திங்கள், 26 டிசம்பர், 2011

அறநெறி அறிவுநொடி




கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

இசைக் கலை

8846. தன்னை மறக்கச் செய்வது எது? கலை.

8847. தன்னை மறப்பது எது? இன்பம்

8848. தன்னை மறந்து இறைவனை நினைப்பது எது? பேரின்பம்.

8849. கவின் கலைகளுள் மிக நுட்பமானது எது? இசைக்கலை.

8850. இசை கலைக்கு ‘இசை’ என்ற பெயர் எவ்வாறு வந்தது?

உள்ளத்தோடு பொருந்துவதாலும் உயிர்களை வயப்படுத்துவதாலும்.

8851. இசைக் கலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
நாதயோகம்.

8852. காந்தருவ வேதம் என்று அழைப்பது எதனை?
இசைக்கலையை.

8853. தமிழை எந்த சுபாவத்தின் மொழி என்பர்?
இரக்க.

8854. மனமுருகுவதலால் தோன்றுவன எவை?
இரக்கமும் பக்தியும்.

8855. இசையறிந்து இசைபாடி இறைநாடும் இயக்கம் எப்போது வேரூன்றப்பட்டது?
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு.

8856. அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே என்று பாடியவர் யார்? திருமூலர்

8857. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய என்று பாடியவர் யார்? பூதத் தாழ்வார்.

8858. மனத்தைப் பண்படுத்தும் இசை வகைகளுக்கு என்னவென்று பெயரிட்டனர்? பண்.

8859. பண் என்பது என்ன? பாடலின் ஒலி

8860. பாடல் வகைகளுக்கும் சீர் அமைப்புகளுக்கும் ஏற்ப அமைவது எது? பண்.

8861. ‘பண்’ என்பதற்கு பண் என்று பெயர் வரக் காரணம் என்ன?
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தூக்கு ஆகிய
எட்டுவகைக் கிரியைகளால் பண்ணப்பட்டமையால்.

8862. ஐவகை நிலங்களும் எவை? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

8863. ஐவகை நிலங்களுக்கும் ஐவகை பண்கள் அமைந்தது எந்த காலத்தில்? சங்க காலத்தில்.

8864. குறிஞ்சி நிலத்திற்கு உரிய பண் எது? குறிஞ்சிப் பண்.

8865. முல்லைக்குரிய பண் எது? சாதாரி.

8865. மருதத்திற்கு உரிய பண் எது? மருதப் பண்.

8866. நெய்தலுக்கு உரிய பண் எது? செவ்வழி.

8867. பாலைக்கு உரிய பண் எது? பஞ்சரம்.

8868. பண்களை ஓதி வளர்த்தவர்கள் யார்? பாணர்.

8869. பண்முறையால் தொகுக்கப்பெற்று உரிய பண்களுடன் பாடப் பெற்றது எது?
பரிபாடல் நூற்பாக்கள்.

திங்கள், 19 டிசம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

(மார்கழி)

8834. மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது எது?

மார்கழி நோன்பு

8835. மார்கழி நோன்பு என்று இதற்கு ஏன் பெயர் வந்தது?

மார்கழியில் நோற்பதால்

8836. மார்கழி நோன்புக்கு ‘பாவை நோன்பு’ என்று பெயர் ஏன் வந்தது?

கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதாலும் பாவை அமைத்து நோற்கப்படுவதாலும் ஆகும்.

8837. திருவெம்பாவை பாடியவர் யார்?

மணிவாசகப் பெருமான்

8838. திருப்பாவை அருளியவர் யார்?

ஆண்டாள்

8839. திருவெம்பாவையும் திருப்பாவையும் எந்த நோன்பை அடிப்படையாகக் கொண்டவை?

மார்கழி நோன்பை

8840. மார்கழி நோன்பை தமிழர்கள் எந்த காலத்திலிருந்து அனுஷ்டித்து வருகின்றனர்?

சங்க காலத்திலிருந்து

8841. மார்கழி நோன்பை பற்றி கூறும் சங்க கால நூல்கள் எவை?

பரிபாடல், நற்றிணை, ஐந்குறுநூறு, கலித்தொகை.

8842. பாவை நோன்பை அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர்.

8843. திருவெம்பாவை நோன்பு எத்தனை நாட்கள் நோற்கப்படும்?

பத்து நாட்கள்

8844. தோழியர் ஒருவரை ஒருவர் துயில் நீங்கி எழுமாறு அழைக்கும் பாடல்கள் எவை?

திருவெம்பாவைப் பாடல்கள்

8845. திருவெம்பாவை காலம் எது?

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திற்கு முந்திய ஒன்பது தினங்களும்

8846. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் யாருக்கு இராக்காலம்?

தேவர்களுக்கு.

பஞ்சாங்க நாட்காட்டிகள்

மனதிற்கு இதம் அளிக்கும் மாதமாகவும், பக்தி பூர்வமான மாதமாகவும், திகழ்வது மார்கழி மாதமாகும். ஸ்ரீ ஆஞ்சநேய பகவான் அவதரித்த மாதமாகவும் ஆண்டாளின் அருமை பெருமைகளையும் எடுத்து இயம்பும் மாதமாகவும் திகழ்வது மார்கழி மாதமாகும்.

மார்கழி மாதத்திலே பக்தர்கள் தினசரிக் கலண்டர்களையும், மாதாந்த கலண்டர்களையும் பஞ்சாங்க கலண்டர்களையும் வாங்குவதற்காக தயாராகும் மாதமாகவும் மார்கழி மாதம் திகழ்கிறது. இலங்கையிலேயே கொழும்பு நகரினிலே தனிமனிதனாக நின்று தமிழ் இந்து பஞ்சாக கலண்டர்களை வருடாந்தம் அச்சிட்டு வெளியிட்டு வருபவர் வே. பாலேந்திரா. இவர் அச்சிட்டு வெளியீடும் பஞ்சாங்க கலண்டர்கள், நாட்காட்டிகள் இந்து விரத நாட்களையும், இந்து மத பண்டிகைகளையும், குருபூஜை தினங்களையும் ஷஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், சதுர்த்தி, ஏகாதசி, அமாவாசை, சங்கடஹரசதுர்த்தி போன்ற தினங்களையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டு வெளிவருவது இதன் சிறப்பம்சமாகும். காலத்திற்கு ஏற்ற விதத்திலே இந்து மத மற்றும் ஏனைய மதத் தெய்வங்களின் திருவுருவப் படங்களை, இந்த நாட்காட்டிகளில் பஞ்ச வர்ணங்களில் கண்களை கவரும் விதத்திலே மனங்களை இறைவனை நெஞ்சுருகி கைக்கூப்பி வணங்க வைக்கும் விதத்திலே தத்ரூபமாக தருவதில் யுனிலங்காஸ் கலண்டர்களுக்கு நிகரான நாட்காட்டிகள் இல்லை என்றே கூறலாம். இலங்கை முழுவதிலும் உள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் அதேபோன்று தமிழகத்திலுள்ள பிரபல்யமான ஆலயங்களினதும் உற்சவ தினங்களை ஆணித்தரமாக இந்த கலண்டர்களில் குறிப்பிட்டிருப்பதை காணலாம். 2012ம் ஆண்டு நாட்காட்டிகளில் சுபமுகூர்த்தங்களையும் கணித்து வெளியிட்டிருப்பது ஜோதிடரை நாடாமல் முகூர்த்த தினங்களை பக்தர்கள் தாங்களாகவே நிர்ணயித்து கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழகத்திலே பிரபல்யமான ஜோதிட விற்பன்னர் முருகு பாலமுருகன் இந்த பஞ்சாங்க கலண்டர்களுக்கான முகூர்த்த தினங்களை கணித்து தந்திருப்பதிலிருந்து இந்த நாட்காட்டிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மொத்தத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்தி வருடத்திற்கு ஒரு முறை வாங்குகின்ற இந்த நாட்காட்டிகள் வருடத்தில் 365 நாட்களும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது அதன் பெருமைக்கு நற்சான்றாகும். ராகுகாலம், எமகண்டம் சித்தம், அமிர்த்தம், மரணயோகம், கரிநாள் போன்ற இன்னோரன்ன விடயங்களையும் இந்த நாட்காட்டிகளில் நாம் கண்டு கொள்ளலாம். தங்கள் தங்கள் இஷ்ட்ட தெய்வங்களின் திருவுருவப் படங்களை பொறித்த இந்த நாட்காட்டிகளை இவர் வெறுமனே வர்த்தக ரீதியாக மட்டுமன்றி சேவை மனப்பான்மையுடனும் வெளியிட்டு வருவதால் இந்த நாட்காட்டி கொள்வனவு செய்வதன் மூலம் அவரது சேவை தொடர வழியமைத்து கொடுக்க எங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

திங்கள், 12 டிசம்பர், 2011


கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8824. மாரியம்மனாக வழிபடும் ரிஷிபத்தினி யார்?

ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.

8825. கண்ணன் எந்த பாம்பின் மீது நடனம் ஆடினார்?

காளிங்கன்.

8826. தேவர்களின் குருவாக இருப்பவர் யார்?

பிருகஸ்பதி (வியாழன்)

8827. குதிரை முகம் கொண்ட பெருமாள் யார்?

ஹயக்ரீவ மூர்த்தி

8828. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் யார்?

நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

8829. விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல் என்ன?

கணேச பஞ்சரத்னம்.

8830. வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன் யார்?

திருவொற்றியூர் அம்மன்

8831. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை யார்?

கர்ணன்

8832. குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை என்ன என்று அழைப்பர்?

கும்பமுனிவர் (கும்பம் என்றால் குடம்)

8833. பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம் என்ன?

கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)

தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய தேர்த்திருவிழா 23ஆம் திகதி




கொழும்பு - தெஹிவளை அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஸ்ரீமத் சந்திரசேரக சுவாமிகளின் தலைமையில் ஆரம்பமாக வுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் கிரியாகால உற்சவம் ஆரம்பமாகும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 9 மணிக்கு நவக்கிரஹ ஹோமமும் 15 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ நாகபூசனி, ஸ்ரீ வைரவர், ஸ்ரீ மஹாகாளி ஹோமம் என்பனவும் 16ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ துர்க்கா ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ குபேரன் பூஜை என்பன வும் 17 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ முருகன், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை பூஜை என்பனவும் 18 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு சிவபூஜையும் 19 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஸ்ரீ தனவந்திரி ஹோமமும் 20 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ மஹா விஷ்ணு ஹோமமும், சனி பெயர் ச்சி, 21 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீ இராமர், ஸ்ரீ இலட்சுமணர், ஸ்ரீ சீதா, ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜை என்பனவும், 22 ஆம் திகதி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் பூஜையும் நடைபெறும். இங்கு எதிர் வரும் 23 ஆம் திகதி காலை 7.00 மணி க்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

அன்று விசேட மலர் அலங்காரத்து டன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஆகிய மூர்த்திகளுடன் பக்தர்கள் வடம்பிடித்து வர திருத்தேர் பவனி ஆரம்பமாகும். இத்திருக்கோயிலில் இருந்து ஆரம்பமாகும் தேர்பவனி, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில வீதி, காலி வீதி, வழியாக பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயம் சென்று அங்கிருந்து காலி வீதிவழியாக டபிள்யூ. ஏ சில்வா மாவத்தை, ஹம்டன் ஒழுங்கை, கனல் வீதி, போதிருந்தராம வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும். அதனைத் தொடர் ந்து பச்சை சாத்தி பிராயச்சித்த அபிஷேகம் நடை பெறும்.

எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஜயந்தி விழா கடல் தீர்த்தத்துடன் ஆரம்ப மாகும்.

அன்று மு. ப. 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 409 வலம்புரிச் சங்குகளினால் சங்காபி ஷேகமும் விசேட பூஜையும் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விஷேட வடைமாலை அலங்காரம், குருபாத பூஜை, திருவூஞ்ச லுடன் உற்சவ அருட்காட்சி நடைபெறும். எதிர்வரும் 27 ஆம் திகதி வைரவர் மடை நடை பெறும்.

உற்சவ தினங்களில் பகலில் அன்னதானம் வழங்கப் படும். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஸ்ரீ ஹனுமன், ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ வராஹிஸ்வரர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய பஞ்சமுகங்களினால் தெஹிவளை அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 டிசம்பர், 2011

அறநெறி அறிவுநொடி


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

கார்த்திகை தீபம்

8805. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர பெளர்ணமியன்று கொண்டாடப்படும் விழா எது?

கார்த்திகை தீபத் திருநாள்

8806. கார்த்திகை தீபத்திருநாள் எங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்?

திருவண்ணாமலையில்.

8807. ‘தொல்கார்த்திகைத் திருநாள்’ என்று கார்த்திகை திருநாளின் தொன்மையை தேவாரப்பதிகத்தில் பாடியவர் யார்?

ஞானசம்பந்தர்.

8808. கார்த்திகை விழாவின் சிறப்பை போற்றுகின்ற மிகப் பழைய இலக்கியங்கள் எவை?

அகநானூறு, நற்றிணை போன்ற நூல்களில்.

8809. சம்பந்தர் எத்தனையாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

ஆறாம்.

8810. இதனையும் பிற இலக்கியங்களையும் வைத்து பார்க்கும்போது கார்த்திகை தீபத்திருவிழா எவ்வளவு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது?

2500 ஆண்டுகளாக

8811. பன்னிரு ஆழ்வார்களில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர் யார்?

திருமங்கையாழ்வார்.

8812. திருமங்கையாழ்வார் எதன் அம்சமாகத் தோன்றினார்?

வில்லின்.

8813. இந்த வில்லின் பெயர் என்ன?

சாரங்கம்.

8814. இந்த சாரங்கம் என்னும் வில் யாருடைய கையில் இருக்கும்?

திருமாலின்.

8815. திருமங்கையாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் என்ன?

நீலன்.

8816. நீலன் யாரிடம் படைத் தலைவராக இருந்தார்?

சோழ மன்னனிடம்.

8817. நீலனின் வீரத்தைப் பாராட்டி சோழ மன்னன் என்ன செய்தார்?

ஆலிநாடு என்னும் பகுதியை கொடுத்து அரசனாக்கினான்.

8818. நீலனுக்கு திருமங்கையாழ்வார் என்ற பெயர் எவ்வாறு வந்தது?

திருமங்கை என்னும் தலைநகரை அமைத்து அதில் அரசாட்சி செய்ததால்.

8819. இவர் அடியார்களுக்கு அமுதிட்டது எவ்வாறு?

வழிப்பறி செய்து

8820. பெருமாள் எந்த கோலத்தில் வந்து இவரை ஆட்கொண்டார்?

மணமகன் கோலத்தில்

8821. ஆழ்வார்களில் அதிகமான பிரசுரங்களை பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் திருநெடுத்தான்டகம்,

8822. திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறையும் என்னவென்று கூறுவர்?

பிரபந்தங்கள்.

8823. இந்த ஆறு பிரபந்தங்களையும் பாடியவர் யார்?

திருமங்கை ஆழ்வார்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812