புதன், 28 ஏப்ரல், 2010

அறநெறி அறிவு நொடி


சூரிய பகவான்




கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்

- தமிழர் நற்பணி மன்றம்


6738 சூரியனை மூன்று வித அக்கினிகளில் ஒருவராக விவரிப்பது எது?

ரிக்வேதம்.

6739 சூரியனையே உலகம் அனைத்திற்கும் ஒளி தருபவர் என எதில் விவரிக்கப்பட்டுள்ளது?

சாம வேதத்தில்.

6740 கொடும் நோய்களிலிருந்து விடுவிப்பதற்குச் சூரிய வழிபாடுதான் சிறந்தது என எதில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதர்வண வேதத்தில்

6741 சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம் எது?

செளரம்.

6742 சூரியனைப் பற்றிய செய்திகளைத் தெளிவுற கூறுவது எது?

சூரியபுராணம்.

6743 பூமிக்கு மேல் சூரிய மண்டலம் வரை உள்ளது எது? புவர்லோகம்.

6744 புவர்லோகத்திற்கு மேல் உள்ளது எது?

சுவர் லோகம்

6745 சுவர்லோகம் எது வரை உள்ளது?

மேல் துருவ மண்டலம் வரை

6746 மக்கள், வானவர், பிதிர்கள் ஆகியோரை வளர்ப்பது யார்?

சூரியன்

6747 மூச்சுடரால் உலகின் அகமும் புறமும் தழுவி சுடர்க் கொழுந்தாய் பேரொளியாய் சூரியன் விளங்குகின்றான் என்ற எவை முழங்குகின்றன?

வேதங்கள்.

6748 மேற்படி கூற்றின் உண்மையை கூறும் புராணம் எது? கூர்ம புராணம்

6749 எந்தெந்த பூசைகளின் போது சூரிய பூசைக்கு முன்னுரிமை வழங்கப்படும்?

சிவபூசை, ஆலய பூசை, யாக பூசை, சந்தியா வந்தனம்.

6750 சூரியன் யாரை மணந்தார்?

சஞ்சிகையை

6751 சஞ்சிகை யாருடைய புதல்வி?

துஷ்டாவின்

6752 சூரியன் யாருக்கு தந்தையானார்? வைவஸ்வதமனுயமன் அஸ்வினி தேவர்களுக்கு

6753 சூரியனுடைய வெம்மையைச் சகிக்க இயலாத சூரியனின் மனைவி சஞ்சிகை என்ன செய்தார்?

தனது நிழலைப் பெண்ணாக்கிவிட்டு சூரியனை விட்டு பிரிந்தாள்.

6754 அந்நிழல் யார்?

சாயாதேவி

6755 சாயாதேவியின் உறவால் சூரியனுக்கு பிறந்தவர்கள் யார்?

சாவர்னிமனு, சனிபத்திரை

6756 அதன்பின் சாயாதேவியின் சங்கதியை அறிந்த சூரியன் என்ன செய்தார்?

தவத்தில் தலை நின்ற தன் சஞ்சிகையை அழைத்து வந்தார்.

6757 அவர்கள் இருவரையும் சூரிய பகவான் எந்த சக்திகளாக்கிக் கொண்டார்?

உஷா, பிதத்யுஷா

6758 அருக்கன் சருஷினி என்னும் பெண்ணிடமிருந்து பெற்றுக்கொண்டது யாரை?

வால்மீகியை

6759 அகத்தியர், வசிட்டர் என்போருக்கு யார் மூலம் தந்தையானார்?

ஊர்வசி மூலம்

6760 பெண் குரங்கான இரு ஷவிரனுடன் கூடி பெற்றது யாரை?

சுக்கிரீவனை

6761 குந்திதேவியின் கூட்டத்தால் ஆதித்தன் யாரை மைந்தனாக்கிக் கொண்டார்?

கர்ணனை.

புதன், 21 ஏப்ரல், 2010




அறநெறி

அறிவு

நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்


(திருக்கேதீஸ்வரம்)

6723) ‘மஹாதுவட்டாபுரம்’ என புராதன காலத்தில் அழைக்கப்பட்ட தலம் எது? – திருக்கேதீச்சரம்

6724) மஹாது வட்டாபுரம் என்னும் பெயர் என்னென்ன பெயர்களில் மருவி வந்துள்ளது? – மாதோட்டம், மாந்தோட்டம், மாந்தை

6725) இத்திருத்தலம் எந்த தீர்த்தக் கரையில் உள்ளது? – பாலாவி

6726) இத்தலத்தில் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கும் சிவபிரான் யார்? - கேதீசநாதர்

6727) இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சக்தி எந்தத் திருப்பெயர் கொண்டு அழைக்க ப்படுகிறார்? - கெளரியம்மை

6728) திருக்கேதீச்சரத்தில் உள்ள தலவிருட்சம் எது? – வாகை

6729) ஈசன் என்னும் பதம் யாரைக் குறிக்கும்? – சிவபிரானை

6730) ஈசன் எழுந்தருளியிருக்கும் இடம் என்னவென்று அழைக்கப்படும்? - ஈஸ்வரம்

6731) திருக்கேதீச்சரத்தின் சிறப்புக் கூறும் புராணம் ஒன்று இருந்து மறைந்து விட்டதாக 1887லே இலங்கை வேந்திய சங்கத்திலே குறிப்பிட்டவர் யார்? - போக்

6732) தடஹிணகைலாச மஹாத்தியம் எந்த புராணத்தின் ஒரு பகுதியாகும்? – வடமொழியிலுள்ள ஸ்கந்த புராணத்தின்

6733) தட்ஷிணகைலாச மஹாத்மியத்திலே எந்தப் பகுதியிலே திருக்கேதீச்சரச் சிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ளது? – ஸ்ரீகேதீஸ்வர §க்ஷந்திர வைபவம் என்ற பகுதியில்

6734) திருக்கேதீச்சரத்தின் சிறப்பு எந்த ரீதியில் இதில் கூறப்பட்டுள்ளது? - பெளராணிக

6735) மாதோட்டம் என்னும் திருக்கேதீஸ்வரத்தில் அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கமாகக் கெளரியம்பிகை எவ்வாறு காட்சியளிக்கிறார்? - நேத்திரானந்தம் கொள்ளப் பஞ்ச கிருத்ய நடனம் செய்து கொண்டு இருக்கிறார்.

6736) அம்பாள் இவ்வாறு நடனம் செய்து கொண்டு இருத்தலினாலும் இவ்விலங்கை சிறந்ததாக இருக்கின்றது. இதற்கொப்பான தேசம் பிறிதொன்று உண்டானதும் இல்லை. இனி உண்டாவதும் இல்லை என்று கூறியவர் யார்? – முக்காலமும் உணர்ந்த சூதமுனிவர்

6737) சூதமுனிவர் யாருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது? - நைமிசாரண்ய முனிவர்களுக்கு

திங்கள், 12 ஏப்ரல், 2010


இனிய


புத்தாண்டு


வாழ்த்துக்கள்


கே. ஈஸ்வரலிங்கம்

Wish your

Happy

Sinhala and Hindu

New year

K. Eswaralingam



















அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்


    திருக்கோணேச்சரம்


    6715. இலங்கையின் கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மலைத் தொடர்களையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டுள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஆலயம் எது? திருக்கோணேச்சரம்


    6716. திருகோணமலையை வேறு எவ்வாறு அழைப்பர்?
    திரிகோணமலை


    6717. இதற்கு திரிகோணமலை என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?
    ஒரு புறம் கடலும் மற்றைய மூன்று பக்கங்களும் மலை சூழ்ந்து இருப்பதால் பொது வகையால் திரிகோணமலை எணப்பட்டது.


    6718. இம்மலைத் தொடரில் தொகுக்கப்பட்டுள்ள மலைகளின் பெயர்களைத் தருக?
    கோணேசர்மலை, கந்தசாமி மலை, வெள்ளாட்டிமலை, பாதாளமலை, மத்திளமலை, புறாமலை, கழகி மலை.


    6719. கோணேசர் மலையானது முக்கோண வடிவில் கடலினுள் நீண்டு கிடப்பதால் ஏற்பட்ட பெயர் என்ன?
    திரிகோணமலை.


    6720. மலைகளுக்கு இடையே சமுத்திரம் உட்புகுந்து இருப்பதால் திருகோணமலையில் உலக பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகம் அமைந்திருக்கிறது. இந்த இயற்கைத் துறைமுகத்தில் இந்த நுழைவாயிலிலுள்ள மலையினை என்ன வென்று அழைப்பர்?
    பாதாளமலை.


    6721. கோணேசர் கோயிலைக் கட்டியவன் யார்?
    மனு மாணிக்க ராஜா எனும் மன்னர்.


    6722. அவர் இந்தக் கோயிலை கட்டிவித்தது எப்போது?
    கி.மு. 1300 ஆம் ஆண்டிற்கு முன்னர்.























































ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ ஸ்தாபகர்


தமிழர் நற்பணி மன்றம்







(முருகன்)

6100) முருகனுக்குரிய வேறு பெயர்கள் சிலவற்றைத் தருக?

கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன்

6101) முருகு என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை, தேன்.

6102) முருகு என்ற சொல்லுக்கு இவ்வாறு பல பொருட்கள் இருப்பதால் முருகன் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறான்?

முருகன் மாறாத இளமையும் அழியாத அழகும் குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத் தன்மையும் தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறான்.

6103) மெல்லின, இடையின வல்லின மெய் எழுத்துக்களுடன் ‘உ’ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் எந்த சக்திகளைக்குறிக்கின்றன?

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி

6104) சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தை உடையவன் யார்?
முருகன்

6105) சரவணபவன் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன?
நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும்.

6106) சரவணபவன் என்ற சொல்லில் ‘ச’ என்பது எதைக் குறிக்கும்? மங்களம்

6107) ‘ர’ என்றால் என்ன?
ஒளி கொடை

6108) ‘வ’ என்றால் என்ன?
சாத்துவீகம்

6109) ‘ந’ என்றால் என்ன?
போர்

6110) பவன் என்றால் என்ன?
உதித்தவன்

6111) மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்களுடன் தோன்றியதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன?
சரவணபவன்

6112) விசாகன் என்பதன் பொருள் என்ன?
பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள்.

6113) ‘வி’ என்பதன் பொருள் என்ன?
பட்சி

6114) சாகன் என்பதன் பொருள் என்ன?
சஞ்சரிப்பவன்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

(சாக்தம்)


6080 சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?

சாக்தம்

6081 இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு எது?

சக்தி வழிபாடு

6082 சிவம் என்பது என்ன?

மெய்ப்பொருள்

6083 பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு என்ன பெயர்?

சக்தி

6084 சக்தி முத்தொழில்களை செய்யும் போது பெறும் பெயர்களைத் தருக?

பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்திராணி.

6085 சக்தியை சிவத்துக்கு ஒப்பிடும் போது அழைக்கப்படும் பெயர் என்ன?

துர்க்கை

6086 சக்தி தீமையை அழிக்கும் போது பெறும் பெயர் என்ன?

காளி

6087 இராமன் இலங்கைக்கு வரும் முன் யாருக்கு பூஜை செய்தார்?

துர்க்கைக்கு

6088 அவதார புருஷராகிய கண்ணன் யாருக்கு பூஜை செய்துள்ளார்?

காத்யாயினி

6089 சங்கராச்சியார் யாரைப் பூஜை செய்தார்?

சாரதாவை.

6090 இராமகிருஷ்ணர் யாரை வணங்கி வந்தார்?

காளியை.

6091 ஜகதம்பா உணவு அளிக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?

அன்ன பூரணி.

6092 சக்தி அனைத்துக்கும் அரசியாக இருக்கும் போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறாள்?

இராஜராஜேஸ்வரி.

6093 சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது எவ்வாறு போற்றப்படுகிறான்?

பராசக்தி என்று

6094 சக்திக்கு தனி உரிமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் புராணங்களின் செல்வாக்கினாலும் தோன்றிய மதம் எது?

சாக்தம்.

6095 பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதம் எது?

சாக்தம்.

6096 சைவத்திற்கும் சாந்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

முதன்மை வேறுபாடே

6097 சிவத்தையன்றிச் சந்தியை வழிபடுவது என்று கூறிய முனிவர் யார்?

பிருங்கி முனிவர்

6098 அம்மாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது எது?

கோடுகளாலான யந்திர வழிபாடாகும்.

6099 சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை என்னவென்று அழைப்பர்?

ஸ்ரீ சக்கர பூசை.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812