ஞாயிறு, 5 மே, 2019

பஞ்சாட்சர மந்திரம்



நமசிவாய என்பதற்கு என்ன பொருள்?
சிவனை வணங்குகிறேன் என்பது பொருள்.

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை எவை?
திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள்.

இவற்றில் புறச்சாதனங்கள் எவை?
திருநீறும் ருத்திராட்சமும்

அகச்சாதனம் எது? திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாட்சரம்.

உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும் மந்திரம் எது?
அகச்சாதன மந்திரம்.

மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது எது? பஞ்சாட்சர மந்திரம் என்பர்.

வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது என்ன மந்திரம்?
பஞ்சாட்சர மந்திரமே.

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6ஆவது திருமுறைகள் யார் அருளியவை?

அப்பர் அருளியவை

ஐந்தாவது திருமுறையின் அதன் நடுவில் இடம்பெற்றிருப்பது என்ன திருப்பதிகம்? திருப்பாலைத்துறை
திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
11 பாடல்கள்


சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுவது எதில்?
4, 5, 6ஆவது திருமுறைகளில் நடுவான 5வது திருமுறையில் ஆறாவது பாடலில் ஆகும்.

ஓம் எனும் பிரணவத்தின் விரிவு எது?
சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும்.

இந்த பிரணவ மந்திரத்தின் ஒலியிலிருந்து தோன்றியவை எவை?
அண்ட சராசரங்கள்

அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது எது?
பஞ்சாட்சர மந்திரமே.

உயிர்கள் என்று துன்புற்றனவோ அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக எதை அருளினார்? திருவைந்தெழுத்தை


பஞ்சாட்சர மந்திரத்தின் வகைகள் எத்தனை? ஐந்து


பஞ்சாட்சர மந்திரத்தின் ஐந்து வகைகளும் எவை?
துால பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம், மகாமனு பஞ்சாட்சரம்


தூல பஞ்சாட்சரம் எது? நமசிவாய

சூக்கும பஞ்சாட்சரம் எது? சிவாயநம

காரண பஞ்சாட்சரம் எது? சிவய சிவ

மகாகாரண பஞ்சாட்சரம் எது? சிவ.

மகாமனு பஞ்சாட்சரம் எது? சி.

நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து யாருடைய முதல் திருமேனி?
சிவபெருமானின் முதல் திருமேனி.

மந்திர வடிவான இறைவனின் திருமேனியில்-

திருவடி என்பது எது? ந

திருஉந்தி என்பது எது? ம

திருத்தோள்கள் என்பது எது? சி

திருமுகம் என்பது எது? வா
திருமுடி என்பது எது? ய

இத்தூல மந்திரம் மூலம் கிடைக்கும் நன்மை என்ன?
உலக இன்பங்களைத் தந்து இம்மை நலம் அருளக்கூடியது.


இது எதன் முதல் படி?
ஞானமார்க்கத்தின் முதல் படி


இம்மந்திரத்தை போற்றி ஜெபித்தவர்கள் யார்?

ஞானிகளும் அப்பர். சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812