வெள்ளி, 25 ஜனவரி, 2019

நலம் தரும் நடராஜர் தரிசனம்



ஆருத்ரா தரிசனம் அன்று (23.12.2018) நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.

இறைவனது தரிசனம் பார்த்தால் எடுத்த பிறவிக்கும் பலன் கிடைக்கும். அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் அனுகூலமாகவே நடைபெறும். “கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்” என்று ஒருசிலரை வர்ணிப்பது வழக்கம். அவர்களெல்லாம் இறைவனது தரிசனம் பார்த்து தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராக இருப்பர்.

அந்த அடிப்படையில் நடராஜர் தரிசனம் கொடுப்பது வருடத்திற்கு இரண்டு முறையாகும். ஒன்று ஆனித் திருமஞ்சனம், அடுத்தது மார்கழித் தரிசனம். இந்த ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை (23.12.2018) வருகின்றது. அன்றைய தினம் நடராஜர் சன்னிதியில் சிவபுராணம் பாடி மனமுருகி வழிபட்டால் ஆடலரசன் அருளால் அகிலம் போற்றும் வாழ்வு அமையும்.

41 நாட்கள் விரதம்

41 நாட்கள் விரதம் மண்டலமாக
மாற்றம் பெற்றது ஏன்?


சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். அதுவே ஒரு மண்டலமாக 48 நாட்களாக மாற்றம் பெற்றது ஏன் என்று பார்க்கலாம்.

சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி காட்டுக்கு அனுப்பிய ராணியும் அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர்.

அந்த நாட்களில் அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல் உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த 41 நாட்கள் அமைந்தன.

கடைசியில் காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது.

பின்னர் அதுவே ஒரு மண்டலமாக 48 நாட்களாக மாற்றம் பெற்றது.

கோலத்தில் பூசணிப் பூ வைப்பதற்கு காரணம் என்ன?

மார்கழி மாதத்தில் வீட்டின் வாயிலில் போடப்படும் கோலத்தில் பூசணிப் பூ வைப்பதற்கு காரணம் என்ன?

அந்த காலத்தில் திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை - பெண் தேவை என்பதற்காக வெளியிடப்படும் கல்யாண விளம்பரங்களோ கிடையாது. எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.


காலை எழுந்தவுடன் எவற்றை பார்க்கவேண்டும்? 
 தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம்


வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு என்ன வழங்க வேண்டும்?
குங்குமமும் தண்ணீரும்
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறலாமா? கூறக்கூடாது.
அப்படி என்றால் எப்படி சொல்ல வேண்டும்?
இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
எவைகளைக் கையால் பரிமாறக்கூடாது?
அன்னம், உப்பு, நெய்
இவைகளை எப்படி பரிமாறவேண்டும்?
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.

அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா? கூடாது.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டலாமா?
கூடாது.
பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கலாமா?
கூடாது.

பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ Thamilar Welfare Foundation



தீய சக்தியை அழிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பார்வதி தேவியின் மறு உருவம் ‘காளி’ என்று கூறப்படுகிறது.
காளிதேவி பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருக்கும் பெண் தெய்வமாகும். ‘காளி’ என்பதற்கு கருப்பு என்று பெயர்.

காலம் மற்றும் மரணம் என்பதை குறிக்கும் சொல்லாகவும் கருதலாம். அகண்ட சிவந்த கண்களும் நாக்கினை வெளியே நீட்டிக் கொண்டும் ஆயுதங்களை கையில் ஏந்திய படியும் காளிதேவி தோற்றமளிக்கிறாள். பெண் தெய்வமான துர்க்காதேவி மகிஷாசூரன் என்ற அசுரனை எதிர்த்து போரிட்டாள்.

மகிஷா சூரனின் படைகளில் இருந்த மற்றொரு அசுரன் இரத்தபாசன். இவனை காளி தேவி வதம் செய்தாள். அவனில் இருந்து வெளிப்பட்ட இரத்தமானது போர்க்களத்தையே மூழ்கடிப்பதாக இருந்தது. அந்த இரத்தத்தை காளிதேவி குடித்து இரத்தபாசனின் உடலை தூக்கி எறிந்தாள்.

மகாபாரதத்தின் ஒரு பகுதி பகவத் கீதை



பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரௌபதி இருந்தார்.

துரியோதனனுக்கும் தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.

இருவருக்கும் பொதுவானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.

அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.

துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.

அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக்காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம்பெற்று இருந்தன.

அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.

மன அமைதி அருளும் ஷீரடி சாய்பாபா



சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.

சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர் த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய் என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால் எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால் பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம் ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால் ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.

பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி அவரது மனமானது அமைதியடைந்தது.

கணபதி ஹோமம்


1) வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?
பிரம்ம முகூர்த்தத்தில் நடத்துவது நல்லது


) பிரம்ம முகூர்த்தம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை? அதிகாலை 4.30 முதல் 6 மணி



) வீட்டில் கணபதி ஹோமத்தை நாளில் நடத்துவது நல்லது ?
விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது சிறப்பு.


) பசு எந்த தெய்வத்தின் அம்சம்? லட்சுமியின்


) பசு எந்த தேவதையின் அடையாளம்? தர்ம தேவதையின்


) கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும் தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.


) மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?
யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள்.



) மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது "என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்'' என்று தான் கூறுவோமே தவிர, "மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்'' என்று கூறுவதில்லையே!



மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.


) பிரதோஷம் என்பது என்ன மொழி சொல்? வடமொழி



) பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம் என்ன?

"ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது ஆகும்.


5) பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள்.


பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான்.



) பிரதோஷத்தின் சரியான கால அளவு எவ்வளவு?
தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.



) இந்த நேரத்தில் யாரை தரிசிப்பது மிக விசேஷமானது?
சிவபெருமானை



) இந்த பிரதோஷத்திற்குாிய பெயர் என்ன? நித்யபிரதோஷம்



) வளர்பிறை திரயோதசிக்கு உாிய பெயர் என்ன? பக்ஷ பிரதோஷம்


) தேய்பிறை திரயோதசிக்கு உாிய பெயர் என்ன?
மாத பிரதோஷம்


) தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் உாிய பெயர் என்ன?
மகாபிரதோஷம்

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை



புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான். சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார். நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருப்பவர்.

ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார். அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா...

நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே...



கோலம்


) கோலமிடும் வீட்டில் யார் நிரந்தர வாசம் செய்கின்றாள்?
மகாலெஷ்மி
)எப்போது வாசலில் கோலமிட வேண்டும்?
சூரிய உதயத்திற்கு முன். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.

)கோலத்தில் புள்ளி, கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்பட்டால் காலினால் அழிக்கலாமா?
கூடாது. கையால் அழிக்க வேண்டும்.

)அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும்.

)தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். இது ஏன்?
ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும்.

)பந்தலில் ஊன்றப்பட்டிருக்கும் நான்கு கால்களும் எவற்றைக் குறிக்கின்றன? நான்கு வேதங்களை

)திருமணம் யார் யார் சாட்சியாக நடைபெறுகிறது?
விக்னேஷ்வரர் சாட்சியாகவும் அக்னிசாட்சியாகவும்

) அரசன் ஆணைக்கால் என்று எது வைக்கப்படுகிறது? அரசானிக்கால் வைக்கப்படுகிறது.

)யாருக்குரிய நவதானியம் வைக்கப்பட்டுள்ளது? குபேரனுக்குரிய

) அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் சக்திகள் என்னென்ன?
வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் பெறுகின்றன.

மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு



இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மாசியும் பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கௌரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும் மாங்கல்ய பலமும் நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம். இந்த விரதம் வடநாட்டில் கர்வா சௌத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான்- சாவித்ரி கதை சொல்லப்படுகிறது.

இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய் வைத்து பட்டுத்துணி சுற்றி பூமாலை சாற்ற வேண்டும். மஞ்சள் சரடு (கயிறு) எடுத்து பசு மஞ்சள், பூ இணைத்து அதன்மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருள்புரியுமாறு அம்மனை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள்.
பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்து கொள்வார்கள். கட்டுக் கிழத்தி என்று சொல்லப்படும் வயதான தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் பெண்களை வணங்கி அவர்களது ஆசிர்வாதம் பெற்று, அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பாகும். சிவனுக்காக உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல அடை நைவேத்யம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்கியம் தா’ என்று பிரார்த்தனை செய்து கணவன் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பை கடைபிடித்தால் கணவன் - மனைவி இடையே இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கிய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சோமவார விரதம்


16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது.

சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் தோறும் அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.
இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும் வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள் விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை அடுத்த திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள்.

மாசிமகம்



உமா தேவியார் அவதரித்தது எப்பொழுது?
மாசி மாதம் மக நட்சத்திரத்தில்
மாசி மகத்தன்று உமா தேவியார் யாருடைய மகளாக அவதரித்தார்?
தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார்

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்தது எப்பொழுது?
மாசி மகத்தன்றுதான்.

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்று அழைப்பது யாரை?
முருகனை

முருகனை இவ்வாறு அழைக்க காரணம் என்ன?
தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள் என்பதாலாகும்.
தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்தது எப்பொழுது?
மாசி மகம்த்தன்றுதான்

மாசி மகத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
‘கடலாடும் நாள்‘
கடலாடும் நாளை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
‘தீர்த்தமாடும் நாள்‘

மாசி மகம் எப்போது வரும்?
வருடம்தோறும் வரும்

மகா மகம் எப்போது வரும்? 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை

மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள்?
'மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்' என்பதுதான்.

மக நட்சத்திரத்தை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
'பித்ருதேவதா நட்சத்திரம்' என்று

முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருவது யார்?
பித்ருதேவதாதான்

முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் எப்படி இருக்கும்?
சுபிக்ஷமாக இருக்கும்

வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் என்ன நடக்கும்? அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும்.
பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும்.

​​ மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை சாஸ்திரம் என்னவென்று சொல்லுகிறது?
'பிதுர் மஹா ஸ்நானம்' என்கிறது.

மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகத்தன்று சூரியன்
கும்ப ராசியில் இருக்கும் போது சந்திரன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்வார்?
சிம்ம ராசியில்

மாசி மகம் ந்தெந்த தெய்வங்களுக்கும் உகந்த நாள்?
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன்.

தமிழர் நற்பணி மன்றம்

Mrs. Vanitha Easwaralingam

கடந்தாண்டு தைப்பூசத்திற்கு மறுநாள் சிவனின் திருவடியை அடைந்த திருமதி வனிதா ஈஸ்வரலிங்கம் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட 2019- தமிழ் பஞ்சாங்க கலண்டா்.


பார்வதிதேவி பழனி முருகனுக்கு வேல் வழங்கிய தைப்பூசம்



அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும். தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.

அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.



Thamilar Welfare Foundation 
(Thamilar Natpani Mandram)

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812