழைக்காதே நெருங்காதே, ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். 23 வருடங்கள் வீரகேசரியில் சிறந்த முறையில் பணியாற்றினார். மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்த இவர் 2005 ஜனவரி 18ம் தேதி இயற்கை எய்தினார்.

ஈஸ்வரலிங்கத்தின் கலைப்பயணம்

ஈஸ்வரலிங்கம்

ஈஸ்வரலிங்கம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812