புதன், 14 அக்டோபர், 2020

Easwaralingam Mother 26.10.2020 Nila Florist Borells.

Death of Kandaih Visalachi 28.10.2020

The death occured of Kandsih Visalachi of B 103, Dr. Babapillai Place, Grandpass Road, Colombo 14. She is the mother of Thinakaran Deputy Chief Sub Editor K. Easwaralingam. Her remaihs lie at Nila Florist Punchi Borella, Colombo 08 and funeral will take place at General Cemetary, Kanatte after religious rites at florist at 2.00 p.m.

Short Stories (Vasatha kala ninaivugal)

My mother

எனது தாயாரான திருமதி கந்தையா வீசாலாச்சி அவர்கள் 2020.09.28ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் இறைவனின் திருவடியில் சரணடைந்தார்.

Navarathri 17.10.2020

நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள். விரதமுறை: நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாகக் கருதி வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்ததால் இவளை, சாமுண்டா என்றும் அழைப்பர். இவள் நீதியை காக்க கோபமாக இருக்கிறாள். இவளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும். இரண்டாம் நாள் அம்பிகையை வாராஹியாக வழிபடவேண்டும். இவளுக்கு தயிர்ச்சாதம் படைத்து வணங்க வேண்டும். மூன்றாம் நாள் அம்பிகையை இந்திராணியாக வணங்க வேண்டும். அரச பதவிகள், அரசு பதவிகள் அனைத்தும் இவள் அருளாலேயே கிடைக்கும். இவளுக்கு எலுமிச்சை சாதம் படைக்க வேண்டும். நான்காம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக கருதி வழிபட வேண்டும். இவளை விஷ்ணு சக்தி என்பர். இவளுக்கு கல்கண்டு சாதம் படைக்க வேண்டும். ஐந்தாம் நாள் அம்பாளை திரிசூலம், பிறைசந்திரன், பாம்பு ஆகியவை தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். இவளை மஹதீ என்றும் அழைப்பர். சர்வமங்களம் தரும் இவள் தர்மத்தின் திருவுருவமானவள். உழவர்கள், உடலுழைப்பு கொண்டவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும் வரத்தைத் தருபவள். இவளுக்கு பால் பாயசம் படைக்க வேண்டும். ஆறாம் நாள் நாள் அம்பாளை மயில் வாகனத்துடன், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்பர். இவள் தைரியத்தை அருளுபவள். பாவங்களைப் போக்குபவள். குமார கண நாதம்பா என்றும் இவளை அழைப்பர். இவளுக்கு சித்ரான்னம் படைக்க வேண்டும். ஏழாம் நாளில் இருந்து அம்பிகையை கல்வி தெய்வமாக கருதி வழிபட வேண்டும். இதன் முதல் கட்டமாக அவளை வித்யாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரையை ஆசனமாகக் கொண்டு, தாமரை மலரேந்தி, யானைகளை இருபுறமும் நிறுத்த வேண்டும். இவளது கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுதகலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். இவளுக்கு பால் அன்னம் நிவேதனம் வைக்க வேண்டும். எட்டாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். இவள் சரஸ்வதி வடிவம் தாங்கியவள். அன்ன வாகனம் அமைத்து, அதில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, வெள்ளைத் தாமரை மேடை அமைத்து, அதில் சரஸ்வதியாக அம்பிகையை அலங்கரித்து அமர்த்த வேண்டும். வீணை இருக்கக்கூடாது. கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். விரல்களை சூசிஹஸ்தம் என்னும் நிலையில் வைக்க வேண்டும். அதாவது ஆள்காட்டி விரல் மட்டும் விரிந்திருக்க மற்ற விரல்கள் மடங்கியிருக்க வேண்டும். இவ்வுலகம் பொய்யானது, அவ்வுலகம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது என்ற ஞானத்தை இந்த முத்திரை பக்தர்களுக்கு உணர்த்தும். இவளுக்கு புளியோதரை நிவேதனம் செய்ய வேண்டும். அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். இந்நாளில் அம்பிகையை நரசிம்ஹியாகவும் அலங்கரிப்பதுண்டு. இவளுக்கு வெண்பொங்கல் படைக்க வேண்டும். நவராத்திரி பிரார்த்தனை: நவராத்திரி நாட்களில் மாலைவேளையில் பக்தி சிரத்தையோடு, அம்பாள் முன்னிலையில் இதனைப் படிப்பவர்கள் அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெறுவர்.

Navarathri - 17.10.2020

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது. நவராத்திரி விரதம் எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் கலைமகளை வழிபட வேண்டும். சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்கள். நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம். நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு. நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

Tower Hall Drama Festival -2020

Kuladeiva valipadu (குலதெய்வ வழிபாடு)

பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது எந்த தெய்வம்? அவர்களது குலதெய்வம் மட்டுமே. அதற்குக் காரணம் என்ன? பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலதெய்வம் எவ்வாறு போற்றப்படுகிறது? குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறது. தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி எந்த தெய்வத்திற்கு உண்டு? குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு. இவ்வாறு யார் என்று குறிப்பிடுகின்றனர்? சான்றோர்கள் ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை எது செய்யும்’ என்றும் சொல்வார்கள்? குலதெய்வம் குலதெய்வம் குறித்த ஆன்மிக ரகசியம் என்ன? ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது. குலதெய்வத்திற்குரிய சிறப்பு சக்தி என்ன? அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்? எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். அதில் ஏதாவது சிறப்பு உண்டா? ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம். தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது எது? பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் இவர்களை எவ்வாறு அழைப்பர்? வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி அந்த நிலையில் குலதெய்வம் என்பது எவ்வாறு இருக்கும் என கருதப்படுகிறது? ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்குமா? கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியுமா? முடியாது. ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு எத்தனை தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம்? மூன்று அந்த மூன்றும் எது? அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமா? அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் என்ன நடக்கும்? நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் என்னசெய்யலாம்? வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும். குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி யார் குறிப்பிடப்பட்டுள்ளார்? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே எவ்வாறு அழைக்கப்படுகிறது? ‘குலதெய்வம்’ முன்னோர்கள் என்றால் இங்கு யாரை கணக்கில் கொள்ள வேண்டும்? தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை என்னவென்று சொல்வார்கள்? ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் யாராக இருந்து இருந்திருப்பார்கள்? வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள்.
கொழும்பு பாரதி கலா மன்றம் அதன் தலைவர் கலாபூஷணம் த.மணி தலைமையில் பாரதி விழாவை 2020.09.27ஆம் திகதி நடாத்தியது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக பாரதி கலா மன்றம் பாரதி விழாவை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் கலந்து சிறப்புரையாற்றினார். கலாபூஷணம் வைத்தமாநிதி ும் உரையாற்றினார். கவிதாயினி சுபாஷிணி பிரணவனின் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் ராதா மேத்தா, எஸ். தனபாலன், பாரதி சித்தன், கலாபூஷணம் முஹம்மத் அலி, எஸ்.ஏ.கரீம், கவிதா பாரதி, என். நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவிதை பாடினர்.நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் ஈஸ்வரலிங்கம் தொகுத்து வழங்கினார். பொன் பத்மநாதன் நன்றியுரை வழங்கினார்.

Navarathri

Story Writer : Mr. K. Iswaralingam
நவராத்திரி வழிபாடு ஏன் தோன்றியது? நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், அதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த அரக்கர்களை கண்டு அஞ்சி நடுங்கினர். இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

Tower Hall Tamil Drama Festival -2020

மலர்ந்தும் மலராத தமிழ் நாடக விழா
கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கலைஞர்களை வலுவூட்ட "டவர் மண்டப அரங்க மன்றம்" சகோதர மொழி நாடகங்களை மேடையேற்றியது போல் "தமிழ் நாடக விழா 2020" விழாவை நடத்த ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் 19 குறுநாடகங்கள், 5 நெடுநாடகங்கள் மேடை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் 300 மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்குகொள்ளவிருந்தனர். அதற்கமைய தமிழ் நாடக விழா கடந்த 3ஆம் திகதி டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் டக்ளஸ் சிறிவர்தன தலைமையில் மருதானை எல்பிஸ்டன் அரங்கில் ஆரம்பமாகி நடந்து வந்தது. 2020 ஒக்டோபர் 03ஆம் திகதி கே.சீலனின் “சிம்ஹாவின் கனிந்த இரவு”, ரி.அயூரனின் “வண்டிப்பயணம்”, கே.சீலனின் “அடையாளம்” என்ற நாடகங்களும் மேடையேற்றப்பட்டன. ஒக்டோபர் 04 ஆம் திகதி ரி. தர்மலிங்கத்தின் “காரல்”, ஏ.இளங்கோவின் “நிதர்சனம்” கே.செல்வராஜனின் “சந்தேக்கனவுகள்” , ரி. தர்மலிங்கத்தின் “சடுக்குவேலி”யும் மேடையேற்றப்பட்டன. "கண்ணகி கலாலயம்" படைப்பாக ஆ.இளங்கோவின் கதை, வசன, இயக்க, நடிப்பில் ச.பிரதீப்குமார் தயாரிப்பில் கடந்த (04 - 10 - 2020) ஞாயிற்றுக்கிழமை "நிதர்சனம்" குறுநாடகம் மேடையேறியது. எமது கலைஞர்களின் அடிப்படை பிரச்சினைகளை நகைச்சுவை கலந்த தொணியில் இந் நாடகம் படைக்கப்பட்டிருந்தது. கலாபூஷணம் கே. செல்வராஜன் இயக்கத்தில் சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்ரேஜ் வழங்கிய "சந்தேக கனவுகள்" நாடகத்தில் கலாபூஷணம் மல்லிகா கீர்த்தி, பூ. மார்கிரட், எஸ். சரவணா, ஆர். சசிகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். கணவன் மனைவிக்கிடையே காலம் காலமாக தொடர்ந்து வரும் சந்தேகப் பேயை விரட்டும் விதமான கதையாக இது அமைந்திருந்தது. ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் கதை வசனம் எழுதியிருந்தார். இதற்கான இசையை ஏ. சந்திரதாஸ் வழங்கியிருந்தார். ஒப்பனை மல்லிகா கீர்த்தி, அரங்க நிர்வாகம் மற்றும் தயாரிப்பு கலைஞர் பொன் பத்மநாதன் . ஒக்டோபர் 05 ஆம் திகதி ரி.தர்மலிங்கத்தின் “ஆடவள்”, ஆர்.லோகநாதனின் “இப்படி ஒரு நாள்” ரி.தர்மலிங்கத்தின் “வரைவாளி” ரி. தர்மலிங்கத்தின் “குருவிச்சை”யும் மேடையேற்றப்பட்டன. இந்நிலையில் நாட்டில் பரவுகின்ற கொரோனா வைரஸ் காரணமாக டவர் மண்டப அரங்க மன்றம் நடத்தி வந்த தமிழ் நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என டவர் மண்டபம் அறிவித்தது. கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அரசாங்க உத்தரவின் பிரகாரம் டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளா நாயகம் டக்களஸ் சிறிவர்தனவின் தலைமையில் நிருவாக சபை கூடி இந்நாடக விழா பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத்தந்தது. மீண்டும் நாட்டில் சுமுகமான நிலைவரம் வரும்போது அதனை மீண்டும் தொடர்ந்து மேடையேற்றவும் இந்நிருவாக சபை முடிவு செய்துள்ளது. இதனை கலைஞர்ளுக்கும் பார்வையாளர்களுக்கும் மக்களுக்கும் அறிவித்துக் கொள்வதாக டவர் மண்டப அரங்க மன்றத்தின் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) கலாநிதி. சண்முக சர்மா ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார். ஒக்டோபர் 06 ஆம் திகதி ரி.டக்ளஸின் “மனதில் உறுதி வேண்டும்”, மொழிவாணனின் “அரசபணிக்காக மட்டும்”, பி.சிவபிரதீபனின் “வந்தவன்”, ஏ.இளங்கோவின் “கொவிட்-19”, ஒக்டோபர் 07ஆம் திகதி ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “கட்டை விரல்”, ஆர்.ஏன். ஆர்.அரவிந்தின் “நினைவெல்லாம்” ஆர் ஸ்ரீகாந்தின் “அங்கீகாரம்”, ஆர்.ஏன்.ஆர். அரவிந்தின் “போலிமுகம்” போன்ற குறு நாடகங்கள் மேடை ஏறவிருந்தன. 2020 ஓக்டோபர் 8 ஆம் திகதி ஆர்.கிங்ஸிலியின் “தற்கொலை” ஒக்டோபர் 9ஆம் திகதி தர்னபிஹேரவின் “விளம்பரம் ஒட்டக்கூடாது”, ஒக்டோபர் 10 ஆம் திகதி சிவா பிரதீபனின் “வினை விதைத்தவன்”, ஒக்டோபர் 12ஆம் திகதி ராதாமேத்தாவின் வ(ர)ம்பு, ஒக்டோபர் 13ஆம் திகதி சுபாஷினியின் “அவஸ்தை” போன்ற நெடும் நாடகங்களும் மேடையேறவிருந்தன. கே. ஈஸ்வரலிங்கம்

Navarathri

00
நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது எந்த காலத்தில்? சோழர் காலத்தில் தமிழகத்தில் மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக நவராத்திரி விழா மாறியது எந்த காலத்தில்? நாயக்கர் காலத்திலிருந்து தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தியது எந்த காலத்தில்? நவராத்திரி காலத்தில் தான் ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை வழங்கியவர் யார்? மன்னர் திருமலை நாயக்கர் தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது எது? ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை மன்னர் திருமலை நாயக்கர் வழங்கியதால் தான். நவராத்திரி நாட்களில் பெண்கள் எந்த பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்? கன்யா நவராத்திரி பண்டிகையை யார் முதன் முதலில் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது? ராமர் நவராத்திரி விரதத்தை ராமபிரான் கடைப்பிடித்த பிறகு என்ன நடந்தது? அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது. இவ்வாறு எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? தேவி பாகவத்தில் நவராத்திரி நாட்களில்தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம் எது? நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுவது எதற்கு? அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, கொலு வைதப்பதன் அர்த்தம் என்ன? அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்று அர்த்தம் ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால், பிறகு எவ்வளவு காலம் கொலு வைக்க வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நவராத்திரியில் எதில் கோலம் போட வேண்டும்? அரிசி மாவால் அரிசி மாவால் கோலம் போடுவதால் ஏற்படும் நனமை என்ன? குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும் நவராத்திரி நாட்களில், சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால் என்ன நடக்கும்? எதிர்மறையான விளைவுகளே உருவாகும்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812