திங்கள், 29 ஜூலை, 2013

Exabition

le="text-align: left;" trbidi="on">

கதிர்காமம்

கே.ஈஸ்வரலிங்கம் (10200) முருக வழிபாட்டுக்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மையாலும் புகழ் பெற்றுத் திகழும் ஆலயம் எது? கதிர்காமம் (10201) கதிர்காமத்துக்கு பல நூல்களிலும் வழங்கப்பட்டுள்ள பெயர்கள் எவை? ஏமகூடம், பூலோக, கந்தபுரி, காரிகாப்பு, வரபுரி, பஞ்சமூர்த்தி வாசம், விஸ்வகானனம், சகல சித்திரகரம், அகத்தீயப்பிரியம், பிரமசித்தி, அவ்வியர்த்த மூர்த்தம், சித்தகேத்திரம், கதிரை, ஜோதிஷ்காமம். (10202) கதிர்காமக் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள திருநாமங்கள் எவை? கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக் கடவுள், ஆறுமுகப் பெருமான், பரஞ்சோதிப் பெருமான், சிதாகாயநாதன், அவ்வியர்த்த மூர்த்தி. (10203) முருகவேள் சூரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கோடு எழுந்தருளியபொழுது எந்த இடத்தை அடைந்தார்? கதிர்காமத்தை (10204) அவர் பாசறை அமைத்து வீற்றிருந்தது எந்த இடத்தில்? மாணிக்க கங்கை அருகில் (10205) கதிர்காம, மாணிக்க கங்கை அருகில் பாசறை அமைத்து வீற்றிருந்ததால் அவ்விடம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்பட்டது? ஏமகூடம் (10206) வள்ளி நாயகியாரைக் கண்டு காதலித்து மண முடித்த இடம் எது? கதிர்காமம் (10207) முருகப் பெருமான் முதலில் யாரை வணங்கினார்? தெய்வானை (10208) முருகன் வள்ளியை மணமுடித்து எங்கு என்று கைலாச புராணம் கூறுகின்றது? திருத்தணி மலைக்கருகிலுள்ள வள்ளி மலையில் (10209) முருகன் தாம் விரும்பும் தலமாக எதனை வள்ளி, தெய்வானையிடம் கூறினார்? கதிர்காமத்தை (10210) கதிரைமலையிலுள்ள ஏனைய மலைகள் எவை? பிள்ளையார் மலை, வீரவாகுமலை, தெய்வயானையம்மன் மலை. (10211) இந்த மலைகளின் நடுவே முச்சுடர்களின் பேரொளியாய் விளங்குவது எவை? சோமன், சூரியன், அக்கினி (10212) கதிர்காமக் கோயிலில் வருடந்தோறும் எத்தனை திருவிழாக்கள் நடைபெறும்? நான்கு (10213) கதிர்காமத்தில் முதற்றிருவிழா எப்பொழுது நடைபெறும்? சித்திரை வருடப் பிறப்புத் தினத்தன்று (10214) இரண்டாவது திருவிழா எப்பொழுது நடைபெறும்? ஆனி அல்லது ஆடியில் (10215) ஆனி அல்லது ஆடியில் நடைபெறுவது என்ன திருவிழா? பந்தற்கால் நடும் திருவிழா (10216) கந்தசுவாமியார் வள்ளி நாச்சியாரை மணமுடித்தற்கு வேண்டிய பந்தல் அமைப்பதற்கு நடைபெறும் திருவிழா எது? கன்னிக்கால் நடும் திருவிழா (10217) கன்னிக்கால் நடும் திருவிழா எப்போது நடைபெறும்? ஆடி அல்லது ஆவணியில் நடைபெறவிருக்கும் திருவிழாவுக்கு ஒரு மாதத்துக்கு முன். (10218) கதிர்காமத்தில் நான்காவதாக நடைபெறும் திருவிழா எது? திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா.

திங்கள், 22 ஜூலை, 2013

தானம்

10184) அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? வறுமையும் கடன்களும் நீங்கும் 10185) பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிப்பது என்ன தானம்? பூமிதானம் 10186) ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய தானம் என்ன? கோதானம் 10187) வஸ்திரதானத்தால் ஏற்படும் பலன் என்ன? ஆயுளை விருத்தியாக்கும். 10188) கண்பார்வையை தீர்க்கமாக்கும் தானம் எது? தீபதானம் 10189) தீபதானம் செய்வதால் வேறு என்ன நன்மை ஏற்படும்? பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் 10190) தேன் தானம் வழங்கினால் ஏற்படும் பலன் என்ன? புத்திரபாக்கியம் உண்டாகும். 10191) அரிசி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? பாவங்கள் தீரும் 10192) தயிர் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? இந்திரிய விருத்தி 10193) நெய் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? நோய் நிவர்த்தி 10194) நெல்லிக்கனி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஞானம் உண்டாகும் 10195) பால் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? துக்கம் நீங்கும் 10196) தேங்காய் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும் 10197) தங்கம் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? குடும்ப தோஷ நிவர்த்தி 10198) வெள்ளி தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? மனக்கவலை நீங்கும் 10199 பழங்கள் தானம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? புத்தியும் சித்தியும் உண்டாகும்

திங்கள், 15 ஜூலை, 2013

அமெரிக்க ஐலாந்திலுள்ள பிரமாண்டமான ஆலயம் அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாகாணத்தில் ராக்ஸ் ஐலாந்து பகுதியில் உள்ள பிரமாண்டமான ஆலயம் குவார்டு சிட்டி இந்துக் கோயிலாகும். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் உள்ள லோகநாதன் குமிட்யாலா என்பவரது இல்லத்தில் இந்துக்கள் சிலர் ஒன்று கூடி இப் பகுதியில் இந்துக் கோயில் அமைக்க தீர்மானித்தனர். 2002 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி குவார்டு சிட்டி பகுதியில் இந்துக் கோயில்கள் அமைக்கும் பணியில் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் ஈடுபட துவங்கினர். இந்த இந்து மதக் கூட்டங்களின் விளைவாக சுமார் 8000 சதுரடி நிலப்பரப்பில் வழிபாட்டுத்தலம் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்கான இடம் நவீனமயமாக உருவாக்கப் பட்டது. பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக இக்கோயிலின் பணிகள் உருப்பெறத் துவங்கின. இப் பகுதியில் வாழ்ந்த இந்துக்களின் பெருத்த ஆதரவுடன் நிலைத்த கட்டிடமாக இக் கோயில் வடிவமைக்கப்பட்டது. இதற்காக இந்துக்கள் பலர் பல வழிகளிலும் பொருள் உதவி செய்தனர். சுமார் 7294 சதுரடி பரப்பளவில் பாலாஜி, ராதா கிருஷ்ணன், சீதா ராமா, நரசிம்மா, சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் முருகன் போன்ற தெய்வங்களையும் உள்ளடக்கிய பிரமாண்ட ஆலயமாக குவார்ட்டு சிட்டி இந்துக் கோயில் உருவானது. 2007 ம் ஆண்டு ஏப்ரல் 27 முதல் 29 ஆம் திகதி வரை கொண்டாட்டப்பட்ட நூதன உற்சவ மூர்த்தி சம்ப்ரோஷன விழாவின் போது ஏப்ரல் 28 ஆம் திகதி இக்கோயிலின் மிகப் பெரிய அளவில் இக்கோயிலின் திறப்பு விழா நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களின் நன்கொடைகளைக் கொண்டு இக்கோவில் வளர்ச்சி அடைந்தது. இக்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள், நிதி திரட்டும் பணிகள், வடிவமைத்தல் போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர். இல்லினோய்ஸ் மாகாணத்தில் லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கொழும்பில் ஆடிவேல் விழா

கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று உள் வீதி உலாவுடன் சுவாமி காலை 7.05 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி பவனி வந்து அருள்பாலிப்பார். கொழும்பு, புறக்கோட்டை, முதலாம் குறுக்குத்தெரு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து புறப்படும் சித்திரத்தேர், பிரதான வீதி, கோட்டை ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். அங்கு பக்தர்களுக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும். அதன்பின் பி. ப. 1.30 மணிக்கு காலி முகத்திடலிலிருந்து புறப்படும் சித்திரத் தேர் காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் அமுது அளிக்கப்படும். எதிர்வரும் 21 ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சுவாமிக்கு காலை 5 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு வேல் விழா விசேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் கிராமிய இசை பேரரசர் நாட்டுப்புற பாடல் நல்லிசை நாயகன் கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமியுடன் கிராமிய பாடல் இசை, குயில் மக்கள் இசை மாதரசி அனிதா குப்புசாமி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். பெளர்ணமி தினமான எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு விபூதிப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் வேல் விழா அர்ச்சனையும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமி இசை மாதரசி அனிதா குப்புசாமி தம்பதிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு திருவமுது போஜனம் வழங்கப்படும். எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து காலி வீதியூடாக பம்பலப்பிட்டி சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலிமுகத்திடலை வந்தடைந்து அருட்காட்சி புரிவார். எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அலங்கார புருஷராக சித்திரத் தேரில் கொலுவிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி காலிமுகத்திடலிருந்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டம், பிரதான வீதி வழியாக இரண்டாம் குறுக்குத் தெருவில் திரும்பி, ஒல்கொட் மாவத்தை, சந்தி வரை சென்று திரும்பி, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதி சென்று நான்காம் குறுக்குத்தெரு, கெயிசர் வீதி சந்தி வழியாக முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் திரும்பி மீண்டும் பிரதான வீதி, கான் மணிக் கூட்டுகோபுர சுற்று வட்டம், பேங்ஷால் வீதி வழியாக முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள தேவஸ்தானத்தை வந்தடைவார். சுவாமிகள் எழுந்தருளி நகர்பவனி வரும் போது சித்திரத் தேரை சுற்றியோ அல்லது தேருக்கு முன்னால் பன்னீர் தெளிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிக்க விரும்பும் பன்னீரை அபிஷேகம் செய்ய ஆலயத்திற்கு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சித்திரத் தேர் நகர் பவனி நாட்களில் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு விடுமுறை வழங்கி வேல் விழாவில் பங்கேற்குமாறும் வேல் விழா பவனி வரும்போது தங்களது வர்த்தக நிலையங்களிலும் இல்லங்களிலும் வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டி, புஷ்பங்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து பூஜை தட்டுடன் பட்டு சாத்தி, மலர் சொரிந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியை வரவேற்று உபசரிக்கும்படியும் ஆலய அறங்காவலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கே.ஈஸ்வரலிங்கம்

10180) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக போற்றிக் கொண்டாடப்படும் திருத்தலம் எது? எல்லா வைணவ ஆலயங்களிலும் சொர்க்க வாசல் வைபவம் நிகழும் என்றாலும், அவற்றுள் முதலிடம் பெறுவது திருவரங்கமேயாகும். எம்பெருமானுடன் போராடியே அப்பெருமானின் அருள்பெற்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகத்தார் யாவரும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாக பெருமாள் அர்ச்சாவதாரமாக வெளிவரும்போது அவரை தரிசிக்கும் யாவரும், அவரைப் பின்தொடர்ந்து வருவோர்களும் தங்கள் பாவங்கள் யாவும் நீங்கப்பெற்று முக்திப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் இன்றும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் திருவரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று திருவரங்கம் சொர்க்கவாசல் வைபவத்தைக் காண்போரும், பெருமானை தரிசிப்போரும் பிறப்பில்லா பெருநிலை அடைவர். 10181) வைகுண்ட ஏகாதசியன்று அடியவர்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் என்ன? உண்ணாமல் நோன்பிருப்பது, பேசாமல் மெளனிப்பது, உறங்காமல் பகவானின் நாமங்களை தியானிப்பது, தவறாமல் திருமாலை தரிசிப்பது. இவை யாவும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியன. ஏகாதசியன்று பாகவதக் கதைகளை படிப்பதும், கேட்பதும் மிக நன்று. 10182) ஏகாதசியன்று சிரார்த்தம் செய்யலாமா? ஏகாதசியில் சிரார்த்தம் வந்தால் திதி கொடுப்பவரும், அவர் மனைவியும் மக்களும் அவசியம் சிரார்த்த உணவை (அதாவது வழக்கப்படி திதி கொடுத்த அன்று தயாரிக்கப்படும் உணவை) சாப்பிடவேண்டும். மாதம் இருமுறை வரும் ஏகாதசியைவிட வருடத்திற்கொரு முறை வரும் திதி மிகவும் சிறப்பானது. ஏகாதசி அன்று வரும் திதி ஏகாதசி விரதப் பலனையும் தரும். 10183) துவாதசியன்று சேர்க்க வேண்டியவை? விலக்க வேண்டியவை என்ன? ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று விரதத்தை பூர்த்தி செய்வர். அன்று சமையலில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்துக்கொள்வது மிக விசேஷம். துவாதசியன்று புடலங்காய், பகல் தூக்கம், இரு வேளை சாப்பாடு பாலுணர்வு ஆகியவை விலக்கப்பட வேண்டும்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

கே.ஈஸ்வரலிங்கம்

10172) விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன? பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு விட்டு, அநாதையாக விட்டுவிட்டதால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர். இது தவறான அர்த்தம் கற்பிக்கிறது. தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தப் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தார் போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவியில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருள். 10173) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து மகசூ கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று. கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். 10174) கரி நாளின் முக்கியத்துவம் என்ன? கரி நாளைப் பற்றி அறிந்துகொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர். இதில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைக் கரி நாளாக கணக்கிடுகிறார்கள். பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர். எனவே விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம் உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது. 10175) தர்மம் ஏன் கர்ணனைக் காக்கவில்லை? உயர்ந்த சர்க்கரைப் பொங்கலாய் இருந்தால் கூட அடுத்தவர் சாப்பிட்ட தட்டில் வைத்துக் கொடுத்தால் நாம் அதை உண்ண மாட்டோம். நல்லவர்களாய் இருந்தால்கூட நல்ல செயலைச் செய்தால் கூட அதர்மத்தின் பக்கம் நின்றால் மரணம்தான் பரிசு. கர்ணன் தானம் செய்தது உயர்ந்ததாய் இருந்தாலும்கூட, அவன் அதர்மத்தின் சொரூபமான துரியோதனின் பக்கத்தில் இருந்ததால் தர்மம் அவனைக் காக்கவில்லை. 10176) சகுனம் பார்க்கலாமா, கூடாதா? சகுனம் கட்டாயம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் வீட்டில் வளர்க்கும் பூனை நமக்கு குறுக்கே வரும் போது சகுனம் பார்ப்பது மூடத் தனமாகும். இதய வலி என்று அவசரமாக ஆஸ்பத்திரி செல்ல வேண்டி இருக்கையில், பிரசவ காலத்தில் சகுனம் பார்த்துக்கொண்டிருப்பது மூடத்தனமாகும். ஒரு நல்ல செயலை நிறுத்தி நிதானமாகச் செய்யும் போது சகுனம் பார்க்கலாம். அவசர காலத்தில் சகுனம் பார்ப்பது தவறு என்று கூறப்படுகிறது. 10177) ஏழைகளையே கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவது ஏன்? ஏழைகளை மட்டும் கடவுள் அதிகம் சோதனைக்குள்ளாக்குவார் என்று எண்ண வேண்டாம். பணம் உள்ளவர்களுக்கும் வசதி உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது; வழக்கு வருகிறது; பிரிவு வருகிறது. கடவுள் எல்லோருக்கும் சோதனையைக் கொடுக்கத்தான் செய்கிறார். பலருக்கு வெளியே தெரிவதில்லை. சிலருக்கு வெளியே தெரிகிறது. 10177) எந்த விரதம் வலிமை வாய்ந்தது? ஏகாதசி விரதம் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. 10178) வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு வைபவம் எதற்காக? வைகுண்ட ஏகாதசியன்று திருமால் பாற்கடலில் பக்தர்களுக்கு பள்ளி கொண்டிருப்பது போன்று காட்சியளிப்பதுடன், சொர்க்கத்துக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறார். கலியுகத்தின் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு செல்வார் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் கதவுகள் மூடியே இருந்தனவாம். ஆழ்வார் மோனநிலையில் வீடுபேறு பெற்ற அன்றே அது திறக்கப்பட்டது. இந்த வரலாற்றை நினைவூட்டவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. 10179) சொர்க்கவாசல் வைபவம் உணர்த்தும் தத்துவம் என்ன? பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போன்றே அர்ச்சாவதாரத்தில் உருவ வழிபாட்டு முறையில்தானே முக்தி அடையும் ஒருவனாக நடித்து, அவ்வாறு முக்தி பெறுபவன் தன் முக்திப் பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பெறுவானோ அவற்றை நிகழ்த்திக் காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும், திருவுலாவும் நடைபெறுகிறது. ஆம் அன்று பெருமாள் எல்லோருக்கும் முன்னோடியாக தாமே முதலில் வைகுண்டம் நுழைந்து, தம் அடியவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்கிறார்.

திங்கள், 1 ஜூலை, 2013

வைரவர்

கே.ஈஸ்வரலிங்கம் 10153) காவல் தெய்வமாகவும் காத்தல் கடவுளுமாக விளங்குபவர் யார்? வைரவர் 10154) வைரவர் எவற்றை காவல் காப்பவராக விளங்குகிறார்? இவ்வுலகையும் உலகில் உள்ள திருக்கோயில்கள், தீர்த்தங்களையும் 10155) வைரவரை வேறு எப்பெயர்களில் அழைப்பார்கள்? §க்ஷத்ர பாலகன், தீர்த்த பாலகன் 10156) §க்ஷத்ர பாலகன் என்று அழைப்பது ஏன்? திருத்தலங்கள் எனப்படும் §க்ஷத்திரங்களை காவல்புரிவதால் 10157) தீர்த்த பாலகன் என்று அழைப்பது ஏன்? கடல் பொங்கி எழுந்து பூமியை அழிக்காமல் காப்பதற்காக 10158) உலகில் படைக்கும் உயிர்களைக் காக்கும் உரிமை யாருக்கு உண்டு? சிவனுக்கு 10159) அவ்வுயிர்களைக் காக்க சிவன் என்ன உருவில் வெளிப்படுகிறார்? வைரவர் 10160) படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஆற்றும் இறைவனுக்கு என்ன பெயர்? வைரவர் 10161) படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் வேறு எவ்வாறு அழைப்பர்? பரணம், ரமணம், வமணம் 10162) பரணம் என்பது எதனை? உலகில் உயிர்களை தோற்றுவித்து நிரப்பும் படைத்தொழில் செய்தலை 10163) ரமணம் என்பது எதனை? உயிர்களைக் காக்கும் தொழிலை 10164) நெடுங்காலம் வாழ்ந்து சோர்ந்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கி கொள்ளும் அழித்தல் தொழிலை என்னவென்று சொல்வார்கள்? வமணம் 10165) ப+ரணம், ர+மணம், வ+மணம் ஆகிய மூன்றும் சேர்ந்தது எது? (பைரவம் (பை+ர+வ+ம்) 10166) பைரவரின் வலக்கரத்தில் இருப்பது என்ன? டமருகம் 10167) இந்த டமருகம் எதனை குறிக்கிறது? படைத்தலை 10168) கபாலம் எதனை குறிக்கிறது? காத்தலை 10169) மேனியில் பூசிய விபூதி எதனை குறிக்கிறது? அழித்தலை 10170) பைரவர் முத்தொழில்களையும் ஆற்றும் போது எவ்வாறு அழைக்கப்படுகிறார்? விரிஞ்சி வடுகர், முகுந்த வடுகர், உருத்திர வடுகர் 10171) இவர்களுக்கு தேவிகளாக விளங்குபவர்கள் யார்? வாக்தேவி, வைஷ்ண சக்தி, கெளரிகை

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812