செவ்வாய், 26 அக்டோபர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)


8105) முயலகனை என்னவென்று குறிப்பிடுவார்கள்?

கரு, அபஸ்பாரம்

8106) முயலகனின் உருவம் எதைக் குறிக்கும்?

ஆன்மாவில் படிந்துள்ள மலத்தை

8107) தாண்டவமூர்த்தியின் கைகளில் காணப்படுபவை எவை?

துடி, தீச்சுடர், சூலம், பாசம், பாம்பு

8108) பஞ்ச செயல்களுக்கும் எத்தனை தாண்டவங்கள் உள்ளன?

ஐந்து தாண்டவங்கள்

8109) பஞ்ச செயல்களில் காத்தல் எத் தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும்.

8110) காத்தல் தாண்டவம் இரண்டு வகைப்படுவதால் ஐந்தொழில் தாண்டவங்களின் எண்ணிக்கை எத்தனையாகும்?

ஆறு

8111) 5 தொழில்களையும் தனித்தனியே காட்டுகின்ற தாண்டவங்கள் ஆறும் 5 தொழில்களையும் ஒருங்கே காட்டுகின்ற தாண்டவம் ஒன்றும் ஆக எல்லாமாக எத்தனை யாகும்?

ஏழு

8112) படைத்தல் தாண்டவத்தை என்ன வென்று கூறுவர்?

காளிகா தாண்டவம்

8113) முனி தாண்டவம் என்பது எதனை?

படைத்தல் தாண்டவத்தை

8114) படைத்தல் தாண்டவ மூர்த்திக்கு எத்தனை கைகள்?

எட்டு

8115) இந்த மூர்த்தியின் வலப்பக்க கைக ளில் உள்ள பொருட்கள் எத்தொழிலை குறிக்கின்றன?

படைத்தல்

8116) திரிசூலம் எதைக் குறிக்கின்றது?

ஆன்மாவின் முக்குணங்களையும்

8117) பாசக்கயிறு எதைக் குறிக்கிறது?

ஆணவம், கன்மம், மாயை

8118) துடி எதைக் குறிக்கின்றது?

படைத்தல் தொழிலை

8119) வலப்பக்க கைகளில் காணப்படும் பொருட்கள் எவை?

திருசூலம், பாசம், துடி

8120) மும்மலத்தினால் மறைப்புண்டு முக்குணவசப்பட்டு ஆன்மா வுக்கு தாண்டவப் பெருமான் தனு, கரண, புவன போகங்களை தருகிறார் எனும் தத்துவத்தை விளக்கும் மூர்த்தம் எது?

முனிதாண்டவ மூர்த்தம்

8121) காத்தல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

புஜங்க லளிதம்

புதன், 20 அக்டோபர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்

(தானங்களும் பலன்களும்)


8091) அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?

தரித்திரமும் கடனும் நீங்கும்

8092) வஸ்திரதானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஆயுள்விருத்தி

8093) பூமிதானம் செய்வதால் விளையும் நன்மை என்ன?

பிரமலோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்

8094) கோதுமை தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன?

ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் நீங்கும்

8095) தீப தானம் செய்தால் ஏற்படக் கூடிய நன்மை என்ன?

கண் பார்வை தீர்க்கமாகும்

8096) நெய், எண்ணெய் தானத்தால் ஏற்படும் நன்மை என்ன?

நோய் தீரும்

8097) தங்கம் தானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?

குடும்ப தோஷம் நீங்கும்

8098) வெள்ளிதானம் செய்தால் ஏற்படும் பலன் என்ன?

மனக்கவலை நீங்கும்

8099) தேன் தானம் செய்தால் ஏற்படும் பலன் எது?

புத்திர பாக்கியம் உண்டாகும்.

8100) நெல்லிக்கனி தானம் செய்தால் விளையும் நன்மை என்ன?

ஞானம் உண்டாகும்

8101) அரிசி தானம் அளிக்கும் பலன் யாது?

பாவங்களைப் போக்கும்

8102) பால் தானம் எந்தப் பலனை அளிக்கும்?

துக்கம் நீங்கும்

8103) தேங்காய் தானம் செய்தால் விளையும் பலன் என்ன?

நினைத்த காரியம் நிறைவேறும்

8104) பழங்கள் தானம் செய்தால் விளையும் பலன் யாது?

புத்தியும் சித்தியும் கிட்டும்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ஸ்தாபகர்,
தமிழர் நற்பணி மன்றம்

தில்லையம்பலவாணனின் தாண்டவ சிறப்பு

8067) சிவபெருமான் செய்தருளுகின்ற தாண்டவங்கள் எத்தனை?

108

8068) இந்த நூற்றி எட்டுக்குள் அடங்குகின்ற ஐந்தொழில்களும் எவை?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

8069) ஐந்தொழில்களையும் இறைவன் இடைவிடாமல் செய்துகொண்டிருப்பது எதற்காக?

உயிர்கள் மலம் நீங்கி தூய்மையடைந்து பேரின்பம் அடைவதற்கு.

8070) இச் செயல்களை இறைவன் எவ்வாறு செய்வதாகக் கூறப்படுகிறது?

தாண்டவமாக

8071) கடவுள் இவ்வாறு செய்தருளுவதை எவ்வாறு அழைப்பர்? ஞானக்கூத்து

8072) பஞ்சசெயல் தத்துவத்தை பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் செய்திருப்பது என்ன?

தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பது.

8073) தாண்டவ உருவத்தை உருவகம் செய்து காட்டியிருப்பவர்கள்?

சைவ சித்தார்ந்த சாத்திரம் அறிந்த அறிஞர்கள்.

8074) பரந்து விரிந்த ஆகாயம் எதைக் குறிக்கும்?

தாண்டவமூர்த்தியின் உடம்பை.

8075) இதனை திருமந்திரப் பாடலில் குறித்துக் காட்டியவர் யார்?

பட்டினத்தடிகள்

8076) பட்டினத்தடிகள் இதனை எவ்வாறு கூறியுள்ளார்.

ஆகாசமாம் உடல்

8077) பஞ்ச செயல்களில் தாண்டவமூர்த்தியின் இரு திருவடிகளும் எதைக் குறிக்கும்?

மறைத்தல், அருளல் செயல்களை

8078) உயிர்கள் வினைகளை அனுபவிக்கச் செய்து இருவினையொப்பும் மலபரிபாகம் எனும் பக்குவ நிலையை அடையச் செய்வது எது?

ஊன்றிய திருவடி.

8079) அதாவது இது ஐந்தொழில்களில் எந்தத் தொழிலைச் செய்கிறது?

மறைத்தல்

8080) தூக்கிய திருவடியை என்னவென்று அழைப்பர்?

குஞ்சிதபாதம்.

8081) இந்தத் திருவடி எதனைக் குறிக்கிறது?

பக்குவம் அடைந்த உயிருக்கு அனுக்கிரகம் என்னும் அருளைக் கொடுத்து வீடளிக்கின்றது.

8082) தாண்டவமூர்த்திக்கு எத்தனை கண்கள் என்று கூறப்பட்டுள்ளது?

மூன்று

8083) மூன்றாவது கண் எங்குள்ளது?

நெற்றியில்

8084) இந்த முக்கண்களும் எவற்றைக் குறிக்கின்றன?

இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று சக்திகளை

8085) இந்த முக்கண்களும் மூன்று சக்திகளை குறிப்பாக எதில் கூறப்பட்டுள்ளது!

காமிகா ஆகமத்தில்

8086) காதுகள் எதை குறிக்கின்றது?

ஓங்காரத்தை

8087) கடவுள் தமது திருக்கையில் உள்ள துடியை ஒலித்து உண்டாக்கும் ஓசை எந்த வடிவமுடையது?

ஓங்கார வடிவம்.

8088) சடைமுடி எதற்கு அடையாளம்? ஞானத்துக்கு

8089) நுன்சிகை ஞானம் என்பது எதனை?

திருமந்திர வாக்கை

8090) தாண்டவமூர்த்தியின் ஊன்றிய பாதத்தின் கீழே காணப்படுகின்ற உருவம் எது?

முயல்கள்.

திங்கள், 4 அக்டோபர், 2010

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(விநாயக சஷ்டி)


8037) விரத காப்பை எப்போது கட்டிக்கொள்ள வேண்டும்?

விரத ஆரம்ப நாளில்

8038) எத்தனை இழையிலான விரத காப்பை கட்டிக் கொள்ள வேண்டும்?

21 இழையிலான

8039) பெண்கள் விரதக் காப்பை எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

இடது கையில்

8040) ஆண்கள் எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

வலது கையில்

8041) விரதாரம்பத்தில் பவித்ரம் அணிந்து சங்கல்பம் செய்யும் போது காப்பு கட்டுவது எந்தெந்த விரதங்களின் போது என்று கூற முடியுமா?

விநாயக சஷ்டி, கந்த சஷ்டி விரதங்களின் போது

8042) இந்தக் காப்பை எப்போது அவிழ்க்க வேண்டும்?

விரதம் முடிந்த மறுநாள் அதாவது பாரணையிலன்று காலை விதுர் ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும்.

8043) விநாயக சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து இடையிலே கைவிட்டு விரதக் காப்பையும் அவிழ்த்து வீசிய பெண் யார்?

இலக்கணசுந்தரி

8044) இலக்கண சுந்தரி யாருடைய மனைவி?

விக்கிரமாதித்த மன்னனின்

8045) விரதக் காப்பை வீசியதால் இலக்கண சுந்தரிக்கு நேர்ந்தது என்ன?

அன்றிலிருந்து அநேக கஷ்டங்களை அடைந்து மன்னனால் விலக்கப்பட்டு காட்டையடைந்தாள்.

8046) அவள் வீசிய காப்பு எதன் மீது விழுந்தது?

ஒரு அவரைக் கொடி மீது

8047) அந்த அவரைக் கொடிக்கு என்ன நேர்ந்தது?

அளவின்றிச் செழித்து வளர்ந்தது.

8048) அவரைக் கொடியிற் கிடந்த விரதக் காப்பைக் கண்டெடுத்து அணிந்து கொண்டது யார்?

பணிப்பெண்ணொருத்தி

8049) இவள் இந்த விரதக் காப்பை என்ன செய்தாள்?

தான் அதனைக் கையில் கட்டி விரதம் அனுஷ்டித்தாள்

8050) அவ்விரத பலனாக அவள் பெற்ற பெறுபேறு என்ன?

மன்னனை மணந்து அரண்மனை சேர்ந்தது.

8051) காட்டில் இருந்த இலக்கணசுந்தரி என்ன செய்தாள்?

அங்கொரு மூதாட்டியின் அறிவுரைப்படி விநாயக சஷ்டி விரதத்தை மறுபடி தொடங்கி முறைப்படி நோற்றாள்.

8052) அந்நாளில் காட்டுக்கு வேட்டையாட வந்தது யார்?

விக்கரமாதித்த மன்னன்

8053) வேட்டையாட வந்த விக்கிரமாதித்தனுக்கு என்ன நடந்தது? களைப்பால் தாகம் ஏற்பட்டது

8054) விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

தண்ணீருக்காக இலக்கண சுந்தரி இருந்த குடிலை நாடினார்.

8055) இலக்கண சுந்தரியைக் கண்ட விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

மறுபடி அவளை மணம் செய்து அழைத்துச்சென்றான்.

8056) ஒரு பொதுத் தெய்வமாக வணங்கப்படுபவர் யார்?

விநாயகர்

8057) இவர் ஏன் ‘பொதுத் தெய்வமமாக’ கருதப்படுகிறார்?

இந்துக்கள், பெளத்தர்கள், வைஷ்ணவர்கள் என அனைவரும் வணங்குவதால்.

8058) பெளத்தர்கள் கணபதியை என்ன சொல்லி போற்றி வணங்குகிறார்கள்?

‘சித்தி தாதா’ என்று

8059) ‘கணபதி ஹிருதயம்’ என்ற ஸ்தோத்திரம் யாரால் உபதேசிக்கப்பட்டது?

புத்தபகவானால்

8060) இது யாருக்கு உபதேசிக்கப்பட்டது?

ஆனந்தர் என்பவருக்கு

8061) கணபதி ஹிருதயத்தை புத்தர் உபதேசித்தார் என்று எதில் கூறுப்பட்டுள்ளது?

நேபாள புராணக் கதையில்

8062) இந்து மதத்திற்கு மூலாதாரமாக விளங்குவது எது?

அறுவகைச் சமய வழிபாடு

8063) இதனை அருளியது யார்?

ஸ்ரீ சங்கரர்

8064) அறுவகைச் சமய வழிபாட்டில் கணபதியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயம் எது?

காணபத்தியம்

8065) விநாயகரின் திருவுருவம் எத்தனை என போற்றி வணங்கப்படுகிறது?

32

8066) அந்த 32 நாமங்களையும் தருக?

பால கணபதி, பக்தி கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்விஜ கணபதி, சித்தி கணபதி உச்சிஷ்ட கணபதி, ஷிய்ர கணபதி, விக்ன கணபதி, ஹோரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊருத்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாஷர கணபதி, ஷிப்ரபிரசாத கணபதி, ஹரித்திரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரணமோசண கணபதி, துண்டி கணபதி, துவிமுக கணபதி, மும்முக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812