வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

06ம் வகுப்பு


(11486) அட்சர அப்பியாச ஆரம்பம் என்று அழைப்பது எதனை?
ஏடு தொடக்குதலை

(11487) மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை பண்புகளை எவ்வாறு அழைப்பர்.
விழுமியங்கள்

11488) உண்மை என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மெய்ம்மை

11489) நன்கு முற்றாத தேங்காயை எவ்வாறு அழைப்பர்?
முட்டுக்காய்

11490) பதில் என்பதற்குரிய ஒத்த கருத்துள்ள சொல் எது?
மறுமொழி

11491) சம்பந்தர் எத்தனை திருமுறைகளை பாடினார்?
முதல் மூன்று திருமுறை

11492) சுந்தரமூர்த்தி எத்தனையாம் திருமுறையை படினார்?
7 ஆம் திருமுறையை

11493) திருவாசகம் எத்தனையாம் திருமுறை?
8 ஆம் திருமுறை

11494) திருப்புகழை பாடியவர் யார்?
அருணகிரிநாதர்

11485) மாவட்டபுரம் என்ற சொல்லில் “மா” என்பது எதனை குறிக்கும்?
குதிரையை

11486) இதில் “விட்ட” என்ற சொல் எதனை குறிக்கும்?
நீங்கிய

11487) “புரம்” என்ற சொல் எதனை குறிக்கும்?
இடம்

11488) மாவிட்டபுரத்தின் தலவிருட்சம் எது?
மாமரம்

11489) பால்குடம் எடுப்பது ஏன்?
ஒருவன் பால் குடம் எடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்துகொண்டு அதனை செய்கின்றபோது குடத்தை சுத்தம் செய்வதுபோல தனது மனதையும் சுத்தப்படுத்துகிறான்.

அதனை பக்தியுடன் தனது சிரசின் மீது வைத்துக்கொண்டு தன்னை மறந்த நிலையில் ஆலயத்துக்கு செல்கிறான். இதனை தத்துவரீதியாக பார்க்கிறபோது குடம் என்றால் மனித சரீரம். கீழே போட்டால் குடம் உடைந்துவிடும். மனது கெட்டால் மனிதன் அழிந்து விடுவான்.
 
இப்படி பால்குடம் எடுக்கிற பக்தனுக்கு ஆண்டவனுக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனை என்ற சத்தும் அதனை சுமப்பதால் ஏற்படும் சித்தும் அபிN'கத்தால் ஏற்பட்ட திருப்தி என்ற ஆனந்தமும் கிடைக்கிறது. இது அவன் நினைத்துள்ள நல்ல எண்ணங்களை, நல்ல காரியங்களை நடத்தி வைத்துவிடுகிறது. 

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

6ஆம் வகுப்பு


(11468) மருத்து நீர் வைத்து மங்கல நீராடுவது எந்த பண்டிகையின் போது? சித்திரை புத்தாண்டு

(11469) ஐப்பசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சத்துச் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை எது?
தீபாவளி

(11470) கிருஷ்ண பகவான் அழித்த அசுரனின் பெயர் என்ன?
நரகாசுரன்

(11471) நாகராசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினத்தை எந்த பண்டிகையில் கொண்டாடுகிறார்கள்?
தீபாவளி

(11472) திருக்கார்த்திகை விரதம் எந்த தெய்வத்துக்குரிய விரதம்?
முருகன்

(11473) வெள்ளிக்கிழமை எந்த கடவுள்ளுக்காக விரதமிருப்பர்?
முருகனுக்கு

(11474) சுக்கிரவார விரதம் எந்த கடவுளுக்குரியது?
சக்தி

(11475) கேதாரகெளரி விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11476) பிரதோஷ விரதம் எந்த கடவுளுக்குரியது?
சிவன்

(11477) மஹா நவமி விரதம் எந்த கடவுளுக்குரியது?
விஷ்ணு

(11478) தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் இவை ஐந்தையும் என்னவென்று கூறுவார்கள்?
பஞ்சபுராணம்

(11479) பஞ்சபுராணத்தை ஓதும் போது முதலில் சொல்ல வேண்டியது என்ன? திருச்சிற்றம்பலம்

(11480) பஞ்சபுராணத்தை ஓதியபின் பாடப்படுவது என்ன?
திருப்புகழ்

(11481) கர்ண வேதனம் என்று அழைப்பது எதனை?
காது குத்தலை

(11482) நாமகரணம் என்றால் என்ன?
பெயர் சூட்டுதல்

(11483) குழந்தை பிறந்து எத்தனையாம் நாளில் துடக்கு கழிக்கப்படும்?
31 ஆம் நாள்

(11484) காது குத்துவதற்கு சிறப்பான நாள் எது?
தைப்பூசம்

(11485) அன்னப் பிரசனம் என அழைப்பது எதனை?
சோறூட்டலை

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ காளியம்மன் ஆலயம்

இன்று கொழும்பு வெள்ள வத்தை மயூராபதி என்று அழைக்கப்படும் இடத்தில் அதாவது 1880 ஆம் ஆண்டுக்கும் 1890 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நெசவாலை ஒன்று அமைக்கப்பட்டது. அது அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட காலம் இந்த நெசவாலையை தனியார் நிறுவன மொன்று ஆரம்பித்து. அன்றைய காலகட்டத்தில் நெசவுத் தொழிலா னது இலங்கைக்கு புதிய தொழிலாக இருந்து.

எனவே இந்த நெசவாலை யில் வேலை செய்யக்கூடிய அனு பவசாலிகள் எவரும் இலங்கையில் இருக்கவில்லை. இதனால் இலங் கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலி ருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததுபோல் இந்த நெசவாலையில் வேலை செய்வதற்கும் தமிழகத்தி லும் கேரளாவிலும் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப் பட்டனர்.

அந்த தொழிலாளர்கள் குடியிருப்பதற்காக இந்தப் பகுதியில் தொடர் மாடி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. அங்கு குடி யேறிய மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை இங்கும் தொடர விரும்பினார்கள். அதற்கமைய அந்த தொடர் குடியிருப்புகளுக்கு மத்தியில் வழிபாட்டுக்காக ஒரு மண்டபம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு காத்தல் கடவுளாகிய திருமாலின் அவதாரமாகத் திகழும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அமைக்கப்பட்டது.

அந்த ஆலயத்திற்கு முன் நின்ற இரு அரச மரங்களுக்கும் வேப்ப மரத்துக்கும் இடையில் சூலாயுதத்தை வைத்து அன்னை காளிகா அம்பாளாக வழிபடத் தொடங்கினார்கள். கால சுழற்சிக்கு ஏற்ப அரச மரமும் வேப்ப மரமும் ஓங்கி வளர்ந்தது போல் ஆதிமூலமாகிய நாராயணனினதும் அவரின் தங்கை என கருதப்படும் அன்னை காளிகா அம்பாளின் அருள் மகிமையாலும் இவ்வாலயம் வளர்ச்சி பெற்று வந்தது.

அன்னையின் பல்வேறு வடிவங் களில் அகோர வடிவமும் ஒன்று அன்பே உருவாக அமைதியாக சாந்தமாக இருந்து அருள்பாலித்து வரும் அம்பாள் அசுரர்களிடமிருந்து தேவர்களை காப்பாற்றவும் தீயவர்கள் கொடியவர்களிடமிருந்து பக்தர்களை காப்பாற்றவும் அகோர வடிவம் கொண்டாள். அவ்வாறு அகோர வடிவம் கொண்ட அன்னையவளைத் தான் காளிகாம்பாள் என அழைக்கி ன்றனர். எனவே இந்த அன்னையை சாந்தப்படுத்தும் முகமாகவே ஆண்டு தோறும் ஆவணி மாதம் குளிர்ந்த உணவமுதினையும் கனியமுதங்க ளையும் படைத்து பூஜை செய்து வந்தனர். இதனை குளிர்க்கஞ்சி வைபவம் என்று அழைத்தனர்.
இன்று தாலி வரம் வேண்டி, குழந்தை வரம் வேண்டி பேதி, அம்மை போன்ற நோய் நொடிகள் தீர வேண்டி தமது எண்ணங்கள் ஈடேற வேண்டி நேர்த்தி வைத்து வழிபட்டு வருவது போல் அன்று அம்மை, பேதி நோய்களிலிருந்து தம்மை காக்கும் படி பக்தர்கள் வேண்டி வந்தனர்.
காலப் போக்கிலே இந்த நெசவா லையில் இங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டதால், நெசவாலை ஆரம்பிக்கப்பட்ட காலத் தில் தொழிலுக்காக அக்கறையிலிருந்து கடல் கடந்து அழைத்து வரப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இவர்கள் இடம்பெயர்ந்து குடியிருப் புகளை விட்டுவிட்டு சென்றதால் அதுவரை காலமும் அவர்கள் வாழ்ந்து வந்த குடியிருப்புகள் அனைத்தும் உடைத்து அகற்றப்பட்டன.
அந்த குடியிருப்புக்கள் இருந்த இடத்தில் இரட்டை மாடி வீடுகள் அமைக்கப்பட்டன. அந்த மாடி வீட்டிலே இருந்த ஓர் அறைக்கு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு ஓர் அறைக்குள் இயங் கத் தொடங்கிய ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தை ஏகாம்பரம் என்று கங்காணி தலைமை தாங்கி நிர்வகித்து வந்தார்.
அவருக்குப் பின் இந்த ஆலயத்தின் பரிபாலன நடவடிக்கைகள் அனைத் தும் இரத்தின வேலு முதலியார் வசம் வந்தது. இவர்கள் இருவரினதும் நிர்வாகத்திற் குப் பின் இவ்வால யத்தை பரிபாலிக்கும் பொறுப்பு சிவப்பிர காசம் பேராயிரம் உடையா ரிடம் ஒப்படைக்கப்பட்டது. அம்பா ளின் அருள் மகிமையால் இவரது தலைமையில் ஆலயத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பயனாக ஆலயத்தில் சமயப் பணி களும் சமூகப் பணிகளும் துளிர்விட்டு தளிர்க்கத் தொடங்கின. இவ்வாறே இவ்வாலயத்தில் வருடந்தோறும் சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தேறத் தொடங்கின.
ஆலய பணிகளில் இவ்வாறு அளவிடற்கரிய அம்சங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில் ஈ. பி. சுப்பிரமணியம் என்பவரின் பரிபாலனத்தின் கீழ் இவ்வாலயம் புதுப்பொழிவு பெறத் தொடங்கியது. 1977 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் ஆதரவோடு ஆலயத் திற்கென மண்டபமொன்று அமைக் கப்பட்டது. இம் மண்டபம் அமைந்த பின் வருடாந்தம் நடைபெற்று வந்த சிவாரத்திரி விழா மென்மேலும் சிறப் பாக நடந்தேறி வந்தது குறிப்பிடத் தக்கது. 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரையில் அந்த மண்ட பத்திலே தான் ஆலய வழிபாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்தன.
1980 ஆம் ஆண்டு இங்கு புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டது. அப்போது ஆலயம் முதன் முதலில் எங்கு அமைந்திருந்ததோ அதே அரச மரத்திற்கு அருகில் மீண்டும் ஆலயம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஆலயத்திற்கென 4 x 34 x 5 1/2 அடி இடத்தில் மடமொன்று அமைக்கப்பட்டது. இதில் வேறு மதத்தினரின் மதஸ்தானமொன்று அமைக்க திரைமறைவில் முயற்சிகள் நடந்தன.
திரைமறைவில் நடக்கின்ற அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்து கருவறுக்கக் கூடியவள் அல்லவா இந்த காளிகாம்பாள் இரவோடு இரவாக அம்பாள் தரி சனம் தரத் தொடங்கினாள். இதன் விளைவாக அவர்களது எண்ணங்கள் அனைத்தும் முயற்சிகள் அனைத்தும் ஈடேறாமல் தவிடு பொடியாகின.
அரச மரத்தடியில் சூட்சும வடிவில் சூலாயுதமாக நின்று அருள் மழை சுரந்த அம்பாள் அன்று தொடக்கம் திருவுருவாய் காட்சிதரத் தொடங் கினாள். அம்பாளின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் இவ் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய் யப்பட்டு 48 நாட்கள் மண்டலா பிஷேகமும் செய்யப்பட்டது.
மண்டலாபிஷேக பூர்த்தி தினத்தன்று அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப் பட்டதுடன் அம்பாள் சர்வ அலங்கார நாயகியாக வண்ணமிகு இரதத்தில் ஏறி வெளி வீதியுலா வந்து அருள் பாலித்தார்.
1983 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய கலவரம் வெடித்த போதும் இவ்வாலயத்துக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் ஆலயத்தைத் தவறான பாதையில் இட்டுச்செல்ல பலரும் பல்வேறு முயற்சிகளை செய்த போதும் அவை ஒன்றும் ஈடேறாமல் விடவே புதிய பரிபாலன சபை யொன்று ஸ்தாபிக் கப்பட்டு தொடர்ந்து ஆலய சடங்குகள் இடையூறின்றி நடத்தப்பட்டு வந்தது.
எனினும் ஆலய உடைமைகளும் ஆலயத்துக்குரித்தான உரிமை ஆண வங்களும் கைமாறியிருந்தன. அவற்றை மீட்டெடுப்பதற்கு பெரும் போராட்டம் நடத்தவேண்டிய சூழ் நிலை இருந்தது. அவற்றை மீட்டபின் மரத்தடி ஆலயமாக இருந்த இந்த மடாலயத்தை மணிமண்டப ஆலய மாக கட்டியெழுப் புவதற்கான திருப் பணிகளை மேற்கொள்ள திருப்பணிச் சபையொன்று உருவாக்கப்பட்டது.
இவ்வாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்ட போது அம்பாள் எவ்வாறு குடிகொண்டு அருள் பொழியத் தொடங்கினாளோ அதே முறையில் ஆலயம் அமைக்கப்பட்ட துடன், ஆரம்பத்தில் இங்கு வைத்து வணங்கப்பட்ட வந்த பிள்ளையார், லிங்கம், வேலாயுதம் ஆகிய பரிவார மூர்த்தங்கள் அனைத்தும் மீளப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1987.03.22 ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப் பட்டு திருப்பணி வேலைகள் செய் யப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிள்ளையார், பத்திரகாளி.
சிவன், நாகதம்பிரான், இவ் ஆலயத்திலே இருந்த புராதன அம்பாள், நவக்கிரகம் ஆகிய மூர்த் தங்களை அமைக்க எண்ணி அந்த இடங்களில் அவற்றை அமைக்க இடவசதி போதாமையால் அரச மரத்தைச் சுற்றி இந்த பரிவார மூர்த்தங்களின் சந்நிதானங்கள் அமைக்கப்பட்டு இனிதே கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.
அரச மரமும் வேப்ப மரமும் பின் னிப்பிணைந்து இந்த அம்பாளுக்கு நிழலாக குடை பிடித்து அருள் சுரந்துகொண்டிருப்பதால் இந்த ஆலயத்தை நாடிவருகின்ற பக்தர் களுக்கு அருள்மழை பொழிகின்ற அம்பாள் அந்த அடியார்களின் அனைத்து குறைகளையும் அதாவது குழந்தைப் பேறு, திருமணப் பேறு, தொழில் வாய்ப்பு, கல்வியில் பாண்டித்தியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அடியார்களின் குறைகளை தீர்த்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

(11453) தேங்காயைத் துருவலாகப் படைப்பது எங்கே?


 ஸ்ரீரங்கத்தில் 

இங்கு தேங்காயை ஏன் துருவலாகப் படைக்கிறார்கள்?
ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.

(11454) வீட்டில் நிலைப்படியில் யார் இருப்பதாக ஐதீகம்?
மகாலட்சுமி

(11455) வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது ஏன்?
வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்கலகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். இதற்கான காரணம் ஒன்று உண்டு. வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்.
நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும்.

(11456) அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்?
மலையில் ஏறும்போதும் கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும் நமது இரத்தத்தில் ஒட்சிசன்; கலக்கிறது.

(11457) இந்த ஒட்சிசன் என்ன செய்கிறது?
இது ஹீமோகுளோபின் என்னும் இரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில், மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது.

(11458) இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது ஏன்?
இது எப்படி என்றால் மேலே குறிப்பிட்ட கோயில்களுக்கு அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812