திங்கள், 26 மார்ச், 2012

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

9015) இறைவனை வணங்கும் போது எப்படி கைகூப்பி வணங்க வேண்டும்?

இரு கரங்களையும் கூப்பி தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி வணங்க வேண்டும்.

9016) குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?

நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

9017) தந்தையை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?

வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

9018) அறநெறியாளர்களை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?

மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

9019) நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை எப்படி வணங்க வேண்டும்?

வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

9020) ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது வாசல்படியில் நின்று கொடுக்கலாமா?

கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும். அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

9021) எவற்றின் மேல் உட்காரக் கூடாது?

வாசல்படி, உரல், ஆட்டுக் கல், அம்மி.

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பாலஸ் தாபனம் நேற்றுக் காலை நடைபெற்றது.

ஆலயத்தின் திருப்பணிச்சபை உறுப்பினர்களையும் பாடசாலை யின் உப அதிபர் ரி.பரமேஸ்வரனையும் படத்தில் காணலாம்.

இவ்வாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த அடிக்கல் நாடும் விழாவில் கலந்துகொள்ள விரும்புகின்ற அடியார்கள் 101 ரூபாவை செலுத்தி அடிக்கல் ஒன்றை பெற்று நடலாமென்று தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 19 மார்ச், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

9008 ஸ்ரீ என்ற சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணம் ஏற் படக் காரணமாக இருப்பது என்ன?
ஸ்ரீமதி

9009 ஸ்ரீ என்ற சொல் பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன் படுத்தப்படுகிறது. இது எதனால் ஏற்பட்டது?
மன்னராட்சிக் காலத் தாக்கத்தால்
ஒட்டி ஏற்பட்டது.

9010 ஸ்ரீ என்ற சொல் பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகின்ற விதத்தை உதாரணத்துடன் தருக.
ஸ்ரீலஸ்ரீ, நாட்டியஸ்ரீ, சங்கீதஸ்ரீ, லங்காஸ்ரீ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

9011 எந்த மொழி பெயர்ச் சொற்களில் ஸ்ரீ காணப்படுகிறது?
வடமொழி வழிப் பெயர்ச் சொற்களில்

9012 வடமொழி வழிப் பெயர்ச் சொற்கள் சிலவற்றைத் தருக?
ஸ்ரீவித்யா, ஸ்ரீதர், ஸ்ரீராம்,
ராகஸ்ரீ, ஸ்ரீநிவாசன்.

9013) கணபதி, சூரியன், அம்பிகை, மகாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பூஜிப்பதை என்னவென்று கூறுவர்?
பஞ்சாயன பூஜை

9014) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்து முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளவை எவை?

* சுமங்கலிப் பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது.

* இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.

* ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.

* வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும் போதும் அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடு த்து உபசரிப்பது சிறந்தது.

* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கக் கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.

* எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

* அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந் தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு குடும்பப் பெண்ணே இந்தப் பணியை செய்யும் போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.

* வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவ னிடம் தெரிவிக்கும் போது ‘அது இல்லை’ என்ற வார்த்தை யைக் கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.

திங்கள், 12 மார்ச், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8990) பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்த்தனையின் மூலம் யாகசாலையில் வைத்து என்ன செய்யப்படுகின்றன?

யாகமும் பூஜைகளும்

8991) சக்திவாய்ந்த மந்திரங்களால் கும்ப நீரு என்ன செய்யப்படுகிறது?

சுத்தி செய்யப்படுகிறது

8992) கும்ப நீர் இவ்வாறு சுத்தி செய்யப்பட்டு என்ன செய்யப்படுகிறது?

தெய்வ ஆவாகனம்

8993) இந்த நீர் கெடாதிருக்க என்ன சேர்க்கப்படுகின்றன?

கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ.

8994) இதில் மாவிலை வைக்கப்படுவது ஏன்?

அஷ்ட லஷ்மிகளின் கடாட்சம் நிறைந்திருக்க

8995) கும்பம் எத்தனை மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்படுகிறது?

எட்டு

8996) அந்த எட்டு மங்கலப் பொருட் களையும் தருக.

தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ, தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை.

8997 சில இந்துக் கடவுள்களைக் குறிக்கும் பண்புப் பெயராக பயன் படுவது எது?

ஸ்ரீ

8998 ஸ்ரீ என்பது எதைக் குறிக்கும்?

செல்வத்தை

8999 செல்வதுக்கு உரிய கடவுள் யார்?

இலட்சுமி

9000 இலட்சுமி யாரின் துணைவி யார்?

விஷ்ணுவின்

9001 ஸ்ரீதேவி என்னும் பெயர் யாரைக் குறிக்கும்?

இலட்சுமியை

9002 வளத்துக்கு உரிய கடவுள் யார்?

பிள்ளையார்

9003 ஸ்ரீ என்ற பெயர் யாரைக் குறிக்கும்?

பிள்ளையாரை

9004 புனிதத் தன்மை உள்ளவர்கள் என நம்ப ப்படுகிறவர்களின் பெயர்கள் முன் எந்த சொல் சேர்த்து அழைக்கப்படுகிறது?

ஸ்ரீ

9005 வேறு எந்த மதத்தில் “ஸ்ரீ” என்ற சொற் பயன்பாடு காணப்படுகிறது?

பெளத்த சமயத்தில்

9006 பெளத்த சமயத்தில் “ஸ்ரீ” என்ற பதம் இடம்பெறக் காரணம் என்ன?

வடமொழி மற்றும் இந்தியத் தோற்றத்தின் காரணமாக

9007 வணக்கத்துக்குரிய அல்லது பெரு மதிப்பு க்குரிய நபர்களின் பெயருக்கு முன் “ஸ்ரீ” என்ற பதம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

பெரு மதிப்பைத் தெரிவிக்கும் முன்னொட்டாக




வவுனியா, சிதம்பரபுரம் (மலைக் கோவில்)
திருப்பழனி முருகன் ஆலயம்

வட மாகாணத்தில் மலை உச்சியில் இருக்கும் ஒரே முருகன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியா நகரில் தெற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் சிதம்பரபுரம் எனும் அழகிய கிராமத்தில்தான் இவ் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. காடு பகுதி என்பதால் யானை, மான், குரங்கு என பல மிருகங்கள் இங்கு இருந்தாலும் 1995 ஆண்டு முதலாவது மக்கள் வீடுகள் அமைத்து குடியேறினார்கள். ஆனால் இம்மலையில் முருகனுடைய கோவில் கட்டுவதற்கு முன் மலை உச்சியில் கல்லில் ஓம் என்ற எழுத்து வடிவம் இருந்ததாக மக்கள் கூறுகிறார்கள்.

1996ஆம் ஆண்டு கட்டுமான பணிகளும் புனர்நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதற்குப்பின் கிணறு, வெட்டுதல், மின்சார இணைப்பு வேலைகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டன. வவுனியா அரசாங்க அதிபர் கே. கணேஸ் ஊடாகவே இவ்வேலைத் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலய திருப்பணி வேலைகளும் மலை ஏறி செல்வ தற்கான படி கட்டும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா பிரதேச செயலாளர் திருமதி துரைசாமி அம்மையாரால் வவுனியா அரசாங்க அதிபர் சன்முகத்தின் ஒத்துழைப்புடனும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும் திருப்பணிகள் முடிக்கப்பட்டன.

மலை அடிவாரத்தில் விநாயகர் ஆலயம், இரண்டு கிணறுகள் மண்டபம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலை அடிவாரத்தில் காரியாலயம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அத்தோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பல வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மாத்திரம் அல்லாது கடந்த 11 வருட காலமாக வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்கள் சங்கம் உதவி வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவருடைய பங்களிப்புடன்தான் இவ்வாலயம் இத்தனை சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது கதிர்காமம் கதிரமலை (ஏழுமலை)யில் இருந்து தரிசிப்பது போன்று இருக்கும். ரம்மியமாக காற்று வீசிக் கொண்டுயிருக்கும். மேல் இருந்து வட மாகாணத்தையும் வட மத்திய மாகாணத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். இவ் மலையில் இருந்து பல மூலிகைச் செடிகள் பறிக்கப்பட்டு இயற்கை மூலிகை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க வன்னி மாவட்டத்தில் இவ்வாறான கோவில் அமைந்திருப்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

வவுனியா பிரதேச செயலாளரும் ஆலயத்தின் போஷகருமாகிய சிவபாலசுந்தரம், தற்போதைய வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து “யாத்திரிகர் மலை” என இதற்கு பெயர் சூட்டினார்கள். இவ்வாலயம் மலை உச்சியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இவ்விடத்தில் தியான மண்டபம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 650 அடி உயரத்தைக் கொண்ட இம்மலையில் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரில் இருந்து கோவில் அடிவாரம் வரை அடியார்கள் வருவதற்கு இ.போ.ச., தனியார் பஸ் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாலயத்தில் தினந்தோறும் நித்திய பூஜைகள் கந்தசஷ்டி, தைபூசம், சஷ்டி விரதம் என்பவற்றுடன் ஆடிமாத மகோற்சவம் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். கதிர்காமம் கொடியேற்றம் நடைபெறும் போது இங்கு கொடியேற்றமும் நடைபெறும்.

ஆகவேதான் இது சின்ன கதிர்காமம் என்று அழைக்கப்படுகின்றது. ஆலய பரிபாலன சபை தலைவர் அ. மாதவன், செயலாளர் செல்வநாயகம் (டாக்டர்), பொருளாளர் இ. பன்னீர் செல்வம், உபதலைவர் இ. ராமசாமி, உபசெயலாளர் மு. வசந்தகுமார், உறுப்பினர்கள்: தி. கிருஷாந்தன், க. தர்மகுலசிங்கம், மு. பஞ்சவர்ணம், இ. முத்தழகு, வி. அழகுமுருகன், டாக்டர் சூரியகுமார் (போஷகர்), சி. தர்மராசா (ஆலோசகர்), திருப்பழனி முருகன் அறநெறி பாடசாலை கடந்த 10 வருடங்கள் நடைபெற்று வருவதோடு, ஆலய நித்திய பூஜைகளை சுப்பிரமணியம் பூசகர், பழனியப்பன் பூசகர் மேற்கொண்டு வருகின்றனர்.

அறநெறி பாடசாலையில் செல்வி. தி. விஜித்ரா, செல்வி. வி. கீர்த்திகா ஆகியோர் ஆசிரியர்களாக கற்பிக்கின்றார்கள்.

திங்கள், 5 மார்ச், 2012


கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

நிறைகுடம்

8979) சைவத் தமிழ் மக்கள் தங்கள் கலை, கலாசார சமூக, நிகழ்வுகளின் போதும் விசேட பண்டிகை கொண்டாட்டங்க ளின் போதும் சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் வரவேற்க என்ன வைப்பார்கள்?

நிறைகுடம்.

8980) சுபநாட்களில் வீட்டு வாசலில் நிறைகுடம் வைப்பதன் மூலம் ஏற்படும் நன்மை என்ன?

சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருக்கும்.

8981) நிறைகுடம் இருக்கும் இடத்தில் யார் வருவதாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது?

இலக்குமி

8982) உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் எதிலிருந்து உண்டாகின்றன?

நீரிலிருந்தே

8983) இவை மறுபடியும் பிரளய காலத்தில் எதில் லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது?

தண்ணீரிலேயே

8984) பூரண கும்பத்தின் அர்த்தம் என்ன?

ஆதிகர்த்தவாகிய இறைவனை நீரின் மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டு வருவதே பூரண குடும்பத்தின் அர்த்தம்.

8985)மங்கள காரியங்களில் வைக்கப்படும் நிறைகுடங்களில் எத்தனை மாவிலைகள் இடப்படும்?

ஐந்து

8986) இந்த ஐந்து மாவிலைகளும் எதனை புலப்படுத்துவதாக அமைகின்றன?

ஐம்புலன்களை

8987) நிறைகுடத்தின் குடமும் நீரும் எதனை நினைவுபடுத்துகின்றன?

நமது உடலை.

8988) நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டவர் யார்?

கம்பர்

8989) மனித உடல், ஐம்புலன், சிரசு, இவற்றை அடக்கும் கருவியாக இடம்பெறுவது எது?

பூரண கும்பம்

கொழும்பு தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம்

திருப்பணிகளுக்கு உதவ திருவருள்

நீதியும் நியாயமும தர்மமும் நிலைத்து நிற்கக்கூடிய தளம் திருத்தலம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்திலே எழுந்தருளி அல்லது வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உரிய குல தெய்வமாக விளங்கக் கூடியவள் வீரத்திற்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆவார்.

திருமூலராய் ‘சிவபூமி’ என போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே, நீதியும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வேண்டும் என்று வாய்மையால் வாதாடும் வக்கீல்களும் நீதி தவறாது தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் காலைப் பொழுதானால் சோம்பல் இன்றி வீரத்தின் அடையாளமாய் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கின்ற நீதிமன்றங்களும் நிறைந்து விளங்கும் புதுக்கடை என அழைக்கப்படும் ஹல்ஸ்டொப் சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்.

இலங்கையிலே துர்க்கை அம்மனை மூல மூர்த்தியாக கொண்டுள்ள தலங்கள் இரண்டே இரண்டு தான் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ளது. அடுத்தது கொழும்பு தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். இத்தலம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது.

இற்றைக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1910 ஆம் ஆண்டு வைகாசியான மே மாதம் 27 ஆம் திகதி இத்திருத்தலத்தை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக இவ்வாலயம் முளையிடப்பட்டது. அன்று முதல் ஸ்ரீ துர்க்கை அம்பாளின் அருள் மகிமை இப்பகுதி எங்கும் வியாபித்து தூபமிடத் தொடங்கியது. ‘அவளின்றி அணுவும் அசையாது’ என்ற அடை மொழிக்கு அமைய மடாலயமாக இருந்தது ஆலயமானது. குடிலாக இருந்தது கோபுரமானது.

இந்த அரும்பெரும் கைங்கரியம் நிறைவேற முத்தாக வித்தாகியவர் அ. பெருமாள் செட்டியார். இவர் தான் இந்த ஆலயத்தை முதன் முதலில் அமைத்தவர்.

இவர் அம்பாளின் திருவடியை எய்திய பின் அ. சுப்பையா செட்டியார், ஏ.பி. எஸ். ஆறுமுகம் செட்டியார், ஏ. பி. எஸ். அருணாசலம் செட்டியார் ஆகியோருக்கு இவ்வாலயத்தின் பரிபாலன அறப்பணிகளை மேற்கொள்ள அம்பாளின் அருட்கடாட்சம் கிடைத்தது. இவர்களுக்குப் பின் ஏ. ரத்னவேல் செட்டியாருக்கு இத்திருத்தலத்தை பரிபாலிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வாலயத்தின் அருமை பெருமை இப்பகுதி எங்கும் பரவத் தொடங்கியது. இதுவரை காலமும் காலியாக இருந்த கஜானாவின் மீது ஸ்ரீ லட்சுமி அம்பாளின் அருட் பார்வை படத்தொடங்கியது. இவரைத் தொடர்ந்து பி. கலியப் பெருமாள், க. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இவ்வாலய திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களது காலத்தில் தான் இத்திருத்தலத்தில் கர்ப்பக் கிரகம், மகாமண்டபம், கோபுரம் ஆகியன அமைக்கப்பட்டன. ஆகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 1982 ஆண்டிலாகும்.

1982-03-02 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் தான் ஆலய தலைவராக லயன் முத்துக்கிருஷ்ண ராஜா கேசவராஜா ஜே. வி. யும் உப தலைவராக பீ. ராஜேந்திரனும் செயலாளராக எஸ். ஸ்ரீ காந்தும் உப தலைவராக ஆர். பாலசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக ஆகம விதிக்கு ஏற்ப இங்கு மகா கும்பாபிஷேகம் நடததப்படவில்லை. அதன் பின் ஆலய அறங்காவலர் சபைத் தலைவராக லயன் எம். கேசவராஜா நீண்ட காலம் பணியாற்றி வந்தார். அவரது பார்வையில் புதிய நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது.

அப்போது தலைவராக லயன் எம். கேசவராஜாவும் செயலாளராக கே. ஈஸ்வரலிங்கமும், பொருளாளராக பீ. முருகேசுவும், உப தலைவர்களாக டி. சீ. மூர்த்தி, பி ராஜேந்திரன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ். ஸ்ரீகாந்த், ஆர். சுப்பிரமணியம், கே. பாலசுப்பிரமணியம், ஆர். எஸ். எஸ். முரளி, டீ. சுவேந்திரராஜா, கே. உதயச்சந்திரன் ஆகியோரும் கணக்காளராக என்.

முருகதாஸ¤ம் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குறையை போக்கும் வண்ணம் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயத் தலைவர் லயன் எம். கேசவராஜாவினால் பிரபல தொழிலதிபர் எஸ். சந்திரசேகர் தலைவராகவும் வர்த்தகரான டி. சி. மூர்த்தி பொருளாளராகவும் கொண்டு 1999 ஆம் ஆண்டு திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு 1999 வைகாசியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின்போது அஷ்ட லஷ்மிகள், நவதுர்க்கைகள், லக்ஷ்மி நாராயணன், உமையொருபாகன், வைரவப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பண்டிகைகள் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதற்கமைய இவ்வாலயத்தில் கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, தனலக்ஷ்மி, அருள் லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளினதும் வன துர்க்கை, ஆலனி துர்க்கை, ஜாத வேதோ துர்க்கை, சாந்தி, துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வலத் துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆஸ¤ர துர்க்கை என நவ துர்க்கைகளினதும் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கதிரவனின் ஒளிக் கதிர்கள் கோபுர கலசத்தின் ஊடாகக் கர்ப்பக் கிரகத்திற்கு ஊடுருவிப் பாயும் வண்ணம் கோபுரத்தை அண்டியுள்ள முகட்டுப் பகுதி திறந்தவெளியாக்கப்பட்டது. அடியார்களின் உள்ளத்து உணர்வுகளை அம்பாள் ஈர்த்து உணர்ந்து கொள்ள இலகுவாகும் வண்ணமும் அம்பாளின் அருளை அடியார்கள் உவந்து பெற்றுக்கொள்ள இலகுவாகவும் ஆலய வாயிலிருந்து கர்ப்பக்கிரகம் வரை குளுகுளுவென குளுமையூட்டக் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டன.

ஆலயம் முழுவதும் தெய்வீகக் கலை வண்ணம் மிளிரும் வகையில் ஆலய முகட்டில் தாமரை மலர்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருப்பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதால் கடந்த 2011.11.14ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டு தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 2012.04.06ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இத்திருப்பணிகளை மேற்கொள்ளவும் கும்பாபிஷேகம் நடத்தவும் 30 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்படவுள்ளதால் இத்திருப்பணிகளுக்கு பக்தர்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மாத்தளை மாரியம்மனின் மாசிமக தேர்த்திருவிழா

இலங்கையின் மத்திய மாகாண கண்டி இராஜதானியிலிருந்து 16 வது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது மாத்தளை வடக்கையும், மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகரம் விளங்கி வந்திருக்கின்றது.

மாத்தளை எனும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பெருந்தொகையானவர்கள் மாத்தளையில் குடியமர்த்தப்பட்டமையால் “மஹாதலயக்’ (பெருங்கூட்டத்தவர்) எனும் பொருள்பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதே போன்று பண்டுகாபய மன்னனின் மாமன் (மாதுல) கிரிகண்ட சிவ இளவரசன் இப்பகுதியில் வசித்து வந்தமையால் ‘மாத்தளை எனும் பெயர் தோன்றியதாகவும் “சூள வம்சம் எனும் சிங்கள காவியத்தில் இப் பிரதேசம் ‘ஹாதிபேதேச’ என குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப் பேதங்கள் மருவி காலப் போக்கில் “மாத்தளை” எனும் பெயர் தோன்றியதாகவும் வரலாற்று ஏட்டுச் சுவடுகள் சான்று பகர்கின்றன.

ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்டனர் “தலைமன்னார்” “அரிப்பு” இறங்கு துறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையிலும் குடியேறினர்.

எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீமுத்து மாரியம்பிக்கையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்பவரின் கனவில் தோன்றி தன் திரு உருவகத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வமரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக்கதைகளும், ஏடுகளும் சான்றி பகர்கின்றன.

1995 ஆண்டளவில் க. குமாரசாமியார் இவ்வாலயத்தின் தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது.

ஆகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்ட்டை செய்து, மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் என்பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாக வும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும், 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு, மாதம் 5ம் திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டியதை மறக்க முடியாது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812