திங்கள், 31 அக்டோபர், 2011

கம்போடியாவில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்








“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே திருக்கோவில்கள்.

கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன.

உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது அங்கோர்வாட் (தினிமிறிலிஞி- தீதிஹி) கோவில் மேரு.

ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் இது.

இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை.

திருக்கோவிலைச் சுற்றியும் அகழி. அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம் (தற்போது நூதனசாலையில் உள்ளது) 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள். வெளவால் நெற்றி மண்டபத்தில் இராமாயணம், பாரதப் போர்கள், பீஷ்மர் அம்புப் படுக்கை, திருப்பாற்கடல் கடைதல், அப்ஸரஸ் பெண்களின் நடனம், மனித வாழ்வியல் நெறிகள் என கருங்கல் புடைப்புச் சிற்பங்கள் சமஸ்கிருத எழுத்து, கல்வெட்டு ஆகியவற்றை நினைத்துப் பார்க்கவே மனம் அதிசயிக்கிறது. மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது.

ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

யாமும் சிவஸ்ரீ சிவக்குமார் பட்டர் (மதுரை சொக்கநாதப் பெருமானைத் தீண்டிப் பூசிக்கும் பேறு பெற்றவர்.

மலேசியா கோர்ட் மலைப்பிள்ளையார் கோவில் தலைமை அர்ச்சகராக உள்ளார்.)

இந்த அதிசய, அற்புத ஆலயத்தை நாமும் கண்டு தரிசித்து வந்தால் மேருவை வலம் வந்த புண்ணியம் கிட்டும்.

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8727) இலக்கியங்களில் முக்கியமானது எது?

வேதநூல்

8728)வாழ்க்கைக்கு மிக அவசியமான அனைத்தும் எதில் சொல்லப்பட்டுள்ளது.

வேதநூலில்

8729)இன்று மக்களிடையே வேதத்தைவிட செல்வாக்கு பெற்றுள்ளவை எவை?

புராணங்கள்

8730) கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், திருத்தலங்கள், விரதச் சிறப்புக்கள், பக்தியின் மேன்மை, வாழ்வின் ரகசியம் முதலியவற்றை உள்ளடக்கிய தத்துவ வடிவம் எது?

புராணங்கள்

8731) இந்த தத்துவ வடிவங்களை நிரம்பவே சொல்லி அழகு தமிழில் வடிவமைக்கப்பட்ட நூல் எது?

கந்தபுராணம்.

8732) முருகப்பெருமானின் பெருமையையும் ஆறுமுகக் கடவுளின் அருளின் அருமையையும் கூறும் நூல் எது?

கந்தபுராணம்

8733) மனிதன் செய்கின்ற குற்றங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இரண்டு

8734 )இரண்டு வகையான குற்றங்களையும் தருக

கிரிமினல், சிவில்

8735) இராமாயணம் எதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது

கிரிமினல்

8736) இராமாயணத்தில் வரும் கிரிமினல் குற்றம் எது?

ஒருவனது மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்தி சிறை வைத்தது.

8737) மகாபாரத்தில் நடந்தது என்ன?

ஒருவன் சொத்தை இன்னொருவன் அபகரித்துக்கொண்டு ஏமாற்றியது

8738) இந்த இரண்டு குற்றங்களையும் சொல்லி நீதி புகட்டும் நூல் எது?

கந்தபுராணம்

8739) வேதங்களின் விழுமிய கருத்துக்களை விளக்கத் தோன்ற இதிகாசங்களில் புராணங்களில் முதன்மையானது எது?

கந்தபுராணம்.

இந்தோனேசியாவில் ஆயிரத்துநூறு ஆண்டு பழைமையான இந்துக் கோயில் கண்டுபிடிப்பு






இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரண்டு இந்துக் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் கட்டுவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது இக்கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் உள்ள இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் தொடங்கின. அத்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரச தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு சிறிய கோவில்கள் வெளிப்பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோவிலில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்களும் உள்ளன.

விநாயகர் சிலை, லிங்கம், யோனி பீடம், பலிபீடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இவையனைத்தும் சேதம் அதிகமில்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ. தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக்கிறது.

இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால்தான் இந்தக் கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த சிலைகள் அனைத்தும் தொல்பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆய்வாளர்களின் தகவல்களின்படி ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, “கடாரம் கொண்டான்” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான்; மேலும் அவன் முன்னேறி இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு.

திங்கள், 24 அக்டோபர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


(இசை)


8717) வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறந்த நிலையை என்ன வென்று கூறுவார்கள்?

ஆலாபனை

8718) இசை என்பது இறைவனின் வடிவம் என்று எது கூறுகிறது?

மாண்டூக்ய உபநிஷத்

8719) நாதம் என பொருள்பட கூறுவது எதனை?

இசையை

8720) இறைவனின் நாத வடிவம் எது? ப்ரணவம்

8721) சன்னியாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விளக்கப்பட்டு இருப்பது என்ன?

இசை என்ற பாடல் வடிவம்

8722) சன்னியாசிகள் எவற்றில் மூழ்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

பாடல், நடனம், நாடகம் ஆகியவற்றில்

8723) சன்னியாசிகள் ஏன் இவற்றில் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

இவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

8724) மதங்களையும் உருவங்களையும் கடந்த இறை நிலையை என்ன வென்பர்?

முழு முதற் கடவுளான பிரம்ம நிலை

8725) இவ்வாறு கூறியவர் யார்?

திருமூலர்

8726) தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் எது?

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

திங்கள், 10 அக்டோபர், 2011

ஸ்ரீ ஞான பைரவர் ஆலயத்தில் சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்தி



கொழும்பு கிராண்ட்பாஸ், டவாஸ் லேன் அருள்மிகு ஸ்ரீ ஞான பைரவ சுவாமி தேவஸ்தானத்தில் புரட்டாதி மாத கடைசிச் சனிக்கிழமையாகிய எதிர்வரும் 2011.10.15ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை சனீஸ்வர கிரகதோஷ நிவர்த்திக்காக விசேட மஹாயாகம் நடாத்தப்படவுள்ளது.

சாகித்திய வியாகரணாச்சார்ய பிரம்மஸ்ரீ ச. சிரா பாலகிருஷ்ண ஐயரின் நல்லாசியுடன் ஸ்ரீ ஐயப்ப சேவாபீட பீடாதிபதி தேசபந்து சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் தலைமையில் இந்த யாகம் நடத்தப்படும். சனி திசை, சனி புத்தி, சனி பார்வை உள்ளோர் அனைவரும் தங்கள் பெயராலும் குடும்பத்தவர் வியாபார, ஸ்தாபன பெயராலும் சங்கற் பஞ் செய்து பவித்திரம்) தர்ப்பை அணிந்து இந்த முழுமையான யாகத்தில் கலந்து கொண்டு சனீஸ்வர தோஷ நிவர்த்தி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8701) சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என அனைத்து சமயங்களுமே போற்றிக் கொண்டாடும் வழிபாடு எது?

சரஸ்வதி வழிபாடு


8702) தேவிபக்தர்கள் சரஸ்வதியை எதன் அம்சம் என்று வழிபடுகின்றனர்?

திரிபுரசுந்தரியின்


8703) சீவகசிந்தாமணி எந்த மதத்தின் இலக்கியம்?

சமண மத இலக்கியம்


8704) சீவகசிந்தாமணியில் முதல் தொகுதி யாரின் புகழை பாடுகிறது?

சரஸ்வதியின் புகழை


8705) சீவக சிந்தாமணியில் யாரின் கல்விச் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது?

சீவகனின்


8706) இதில் யாரின் நலத்தை எல்லாம் சீவன் பெற்றதாக கூறப்பட்டள்ளது?

நாமகளின்


8707) சீவக சிந்தமாணியின் நாமகளின் அருளை சீவன் பெற்றதாக யார் கூறியுள்ளார்?

திருதக்கத் தேவர்


8708)மணிமேகலை எந்த மதத்தின் காவியம்?

பெளத்த மதத்தின்


8709)மணிமேகலையின் ஆசிரியர் யார்? சீத்தலைச் சாத்தனார்


8710)மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் சரஸ்வதியை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? சிந்தாதேவி

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812