செவ்வாய், 27 ஜனவரி, 2015

2015.02.03 தைப்பூசம்

b>2015.02.03 தைப்பூசம்

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர்

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு இணையான பதினெட்டுப்படி சிறப்பு பூசையினை ஆலயகுரு சிவஸ்ரீ லோகனாதக்குருக்கள் நடாத்துவதையும் வழிபாடு செய்யும் பக்த்தர்களையும் படத்தில் காணலாம்

Bandarawela Sri Subramaniya Swami Kovil devolpment

11212) புருவ மத்தியில் மூளையின் முன்புறம் என்ன சுரப்பி உள்ளது? பைனீயல் கிளாண்ட் 11213) யோகசாஸ்திரத்தில் இதனை என்ன என்பர்? ஆக்ஞாசக்கரம் 11214) சந்தனம், குங்குமம் பொட்டு வைப்பது ஏன்? ஆக்ஞாசக்கரத்த குளிர்ச்சிப்படுத்தவே விபூதி, சந்தனம், குங்குமம் இடுகிறோம். 11215) நெற்றியில் இடும் பொட்டை என்ன என்பர்? நெற்றித் திலகம் என்பர் 11216) ‘திலம்’ என்றால் என்ன? எள் 11217) பொட்டு திலகம் என்று எப்படி பெயர் வந்தது? பொட்டை எள் அளவில் சிறிதாக எள்ளைப் போல இட்டுக் கொள்வதால் ‘திலகம்’ என்று பெயர் வந்தது. 11218) அக்காலத்தில் அரசர்கள் நெற்றியில் எதனை வரைந்து கொள்வர்? வாசனைத் திரவியங்களாலான சாந்தை நெற்றியில் வரைந்து கொள்வர். 11219) இதற்கு உபயோகப்படுத்தும் வாசனைத் திரவியங்கள் என்னென்ன? சந்தனம், ஜவ்வாது 11220) இதற்கு என்ன பெயர்? ‘திலக தாரணம்’ என்று பெயர் 11221) இதில் என்னென்ன வடிவங்கள் இடம்பெறும்? பூக்கள். பாம்பு, திரிசூலம் போன்ற வடிவங்கள் 11222) இதில் இடம்பெறும் சிறப்பான வடிவம் எது? தாமரை மலர் 11223) “மாளவிகாக்னிமித்ரம்’ என்ற காவியத்தில் நெற்றித்திலகம் பற்றி விரிவாக விளக்கியுள்ளவர் யார்? மகாகவி காளிதாசர் 111224) பசுவையும் நீரையும் விற்கலாமா? கூடாது 11225) கலியுகத்திலிருந்து வரும் கேடுகளிலிருந்து தப்பிக்கவும் அவை நம்மைத் தாக்காமல் இருக்கவும் இரண்டுவித செயல்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுவார்கள் அந்த இரண்டுவித செயல்களும் எவை? ஒன்று பசுவை அதிக விலைக்கு விற்பது அதில் கமிஷன் தரகு பெறுவது கூடாது. மற்றொன்று தண்ணீரை விற்று இதனால் பலவித நோய் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 11226) நெருப்பை யாருக்கும் கொடுக்கலாமா? நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடாது வீட்டில் சாம்பிராணி போட வேண்டும், பக்கத்து வீட்டில் எரியும் விறகு அடுப்பிலிருந்து கங்கு (அக்னி) வாங்கி வா என்று பிள்ளைகளைப் பக்கத்து வீட்டுக்கு அனுப்பாதீர்கள். இது சாஸ்திரத்துக்கு விரோதமானது. 11227) கோயிலில் தீபமேற்றினால் ஒரு விளக்கிலிருந்து இன்னொன்றை ஏற்றலாமா? ஏற்றக் கூடாது. தனியாக தீப்பெட்டி வைத்து ஏற்றுங்கள். 11228) இதை தன் வாழ்வில் கடைபிடித்தவர் யார்? அனுமன் இலங்கையிலே அவரது வாலில் நெருப்பு வைத்து விட்டார்கள். நெருப்பை யாரும் யாருக்கும் கொடுக்கக் கூடது. கேட்காமல் கொடுத்ததை என்ன செய்வது என்று அனுமன் சிந்தித்தார். கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விடுவது என்று முடிவெடுத்தார். ஊருக்கே தீ வைத்தார். அக்னிதேவனுகுக் அருமையான விருந்து அளித்தார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

பன்விலை செல்வவிநாயகர் ஆலயம்

பன்விலை செல்வவிநாயகர் ஆலய கும்பாபிN'கம் பன்விலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிN'க நிகழ்வு இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற இறையருள் கைகூடியுள்ளதாக ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார். பன்விலை பிரதேசத்தில் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் 50 வருட கால பழைமையானது. 1969-01-31 ஆம் திகதியன்று ஆலய பரிபாலன சபை செயலாளர் ம.கருப்பைய்யாப்பிள்ளையின்; அரிய முயற்சியால் கட்டுவிக்கப்பட்டது. இதன் தலைவர் டீ.;நடராஜப்பிள்ளை, பொருளாளர் எஸ்.ஐ.செல்லமுத்துப்பிள்ளை, துணைத்தலைவர் ஏ.வீ.ஆறுமுகம் ஆசாரியார், துணைச்செயலாளர் ஏ.சங்கரன் ஆகியோர் பக்க பலமாக நின்று ஆலய ஆரம்பகட்ட வேலைகளை மேற்கொண்டனர். மூல மூர்த்தியான ஸ்ரீ செல்வ விநாயகர் விக்கிரகம் 20-01-1969 அன்று வத்தேகம பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக சி.த சோமசுந்தரம் பிள்ளையால்; கொண்டுவரப்பட்டு கும்பாபிN'கம் இடம்பெற்றது. கும்பாபிN'கம் 1970- ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி விமரிசையாக இடம்பெற்றது. அன்றிலிருந்து 2004 வரை மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகத் திகழ்ந்த இவ்வாலயம் பாலஸ்தானம் கண்டு 10 வருடங்களின் பின்னர் 2015-02-01 அன்று கும்பாபிN'கம் காண எம்பெருமான் அருள் பாலித்துள்ளார். பன்விலை பிரதேச பொது மக்கள், தனவந்தர்கள், உட்பட பலரும் ஆலத்திருப்பணிக்காக பல்வேறு வகைகளில் உதவி நல்கி வருகின்றனர். ஆலய அறங்காவலர் செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். செயலாளர் எஸ்.சிவானந்தம் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கூடிய இறைபணி ஆலயத்தை கும்பாபிN'கம் காணச் செய்துள்ளது. கே.மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, நடேசப்பிள்ளை, வீ.விஜயகுமார் ஆகியோரின் அரும் பணிகளும் ஆலயத்தை தலைத்தோங்கச் செய்துள்ளன. இவ்வாலயத்தின் சமூகப்பணிகளாக ஸ்ரீ கணேசா அறநெறிப்பாடசாலை இயங்கி சிறப்பான கல்விப்பணியை மேற்கொண்டு வருகிறது. பன்விலை கல்விக் கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கு இலவச புலமைப்பரிசில் வகுப்புக்களும் இடம்பெற்று வருகிறது. இத்துடன் அறநெறி வகுப்புகளும் நடன, சங்கீத வகுப்புகளும் பன்விலை பிரதேசத்திற்கு பாரிய கல்வி, கலை, கலாசார சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN'க நிகழ்வின் கிரியாகால நிகழ்வுகள் 30-01-2015 அன்று ஆரம்;பமாகும். 31-01-2015 அன்று பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். 01-02-2015 காலை 9.20 மணிமுதல் 10.41 மணிவரை ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிN'கம் இடம்பெறவுள்ளது. கும்பாபிN'க நிகழ்வுகளுக்கு உபயம் செய்ய விரும்புவோர் ஆலய அறங்காவலர் சபையோடு தொடர்பினை ஏற்படுத்;துமாறு கேட்கப்படுகின்றனர். தொடர்புகளுக்கு செயலாளர் எஸ்.சிவானந்தம் சைவ மகா சபை பன்விலை. "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
111207) யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம். 111208) கடவுளின் படம் அல்லது சிலை... எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம். நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது. 111209) சுமங்கலிகளை வழியனுப்பும் போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும் போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது. 111209) விரதத்தின் போதும் கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்? தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை ஆனால் அவற்றுள் செப்பு உலோகம் அதனை வெகு சுலபமாகக் கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள். அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் பொது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும் அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப்பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்குக் கிடைக்கின்றது. எண் குணங்களும் எவை தன்வயத்தனாதல், தூயஉடம்பின்னாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேராற்றல் உடைமை, பேரின்பம் உடைமை, பேரருள் உடைமை என்பனவாகும். 111210) எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார் வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய்ப் பயன்டாதவாறு போல தலையிருந்தும் எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை பயனற்றது என்கிறார். 111211) பொங்கலுக்கு - மஞ்சள் குலை வாங்குவது ஏன்? மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும் போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுப நிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத்தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள் கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சிரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.
11193) வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா? காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபட வேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை. 11194) செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள். 11195) கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக் கூடாது என்கிறார்களே! உண்மையா? கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும் போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம். வாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள். 11196) மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன? சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயும், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது. 11197) திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது? சாம்பிராணி புகை போட்டும், தேய்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள். 11198) கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா? முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும். 11199) சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்? நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைப்படாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு- சிஷ்யன், பசு -கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி. 111200) நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம், நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 111201) பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்? தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். 111202) வீட்டிலிருந்து கிளம்பும் போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா? சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை. 111203) வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம். 111204) அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக்கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும். செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள். 111205) சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும் போது, சுப நிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். 111206) பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்? குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812