செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(10316) உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்பது ஏன்? உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில், பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. (10317) நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பது ஏன்? பண்டைக் காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் ‘என் சிற்பம் எப்படி? என்று, அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.’ கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. (10318) பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது ஏன்? அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. (10319) பாக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழியின் பொருள் என்ன? இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலிஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும். (10320) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும், என்ற பழமொழியின் பொருள் என்ன? இதன் அர்த்தம் ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும். (10321) சேலை கட்டிய மாதரை நம்பாதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மைப் பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும் போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மைப் பொருள். (10322) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதுதான் உண்மை. அதாவது ஆற்றுப் படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

திங்கள், 9 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10292) அனுமானுடைய தாய் யார்? அஞ்சனாதேவி 10293) அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்ன செய்து கொடுத்துள்ளார்? உளுந்து வடை 10294) உளுந்தினால் போஷாக்கு கிடைப்பது உடலின் எந்த பகுதிகளுக்கு? எலும்பு 10295) ராம ராவண யுத்தம் நடைபெற்ற போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றவர் யார்? அனுமான், 10296) ராவணன் அம்பு தொடுக்க அம்பால் தாக்கப்பட்ட அனுமான் அந்த காயத்திற்கு மருந்தாக என்ன செய்தார்? தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டார். 10297) வெண்ணெய் சார்த்தும் பழக்கம் எப்படி உருவானது? வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையால் 10298) மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன் னால் கோலம் போடுவார்கள். மணக் கோலம் காணவேண்டிய பெண்கள் கோலம் போடும்போது என்ன செய்ய வேண்டும்? கோலத்தின் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதிக்க வேண்டும். 10299) இவ்வாறு வைப்பதால் என்ன நடக்கும்? இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். 10300) மாட்டுச் சாணத்தால் ஏற்படும் தன்மை என்ன? கிருமிநாசினி 10301) இவ்வாறு பூவைப்பதற்குரிய வேறு காரணங்கள் ஏதாவது உண்டா? பூ மலர்ந்திருப்பது போல வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு திகழ்வார்கள் என்பது நம்பிக்கை 10302) புஷ்பவதி ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில் பூ வைத்து கோலமிட்டால் என்ன நடக்கும்? புஷ்பதிவாகும் வாய்ப்பு உருவாகும். 10303) இறைவன் உருவாக்கிய ஏழு உலகங்களும் எவை? சத்திய லோகம், தபோ லோகம், ஜனோ லோகம், சொர்க்கம், மஹர் லோகம், புனர் லோகம், பூலோகம். 10304) சத்தியலோகத்தில் இருப்பது யார்? பிரம்மன் 10305) தபோலோகத்தில் இருப்பது யார்? தேவதைகள் 10306 ஜனோ லோகத்தில் இருப்பது யார்? பித்ருக்கள் 10307) சொர்க்கத்தில் இருப்பது யார்? இந்திரன் முதலான தேவர்கள் 10308) புனர்லோகத்தில் இருப்பது யார்? கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் 10309) பூலோகத்தில் இருப்பது யார்? மனிதர்கள், விலங்குகள் 10400) இந்த ஏழு உலகங்களும் எங்கு உள்ளன? பூமிக்கு மேலே.

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா

ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 03ம் தேதியன்று தமிழ் கலாச்சார இரவு நிகழச்சி நடைபெற்றது. மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆக்டகோன் தியேட்டரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில் பல்வேறு வகையான நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பெர்த் பகுதிக்கான இந்திய கன்சல் ஜெனரல் எம்.சுப்பராயுடு மற்றும் பெர்த் பகுதி தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 2 தலைமை ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812