புதன், 28 ஆகஸ்ட், 2013

சுப்ரபாதம்

கே.ஈஸ்வரலிங்கம் 10244) சுப்ரபாதம் என்பதில் ‘பா’ என்றால் என்ன? வெளிச்சம் 10245) சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன? இனிய காலைப்பொழுது 10246) பாVதம் என்றால் என்ன? வார்த்தைகள் 10247) சுபாக்ஷதம் என்றால் என்ன? நல்வார்த்தைகள் 10248) கன்யா என்றால் என்ன பொருள்? பெண் 10249) சுகன்யா என்றால் என்ன பொருள்? நல்ல பெண் 10250) தாரம் என்றால் என்ன? மகிழ்ச்சி 10251) சாத்திரத்தில் தாரம் என அழைப்பது எதனை? ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை 10252) இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் என்ன? பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். 10253) ஆன்மீகத்தில் எது உயர்ந்த சந்தோசம்? முக்தி 10254) பிரணவம் என்பதற்குரிய அர்த்தம் என்ன? புதியது 10255) விரதம் என்ற சொல்லுக்குரிய பொருள் என்ன? கஷ்டப்பட்டு இருத்தல். 10256) உபவாசம் என்பதன் பொருள் என்ன? இறைவனுக்கு அருகில் இருத்தல் 10257) விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது என்பது ஏன்? அரிசி, வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 10258) சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் எந்த நிற ஆடை அணிவது ஏற்றது? கருப்பு 10259) கருப்பு நிற ஆடை அணிவதால் ஏற்படும் நன்மை என்ன? தீங்கு விளைவிக்கக்கூடிய மிருகங்கள் நெருங்காது 10260) கருப்பு ஆடைக்கு அடுத்தபடியாக தெரிவு செய்யக்கூடிய நிறம் எது? காவி 10261) காவி உடை அணிவதால் ஏற்படும் பலன் என்ன? தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது. 10262) மஞ்சள் நிறத்தின் மகிமை என்ன? பக்தியின் அடையாளம் 10263) மஞ்சள் ஆடைக்கு உள்ள சக்தி என்ன? திருவிழா காலங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி மஞ்சள் ஆடைக்கு உண்டு. 10264) சாஸ்திரங்களில் எத்தனை விஷயங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது? ஒன்பது 10265) அந்த ஒன்பது விஷயங்களும் எவை? ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டு சச்சரவு, மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் – மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் புகழ், சந்தித்த அவமானம், பயன்படுத்திய மந்திரம்.

கே.ஈஸ்வரலிங்கம்

10266) பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா? நல்லது, லாபம் 10267) ஆண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்? கேடு 10268) இடது கண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என எதில் கூறப்பட்டுள்ளது? இராமாயணத்தில் 10269) இராமாயணத்தில் எத்தனை பேருக்கு இடது கண்கள் துடித்தன? மூவருக்கு. 10270) யார் யாருக்கு இடது கண்கள் துடித்தன? சீதை, வாலி, இராவணன் 10271) சீதைக்கு எப்போது இடது கண் துடித்தது? விடுதலைக்கான நேரம் நெருங்கிய போது 10272) வாலிக்கும் இராவணனுக்கும் எப்போது இடது கண்கள் துடித்தன? அவர்களது அழிவு நெருங்கிய போது. 10273) பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடது கண் துடித்தால் என்ன அர்த்தம்? அவனது முடிவு காலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். 10274) வாசலில் கோலமிடக்கூடாதது எப்போது? திதியன்றும் அமாவாசை நாளிலும் 10275) முன்னோரது ஆசி பெற உகந்த நாட்கள் எவை? அமாவாசை, வருஷ திதி, மகாளய பட்சம் 10276) சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் எது? அமாவாசை 10277) ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்ற பழமொழி முதன் முதலில் எப்போது சொல்லப்பட்டது? இந்த பழமொழிக்கு உரிய பொருள் என்ன? குருசேத்திர போரில் போருக்கு முன் தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கெளரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார். அதில் தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன். இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். 10278) இத்தகைய கர்ணனை எதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார்கள்? கொடைத்தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கு. 10278) நமது உடல் எதனால் ஆனது? தசையால் 10279) தசை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாவது எது? உளுந்து 10280 உளுந்து உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவு என்ன? சதைப்பிடிப்பு ஏற்படும் 10281) ஆஞ்சநேயருக்கு உளுந்து வடை மாலை அணிவிப்பது ஏன்? சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்து வடை மாலை அணிவிக்கிறோம்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10234) புண்யாக வாசனம் யாருக்கு, எதற்கு செய்யப்படுகிறது? வருண பகவானை இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம் (10235) புண்யாகம் என்றால் என்ன? புனிதம் வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்று பொருள். (10234) பஞ்சகவ்யம் எவை? அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகிற பசுவிடத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் (10235) பஞ்சகவ்யம் எவ்வாறு செய்யப்படும்? பஞ்சகவ்யங்களை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாய்க் கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர். (10236) கணபதி ஹோமம் என்பது என்ன? பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகா கணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகா கணபதி ஹோமம். (10237) நவகிரஹ ஹோமம் என்பது என்ன? கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்குமுரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல். (10238) மகாசங்கல்பம் என்பது என்ன? எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணைபுரியட்டும் என்று நல் வாக்கியம் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படுகிறது. (10239) தனபூஜை எவ்வாறு செய்யப்படும்? கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது (10240) தனபூஜை செய்வதால் ஏற்படும் பலன் என்ன? இந்த தன பூஜையைப் செய்வதால், வீட்டில் தனம் சேரும். (10241 சகல தெய்வங்களும் உறையும் தெய்வமாக போற்றப்படுவது எது? கோமாதா என்ற பசு (10242) கோபூஜை எவ்வாறு செய்யப்படுகிறது? பசுவை அலங்கரித்து பூஜை செய்யப்படும். (10243) இந்த பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கே.ஈஸ்வரலிங்கம் (10219) கோயிலுக்குச் செல்வதால் பிரச்சினைகள் பல எளிதில் தீர்கின்றன என்பது நிதர்சனமான உண்மை, அப்படி நிகழ என்ன காரணம்? மந்திரங்கள் பல உறைந்து நிறைந்து உள்ள இறைவனின் உறைவிடம் அது என்பதால் நமக்கு பிரச்சினை தீர நல்வழி காட்டுகிறது. அதோடு அக்கோயிலில் சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய யந்திரங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பது ஒரு காரணம். (10220) மந்திரம் என்பதற்கு என்ன பொருள்? சொல்பவனைக் காப்பது என்று பொருள். (10221) குடமுழுக்கு என்பதற்கு என்ன பொருள்? மந்திரங்களை ஒருங்கிணையச் செய்து, ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை நிலைபெறச் செய்வதற்கு, குடமுழுக்கு என்று பெயர். (10222) கும்பாபிஷேகத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? வைணவத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் அழைப்பர், (10223) கும்பாபிஷேகத்திற்கான விதிகளை எழுதியவர் யார்? வாமதேவ என்கிற வடமொழி நூலாசிரியர். வாமதேவர் (102224) இது பற்றி எதில் எழுதியுள்ளார்? வாமதேச பத்ததியில், (10225) இதில் யார் யாருக்கு கூறுவதாக எழுதப்பட்டுள்ளது? சிவபெருமான் முருகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. (10226) இதைப்படித்து அறிந்துகொண்டால் என்ன பலன் கிட்டும்? குடமுழுக்கு விழாவினை நேரில் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதிகம். (10227) கும்பாபிஷேக வகைகள் எவை? ஆவர்த்தம், அநாவர்த்தம், அந்தரிதம் (10228) ஆவர்த்தம் என்பது என்ன? இயற்கைச் சீற்றங்களால் சிதிலமடைந்துவிட்ட ஆலய மூர்த்தங்களை சரிசெய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இப்பெயர். (10229) அநாவர்த்தம் என்பது என்ன? தவசிகள், ரிஷிகள், முனிவர்களால் மலைப் பகுதிகளிலிருந்து கல் கொண்டு வரப்பட்டு தெய்வச்சிலை செய்து வழிபடுவது. (10230) அந்தரிதம் என்பது எதனை? பாவிகள், திருடர்கள், உலோபிகளால் சேதப்படுத்தப்பட்ட கோயிலைப் புதிதாக்கி கும்பாபிஷேகத்தை நடத்துவதை. (10231) குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு யாரை பிரார்த்திக்க வேண்டும்? மகா கணபதியை (10232) விக்னேஸ்வர பூஜை ஏன் செய்யப்படுகிறது? கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படு வதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க. (10233) விக்னேஸ்வர பூஜை என்பது எதனை? மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை

ஆடி அமாவாசை நாளை

ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள். அது என்ன கதை தெரியுமா? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக் கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதி வேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒரு நாள் காளி கோயில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்த பின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள், தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழுச் செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள். சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப் புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. கிராமக் கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812