செவ்வாய், 28 ஏப்ரல், 2015

11313) வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது ஏன்?

பூமியானது சு+ரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது, அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது, பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது. இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது. இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது. பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு- தெற்காக நிற்கும். இதை, இயற்பியல் மின்காந்த புலம், காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன. காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்குக் காரணம், காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும். தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல். இதேபோலத் தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது. உடலில் இரத்தத்தில் முக்கிய பாகம் இரும்பு சத்தாகும். மேலும் பகலில் உட்காரும்போதும் நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும். தூங்கும் போது தெற்கே தலை வைத்துக் கொண்டால், நமது வடதுருவமும் பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும். ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால், பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது ஒன்றையொன்று தாக்கி தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும.; எனவேதான் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது. நம்ம முன்னோர்கள் சொல்வது பழைய பஞ்சாங்கம் என்று ஓதுக்கினால் பாதிக்கப்படுவது நாம் தான்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?

கே. ஈஸ்வரலிங்கம் 11310) கோவிலில் வாயில்படி இருந்தால் அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? இதில் அறிவியல் பு+ர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன் கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சு+ரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும். இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். 11311) சைவ சமயத்தின் பண்புகள் எவை? கொலை, களவு, மது, மட்ச்ச மாமிசம், பொய், விபச்சாரம் முதலிய பாவங்களை நீக்கி இருப்பது உயிர்களுக்கு கருணை காட்டுதல் (அஹிம்சை), மெய் பேசுதல், வறியவர்களுக்கு தானமிடல், செய்நன்றி அறிதல் ஆகிய தர்மங்களை பாதுகாத்து நடத்தல், மாதா, பிதா, குரு, அரசன், வயதில் பெரிய வர்கள் ஆகியோரை அன்பாய் உபசரித்தல், விபு+தி உததி;ரார்ட்சம் தரிப்பது, சிவதீட்சை பெற்றுகொள்ளுதல், சந்தியா வந்தனம் , சிவ தியானம், பஞ்சாசற செபம் , சிவ ஸ்தோத்திரம் இவைகளை நித்தமும் ஒரு பத்து நிமிடமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன் செய்து முடிப்பது, நித்தமுமாவது புண்ணிய காலங்களிலாவது சிவலிங்க பெருமானை அன்புடன் விதிப்படி வணங்கி துதிப்பது, சைவ நெறி தரும் நூல்களை வசித்தோ அல்லது கேட்டோ அறிதல், சமய பிரசங்கங்களை கேட்டு அதன் வழி நடப்பது, சிவ நிந்தை, குரு நிந்தை, சிவனடியார் நிந்தை இவைகளை கேளாமல் ஒதுங்கி விடுவது, சைவ சமய குறவர் நால்வருடைய நட்;சத்திர நாட்களில் (குருபு+சை ) அவரவருடைய சரித்திரத்தை கேட்டு தானம் செய்து விரதத்துடன் இருப்பது, மகாபாதங்களை செய்தலும், அல்லது செய்ய கூடிய புண்ணியத்தை செய்யாது விட்டாலும் அதற்காக வருந்தி சிவகாமப் பிரகாரம் விதித்த பிராயச்சித்தத்தை செய்தல். 11312) காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்றுதல் என பொருள் வந்தது ஏன்..? காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும். இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!

புதன், 15 ஏப்ரல், 2015

(11303) தேங்காய் உடைக்கும் வழக்கம் எங்கு இல்லை?

கே. ஈஸ்வரலிங்கம் (11303) தேங்காய் உடைக்கும் வழக்கம் எங்கு இல்லை? ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதப் பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள். (11304) வீட்டில் நிலைப்படியில் மாவிலை கட்டுவது ஏன்? வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்களகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். (11305) இதற்கான வேறு காரணம் ஏதாவது உண்டா? ஆம். வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும். நன்மை தரும் சுப வார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும். (11306) கால் மண்டபங்கள் என்பது எதனை? பெரிய கோயில்களில் அர்த்தமண்டபம், மகா மண்டபம் பிரதானமாக அமைந்திருக்கும். மண்டபம் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கல்தூண்கள் அமைந்துள்ள மண்டபத்தை கால் மண்டபங்கள் என்பர். (11307) நூறு கல்தூண்கள் இருந்தால் எவ்வாறு அழைப்பர்? நூற்றுக்கால் மண்டபம் என்று. (11308) ஆயிரம் கல் தூண்கள் இருந்தால் எவ்வாறு அழைப்பர்? ஆயிரங்கால் மண்டபம் என்று. (11309) ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள ஆலயங்கள் எவை? திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல் (திருச்சி அருகில்) ஸ்ரீரங்கம், திருவாரூர், திருவக்கரை (விழும்புரம் மாவட்டம்), காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி.

(11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி?

கே. ஈஸ்வரலிங்கம் (11298) சாதம் பிரசாதம் ஆவது எப்படி? உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தக்காரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்? உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும். அரிசியை கழுவி பானையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதமாகி விடுகிறது? கடவுளுக்கு மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் போது சாதாரண கூழாங்கல் கூட பெரிய கல்லாகி விடுகிறது. அதுபோல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது. ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும்தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும். (11298) எப்போது தரிசனம் கூடாது? காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சந்நதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. (11290) கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவலாமா? கோவிலுக்குச் சென்று விட்டு வீடுதிரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். (11300) நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள்? இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம் அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். புரியாத குற்றங்களிலிருந்து வெகு தூரம் தள்ளி இருக்கின்ற பரிசுத்தம் இருக்க வேண்டும். இந்த குணங்களைக் கொண்ட நெருப்பை வணங்குவது முன்னோர் வகுத்த வழி. அது மட்டுமல்ல நெருப்பு இடயறாது சலனமுள்ளது. ஆனால் சலனம் இல்லாதது போலத் தோன்றும். உற்று அந்த சலனத்தைக் கவனித்தால் அந்த ஆட்டத்தைப் பார்க்க நம்முடைய மனத்திற்குள் உள்ள ஆட்டம் மெல்ல மெல்ல அடங்கும். நெருப்பை முன் வைத்து தியானிப்பது, நெருப்பை வளர்த்து அதனுள் மனதைச் செலுத்துவது என்பது மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அழகான பயிற்சி. நெருப்பு என்பது ஹோமகுண்டமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குத்துவிளக்கின் முத்துச்சுடர் கூட உங்கள் மனதை ஒருமுகப்படுத்திவிடும். எனக்குப் பிடித்தது எல்லாவற்றையும் நெருப்பில் போட்டு விடுகிறேன். எனக்குப் பிடித்தது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்று வழிபாட்டால் போதும் நெருப்பு மிக எளிதாக மனதை ஒன்ற வைக்கும் சாதனம். (11301) கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்? அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால் கடவுளின் முன் நேர் எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும் மயிலும் முருகனிடமும் பாம்பும் கருடனும் விஷ்ணுவிடமும் சிங்கமும் காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே கடவுகளின் முன் கூடி வாழும் போது ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது. (11302) அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைக்கிறார்கள்? மலையில் ஏறும்போதும் கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போது நமது இரத்தத்தில் ஒட்சிசன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் இரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட மலைக்கோயில் கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால் இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச் செலவு மிச்சம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812