வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ூலஸ்தானம் எனும் கருவறையின் பரம ரகசியம்

உடலுக்கு பிரதானமானது எது? தலை உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு எது பிரதானமாக இருக்க வேண்டும்? கருவறை கருவறையை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் கருவறை எப்படி இருக்க வேண்டும்? நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். ஆலய அமைப்பு எப்படி இருக்கும்? மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. அதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. முன்னோர்கள் கருவறையை எப்படி அமைத்தனர்? பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக இதன் பின்னணியில் என்ன அடங்கியுள்ளன? சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. நம் முன்னோர்கள் எவ்வாறு இருக்கும்படி அமைத்தனர்? வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கினர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் எவ்வகையானவை? ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் என்ன செய்யும்? கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். அங்கிருந்து அந்த அலைகள் என்ன செய்யும்? ஆலயம் முழுக்க விரவி பரவும். இவ்வாறு இருப்பதால் என்ன நன்மை? நாம் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைக்கும்போது என்ன செய்தார்கள்? கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது எப்படி இருக்கும்? வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம்? ஆறு அந்த ஆறு வகை கருவறை அமைப்புகளையும் தருக அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும்

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். சூரியன் சிம்மத்தில் வலுப்பெறும் இந்த மாதத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது பலன் தரும் என்பது நம்பிக்கை. இதனாலேயே சிங்க மாதம் எனப்படும் ஆவணி வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற மாதமாகப் போற்றப்படுகிறது. 'சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை' என்கிறார் அகத்திய மாமுனி. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

கருவறை

மூலஸ்தானத்தில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை என்னவென்று அழைப்பார்கள்? அதிஷ்டானம் என்பார்கள் அதிஷ்டானத்தை வேறு எவ்வாறு அழைப்பதுண்டு? பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை எவ்வாறு அழைப்பதுண்டு? கோஷ்டம் என்பார்கள். அவற்றில் என்ன இருக்கும்? கடவுளின் பல்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அங்கு பிரதிஷ்டை எதனை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்? ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அந்த கருவறை எப்படிப்பட்டதாக இருக்கும்? எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கும். இந்த நடைமுறை எப்பொழுது தோன்றியது? 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடைமுறை ஆகம வழிபாட்டு முறைகளுக்கு பின்பா தோன்றியது? ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது. இவ்வாறு கருவறைகளைக் கட்டிவித்தவர்கள் யார்? அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள். இவர்கள் இவற்றை இவ்வாறு கட்டுவித்ததற்கான காரணம் என்ன? தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள் இவர்கள் இவ்வாறு எத்தனை வகையான கோவில்களைக் கட்டுவித்தார்கள்? எட்டு வகையான கோவில்களை அந்த எட்டு வகையான கோவில்களும் எவை? மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில். இவ்வாறு அமைக்கப்படும் ஆலயங்களில் கருவறை பகுதி எப்படிப்பட்டதாக அமைக்கப்பட்டன? சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்படும் கருவறையில் சதுர அமைப்பு எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? தேவ உலகத்துடனும், வட்டம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? இறந்தவர்களுடன் முக்கோணம் எதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றது? மண்ணுலகத்துடன். தமிழ்நாட்டில் எந்த அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை? முக்கோண அமைப்புடன் வட்ட வடிவ கருவறைகளை எங்கு காணலாம்? புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும். கருவறை வட்ட வடிவில் அமைக்கப்பட்ட ஆலயம் எது? மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை ஆலய கருவறை சுற்றுப்பகுதி ஒரே மாதிரியானதாகவா இருக்கும்? கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி எந்த வடிவில் இருக்கும்? கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும். இதில் கஜம் என்றால் என்ன? யானை ப்ருஷ்டம் என்றால் என்ன? பின்பகுதி என்று பொருள். கருவறை வெளிப்புற சுவர் எப்படிபட்டதாக இருக்கும்? யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை என்னவென்று கூறுவார்கள்? ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள்.

வேலையே வேலனாக வணங்கும் ஊர் நல்லுார்

தமிழும் சைவமும் தழைத்தோங்கி வளர்ந்த ஊர் யாழ்ப்பாணம். இந்த யாழ் மண்ணில் உள்ள ஒரு நல்லுார். இந்த நல்லுாரிலே கோயில் கொண்டு அருள்பாலிப்பவன் கந்தப் பெருமான். இந்த ஆலயம் ஆரியச் சக்கரவர்த்தியின் முதலமைச்சராக விளங்கிய புவனேகபாகு என்பவனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னுமொரு சாரர் இவ்வாலயம் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய செண்பகப் பெருமாள் என்னும் புவனேக வாகுவினால் கட்டப்பட்டதென்பர். இவ்வாலயம் 1454ஆம் ஆண்டு கட்டப்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் புவனேகவாகு என்ற பெயர் மகோற்சவங்களில் ஆலயக் கட்டியத்தில் கூறப்பட்டு வரும் வழக்கம் இன்றும் உள்ளது. யாழ்ப்பாணம் 400 ஆண்டுகள் வரை சைவத் தமிழரசர்களால் ஆளப்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு -1621ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. நல்லுார் ஆலயம் அழிக்கப்பட்டது. போர்த்துக்கேயரிடமிருந்த யாழ்ப்பாணம் 1958ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21ஆம் திகதி ஒல்லாந்தர் கைக்கு மாறியது. ஒல்லாந்தர்கள் தங்கள் மத வணக்கத்திற்குரிய தேவாலயம் ஒன்றைப் இந்த கந்தசுவாமி கோவில் இருந்த இடத்தில் கட்டினார்கள். நல்லுார் கோயில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தைச் சுற்றி வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவரான முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. இவ்வாலயத்தின் கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க முருகப்பெருமான் வேலை வைத்து திருவுளம் செய்துள்ளான். இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக வேலைத் தான் எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். திருவிழாக்களின்போது இந்த 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதி வழியாக கொண்டு வருகின்றனர். ஆலய பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. வருடம்தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் 27 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த 6-ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆவணி மாதம் அமாவாசையன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும். 24-ம் நாள் தேரோட்டம் நடைபெற்று, 25-ம் நாள் தீர்த்தத் திருவிழா நடைபெறும். வருடாந்தம் நடைபெறும் இவ்வாலய உற்சவக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள். இன்று இவ் உற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் வௌிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் படை எடுத்து வருவதுண்டு. கே. ஈஸ்வரலிங்கம்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812