திங்கள், 30 ஜூன், 2014

கதிர்காமம்

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் கதிர்காமத்தில் உள்ளது. அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் மன்னனான எல்லாளனுடனான போரில், மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும் போரில் வென்றப் பின்னர் இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம இரகசியமான புனிதத்துவம் மிக்க இடம். காற்றோ வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறு கதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பு+சகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்ல முடியாது பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரம இரகசியமான மந்திர சக்திவாய்ந்த இயந்திரத்தைக ;கொண்ட வெண் துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சு+ட்சுமசக்தி எங்கும் நிலவும். பக்திமேலீட்டினால் சிலர் விழி நீர்மல்கப்;பாடி ஆட இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம்; தேடுவர். முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவும் கொண்ட அரசமரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததன் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புணர்ந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. கதிர்காம கந்தனின் பெயர் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வுhன சாஸ்;திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பு+ரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பு+சையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

ஆனி

10905) சூரியனின் வடதிசைப் பயண காலமான உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது எது? ஆனி 10906) நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதை கொண்ட மாதம் எது? ஆனி 10907) இந்த மாதத்தில் பகல் பொழுது எவ்வளவு நேரத்தைக் கொண்டது? 12 மணி நேரமும் 38 நிமிடமும் கொண்டது. 10908) தேவர்களின் மாலை நேரப் பொழுது எது? ஆனி மாதம் 10909) ஆனி மாதத்தில் சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கும்? மிதுன ராசியில் 11000) ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த என்ன மாதம் என்று அழைப்பர்? மிதுன மாதம் 11001) இந்த மிதுன மாதத்தை வட மொழியில் என்னவென்று அழைப்பார்கள்? ஜேஷ்ட மாதம். 11002) ஜேஷ்டா என்றால் என்ன? மூத்த அல்லது பெரிய 11003) தமிழ் மாதங்களில் பெரிய மாதம் எது? ஆனி 11004) ஆனி மாதத்தை ஏன் பெரிய மாதம் என்று அழைக்கிறார்கள்? பிற மாதங்களுக்கு இல்லாதபடி அதிக நாட்களை கொண்டதால் 11005) இந்த மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது? 32 நாட்கள் 11006) ராசிகளில் சற்று பெரிய ராசி எது? மிதுன ராசி 11007) மிதுன ராசி பெரிய ராசி என்பதால் நடப்பது என்ன? இதனை கடக்க சூரியனுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. 11008) ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பது என்ன? ஒரு பழமொழி 11009) மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்று மேற்கூறப்பட்ட பழமொழிக்கு விளக்கம் கூறுவது சரியா? தவறு 11010) ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக எதனோடு இணைந்து வரும்? பெளர்ணமியோடு 11011) பெளர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் எப்படி பட்டதாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது? அரச யோகத்தினை ஒபற்றதாக இருக்கும் என்று 11012) ‘ஆனி மூலம் அரசாளும்’ என்று கூறுவது ஏன்? ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பொதுவாக பெளர்ணமியோடு இணைந்து வருவதால் ஆனி மூலத்தில் பிறக்கும் குழந்தைகள் அரசாளும் என்பதாலே ஆகும். 11013) ‘ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழி உண்மையில் எவ்வாறு வரவேண்டும்? ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம். 11014) ‘ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியின் இங்கு பெண் என்பது எதனை குறிக்கிறது? கன்னியை 11015) கன்னி மாதம் என்றழைக்கப்படுவது எந்த மாதம்? புரட்டாதி 11016) புரட்டாதி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாள் எதனோடு இணைந்து வரும்? அஷ்டமி அல்லது நவமியோடு 11017) இதனை இன்னும் விளக்கமாக கூறுவதாக இருந்தால்? துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள் 11018) இந்த நாட்களில் என்ன நடந்தது? அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கினாள். 11019) பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்வழக்கு எவ்வாறு தோன்றியது? புரட்டாதி மூலம் நட்சத்திர நாளன்று அம்பாள் அசுரர்களை நிர்மூலமாக்கியதால் ஆனி மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பதற்குரிய உண்மையான பொருளை உணராமல் பொதுவாகவே மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஆகாது என்று தவறாக புரிந்து கொண்டிருகிறோம்.

விநாயகர்

கே. ஈஸ்வரலிங்கம் 10898) பிள்ளையாரின் மறு பெயர்கள் சில தருக? விநாயகர், கணநாதர், ஆணைமுகன், 10899) அதிகாலையில் துயிலெழுந்ததும் முதலில் செய்ய வேண்டியவைகள் யாவை? பொழுது விடிவதற்கு 5 மணிக்கு முன் துயிலெழ வேண்டும். படுக்கை அறையை விட்டு மற்றொரு இடத்திற்கு சென்று திருவெண்ணீற்றை நெற்றியிலும் உடம்பிலும் முறைப்படி பூசிக்கொள்ளவேண்டும். அது சமயம் ஆசானை மனதில் கொள்ளுதல் வேண்டும். பின்னர் நிலமாகிய பூமிதேவியை கண்களில் ஒற்றிக்கொண்டு தாயே எனது கால்கள் நின்மீது படுவதால் ஏற்படுகின்ற பெரும் பாவத்தினைப் பொறுத்தருள்வாயாக என்று பிரார்த்திக்கவேண்டும். பின்னர் வினைதீர்க்கும் விநாயகப் பெருமானையும்.சிவபெருமானையும். உமாதேவியையும் திருமாலையும் கதிரவனையும் மற்ற தேவர்களையும் முனிவர்களையும் முறையாக தியானிக்கவேண்டும். 10900) விநாயகப்பெருமானின் இராஜஸ குணத்தில் தோன்றியவர் யார்? பிரம்மா. 10901) விநாயகப்பெருமானின் தாமச குணத்தில் தோன்றியவர் யார்? ஸ்ரீ கிருஷ்ணர். 10902) விநாயகப்பெருமானின் சாத்வீக குணத்தில் தோன்றியவர் யார்? சிவபெருமான். 10903) விநாயகப்பெருமானின் திருவயிற்றுள் அடங்கியுள்ள எவை? அண்ட சராசங்களும் அனந்த கோடி ஜீவராசிகளும். 10904) விநாயகப்பெருமானின் பேரருளால், பிரம்மாவின் படைப்புத்தொழிலில் முதலில் தோன்றியவர்கள் யாவர்? கிரியா சக்தி, ஞான சக்தி என்ற இரு சக்திகளும் சித்தி புத்தி என்னும் திருப்பெயர் கொண்ட தெய்வ மகளிராய் பிரம்மாவின் முன்னே தோன்றினர். பிரம்மா இவர்களைப் பார்த்து நீங்கள் இருவரும் விநாயகப்பெருமானின் அருளால் அவதரித்தீர்கள், ஆதலால் எனது அருந்தவப்புதல்விகளாக என்னுடனேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ள, அதற்கு அவர்கள் இருவரும் உங்கள் புத்திரியர்களாக விளங்குவதால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கின்றோம் என்று கூறி பிரம்மாவின் பாதங்களை பணிந்து பூரித்து நின்றனர்.

செவ்வாய், 17 ஜூன், 2014

வியாழபகவான் அகிலாவதி

கே. ஈஸ்வரலிங்கம் 10867) பிரபஸ்பதியின் வேறு சிறப்புகள் என்ன நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர், மங்கலமே வடிவானார். 10868) வியாழபகவானின் தந்தை யார்? ஆங்கிரச முனிவர் 10869) ஆங்கிரச முனிவர் யாருடைய புத்திரர்? பிரம்மதேவரின் 10870) வியாழபகவானின் தாயார் யார்? சிரத்தா தேவி 10871) வசிதா என்று யாரை சொல்வதுண்டு? வியாழபகவானின் தாயாரை 10872) அகிலாவதி யார்? நாககன்னி 10873) இந்த அகிலாவதியான நாககன்னி எதில் வருகிறாள்? மகாபாரதத்தில் 10874) அகிலாவதி யாரை மணந்தார்? கடோற்கஜனை 10875) கடோற்கஜன் யாருடைய மகன்? பீமனின் 10876) கடோற்கஜன் அகிலாவதியை எவ்வாறு மணம் புரிந்தான்? அகிலாவதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து 10877) அகிலாவதியின் மகன் யார்? பார்பரிகா 10878) பார்பரிகாவுக்கு அகிலாவதி என்ன பழக்கினாள்? போரிடப் பழக்கினாள் 10879) யாருடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள்? தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து 10880) பார்பரிகா பாரதப்போரில் எத்தனையாம் நாளில் போரிடத் தொடங்கினான்? பதினான்காம் நாளில் 10881) பதினான்காம் நாளில் யாருடன் இணைந்து போரிடத் தொடங்கினான்? கெளரவருடன் 10882) பார்பரிகா யாரையெல்லாம் வென்றான்? பீமன், கடோற்கஜன். அருச்சுனன் ஆகியோரை 10883) பார்பரிகா யாரால் கொல்லப்பட்டான்? கிருஷ்ணனால் 10884) அசுவத்தாமன் யார்? மகாபாரதக் கதை மாந்திர்களுள் ஒருவன் 10885) அசுவத்தாமன் யாருடைய மகன்? துரோணாச்சாரியாருடைய. 10886) அசுவத்தாமன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் யார்? அவரது தந்தை துரோணாச்சாரியார் 10887) அசுவத்தாமன் இந்துக்களின் நம்பிக்கைப்படி எவ்வாறு கருத ப்படுகிறான்? ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவனாக 10888) குருசேத்திரப் போரில் அசுவத் தாமன் இறந்துவிட்டதாக யார் மூலம் கூறப்பட்டது? தருமர் 10889) இந்த வதந்தியை நம்பி கவலை அடைந்தவர் யார்? துரோணர் 10890) இவர், இவ்வாறு கவலையில் இருந்த போது இவரை கொன்றவர் யார்? திருஷ்டத்யும்னன் 10891) திருஷ்டத்யும்னன் யார்? இளவரசன் 10892) குருசேத்திரப் போரில் 18 ஆம் நாள் இரவில் கெளரவர் பக்கம் உயிர் பிழைத்திருந்தவர்கள் எத்தனை பேர்? மூவர் 10893) அந்த மூவரில் ஒருவர் யார்? பார்பரிகா 10894) பாண்டவர்கள் படைகளின் தலைமைப்படைத் தலைவர் யார்? திருஷ்டத்யும்னன் 10895) திருஷ்டத்யும்னனைக் கொன்றவர் யார்? பார்பரிகா 10896) பார்பரிகா திருஷ்டத்யும்னன் என்ன செய்து கொண்டிருக்கும்போது கொன்றான்? தூக்கத்தில் இருக்கும் போது 10897) பார்பரிகா இதேபோல் வேறு யாரையெல்லாம் அன்றிரவு கொன்றான்? பாண்டவர்களின் ஐந்து குலக் கொழுந்துகளையும் பாண்டவ படை வீரர்களையும்.

வியாழன், 12 ஜூன், 2014

வியாழ பகவான்

10857) வியாழபகவான் இந்திரனுக்கு என்ன சொன்னார்? “தேவேந்திரா ஏன் அழுகிறாய்” விவரம் அறிந்தவன் ,நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்படமாட்டான் செல்வங்களும் இப்போது உனக்கு நேர்த்ததைப் போன்ற பிரச்ச்னைகளும் நிரந்தரமானவை அல்ல அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளையவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச்சக்கரம் உருளும் போது கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா அதைப் போல நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இப்படி இருக்கும் போது, ஏன் அழுகிறாய்? நல்லதோ கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது யாராக இருந்தாலும் தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றார். 10858) யாராக இருந்தாலும் நாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று வியாழ பகவான் யார் கூறியதாக கூறுகிறார்? பரமாத்மா 10859) பரமாத்மா யாருக்கு இவ்வாறு உபதேசித்திருக்கிறார்? பிரம்மனுக்கு 10860) பரமாத்மா பிரமனுக்கு எதில் இவ்வாறு உபதேசிக்கிறார்? சாமவேதத்தில் 10861) வியாழ பகவான் இந்திரனுக்கு வேறு என்ன உபதேசம் செய்தார்? தானம் செய்தவன் மகிமை அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம் ஆகியவற்றை 10862) தானப் பலன்கள் எப்போது அதிகரிக்கும் என்று வியாழ பகவான் இந்திரனுக்கு கூறினார். இடத்திற்குத் தகுந்தபடி செய்யும் போது என்று 10863) இவ்வாறு உபதேசம் செய்த வியாழ பகவான் வேறு என்ன செய்தார் துயரத்திலிருந்து விடுபட்டு பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். 10864) குருபகவான் நவக்கிரகங்களில் எத்தனையாவது இடத்தில் உள்ளார்? ஐந்தாவது 10865) குருபகவானுக்குரிய வேறு பெயர்கள் என்ன? வியாழ பகவான், பிரகஸ்பதி 10866) தேவகுருவாக சித்திர சபையில் வீற்றிருக்கும் இவர் எதில் சிறந்தவர்? கல்வியில்

திங்கள், 2 ஜூன், 2014

வியாழ பகவான்

10844) நவக்கிரகங்களிலேயே இதிகாச புராணங்களில் அதிக அளவில் இடம்பெற்றவர்கள் யார்? வியாழ பகவான்னும் சுக்கிராச்சாரியாரும் 10845) இவர்களில்தேவ குருவானவர் யார்? வியாழ பகவான் 10846) அசுரகுருவானவர் யார்? சுக்கிராச்சியார் 10847) குருவைப்பற்றி கூறப்படுகின்ற அருள் கூற்றுக்கள் எவை? குருஅருள் இன்றேல் திருவருள் இல்லை, குரு பார்க்ககோடி நன்மை 10848) சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தவர் யார்? இந்திரன் 10849) இந்திரன்யாருடைய சாபத்தால் அனைத்துச் செல்வங்களையும் இழந்தார்? துர்வாசரின் 10850) அனைத்துச் செல்வங்களையும் இழந்த இந்திரன் யாரைத் தேடி ஓடினான்? தேவ குருவான வியாழ பகவானை 10851) இந்திரன் வரும்போது வியாழ பகவான் என்ன செய்து கொண்டி ருந்தார்? ஜபம் செய்து கொண்டிருந்தார். 10852) வியாழ பகவான் யாரைப் பார்த்து ஜபம் செய்து கொண்டிருந்தார்? சூரியனைப் பார்த்து 10853) இந்திரன் எந்ததிசையை நோக்கி ஜபம்செய்துகொண்டிருந்தார்? கிழக்குநோக்கி 10854) வியாழபகவானைத்தேடிச் சென்ற இந்திரன் என்ன செய்தார் வியாழ பகவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி தன் துயரை எல்லாம் சொல்லி அழுதான் 10855) வியாழபகவான் என்னசெய்தார் இந்திரனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசம் செய்தார். 10856) வியாழபகவான் இந்திரனை எவ்வாறு அழைத்தார். தேவேந்திரா

அருச்சுனன்

10829) ஜிஷ்ணு என்றால் என்ன? எதிரிகளை வெல்பவன் 10830) ஜிஷ்ணு என்ற பெயர் யாருக்குரியது? அருச்சுனனுக்கு 10831) அருச்சுனனுக்கு உரிய இன்னுமொரு பெயர் என்ன? கீரிடி 10832) கீரிடி என்ற பெயர் எப்படி வந்தது? கீரிடத்தை அணிந்ததால் 10833) அருச்சுனன் யார் அளித்த கீரிடத்தை அணிந்தார்? இந்திரன் அளித்த 10834) அருச்சுனனுக்குரிய இன்னும் ஒரு பெயர் என்ன? சுவேதவாகனன் 10835) சுவேதவாகனன் என்றால் பொருள் என்ன? வெள்ளைக் குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன் 10836) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன? விபாச்சு 10837) விபாச்சு என்ற பெயர் எப்படி வந்தது? போர் விதிகளின்படி போரிடுபவன் என்பதால் 10838) அருச்சுனனுக்கு உரிய மற்றுமொரு பெயர் என்ன? குடாகேசன் 10839) குடாகேசன் என்றால் பொருள் என்ன? போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன் 10840) வாரணக் கொடியோன் என்ற பெயர் யாருக்குரியது? அருச்சுனனுக்கு 10841) அருச்சுனனுக்கு வாரணக் கொடியோன் என்ற நாமம் ஏன் வந்தது? அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன் என்பதால் 10842) அருச்சுனனுக்குரிய மற்றுமொரு பெயர் என்ன? பராந்தகன் 10843) பராந்தகன் என்றால் பொருள் என்ன? எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவர்.

அருச்சுனன்

10809) அருச்சுனன் அல்லது அரஜுனன் என்பது யார்? மகாபாரத காப்பியத்தில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திர ங்களுள் ஒருவன். 10810) அருச்சுனன் பஞ்ச பாண்ட வர்களில் எத்தனையாதவன்? மூன்றாமவன் 10811) அருச்சுனன் கிருஷ்ணன் யார்? நண்பன் 10812) அருச்சுனனுக்கு எதில் சிறந்தவனாக விளங்குகிறான்? வில் வித்தையில் 10813) பாண்டவர் மற்றும் கெளரவர்களுக்கு குருவானவர் யார்? துரோணர் 10814) துரோணரின் முதன்மையான சீடன் யார்? அருச்சுனன் 10815) குரு சேத்திரப் போரின் முன் கிருஷ்ண ருக்கும் அருச்சுனனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக விளங்கும் நூல் எது? பகவத்கீதை 10816) அருச்சுனனுக்கு எத்தனை மனைவியர்கள்? நான்கு 10817) அருச்சுனனின் நான்கு மனைவியரதும் பெயர்களைத் தருக? திரெளபதி, சுபத்திரை, உலுப்பு, சித்திராங்கதை 10818) அருச்சுனனுக்கு எத்தனை பிள்ளைகள்? நான்கு 10819) நான்கு பேரும் ஆண்களா, பெண்களா? ஆண்கள். 10821) அருச்சுன னின் அடை மொழிப் பெய ர்கள் என்ன? கெளந்தேயன், விஜயன். தனஞ்செயன். காண்டீபன், பார்த்தன் 10822) குந்தியின் மகன் என்பதற்குரிய அடை மொழி என்ன? கெளந்தேயன் 10823) போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன் என்பதால் எற்பட்ட அடைமொழி என்ன? விஜயன் 10824) அதிக செல்வங்களை போரில் கவர்ந்த தால் ஏற்பட்ட அடைமொழி என்ன? தனஞ்செயன், பார்த்தன், சவ்வியசாசி, பற்குணன். ஜிஷ்ணு, கீரிடி, சுவேத, வாகனன், விபாச்சு, குடாகேசன், வாரணக் கொடியோன், பராந்தகன் 10825) அருச்சுனனுக்கு காண்டீபம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன் என்பதால் 10826) குந்தியின் இயற்பெயர் என்ன? பிருதை 10827) குந்தியின் இயற்பெயர் பிருதை என்ப தால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? பார்த்தன் 10828) ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்பு களை வில்லில் இருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் அருச்சுனனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? சவ்வியசாசி 10829) அருச்சுனனுக்கு ‘பற்குணன்’ என்ற பெயர் எதனால் ஏற்பட்டது? பங்குனி மாதத்தில் பிறந்தவன் என் பதால்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812