திங்கள், 25 மார்ச், 2013

திருபாற் கடல்

கே.ஈஸ்வரலிங்கம் 9924) அமுதம் எடுக்க திருப்பாற் கடலை கடைந்தவர்கள் யார்? அறுபத்தாறு முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் 9925) இவர்கள் திருபாற் கடலை கடைய மத்தாக எடுத்தது எதனை? மந்திரமலையை 9926) கயிறாக எடுத்தது எதனை? பாம்பை 9927) அந்த பாம்பின் பெயர் என்ன? வாசுகி 9928) பாம்பு, மத்து இவற்றுடன் வேறு என்ன போட்டார்கள்? மூலிகைகளை 9929) இவர்கள் திருபாற்கடலை எப்போது கடைய ஆரம்பித்தார்கள்? கார்த்திகை மாத ஏகாதசி திதியில் 9930) இவர்கள் என்னென்ன மந்திரங்களைச் சொல்லி பாற்கடலை கடைந்தார்கள்? மகாலக்சுமி மந்திரமலை ஸ்ரீசுக்தம், ஸ்ரீமந்திரம் 9931) இவர்கள் பாற்கடலை கடைந்த போது என்ன நடந்தது? மந்திரமலை கடலிலே மூழ்கிச் சென்றது. 9932) மந்திரமலை கடலில் மூழ்கிச் செல்வதைக் கண்ட திருமால் என்ன செய்தார்? ஆமை உருவமாக மாறி அந்த மந்திர மலையை தாங்கினார். 9933) தேவர்களும் அசுரர்களும் மாறி மாறி இழுத்ததால் வாசுகிக்கு வலி பொறுக்க முடியாமல் என்ன நடந்தது? விஷத்தைக் கக்கியது. 9934) வாசுகி விஷத்தை கக்கியதும் என்ன நடந்தது? கடலிலே ஆலகால விஷம் தோன்றியது 9935) அந்த ஆலகால விஷம் என்ன செய்தது? அனைவரையும் தாக்கியது 9936) அந்த விஷத்தினால் தாக்கப்பட்ட அசுரர்களுக்கு என்ன நடந்தது? உடல் கறுப்பாகி மாறியது 9937) அதனை தாங்க முடியாத தேவர்கள் என்ன செய்தார்கள்? சிவபெருமானை வேண்டினார்கள். 9938) சிவபெருமான் என்ன செய்தார்? சுந்தரரை அழைத்து அந்த விஷத்தை எடுத்து வரும்படி கூறினார். 9939) சுந்தரர் அந்த விஷத்தை எடுத்து வந்ததால் அவருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? ஆலகால சுந்தரர் 9940) சுந்தர் எடுத்து வந்த விஷத்தை சிவபெருமான் என்ன செய்தார்? உண்டார் 9941) சிவபெருமான் அந்த விஷத்தை உண்டது எப்போது? சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் மாலை 4.30 - 6.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் 9942) சிவபெருமான் விஷத்தை உண்டதை கண்ட பார்வதி என்ன செய்தார்? அதனை கண்டத்திலே நிறுத்தினார். 9943) இவர் இவ்வாறு கண்டத்திலே நிறுத்தியதால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? நீலகண்டேஸ்வரர். 9944) மீண்டும் திருப்பாற்கடலை கடைந்த போது என்ன வந்தது? காமதேனு 9945) அந்த காமதேனுவை யார் எடுத்துக் கொண்டது யார்? வசிட்டர் முனிவர் இதில் தோன்றிய வெள்ளைகுதிரையை யார் எடுத்துக்கொண்டது? சப்த சிரேஷ்சிலியில் ஒருவரான அசுர தலைவன் மகாவலி 9946)4 கொம்புகளுடன் என்ன தோன்றியது சிவப்பு மணி 9947)சிவப்பு மணியை யார் எடுத்தார்? மகாவிஷ்ணு எடுத்து மார்பிலே பத்திரமாக அணிந்து கொண்டார்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

கொழும்பு மாநகரிலே பொரளைக்கு அண்மித்ததாக கொழும்பு 7இல் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்பு டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி ஒரு கனிஷ்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதலாம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரைதான் வகுப்புக்கள் இருந்தன. இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது 120 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் மட்டுமே இருந்தனர். அதில் 28 பிள்ளைகள் தமிழ் மொழி மூல பிள்ளைகளும், ஒரேயொரு தமிழ் ஆசிரியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது ஆசிரியராகக் கடமையாற்றிய ஒரேயொரு தமிழ் ஆசிரியர் சி. தாமோதரம்பிள்ளை என்பவராவார். காலப்போக்கில் இவர் தமிழ்ப் பிரிவின் தலைமை ஆசரியராக கடமையாற்றினார். இவரது தலைமையில் 1969 ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக இயங்கிக்கொண்டிருந்த பாடசாலையில் காலப்போக்கில் (க. பொ. த. சா.தரம்) 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற தரமுயர்த்தப் பட்டதுடன் அதன் பின் உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறும் வண்ணம் தரமுயர்த்தப்பட்டது. ஆர். ஐ. டீ. அலஸ் அதிபராக இருந்தபோது 1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலுள்ள நான்கு மதங்களுக்குமுரிய வணக்கஸ்தலங்கள் அமைக்க வேண்டுமென பேசப்பட்டது. இவ்வாறாகப் பேசப்பட்டு 1990 ஆம் 91 ஆம் ஆண்டுகளில் நான்கு மாதங்களையும் சேர்ந்த வணக்கஸ்தலங்களும் அமைக்கப்பட்டதுடன் 1992 ஆம் ஆண்டு இங்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதிஷ்ட கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் ஆலயத்தில் வர்ணப் பூச்சு வேலைகளைச் செய்து முதலாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க தனது தந்தையின் திருநாமத்தால் ஒரு பாடசாலையை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த டி. எஸ். சேனநாயக்க கல்லூரியை ஸ்தாபித்தார். 1969 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தாமோதரம்பிள்ளை தெரிவானது குறிப்பிடத்தக்கது. இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை அங்கு ஆசிரியராக கடமையாற்றினார். 1976 ஆம் ஆண்டு இவர் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இ. க. குலசேகரம் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1976 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களான திருமதி வேலய்யா, செல்வகுமார், இந்திரன் ஆகியோர் இந்தப் பாடசாலையில் இந்து மத வளர்ச்சிக்கும் ஆலய வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றியவர்களாவர். இவர்கள் கடமையாற்றிய பாலஸ்தாபனத்தின் போது அடிக்கல் நாட்டப்படுகிறது காலத்திலே யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலிருந்து தங்கம்மா அப்புக்குட்டி, புலவர் கீரன் போன்ற மதப் பெரியார்களை அழைத்துவந்து பிரசங்கங்கள் நடத்தப்பட்டன. செல்லையா இராஜதுரை, செளமியமூர்த்தி தொண்டமான், பி. பி. தேவராஜ். பெ. சந்திரசேகரன் ஆகிய அரசியல்வாதிகளையும் இந்தப் பாடசாலைக்கு அதிதிகளாக அழைத்து இந்து மதப் பணிக்கு ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அது மாத்திரமன்றி முன்பு சிவராத்திரி வருகின்ற போது இந்தப் பாடசாலை மாணவர்களை முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதர் தேவஸ்தானத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் கண் விழிக்க வைத்து விரதம் இருக்கச் செய்து மறுநாள் அழைத்து வருவதுமுண்டு என்று இந்தப் பாடசாலையின் பழைய மாணவரும் இந்தப் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய வருமான கணேசராஜா தெரிவித்தார். தற்பொழுது இந்தப் பாடசாலையின் அதிபராக டி. எம். டி. திசாநாயக்கவும், உப அதிபராக பரமேஸ்வரனும், உதவி அதிபராக திருமதி சிவபாலனும் கடமையாற்றிக் கொண்டிருப்பதுடன் இந்து மன்ற பொறுப்பாளராக ஆசிரியர் ஜெயரத்தினம் சேவையாற்றி வருகின்றனர். இப்பொழுது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் 18 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. தற்பொழுது சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலையும் புதிதாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அமைக்கப்பட்டதிலிருந்து ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு ஏற்ப பூஜை புனஸ்காரங்களை செய்யவும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விரதங்களுக்கு ஏற்ப பூஜைகளை செய்யவும் வழி அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களும், உப, உதவி அதிபர்களும் ஏனைய மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதற்கு மேலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். கே.ஈஸ்வரலிங்கம்

பங்குனி உத்திரம்

கே.ஈஸ்வரலிங்கம் (பங்குனி உத்திரம்) 9904) சிவனை கல்யாண சுந்தரமூர்த்தியாக நினைத்து விரதம் இருப்பது எந்த நாளில்? பங்குனி உத்திர நாளில் 9905) தேவர்களின் தலைவன் யார்? இந்திரன் 9906)இந்திரன் மணந்தது யாரை? இந்திராணியை 9907) இந்திரன் இந்திராணியை மணந்தது எந்த விரதம் அனுஷ்டித்து? பங்குனி உத்திரம் விரதம் அனுஷ்டித்து 9908) மகாலட்சுமி யாரை மணந்தார்? மகா விஷ்ணுவை 9909) மகா லட்சுமி மகா விஷ்ணுவை மணந்தது எந்த விரதம் அனுஷ்டித்து? பங்குனி உத்திர விரதம் அனுஷ்டித்து 9910) தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றது, பிரம்மா 9911) பிரம்மா எந்த விரதம் அனுஷ்டித்து நாவில் சரஸ்வதி இருக்கும் வரத்தை பெற்றார்? பங்குனி உத்திர 9912) சந்திரன் எத்தனை கன்னிகளை மனைவியாக அடைந்தார்? 27 கன்னிகளை 9913) சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்தது எந்த விரதத்தை கடைப்பிடித்து? பங்குனி உத்திர விரதம் 9914) இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது எந்த நன்னாளை? பங்குனி உத்திர நன்னாளை 9915) ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில் 9916) இவ்வாறு ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டது எந்த அம்மன்? காஞ்சி காமாட்சி அம்மன் 9917) ராமர் சீதையை மணந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9918) லட்சுமணனுக்கு திருமணம் நடந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9919) சத்ருகனின் திருமணம் நடந்தது எப்போது? பங்குனி உத்திரத்தில் 9920) காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்த நாள் எது? பங்குனி உத்திரத்தில் 9921) காவடி தூக்கும் பழக்கம் யார் மூலம் ஆரம்பிக்கப்பட்டது? இடும்பன் 9922) திருப்பரங்குன்றத்தில் நடந்தது யாருடைய திருமணம்? முருகன் பெருமானின் 9923) திருப்பரங்குன்றத்தில் முருகன் மணம் முடித்தது யாரை? தெய்வானையை.

திங்கள், 11 மார்ச், 2013

அம்பாள்

9871) அம்பாளுக்குரிய பெயர்களில் அம்மை என்ற தமிழ் நாமத்துக்குரிய வடமொழி திருநாமம் என்ன? அம்பா 9872) அழகம்மை என்ற திருநாமத்துக்குரிய வடமொழி பெயர் என்ன? சுந்தராம்பா 9873)இடவி என்ற திருநாமத்துக்குரிய வட மொழி பெயர் என்ன? வாமி 9874) உலகம்மை என்ற பெயருக்குரிய வட மொழி திருநாமம் என்ன? ஜகதாம்பா 9875) அகிலாண்டேஸ்வரி என்ற வட மொழி திருநாமத்துக்குரிய தமிழ் நாமம் என்ன? உலக முழுதுமுடையாள் 9876) மீனாட்V என்ற வடமொழி நாமத்துக்குரிய தமிழ் நாமம் என்ன? கயலக்கண்ணி 9877) காமக்கண்ணி என்ற தமிழ் மொழி திருநாமத்துக்குரிய வடமொழி நாமம் என்ன? காமாV 9878) விசாலாV என்ற வடமொழி பெயருக்குரிய தமிழ்மொழி நாமம் என்ன? தடங்கண்ணி 9879) நீலம்மை என்ற தமிழ் பெயருக்குரிய வடமொழி திருநாமம் என்ன? நீலாம்பா 9880) பார்வதி என்ற வடமொழி திருநாமத்துக்குரிய தமிழ் நாமம் என்ன? மலைமகள் 9881) வடிவுடையம்மன் என்ற தமிழ் நாமத்துக்குரிய வடமொழி நாமம் என்ன? காந்திமதி 9882) உண்ணாமுலையம்மன் என்ற தமிழ் திருநாமத்துரிய வடமொழித் திருநாமம் என்ன? அபித்தகுஜலாம்பாள் (அக்னி) 9883)அக்னி என்ற தமிழ் மொழி சொல்லுக்குரிய வடமொழிச் சொல் என்ன? நெருப்பு 9884)நெருப்புக்கு அதிபதி யார்? தேவநாகரி 9885) அக்னி தேவனின் துணை யார்? சுவாகாதேவி 9886) அக்னி தேவனின் வாகனம் எது? ஆடு 9887) தேவர்களின் புரோகிதராக விளங்கு பவர் யார்? அக்னி தேவன் 9888) அக்னி தேவன் தேவர்களின் புரோகிதர் என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? ரிக் வேதத்தில் 9889)அக்னி தேவனுக்கு எத்தனை உருவங்கள் உள்ளன? மூன்று 9890) அக்னி தேவனுக்குரிய மூன்ற உருவங்களையும் தருக. நெருப்பு, மின்னல், சூரியன் 9891) சூரியனின் ஆற்றலாக விளங்குபவன் யார்? அக்னி தேவன் 9892)வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர் யார்? அக்னி தேவன் 9893) நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக் கொள்பவர் யார்? அக்னி தேவன் 9894)வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு எடுத்து செல்பவர் யார்? அக்னி தேவன் 9895)அக்னி தேவன் எந்த வகையைச் சேர்ந்தவர்? தேவர் 9896) மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுபவர் யார்? அக்னி தேவன் 9897) அக்னிக்கு எத்தனை கைகள் உள்ளன? ஏழு 9898) எத்தனை தலைகள் உள்ளன? இரண்டு 9899) எத்தனை கால்கள் உள்ளன? மூன்று 9900)இவருடைய திருவாயிலிருந்து வெளிவருவது என்ன? நாக்கு 9901) இவருடைய திருவாயிலிருந்து நாக்கு எவ்வாறு வெளிவருகிறது? தீப்பிழம்பாக 9902)அக்னியின் நிறம் என்ன? சிவப்பு 9903)இவரது உடலில் இருந்து என்ன உதிக்கிறது? ஏழு வித ஒளிக்கிரணங்கள்

செவ்வாய், 5 மார்ச், 2013

(சிவனின் பெயர்கள்

கே.ஈஸ்வரலிங்கம் 9852) சிவனின் தமிழ்ப் பெயர்களைத் தருக? அடியார்க்கு நல்லான், அம்மையப்பன், உடையான், உலகுடையான், ஒருமாவன், கேடிலி, சொக்கன், தாயுமானவன், தான்தோன்றி, தூக்கிய திருவடியன், தென்முகநம்பி, புற்றிடங்கொண்டான், நடவரசன், பெருந்தேவன், பெருவுடையான், மாதொருபாகன், மணவழகன், வழித்துணையான். 9853) சிவனின் திருநாமத்தில் அடியா ருக்கு நல்லான் என்ற பெயருக்கு வடமொழி பெயர் என்ன? பக்தவத்சலன் 9854)அம்மையப்பன் என்ற தமிழ் சொல்லுக்கு உரிய வடமொழி சொல் என்ன? சாம்பசிவன் 9855) உடையான் என்ற பெயருக்குரிய வடமொழி பெயர் என்ன? ஈஸ்வரன் 9856) உலகுடையான் என்பதற் குரிய வடமொழி சொல் என்ன? ஜகதீஸ்வரன் 9857) ஒருமாவன் என்ற பதத்திற்குரிய வடமொழி பதம் என்ன? ஏகாம்பரன் 9858) கேடிலி என்பதற்குரிய வடமொழிச் சொல் என்ன? அட்சயன் 9859) சொக்கன் என்பதற்குரிய வடமொழிச் சொல் எது? சுந்தரன் 9860) மாத்ருபூதம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ் பதம் என்ன? தாயுமானவன் 9861) சுயம்பு என்பதற்குரிய தமிழ் பதம் என்ன? தான்தோன்றி 9862) குஞ்சிதபாதன் என்ற பதத்துக்குரிய தமிழ் பதம் என்ன? தூக்கியதிருவடியன் 9863) தென்முக நம்பி என்பது யாரை? தட்சிணாமூர்த்தியை 9864) புற்றிடங்கொண்டான் என்பதற்குரிய வடமொழி பதம் என்ன? வன்மீகநாதன் 9865) நடவரசன் என்பதற்குரிய வடமொழிச் சொல் என்ன? நடராஜன் 9866) பெருந்தேவன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? மகாதேவன் 9867) பெருவுடையான் என்பதற்குரிய வடமொழி பதம் என்ன? பிருகதீஸ்வரர் 9868) மாதொருபாகன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? அர்த்தநாரி 9869)மணவழகன் என்பதற்குரிய வடமொழி நாமம் என்ன? கலியாண சுந்தரர் 9870) வழித்துணையான் என்பதற்குரிய திருநாமம் என்ன? ¡ர்க்கசகாயன்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812