வெள்ளி, 31 மே, 2019

ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்டு அமைவதே வாழ்க்கை

‘நாவாய் (ஓடம்) காற்றை நம்பியே செல்லும். அது போலவே வாழ்க்கையானது ஊழ்வினையை அடிப்படையாக் கொண்டே அமையும். மேலும் மனத்தூய்மை என்பது, எவ்விதத் தீமையும் நினைக்காத தூய சிந்தனையுடைய புத்த பிரானை நாளும் நினைவில் நிறுத்துவதே’ ஆகும். இதனை உணர்த்தும் பாடல் பின்வருமாறு:

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவும் எல்லாம்

குண்டலகேசி

ஓம் நமசிவாய



களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தில் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது குருகுல மாணவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பதை காணலாம்

விரதமிருந்து சிவனை வழிபட்டால் பயன் சிறக்கும்





சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ஆதரவுக் கரம் கூடுதலாக இருக்கும். செல்வ வளம் பெருகி வாழலாம். செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.

பெண்களுக்கு ஒன்பது நாள் “நவராத்திரி”. ஆண்களுக்கு ஒரு நாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வந்தார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை ‘விஜயதசமி’ என்றும் கொண்டாடினர்.

ஆண்கள் பொருள் தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம் தான் ஒதுக்க இயலும். எனவே வருடத்தில் ஒருநாள் சிவனை நினைத்து வழிபட்டு, வருடம் முழுவதும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பதால் ‘சிவராத்திரி’யைத் தேர்ந்தெடுத்தனர்.

மாலை 6 மணிக்கு விநாயகப் பெருமானை வணங்கி, அதன்பிறகு சிவனை வணங்கத் தொடங்கி, இயன்ற அளவு ஒரே ஆலயத்தில் ஆறுகால பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று ஒவ்வொரு சிவாலயத்திலும் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வரலாம். அங்ஙனம் வழிபடச் செல்லும் பொழுது நந்தீஸ்வரரை வணங்கி உத்தரவு கேட்டு, பிறகு சிவனையும், உமையவளையும் வழிபட வேண்டும். தொடர்ந்து பரிவார தெய்வங்களை வழிபட்டு, இறுதியில் சண்டிகேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.


உமாதேவி தன் திருக்கரங்களால், விளையாட்டாக சிவபெருமான் கண்களை மூடினார். இதனால் உலகமே இருள்மயமானது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்க சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாக கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் ஈசனை அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும், யோகங்கள் சேரும், செல்வ வளம் பெருகும், புகழ்பெறும் வாய்ப்பு உருவாகும். இன்னல்கள் விலகி இனிய பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக்கொள்ள இயலும்.

சிவராத்திரியன்று விரதம் இருந்து மகாவிஷ்ணு சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கிறது. பிரம்மதேவன் சரஸ்வதியை அடைந்ததும் இந்த நாளில் தான் என்பார்கள். எனவே கல்வி விருத்தி, செல்வ விருத்தி பெற்று வெற்றிக் கொடி நாட்ட விரும்புபவர்கள், இந்த விரதத்தை மேற்கொண்டால் வெற்றி மீது வெற்றி காண இயலும்.

பஞ்சாங்கம்



வாக்கியம் என்பது
இப்படித்தான் எதிர்காலம் இருக்கும் என்று முனிவர்களால் அறுதியிட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும் சாஸ்திரம் எது?
வாக்கியம்

நடப்புக் காலத்தில் சூரியன் உதயமாவது, சந்திரன் உதயமாவது, பூமியின் சுழற்சி, நட்சத்திரங்களின் நிலை ஆகியவற்றை அதாவது கண்ணுக்குத் தெரிவதை வைத்து அப்போதைக்கப்போது காலத்தைக் கணிக்கும் சாஸ்திரம் எது? திருக்கணிதம்

த்ருக்+கணிதம் என்பதில் "த்ருக்' என்றால் என்ன?
"நேரில் காண்பது'.

"கணிதம்' என்றால் என்ன? கணிப்பது.

இந்த "த்ருக்கணிதம்' என்ற சொல்ல மருவி என்னவானது? திருக்கணிதமாயிற்று.

சூரியனும் சந்திரனும் நேர் எதிர் கோட்டில் சஞ்சரித்தால் வருவது என்ன? பௌர்ணமி

இருவரும் ஒன்றிணைந்தால் வருவது என்ன?
அமாவாசை

இவர்களின் சுற்றுப்பாதையில் இடையில் வேறு கிரகங்கள்- உதாரணமாக பூமி குறுக்கிட்டு அதன் நிழல் சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் பொழுது ஏற்படுவது என்ன?
கிரகணம்

நேரில் கண்டு கணிக்க வேண்டும் என்பதனால் அந்த பஞ்சாங்கத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன? "த்ருக்-கணிதம்'

நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சஞ்சாரங்கள் வாக்கியத்தில் உள்ளதிற்கு ஒரு சில வினாடிகள் மாறுபடுவதாக ஆராய்ந்து அப்போதைக்கு அப்போது தெரியும் நட்சத்திர கிரக நிலைகளைக் கொண்டு கணித்துக் கூறுவது என்ன பஞ்சாங்கம்?
வாக்கிய பஞ்சாங்கம்

இரு பஞ்சாங்கங்களையும் பொறுத்த வரையிலும் உள்ள வேறுபாடுகள் என்ன?
நட்சத்திர நிர்ணயங்களிலும் விசேஷ தினங்கள் நிர்ணயங்களிலும் ஒரு சில மாறுபாடுகள் வருகிறதே தவிர மற்றயபடி அமாவாசை, கிரகணம் போன்றவற்றில் ஒற்றுமையே காணப்படுகிறது.


புனரபி என்பது என்ன?
நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கின்றனர்.

இதனை புனரபி என்று கூறியவர் யார்? சங்கரர்.

புனரபி என்பதற்கு என்ன பொருள்? "மீண்டும்







ஞாயிறு, 19 மே, 2019

தண்ணீர் அருமருந்து



சாதாரணமாக தாகம் எனும் நாவரட்சி ஏற்படும் போதோ அல்லது மயக்கம், விக்கல், களைப்பு போன்றவற்றிற்குத் தண்ணீர் உடனடி, நிவாரணமாக உயிர் காக்கும் அருமருந்தாகும்.

பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.


தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற  கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. 

மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். 

தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். 

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, 

அலைபாயும் மனம் அமைதியடைகிறது, 

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,
நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது,
 மூச்சு விடும் விகிதம் குறைகிறது. 

ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,
உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

 பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.

www.ciniminii.blogspot.com

www.ciniminii.blogspot.com

Thinakaran 20-05-2019


Thinakaran 13-05-2019






கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம சுவாமி
ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பெருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அபிஷேக ஆராதனையும் சுவாமி வெளி வீதி உலா வருவதலும் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

நமசிவாய




சைவசமய மந்திரங்களுள் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் எது?
மசிவாய மந்திரம்


நமசிவாய என்றால் என்ன?
“சிவனுக்கு வணக்கம்” என்று பொருள்


இம்மந்திரம் எந்த வேதத்தில் உள்ளது?
யஜுர் வேதத்தில்



யஜுர் வேதத்தில் எந்த பகுதியில் காணப்படுகிறது?

சிவபெருமானைப் போற்றும் புகழ்பெற்ற ஸ்ரீருத்திர மந்திரப் பகுதியில் காணப்படுகிறது.



இதனை என்னவென்று அழைப்பார்கள்?
பஞ்சாட்சரம்



இதனை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
ஐந்தெழுத்து மந்திரம்



இம்மந்திரமத்தை வாயால் அல்லது மனதால் பலதடவை செபிக்கப்படுவதால் என்ன நடக்கும்?
நீக்கமற எங்கும் நிறைந்து முடிவற்றிருக்கும் சிவபெருமான் மீது மனம் ஒருநிலைப்படும்.

மந்திரங்களை கையாளும் முறை யாது?
அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும் குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.

முதலில் குறைந்தது எத்தனை முறை உச்சரிக்க வேண்டும்?
108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது என்ன நடக்கும்?
அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எத்தனை முறை உச்சாிக்க வேண்டும்?
எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

தத்புருஷ மந்திரத்தின் மூல மந்திரம் எது?
'நமசிவாய'

இதை விடாது உச்சரிக்க என்ன ஏற்படும்?
உச்சாடணம் ஏற்படும்.

தத்புருஷத்தில் கருவூரார் எத்தனை மந்திரங்களைச் சொல்கிறார்?
25 மந்திரங்களைச் சொல்கிறார்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க என்ன நடக்ம் என்று அவர் கூஷகிறார்? குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க என்ன நடக்கும்?
மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் யாரை வெல்லலாம்?
காலனை வெல்லலாம்.

அகோர மந்திரத்தின் மூல மந்திரம் எது?
"நமசிவ","சங் கங் சிவாயநமா"

இதனை உச்சரிக்க என்ன நடக்கும்?
ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் என்ன நடக்கும்?
உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.










நமசிவாய



மந்திரங்களை கையாளும் முறை யாது?
அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும் குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.

முதலில் குறைந்தது எத்தனை முறை உச்சரிக்க வேண்டும்?
108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது என்ன நடக்கும்?
அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எத்தனை முறை உச்சாிக்க வேண்டும்?
எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

தத்புருஷ மந்திரத்தின் மூல மந்திரம் எது?
'நமசிவாய'

இதை விடாது உச்சரிக்க என்ன ஏற்படும்?
உச்சாடணம் ஏற்படும்.

தத்புருஷத்தில் கருவூரார் எத்தனை மந்திரங்களைச் சொல்கிறார்?
25 மந்திரங்களைச் சொல்கிறார்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க என்ன நடக்ம் என்று அவர் கூஷகிறார்? குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க என்ன நடக்கும்?
மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் யாரை வெல்லலாம்?
காலனை வெல்லலாம்.

அகோர மந்திரத்தின் மூல மந்திரம் எது?
"நமசிவ","சங் கங் சிவாயநமா"

இதனை உச்சரிக்க என்ன நடக்கும்?
ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் என்ன நடக்கும்?
உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.





புதன், 15 மே, 2019

தவறில்லாத தமிழை தருவோம்


தனி எழுத்தும் ( குற்றெழுத்து) அதனுடன் இணைந்து “ஆ” என்ற ஓசையுடன்  முடிகிற வார்த்தையின் பின்னால் ஒற்று மிகும்.

அதாவது ஒரு தனி எழுத்தும் ஆ என்கிற ஓசையுள்ள எழுத்தும் கொண்ட வார்த்தை முதலில் வந்து, அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இரண்டுக்கும் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : கனாக்கண்டேன், ( கனா + கண்டேன்) சுறாத்தலை ( சுறா + தலை) நிலாப்பயணம் ( நிலா + பயணம்)

தவறற்ற தமிழ்



“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். ”
அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து,  இரண்டாம்  வார்த்தை  க, ச, த, ப  ஆகிய வல்லின எழுத்துக்களில்  ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள் :
பூ+பறித்தாள் – பூப்பறித்தாள்
தீ+ பிடித்தது – தீப்பிடித்தது
கை+ குழந்தை – கைக்குழந்தை

தவறற்ற தமிழ்


”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற எண்களுக்கு மிகாது.

அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், பத்துச்செய்யுள்கள்.

தவறின்றி தமிழ் உரைப்போம்


தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்னால் ஒற்று மிகும்

அதாவது முதல் வார்த்தை தமிழ் மாதங்களின் பெயராய் இருந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : தைப் பொங்கல், ஆடிப் பட்டம், மார்கழித் திங்கள்

இது தவறின்றி தமிழ் எழுதும் தளம்





’அ’ அல்லது ‘இ’ ன்னு முடியற வார்த்தைக்குப் பின்னால ஒற்று மிகும்.
உதாரணம் – தேடிப் போனார், மெல்லச் சொன்னார், தேடிச் சென்றார், வாடிப் போயிற்று.
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘அ’ அல்லது ‘இ’ சவுண்டோட முடிஞ்சி அதுக்குப் பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று மிகும்.
இதுல கவனிச்சீங்கன்னா ரெண்டாவது வார்த்தை எல்லாம் போனார், சொன்னார், சென்றார், போயிற்று அப்பிடின்னு எல்லாம் வினைச் சொல்லா (Verb) இருக்கு.
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் தேடி, மெல்ல, வாடி அப்படின்னு பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதெல்லாம் Dependent Verb- அது பேரு ”வினை எச்சம்.”
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘அ’ அல்லது ‘இ’ என்ற ஓசையோடு முடிகிற வினை எச்சத்தின் (அகர இகர ஈற்று வினையெச்சம்) பின்னால் ஒற்று மிகும்.

தவறின்றி தமிழ் எழுத கற்றுக் கொள்ளுங்கள்

 உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ)


பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட சொற்களுக்கு  ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ என்று  பேரு.

இங்கே இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால்  க், ச் த், ப், ஆகிய ஒற்று மிகும்.

இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள்


அகத்தியமுனிவர்


அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூலை முதன்முதலில் தந்தவர் அகத்தியமுனிவர். தமிழ் மொழியின் முச்சங்க வரலாற்றில் தலைச் சங்க புலவர்களின் தலைவராக போற்றப்படுகிறார்.

மூதூர், கட்டைபறிச்சான், சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப் பொங்கல் விழா





மூதூர், கட்டைபறிச்சான் - வடக்கு, சேனையூர் அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தின் வைகாசிப் பொங்கல் பெருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.52 மணிக்கு ஆலயத்தில் நடைபெறும் ஆரம்பப் பூசையைத் தொடர்ந்து நடைபெறும்.
இங்கு நடைபெறும் ஆரம்பப் பூசையுடன் பாரம்பாரிய முறைப்படி மடைப்பெட்டி தூக்கி வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த மடைப்பெட்டி ஊர்வலம் சேனையூர் அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி கையேற்கப்படும்.

அதனைத் தொடர்ந்து பொங்கல் பெருவிழா ஆரம்பமாவதுடன் அபிஷேக ஆராதனை, நேர்கடன் பூசைப் பொருட்கள் கையேற்றல் இடம்பெறும். பக்தர்களின் நலன்கருதி காவடி, அடையாளப் பொருட்கள் என்பன வாடகைக்கு விடப்படுவதுடன் நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால் பழப் பூசை, சிவலிங்க நாக தம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்த்தல், கூட்டு வழிபாடு, நற்சிந்தனை வழங்கல் என்பன இடம்பெறும். நிறைவாக விஷேட தீபாராதனைகளுடன் பூசை நடத்தப்பட்டு ஸ்ரீ மகா விஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திரு உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும். இவ்விழாவையொட்டி வழமைபோல் ஆலயத்தில் இவ்வருடமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலயத்தின் பொருளாளர் வ. மோகனதாஸ் தெரிவித்தார்.

இவ்வாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி மூதூரில் இருந்து ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் வரை விஷேட் பஸ் சேவைகள் நடத்தப்படும் என ஆலயத்தின் செயலாளர் த. குணராசா தெரிவித்தார். பூசை கிரியைகளை ஆலய பிரதம குருவாகிய சோதிடர், கலாபூஷணம் சிவஸ்ரீ அ. அரசரெத்தினம் நடத்துவார். சாமஸ்ரீ கலாஜோதி அ. அச்சுதன், (பிரதிகுரு), பொ. சுந்தரமுர்த்தி (உதவி குரு), வி. டீபக்கிருஸ்ணன் (உதவி குரு), சிவஸ்ரீ கி. வீரபத்திரன் (மேலதிக உதவிகுரு), க. சிவஞானம் (மணியகாரர்) ஆகியோர் பூஜைகள் சிறப்புற நடத்த உதவிவார்கள் என ஆலய தலைவர் செ. நவரட்ணராஜா தெரிவித்தார்.



கல்வி அழகே அழகு

வாழ்க்கையின் எளிமையான  விடயங்களை  உவமானங்களாகக்  கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
 
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
 
 

பிரச்சாரம் பிரசாரம் எது சரி

பிரச்சாரம், பிரசாரம் என்பதிரண்டும் வடமொழியே. இதற்குரிய தமிழ் சொல் பரப்புரை என்பதே ஆகும்.

திங்கள், 13 மே, 2019

சுயேட்சை - சுயேச்சை


சுய விருப்பத்தில்- அதாவது சுயமான இச்சையின் பேரில் மேற்கொள்ளப்படுவதால் சுயேச்சை என்பதே சரியான பதமாகும். 

x
x

சுயேட்சை - சுயேச்சை இதில் எது சரி?




ஞாயிறு, 12 மே, 2019

குலதெய்வமாகிய திரௌபதி



பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரௌபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில் தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில் சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரௌபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரௌபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரௌபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.


சிவாயநம




சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என யார் குறிப்பிட்டுள்ளார்?
சிவவாக்கியர்



இம்மந்திரம் எதனை அளிக்கவல்லது?

இம்மை-மறுமைப் பயன்களை அளிக்கவல்லது.

இம் மந்திரத்தை தவமிருந்து பெற்றவர் யார்?

மாணிக்கவாசகப் பெருமாள்
இம்மந்திரம் வேறு என்ன ஆற்றலை அளிக்கவல்லது? உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது.
நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்து எந்த பஞ்சாட்சரத் திருமேனி? சூக்கும பஞ்சாசரத் திருமேனி.



சிவாயநம என்பதில் சி- என்னது?
உடுக்கை ஏந்திய வலக்கரம்.
வா – என்னது ? தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்.
ய – என்பது என்ன? அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
ய – என்பது என்ன? அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
ந – என்பது என்ன? அனலேந்திய இடக்கரம்.
ம – என்பது என்ன? முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.
இந்த ஞானம் திருநடனம் யாருக்காக நிகழ்த்தப்படுகிறது?

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது.



ஞான மார்க்கத்தின் எத்தனையாம் படி?

இரண்டாவது படி இது.







து உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால்இம்மந்திரத்தை என்னவென்று அழைப்பர்?
இதய மாணிக்க மந்திரம் என்று



உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் பெறும் நன்மை என்ன? இவ்வுடம்போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.
மகா காரண பஞ்சாட்சரம் எது? சிவசிவ


ய கரமாகிய உயிர் எதற்குள் ஒடுங்கியுள்ளது? சிவசக்திக்குள்ளே


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே
என இம்மந்திரத்தின் மகிமையை சிறப்பித்துக் கூறியவர் யார்? திருமூலர்



சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் பெறும் நன்மை என்ன? சிவனும் தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.


















கண்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரா் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது கும்பங்கள் ஏந்தி உள் வீதி வருவதையும் சிவாச்சாரியர் தலைமையில் விஷேட வழிபாடு நடைபெறுவதையும் நாதஸ்வர வாத்திய குழுவினர் மேளம் இசைப்பாதையும் கலந்து கொண்ட சில பக்தர்களையும் படத்தில் காணலாம்.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்!
தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள். அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.







ஞாயிறு, 5 மே, 2019

Banana

வாழைமரம்





 

அறிவியல்ரீதியாக பார்த்தால் வாழைமரம் மரமே அல்ல, ஆனால் அதன் பலன்கள் மற்றும் அமைப்பிற்காக அது மரமாக கருதப்படுகிறது. வாழை மரம் அது வழங்கும் அற்புத பலன்களால் மிகவும் புனிதமான மரமாக கருதப்படுகிறது. வாழை மரமோ அல்லது வாழை இலைகளோ இல்லாத விசேஷங்களை பார்க்கவே முடியாது.

பழங்கால வேத நூல்களின் படி வாழை மரம் என்பது தேவர்களின் குருவான பிரஜாபதியை பிரதிபலிப்பதாகும். மேலும் இது குருவின் அருளை பெற்றுத்தரக்கூடியதாகும். குருவின் பிரதிபலிப்பாகவும் வாழைமரம் வேதங்களில் கூறப்படுகிறது.

இலைகளிலேயே மிகவும் புனிதமான இலையாக வாழை இலை கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து சடங்குகளிலும் வாழை இலையில் கடவுளுக்கு படையல் வைக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் வாழைப்பழம் ஆற்றலின் உறைவிடமாகும், அதனால்தான் அது முக்கனிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இது அனைவரும் வாங்கக்கூடிய விலையில்தான் இருக்கிறது.


Meditation



தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும். இதற்கு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்களே ஆகும். முதல் கட்ட தியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் பழகுவதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள். காலை மாலை என எப்பொழுதும் தனிமையில் செய்யுங்கள். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பித்தால் மிகவும் நன்று. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர்மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

Lanuage

மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும்.

Saiva Manjari - Thinakaran Monday



panvila Sri Muthumariamman kovil




சுமார் 150 வருட பழைமை வாய்ந்த
பன்விலை தவலந்தென்ன ஹாகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா உற்சவம் கடந்த 19 ஆம் திகதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, முகூர்த்தக் கால் நடுதல், கரகம் பாலித்தல் என்பவற்றுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
பலியிடல், கரகம் பாலித்தல், மதிப்பெடுத்தல், கும்
மியடித்தல், கோலாட்டம் உடுக்கிசை போன்ற பழைமை அம்சங்கள் பலவும் இவ்வாலயத்தில் விரவிக் கிடக்க காணலாம்
பாற்குட பவனி, தேர் பவனி, பறவைக் காவடி ஊர்வலம் என்பவற்றைப் படங்களில் காணலாம்



பஞ்சாட்சர மந்திரம்



நமசிவாய என்பதற்கு என்ன பொருள்?
சிவனை வணங்குகிறேன் என்பது பொருள்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை எவை?
திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள்.

இவற்றில் புறச்சாதனங்கள் எவை?
திருநீறும் ருத்திராட்சமும்

அகச்சாதனம் எது? திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாட்சரம்.

உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும் மந்திரம் எது?
அகச்சாதன மந்திரம்.

மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது எது? பஞ்சாட்சர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது என்ன மந்திரம்?
பஞ்சாட்சர மந்திரமே.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6ஆவது திருமுறைகள் யார் அருளியவை?

அப்பர் அருளியவை

ஐந்தாவது திருமுறையின் அதன் நடுவில் இடம்பெற்றிருப்பது என்ன திருப்பதிகம்? திருப்பாலைத்துறை
திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
11 பாடல்கள்


சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுவது எதில்?
4, 5, 6ஆவது திருமுறைகளில் நடுவான 5வது திருமுறையில் ஆறாவது பாடலில் ஆகும்.

ஓம் எனும் பிரணவத்தின் விரிவு எது?
சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும்.

இந்த பிரணவ மந்திரத்தின் ஒலியிலிருந்து தோன்றியவை எவை?
அண்ட சராசரங்கள்

அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது எது?
பஞ்சாட்சர மந்திரமே.

உயிர்கள் என்று துன்புற்றனவோ அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக எதை அருளினார்? திருவைந்தெழுத்தை


பஞ்சாட்சர மந்திரத்தின் வகைகள் எத்தனை? ஐந்து


பஞ்சாட்சர மந்திரத்தின் ஐந்து வகைகளும் எவை?
துால பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம், மகாமனு பஞ்சாட்சரம்


தூல பஞ்சாட்சரம் எது? நமசிவாய

சூக்கும பஞ்சாட்சரம் எது? சிவாயநம

காரண பஞ்சாட்சரம் எது? சிவய சிவ

மகாகாரண பஞ்சாட்சரம் எது? சிவ.

மகாமனு பஞ்சாட்சரம் எது? சி.

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து யாருடைய முதல் திருமேனி?
சிவபெருமானின் முதல் திருமேனி.

மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி என்பது எது? ந

திருஉந்தி என்பது எது? ம

திருத்தோள்கள் என்பது எது? சி

திருமுகம் என்பது எது? வா
திருமுடி என்பது எது? ய

இத்தூல மந்திரம் மூலம் கிடைக்கும் நன்மை என்ன?
உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது.


இது எதன் முதல் படி?
ஞானமார்க்கத்தின் முதல் படி


இம்மந்திரத்தை போற்றி ஜெபித்தவர்கள் யார்?

ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்








புதன், 1 மே, 2019

அறநெறி அறிவு நொடி

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம

சைவ சமயிகள் யார்? உமை, விநாயகர், முருகன் ஆகிய திருவுருவங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் பொருளாகவும் வழிபாடு செய்பவர்கள்.

தீர்த்தம் எதனைக் குறிக்கும்? இறைவனுடைய திருவருளே தீர்த்தம். இது மும்மலம் நீக்கும். தீர்த்தத்தைப் பருகுவதன் வழி இறையாற்றல் நம் உடலினுள் சென்று கலக்கிறது.

சமயம் என்றால் என்ன? வழி, நெறி என்று பொருள்.

ஏன் கோயில் வாசலில் குனிந்து, படியைத் தொட்டு வணங்கி உள்ளே செல்கிறோம்? குனிந்து செல்வது பணிவைக் குறிக்கும். அப்போது நமது மனத்திலுள்ள அகங்காரமும், ஆணவமும் சற்று குறையத் தொடங்கும். எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன் கோயிலினுள் இருப்பதால்,வாயிற் படியை வணங்குகின்றோம். இறைவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நுழையக் கூடாது.

கற்பூர தீபம் எதனைக் குறிக்கிறது? ஏன் கண்களில் தொட்டு ஒற்றிக் கொள்கிறோம்? இறைவனுடைய அருள் ஒளி வடிவமாக நம்மிடம் வருவதைக் கற்பூர தீபம் குறிக்கிறது. அதனைத் தொட்டு கண்களில் ஒற்றி கொள்ளும் பொழுது, இறையாற்றல் நம் கண்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது.

இரு கைகளையும் குவித்து வணக்கம் செய்கிறோம். இதற்கு ஏதாவது தத்துவ பிண்ணனி உண்டா? சைவர்கள் / தமிழர்கள் இவ்வாறு பெரியோர்களைப் பார்த்தும் ஆலயங்களிலும் செய்வது ஏன்? ‘வணக்கம்’ கூறி ஒருவரை வணங்குதல் என்பது அவருடைய உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை வணங்குதல் ஆகும். வணக்கம் மூவகை படும் அவை வருமாறு:-
i. தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது இறைவனுக்கு மட்டுமே செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
ii. புருவ மத்தியில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது குருவிற்கு செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
iii. நெஞ்சில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் - நம் வயதை ஒத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.

சைவர்கள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் யாவை? பன்னிரு திருமுறைகள்

இறைவன் செய்த எட்டு (8) வீரச் செயல்களை என்னவென்று அழைப்போம்? அட்ட வீரட்டானம்

சிவபுராணத்தில் 'கல்லாய் மனிதராய் பேயாய்' என்று வருகிறது. புல் முதலிய பல பிறவிகள் பற்றிக் கூறும் மணிவாசகர், 'கல்லாய்' என்றும் சொல்கிறார், 'கல்' பிறப்பா? ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.





கண்களை திறந்தபடி தியானம் செய்வது எப்படி?




பொதுவாக தியானத்தை இரண்டு வழிகளின் செய்யலாம். ஒன்று கண்களை மூடிக்கொண்டு செய்வது இன்னொன்று கண்களை திறந்து கொண்டு செய்வது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. ஆனால் கண்களை திறந்துகொண்டு எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பார்ப்போம்.

வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, அந்த அறையில், நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கை வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளக்கோ வைத்து. அதில் திரி போட்டு பின் நல்லெண்ணெயோ அல்லது தேங்காய் நல்லெண்ணெயோ ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்மால் எவ்வளவு நேரம் தொடந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். விளக்கில் இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும்.

இதனால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்பாடு. இதை நாம் தொடர்ந்து செய்தால் நமக்குள் ஒரு பேராற்றல் வெளிப்படும். நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும். இந்த வகையான தியானத்தை செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. நமக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். இதை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையை புரிந்து நாமே இதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விடுவோம்.


திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812