செவ்வாய், 12 ஜூன், 2012


நன்மை செய்வதே உண்மையான விரதம் முருகபக்தரான கந்தசாமி முருகனுக்குரிய எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பார். இப்படி விரதம் இருப்பது தேவையா இல்லையா என்று கூட அவர் யோசித்ததில்லை. நோய்வாய்ப்படும் சமயத்திலும் கூட சிரமப்பட்டு விரதமிருப்பார். அவரது மனைவி வள்ளியும் முருகபக்தை. என்றாலும், கணவரைப் போல தீவிரமாக விரதத்தைப் பின்பற்ற அவரால் முடியவில்லை. கணவரிடம், விரதம் இருந்தால் தான் பக்தி என்று நினைக்காதீர்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் கந்தசாமி அதைக் காதில் வாங்கவில்லை. ஒரு கார்த்திகை விரதம். முருகன் கோயிலில் பக்தி சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவாளர் விரதம் என்ற தலைப்பில் பேசினார். வள்ளியப்பன் என்றொரு இளைஞன்.... நல்ல உழைப்பாளி. எதையும் வீணாக்க மாட்டான். நல்ல ஒழுக்கமும், பக்தியும் மிக்கவன். மலிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தான். அவனுடைய நேர்மையும், சிக்கனமும், உழைப்பும், பக்தியும் கடைக்கும் மலிகை வாங்க வரும் பணக்காரப் பெண்மணிக்குப் பிடித்துப்போனது. தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வள்ளியப்பன் சென்றான். வள்ளியப்பன், உணவை வீணாக்குவதில்லை, சாப்பிடும் நேரத்தில் பேசுவதில்லை என்ற இரு விஷயங்களை கோட்பாடாக வைத்திருந்தான். அவனுக்கு லட்டு, பாயாசம், ஏராளமான கூட்டு வகைகள், சித்ரான்னங்கள் என நிறையவே பரிமாறினர். வயிறு நிரம்பி விட்டது. இவன் சாப்பிட்டு முடிப்பதற்குள், இலையில் உணவை இட்டனர். இவன் தான் சாப்பிடும் போது பேசவும் மாட்டான், உணவை வீணாக்கவும் மாட்டானே! சிரமப்பட்டு அதையும் சாப்பிட்டு முடித்தான். மாமியாரோ மருமகனுக்கு சாப்பாடு ரொம்பவும் பிடித்து விட்டது போலும் என்று எண்ணி, இன்னும் கொஞ்சம் உணவைப் போட்டாள். அதையும் சாப்பிட்ட அவன், வயிறு உப்பி, வலியால் துடிக்கத் தொடங்கினான். டாக்டரை வீட்டுக்கு வரவழைத்தனர். அவர் வள்ளியப்பனிடம் மிகவும் கோபித்துக் கொண்டார். தம்பி! உணவை வீணாக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது. அதிகம் சாப்பிட்டால் உடம்பும் வீணாகும் என்ற அக்கறையும் வேண்டும். உன்னைப் போல் பைத்தியக்காரனை உலகிலேயே பார்த்ததில்லை என்று கேலியான தொனியில் எச்சரிக்கவும் செய்தார். வாந்தி எடுக்க மருந்து கொடுத்து வயிற்றைக் காலி செய்தார். போன உயிர் மறுபடியும் வந்தது போல உணர்ந்தான் வள்ளியப்பன். வள்ளியப்பனுக்கு மட்டும் இந்த விஷயம் பொருந்தாது. நம் ஒவ்வொருவருக்குமே இது பொருந்தும். ஆன்மீகம் என்றால் ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி, மனபலம், உடல் பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்படியான முன்னேற்றம் தான் நிலையான பலனைத்தரும் என்பதை உணர வேண்டும். எந்த ஒரு விசயத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தாலும், நம்மைப் பற்றிய தெளிவு வேண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத்தானே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும் உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விரதம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக்கொள்வான் என்று சொற்பொழிவாளர் நிறைவு செய்தார். இதைக் கேட்ட கந்தசாமிக்கு உள்ளத்தில் தெளிவு பிறந்தது. வயதுக்கும், உடல் நிலைக்கும் ஏற்ப விரத முறைகளைக் கடைப்பிடிக்க முடிவெடுத்தான். தம்பதியர் வீட்டுக்கு புறப்படும் போது மீண்டும் ஒருமுறை கருவறையைத் திரும்பி பார்த்தனர். முருகப்பெருமான் எப்போதும் போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.
கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் பிரதோஷம் 9209) பிரதோஷ விரதம் யாருக்கு உகந்தது, சிவபெருமானுக்கு 9210) பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன் என்ன? சகல செளபாக்கியங்களையும் தரும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும், எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். 9211) ஒவ்வொரு மாதமும் எத்தனை பிரதோஷம் வரும்? இரு. 9212) அந்த இரு பிரதோஷமும் எப்போது வரும்? வளர் பிறையில் ஒன்றும் தேய்பிறையில் ஒன்றும். 9213) பிரதோஷம் என்பது எத்தனை நாழிகை? ஏழரை 9214) பிரதோஷ காலம் எது? திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும். 9215) பிரதோஷ காலத்தை நேரத்தில் குறிப்பிடுவதாக இருந்தால் எவ்வாறு குறிப்பிடலாம்? மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை. 9216) வளர்பிறையிலோ தேய்பிறையிலோ மாலை வேளையில் திரயோதசி வந்தால் அதனை எவ்வாறு அழைப்பர்? மஹா பிரதோஷம். 9217) சனிக்கிழமைகளில் வந்தால் அதனை என்ன பிரதோஷம் என்று கூறுவார்கள்? சனிப் பிரதோஷம். 9218) சிவபெருமான் நஞ்சை உண்டது ஏன்? தேவர்களின் துன்பம் போக்க. 9219) சிவபெருமான் கயிலாய மலையில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திரு நடனமாடியது எப்போது? பிரதோஷ காலத்தில். 9220) பிரதோஷ காலத்தில் சிவபெருமான் திருநடனம் புரிந்தது எதற்காக? அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ. 9221) பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் வழிபடும் போது எதனை செய்வது விசேட பலனைத் தரும்? சோம ஆக்த பிரதட்சணம் 9222) பிரதோஷ காலத்தில் சிவபெருமானை எந்த கோலத்தில் வழிபடுவதுசிறப்பு? நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடும் கோலத்தில். 9223) சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்தவழியே திரும்பி வந்து நந்தி தேவரை வணங்கி வலப்புறமாக கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கி டையே சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்கும் ஷி(சிlழி என்ன பெயர்? சோம சூக்த பிரதட்சணம். 9224) சோமசூக்த பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். 9225) சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம்செய்தால் கிடைக்கும் பலன் என்ன? ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

திங்கள், 4 ஜூன், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பொட்டு) 9188) பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பது எது? பொட்டு 9189) முகத்தின் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை என்னவென்பர்? நெற்றிப் பொட்டு 9190) மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் எது? நெற்றிப் பொட்டு 9191) யோகக் கலை இதனை எவ்வாறு அழைக்கிறது? ஆக்ஞா சக்கரம் 9192) எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் எதனை வெளிப்படுத்தும்? சக்தியை 9193) மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை எவை? முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் 9194) இதனை உணர்த்தக்கூடிய செயலொன்றை கூறலாமா? நம் மனம் கவலையால் வாடும்போது தலைவலி அதிகமாவது அதனால்தான். 9195) நெற்றியில் இடப்படும் திலகம் என்ன செய்கிறது? அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது 9196) வேறு என்ன செய்கிறது? நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. 9197) வட்ட வடிவ முகத்துக்கு எந்த வடிவிலான பொட்டு பொருத்தமானது? நீளமான பொட்டுகள் 9198) நீளமான பொட்டு எவ்வாறான அழகை தரும்? இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியது போல் அழகு தரும். 9199) இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால் எந்த இடத்தில் பொட்டு வைக்க வேண்டும்? புருவங்களுக்கு மத்தியில் 9200) இதய வடிவ முகம் கொண்டவர்கள் எந்த பொட்டை இட்டுக்கொண்டால் முகம் அழகாக இருக்கும்? குங்கும பொட்டை 9201) இவர்களது முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டக் கூடியது எந்த வடிவிலான பொட்டு? சிறிய அளவில் நீளமான ஸ்டிக்கர் பொட்டுக்கள் 9202) ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் எந்தப் பகுதியில் எந்தப் பொட்டு வைத்தால் அழகு அதிகரித்து காட்டப்படும்? புருவத்திற்கு மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைத்தால் 9203) இவர்களுக்கு நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தால் என்ன நடக்கும்? வசீகரமாக இருக்கும் 9204) சதுர முகம் உள்ளவர்கள் எந்த வடிவமான பொட்டுகளை வைக்கலாம்? அகலம் அதிகமுள்ள பொட்டுகளை 9205) வேறு எந்த வடிவமான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்? உருண்டை மற்றும் முட்டை 9206) வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் இவர்களுக்கு எப்படி இருக்கும்? எடுப்பாக இருக்கும் 9207) முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு எந்த பொட்டுகள் பொருந்தும்? எல்லா வகை பொட்டுகளும் 9208) இவர்களது நெற்றி அகலமாக இருந்தால் எந்த வடிவ பொட்டு பொருந்தும்? நீளமான, முக்கோண பொட்டுகள் 9209) அகலமான நெற்றியாக இருந்தால் இவர்கள் எங்கு பொட்டு வைக்க வேண்டும்? புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல். ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிN~கம்; கொழும்பு, ஆமர்வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ்ஷ மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 10ம் திகதி காலை 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 08ம் திகதி காலை 7 மணி முதல் மறுநாள் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். இன்று 4ம் திகதி கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, மஹா கும்பாபிஷேகம் ஆச்சார்ய வர்ணம், தேவ பிராமண அனுஞ்ஞை, ஸ்ரீ மஹா காளி அனுஞ்ஞை, பரிவார மூர்த்திகள் அனுஞ்ஞை திரவிய சுத்தி திரவிய யாகம், தனிபூஜை, ஸ்தல விருட்ச பூஜை, யந்திர பூஜை, பேரீதாடணம், மஹா கணபதி ஹோமம், நூதன மூர்த்திகள் பூர்வாங்க கிரியை, நூதன மூர்த்திகள் கிரம பிரதட்சணம் என்பன நடைபெறும். நாளை 5ம் திகதி காலை 8 மணிக்கு குபேர சம்புடித தனகர்ச்சனை மஹா லட்சுமி ஹோமம், யந்திர பூஜை, தீபாராதனை என்பனவும் அன்று மாலை 5 மணிக்கு கிராம சாந்தி, பிரவேச பலி என்பனவும் இடம்பெறும். எதிர்வரும் 7ம் திகதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பூமிதேவி பூஜை, கங்கா பூஜை, கோ பூஜை, சூரிய அக்னி சங்கிரணம், மிருத் சங்கிரகணம் என்பனவும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு அங்குரார்ப்பணம், சிவாச்சார்ய இரட்சாபந்தனம் என்பனவும் நடைபெறும். எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். பிரம்மஸ்ரீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் திருக்கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ சுசீந்திர குமார குருக்கள், உதவி அர்ச்சகர் பிரம்மஸ்ரீ வை. திருக்குமர சர்மா, பால சண்முகக் குருக்கள், லட்சுமி காந்த கேதீஸ்வர குருக்கள், சுதாகரக் குருக்கள், விக்னேஸ்வர குரக்கள், பைரவமூர்த்தி குருக்கள், தியாகராஜ குருக்கள், சிவபாலக் குருக்கள், அந்தர்ராம் குருக்கள், பிரபாகர குருக்கள், கு.க. வைத்தீஸ்வர குருக்கள், ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். எதிர்வரும் 10 ம் திகதி காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்றுமாலை 5 மணிக்கு சாயரட்சை, வசந்த மண்டப தீபாராதனை, திருமாங்கல்ய தாரணம் திருவூஞ்சல், நாட்டியாஞ்சலி, ஸ்வாமி வீதி, பிரதர்சனம் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812