புதன், 24 அக்டோபர், 2012

அறநெறி அறிவுநொடி ஒன்பது 9500) விக்ரமார்க்களின் சபையிலிருந்த நவரத்னங்கள் என சிறப்பிக்க ப்பட்ட புலவர்கள் பெயர்க ளைத் தருக? தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸி ம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப் பார், காளிதாசர், வராக மிஹிரர், வரருசி. 9501) பக்தர்களின் நவகுணங்களும் எவை? அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மெளனம். 9502) யாகசாலையில் எத்தனை வகையான குண்டங்கள் அமைக்கப்படும்? ஒன்பது 9503) யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்களையும் தருக? சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண் கோணம், பிரதான விருத்தம். 9504) நவவித பக்திகளும் எவை? சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம். 9505) நவபிரம்மாக்கள் யார்? குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், துனிஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன். 9506) நவபாஷாணங்களும் எவை? வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாவித். 9507) நவதுர்க்கா யார்? ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மச்சாரினி, ஷைலபுத்ரி மகா கவுரி, சந்திர காந்தா, ஸ்கந்த மாதா , மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி. 9508) நவசக்ரங்களும் எவை? த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ செளபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம். 9508) நவநாதர்கள் யார்? ஆதி நாதர், உதய நாதர், சத்ய நாரதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொங்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரகுக நாதர். 9509) உடலின் நவ துவாரங்களும் எவை? இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள். 9510) உடலின் ஒன்பது சக்கரங்களும் எவை? தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மங்கை, சுக்கிலம், தேகஸ், ரோமம்.

புதன், 17 அக்டோபர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் ஒன்பது 9481) எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படும் எண் எது? ஒன்பது 9482) அந்த எண்ணில் என்ன பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்? நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் 9483) சீனர்களின் சொர்க்க கோபுரம் எத்தனை வளையங்களால் சூழப்பட்டது? ஒன்பது 9484) பெண்களின் கர்ப்பம் பூரணமாவது எப்போது? ஒன்பதாம் மாத நிறைவில் 9485) ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் என்ன பெயர்? நவம் 9486) நவ என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? புதிய, புதுமை 9487) நவசக்திகள் எவை? வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமணி, மணோன்மணி. 9488) நவதீர்த்தங்கள் எவை? கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு நர்மதை, காவிரி, பாலாறு, குமரி 9489) நவவீரர்கள் யார் யார்? வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் 9490) நவ அபிஷேகங்கள் எவை? மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், வீபூதி 9491) நவரசங்களும் எவை? இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் 9492) நவக்கிரங்கள் எவை? சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது 9493) நவமணிகள் எவை? கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம் 9494) நவதிரவியங்கள் எவை? பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் 9495) நவலோகங்களும் (தாது) எவை? பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம் 9496) நவதானியங்களும் எவை? நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை 9497) சிவ விரதங்கள் ஒன்பதும் எவை? சோமவார விரதம், திருவாதிரை, உமாகேச்வர விரதம், சிவராத்திரி, பிரதோசம், கேதார, ரிஷப, கல்யாண சுந்தர விரதம், சூல விரதம் 9498) நவசந்தி தாளங்கள் எவை? அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்தி தாளம், படிம தாளம், விடதாளம் 9499) அடியார்களின் நவபண்புகள் எவை? எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருட்சித்தல், தூபம் இடல், தீபம் காட்டல், புகழ்தல், அமுது அளித்தல்.

வியாழன், 11 அக்டோபர், 2012

இந்து முறைப்படி உணவு உட்கொள்ளல்) 9466) எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணலாமா? கூடாது 9467) வெண்கலம், அலுமினியம், செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யலாமா? கூடாது 9468) புரச இலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? புத்தி வளரும் 9469) வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன? நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை 9470) இரவு உணவில் சேர்க்கக் கூடாதவை எவை? இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் 9471) உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் சாதத்தை பரிமாறலாமா? கூடாது 9472) முதலில் என்ன பரிமாற வேண்டும்? காய்கறிகளோ, அப்பளமோ, உப்போ பரிமாறலாம் 9473) அதேபோல முதலில் இலையில் வைக்கக் கூடாதவை எவை? கீரை, வத்தல் (சுவாமியை வலம் வருதல்) 474) விநாயகரை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒருமுறை 9475) ஈஸ்வரனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? மூன்று முறை 9476) அம்மனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? மூன்று முறை 9477) அரச மரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஏழு முறை 9478) மகான்களின் சமாதியை எத்தனை முறை வலம் வர வேண்டும்? நான்கு முறை 9479) நவக்கிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும்? ஒன்பது முறை 9480) சூரியனை எத்தனை முறை வலம் வர வேண்டும்? இரண்டு முறை

திங்கள், 1 அக்டோபர், 2012

அறநெறி அறிவுநொடி இந்துமுறைப்படி உணவு உட்கொள்ளல் 9448) அளவிற்கு அதிகமாக உண்டால் (உணவு) என்ன நடக்கும்? நோய் வரும், ஆயுள் குறையும் 9449) உணவில் மிளகு சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 9450) உணவில் சீரகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உடம்பை சீராக வைப்பது மற்றும் குளிர்ச்சியைத் தருகிறது. 9451) வெந்தயம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உஷ்ணம் குறையும் 9452) வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் என்ன நடக்கும்? உடம்பில் உள்ள உஷ்ணம் குறையும். 9453) கடுகை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவில் வைத்திருக்கும். 9454) இஞ்சியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை என்ன? பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வராது. 9455) உணவு உண்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் நீர் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 9456) உணவு உண்ணும்போது செய்யக்கூடாதவை எவை? பேசக்கூடாது, வடிக்கக்கூடாது, இடது கையை கீழே ஊன்றக்கூடாது, தொலைக்காட்சி பார்க்கக்கூடாது. 9457) வீட்டில் கதவை திறந்து வைத்துக்கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணலாமா? கூடாது 9458) காலணி அணிந்துகொண்டு உண்ணலாமா? கூடாது 9459) சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணலாமா? கூடாது 9460) இருட்டிலோ நிழல்படும் இடங்களிலோ உண்ணலாமா? கூடாது 9461) சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணலாமா? கூடாது 9462) தட்டை மடியில் வைத்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் உண்ணலாமா? கூடாது 9463) இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதாலும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் நல்லதா? இல்லை, தரித்திரத்தை வளர்க்கும் 9464) ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சாப்பிடலாமா? கூடாது 9465) புரட்டாசியில் திருமணம் செய்யக்கூடாதா? புரட்டாசியில் திருமணம் செய்யலாம். சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம், கன்னி புதனுடையது. தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள். ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம் தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812