வெள்ளி, 31 ஜனவரி, 2020

அமாவாசை


தை அமாவாசை முன்னோர்களை வணங்கக் கூடிய, திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடிய மிக அருமையான விரத நாள் தை அமாவாசை. தை அமாவாசை எப்போது வருகின்றது, பூஜை, திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக் கூடிய விரத நாளாகும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக் கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசைக்கு பின்னர் வளர் பிறை வருகின்றது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் நிலா வளர்வதாக ஐதீகத்தின் பெயரில் அமாவாசை சிறப்பு பெறுகின்றது.

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை தினத்தில் பிதுர் லோகத்திலிருந்து, முன்னோர்கள், தன் தலைமுறையினர் வாழும் வாழ்க்கையைப் பார்க்க வருவதாக கருதப்படுகின்றது.

மகாளய அமாவாசை

இந்த தினத்தில் பிதுர்கள் பூலோகத்தை வந்தடைவதாக நம்பப்படுகின்றது.

தை அமாவாசை

பிதுர்கள் அவர்களின் தலைமுறையை சேர்ந்த மக்களை பார்த்து ஆசிர்வதித்து, மீண்டும் பிதுர் லோகத்திற்கே திரும்பி செல்வதாக ஐதீகம்.

இதன் காரணமாக இந்த முக்கிய அமாவாசை நாட்களில் உங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டியது அவசியம் என கூறப்படுகின்றது.

தை அமாவாசை எப்போது?

2020ல் தை அமாவாசை நாள் ஜனவரி 24ஆம் திகதிவெள்ளிக்கிழமை) வருகின்றது.

ஜனவரி 24ஆம் திகதி அதிகாலை 3.06 மணிக்கு அமாவாசை திதி உள்ளது. அன்று முழுவதும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது.

வழிபாட்டுக்கான சிறந்த நேரம்: காலை 8.25 மணி முதல் 9.48 வரையாகும்.

பூஜை, பரிகாரத்திற்கு ராகு காலம், எமகண்ட காலத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

வேதம்

சமயம், ஒழுக்கம், சடங்குகள் மற்றும் கலாசாரங்களி&ன் தோற்றுவாயை எதிலிருந்து தொடங்குவது மரபு? வேதத்தில் இருந்து

வேதங்கள் யாரால் அருளப்பட்டவை ?

கடவுளாகிய பரம்பொருளால்

யாருக்கு அருளப்பட்டது?

தவசீலர்களான முனிவர்களுக்கு

வேதம் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?

உயர்ந்த அறிவு, ஞானம் என்பது பொருள்

வேதங்கள் எத்தனை வகைப்படும்? நான்கு

நான்கு வகை வேதங்களும் எவை?

ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்

பொதுவாக வேதங்கள் எத்தனை நுாற்பிரிவுகளைக் கொண்டது?

மூன்று

அந்த மூன்று பிரிவுகளும் எவை?

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம்

வேதங்களின் சில முக்கிய சொற்களுக்கு உரை எழுதியவர் யார்?

யாஸ்கர் என்னும் முனிவர்

இவர் தம்முடைய நிருக்தம் என்னும் நூலில் எந்த இரு பிரிவுகளைப் பற்றி கூறியிருக்கிறார்?

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் என்னும் இருபிரிவுகளையே குறிப்பிடுகிறார்.

பரம்பொருளான ப்ரஹ்மம், ஜீவாத்மா, மோக்ஷம் ஆகியவற்றை மிக விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராய்ந்து முதன் முதலில் உலகுக்கு அறிவித்த உபநிஷத்துக்கள் பெரும்பான்மை எந்த பகுதியில் அடங்கும்?

ஆரண்யகம் என்னும் பகுதியில்

ஸம்ஹிதை, ப்ராஹ்மணம் ஆகிய இரு பகுதிகளும் முக்கியமாக எதைப் பற்றி விளக்குகின்றன?

பலவித வேள்விகளைப் பற்றி

வேள்விகளைப் பற்றி விளக்குவதால் இதனை எவ்வாறு அழைப்பர்?

கர்மகாண்டம் என்று

சூரியமண்டலத்தில் ப்ரஹ்மத்தைத் தியானித்தல், பஞ்சாக்னி வித்தை முதலிய தியானவகைகளை விளக்குவபவை எவை ?

ஆரண்யகங்கள்

ஆரண்யகங்களை எவ்வாறு அழைப்பர்?

உபாஸனாகாண்டம் என்று

ஞானநிலையைப் பற்றி விரித்துக் கூறுவதால் உபநிஷத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

ஞானகாண்டம்

இதில் பலவித யாப்புகளைக் கொண்ட செய்யுள் (ரிக்) வடிவில் இருப்பவை எது?

ரிக்வேதம்

செய்யுளும் உரைநடையும் கலந்தவடிவில் இருப்பது எது?

யஜுர்வேதம்

பெரும்பான்மை ரிக்வேதத்தின் ரிக்குகளைக் கொண்டு இசைவடிவில் அமைந்துள்ளது எது?

ஸாமவேதம்

“மந்திரங்களும் பிராஹ்மணங்களும் அடங்கிய நூல் எது?

வேதம்

யாஸ்கர் என்னும் மஹர்ஷியின் வாக்கு எது? வேதம்

வேதம் எத்தனை பெரும் நூல்களைக்கொண்டதது?

ஐந்

அவை எவை?

ரிக்வேதம், கிருஷ்ணயஜுர்வேதம், சுக்லயஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம் என்பன.

மிகப் பழமையான காலத்தில் வேதம் என அழைக்கபட்டு வந்துள்ள நால்கள் எவை?

ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூவகை நூல்களே

இதனை நாம் எதிலிருந்து அறிந்து கொள்ளலாம்?

பாணினி முனிவரின் வியாகரண நூல் முதலியவற்றிலிருந்து

சற்றுப் பின்னர்வேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது எது?

அதர்வணவேதம்

தெமட்டகொடை மஹாவெல ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்



இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குவதும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டதுமான ஸ்ரீலங்காபுரியின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் மஹாவெல ஒழுங்கையில் 150 ம் இலக்கத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சுமார் 20 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய மரநிழலின் அடியில் கல்லை நாட்டி வணங்கி வந்தனர். காலப்போக்கில் அவ்விடம் பலகைக் கொட்டகையாக மாறியது.

காலங்கள் செல்லச் செல்ல 1990 இல் இக் கொட்டகை மடாலயமாக மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வைரவர் ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூஜைகளும் விரதங்களும் விழாக்களும் சீராக நடந்து வந்தன.

இவ்வாலயத்தில் 2000 ம் ஆண்டு “வாணி வித்தியா” என்னும் பெயரில் அறநெறி பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறநெறி பாடசாலையில் தற்போது 75 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஒரே ஒரு பொறுப்பாசிரியருடனும் ஒரே ஒரு ஆசிரியருடனும் இப்பாடசாலை சிறப்பாக இயங்குகிறது.

2005 ஆம் ஆண்டு இப்பகுதியின் சுற்றுப் புறச் சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டது. குறிப்பாக வீதி அபிவிருத்தி, மேம்பாலம் அமைப்பு, மாடி வீடமைப்பு திட்டங்கள் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. இதனால், சேரிப்புற நிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறின. குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் ஆலய அமைவிடம் பள்ளத்தாக்கானது.

கூரைகள், கட்டிட மதில்கள் வழியாக மழைநீர் ஒழுகும் அவல நிலை காணப்பட்டது. இந்த அவல நிலையைக் கண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் ஒன்றுகூடி இவ்விடயத்தி இவ் ஆகம நியதிகளுக்கு ஏற்ப இராஜகோபுரத்துடன் விஸ்தீரமான ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

2006-2-3 ம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயம் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுமையாக உடைக்கப்பட்டு இடத்தை விஸ்திரமாக்கப்பட்ட 2006-2-11 ம் திகதி தைப்பூசத் திருநாளில் அத்திபாரக் கல் நடப்பட்டது. ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி பிரதான கல்லை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மூலஸ்தானம்அர்த்தமண்டபம், கட்டுமானப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதனோடு சுற்று புற சுவரும் கட்டப்பட்டதுடன் பொருளாதார பற்றாக்குறையால் வேலைகள் காலதாமதமாகின. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி வாயிற்கோபுரம் அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

இவ் விழாவில் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷணன் பிரதான கல்லை நாட்டி வைத்தார்.

இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அன்பர் ஒருவர் முழு கோவிலுக்கும் மேல் கொங்கிரீட் சிலப் செய்வதற்கு நிதி உதவி வழங்கினார்.

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், முன்னாள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் தயாகாந்த பெரேரா ஆகியோரின் சிபாரிசுகளின்படி இப்பாரிய திருப்பணியை சகோதர மொழி சகோதரர்கள், ஆலய அறங்காவலர்கள், நலன்விரும்புகள் ஆகியோரின் உண்டியல், டிக்கட் விற்பனை, நிதி வசூல் மூலமும் பொருள் உதவி மூலமும் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தன.

இவ்வாலய பரிபாலன சபையினருக்கு நல் வழிகாட்டியாக இருந்த கிராண்ட்பாஸ், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ பாலரவி சங்கரின் (ஜனாதிபதியின் இந்து மத அமைப்பாளர்) நல்லாசியுடன் நடைபெற்று வந்தன. இராஜகோபுரம் இல்லாமல் சிறு சிறு வேலைகள் பொருளாதார பிரச்சினையால் செய்ய முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 5 வருட இடை வெளியில் சுற்றுப்புற சூழல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு புதிய மாடி மனை வீடுகள், எஸ்கோன் ரெசிடன்ஸ், கனிய வள பெற்றோலிய அமைச்சு, உயரமான கட்டிடங்கள், மேம்பாலம் என பல கட்டிடங்கள் தோற்றம் பெற்றன. மஹாவெல ஒழுங்கையில் சுமார் 200 அடி தூரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் பரப்பளவு 1300 சதுர அடியாகும்.

இவ்வாலய திருப்பணி வேலைகளை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிற்பாசிரியரான விஸ்வஸ்ரீ செ. ச. சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் திருப்பணி வேலைகளை செய்தனர். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ சித்தி விநாயகர் மூலஸ்தானத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்த அம்பாள், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரகம், வைரவர், காளியம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் இங்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் 2011.08.26ஆம்திகதிஆலயத்தின் தலைவர் ஐ. முருகேசன் (பரம்),செயலாளர் ஆர். விஜயன்,பொருளாளர் கே. கணேசன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றன.

இவ்வாலயகும்பாபிசேகம் நடைபெறுவதற்கு 4 வருடங்களுக்குமுன்பே இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் அமைக்கவேண்டும் என்றஎண்ணம் ஏற்பட்டது. அதற்கமைய இவ்வாலயத்துக்குரிய இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி 36ஆம் அடிஉயரம் கொண்ட இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேகம் 2020-.01-.30ஆம் திகதி நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

ஆருத்ரா

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும் !!சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாளசுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்அந்தவகையில் உலகெங்கும் உள்ள சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று சிறப்பாக நடைபெறுகிறதுதமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. அந்தவகையில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசனம்பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

’பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்’ என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள். இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும், அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டதுசேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாககொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்!! .

தர்மம் தலைகாக்கும்


பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில்

தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர்.

யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம்

என்று சொல்லிற்று.பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம்

எனப் பெயர்.சந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று.இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு யக்ஷன் சொன்னதாவது. ”போர் நடக்கும் ஸமயம்.

இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும்.

அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே”.

இது ஆச்சர்யம் என்றது.

அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும்.என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீஎன்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன்.

மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு

மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன்என்றார்.

அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து

சந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன்.

ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று

எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.

இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை.

தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா?

வேதங்கள்



)நான் மறை என்றால் என்ன? நான்கு வேதங்கள்

)நான்கு வேதங்களும் எவை? ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

)நான் மறை என்பதற்கு என்ன பொருள்? சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் நவில்வது என்று பொருள்; (மறை = மறைத்துச் சொல்லுதல்)

உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் சொல்லும் நால் வேத மந்திரங்கள் எது? நான் மறை

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகள் எவை?

வேதங்கள்.

வேதம் என்பது என்ன?

இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.

வேதத்தை யார் உருவாக்கினார்கள்?

யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.

வேதங்கள் எப்படி உருவாகின?

பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

வேதங்களுக்கு எத்தனை பாகங்கள் உள்ளன?

நான்கு பாகங்கள்

நான்கு பாகங்களும் எவை?1. “மந்திரங்கள்” (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணா எனப்ப்படும் உரை அஅல்லது சடங்கு வழிமுறைகள்

3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

செவ்வாய், 7 ஜனவரி, 2020

M G R நினைவேந்தல் நிகழ்வு

தர்மம் தலைகாக்கும்



பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில்

தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர்.

யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம்

என்று சொல்லிற்று.பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம்

எனப் பெயர்.சந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று.இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு யக்ஷன் சொன்னதாவது. ”போர் நடக்கும் ஸமயம்.

இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும்.

அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே”.

இது ஆச்சர்யம் என்றது.

அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும்.என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீஎன்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன்.

மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு

மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன்என்றார்.

அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து

சந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன்.

ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று

எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.

இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை.

தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா?

வேதங்கள்


)நான் மறை என்றால் என்ன? நான்கு வேதங்கள்

)நான்கு வேதங்களும் எவை? ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

)நான் மறை என்பதற்கு என்ன பொருள்? சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் நவில்வது என்று பொருள்; (மறை = மறைத்துச் சொல்லுதல்)

உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் சொல்லும் நால் வேத மந்திரங்கள் எது? நான் மறை

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகள் எவை?

வேதங்கள்.

வேதம் என்பது என்ன?

இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம் ஆகும்.

வேதத்தை யார் உருவாக்கினார்கள்?

யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை.

வேதங்கள் எப்படி உருவாகின?

பண்டைய காலத்தில் ஞானிகளும்,ரிஷிகளும் தவமிருக்கும்பொழுது அவர்கள் வாய்மொழியாக வந்த மந்திரங்களே வேதங்களாக கருதப்படுகின்றன.

வேதங்களுக்கு எத்தனை பாகங்கள் உள்ளன?

3 பாகங்கள்

3பாகங்களும் எவை?

1. “மந்திரங்கள்” (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)

2. பிராமணா எனப்ப்படும் உரை அஅல்லது சடங்கு வழிமுறைகள்

3. அரண்யகா எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812