திங்கள், 29 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8197)கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன் எது?

கண்டமாலை

8198)கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?

கண்டிகை

8199) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்று அழைப்பர்?

ஆரம்

8200) மேற்கையின் நடுவில் அணியும் அணி கலன் எது?

கேயூரம்

8201) பூணூல், இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவதை என்னவென்று கூறுவர்?

யக்ஞோபவிதம்

8202) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் என்னவென்று கூறுவர்?

உதரபந்தம்

8203) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பை என்னவென்று கூறுவர்?

சன்னவீரம்

8204) சன்னவீரம் அணிவிக்கப்படுவது யாருக்கு?

ஆண், பெண் தெய்வங்களுக்கு

8205) சன்னவீரம் அணிவிக்கப்பட்டிருக்கும் சில தெய்வங்களைத் தருக.

சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி

8206) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடைய அணிகலன் எது?

கடி சூத்திரம்

8207) கடிசூத்திரத்தின் நடுவில் என்ன இருக்கும்?

சிங்கம் அல்லது யாளிமுகம்

8208 )சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?

மகளிருக்கு

8209) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?

கழல்

8210) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களின் வகைகளைத் தருக?

தலையணி வகை, கழுத்தணி வகை, காதணி வகை, மூக்கணி வகை, கையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, கால் விரலணி வகை
அறநெறி அறிவு நொடி

திங்கள், 22 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



இறை உருவங்களுக்கான அணிகலன்கள்

8180) இறை உருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் எவை?

மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்கோபவிதம், உதர பந்தம்,

சன்னவீரம், கடி சூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.

8182) இவற்றில் தலைக்கு மேல் அணியப்படுவது ஏது? மகுடம்

8183) கிரீடத்தின் வகைகளைத் தருக

கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்

8184) திருமாலின் தலையில் இடம்பெறுவது என்ன?

கிரீட மகுடம்

8185) தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது என்ன மகுடம்?

கரண்ட மகுடம்

8186) சடையையே மகுடம் போல அமைப்பதை என்னவென்று கூறுவர்?

சடா மகுடம்

8187) சிவனுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

சடா மகுடம்

8188) மாரியம்மன், காளி முதலான இறை உருவகங்களுக்கு அணிவிக்கப்படும் மகுடம் எது? ஜீவால மகுடம்

8189) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்? தீக்கிரீடம்

8190) காதில் அணியப்படும் அணிகலன்களை என்னவென்பர்?

குண்டலம்

8191) குண்டலம் எத்தனை வகைப்படும்? இரண்டு

8192) இரண்டு வகையான குண்டலங்களையும் தருக?

பத்ர குண்டலம், மகர குண்டலம்

8193) விஷ்ணுவுக்குரிய குண்டலம் என்ன?

மகர குண்டலம்

8194) சிவபெருமானது காதணிகளாக வலது காதில் இடம்பெறும் குண்டலம் எது?

பத்ர குண்டலம்

8195) சிவனின் இடது காதில் என்ன இருக்கும்? தோடு

8196) சிவனின் இடது காதில் தோடு இருப்பதற்கு உரிய காரணம் என்ன?

சிவனின் இடது புறப் பாதி உடல் சக்தியின் அம்சமாக காட்டப்படுவதாலே.

செவ்வாய், 16 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்


திரெளபதை அம்மன்

8162) குழந்தை வரம் வேண்டி வேள்வி செய்தவர் யார்?

துருபத மன்னன்

8163) இந்த வேள்வித் தீயிலிருந்து வெளிப்பட்ட வள் யார்?

திரெளபதை

8164) திரெளபதைக்கு உரிய வேறு பெயர்கள் என்ன?

வைதேகி, பாஞ்சாலி, கிருஷ்ணி, யக்னசேனி, பரிஷதி.

8165) பாண்டவர்கள் ஐவரையும் மணம் முடித்தவள் யார்?

திரெளபதை

8166) மகாபாரதத்தின் கதாநாயகியாகத் திகழ்பவள் யார்?

திரெளபதை

8167) திரெளபதைக் கென்று நடத்தப்பட்ட சுயம்வர தினத்திலே அவளைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றது யார்?

அர்ச்சுன்னன்

8168) அவளை அழைத்து வந்து “அம்மா! இன்று நாங்கள் ஒரு சிறந்த பொருளைக் கொண்டு வந்துள்ளோம். வந்து பார்” என்று அர்ச்சுனன் யாரிடம் கூறினான்?

அவனது தாயான குந்தியிடம்

8169) குந்திதேவி அதற்கு என்ன கூறுகிறார்? “பார்க்க என்ன இருக்கின்றது?

எதுவானாலும் ஐவருமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார்.

8170) பிறகு அவளுக்கு என்ன தெரிகிறது?

வந்திருப்பது பெண் என்று

8171) அவள் பெண் என்று தெரிந்த பின் என்ன செய்கின்றாள்?

தன் வாக்கைப் பொய்யாக்காது ஐவரையும் அவளை மணக்கும் படி கூறுகின்றாள்.

8172) திரெளபதை மீது மக்கள் ஈடுபாடு கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது?

அவளுக்கு ஏற்பட்ட துன்பம்.

8173) இந்த ஈடுபாட்டின் காரணமாக திரெளபதை என்ன நிலைக்கு உயர்த்தப்பட்டார்?

தெய்வ நிலைக்கு

8174) பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆட்சிக்கு வந்தது எப்போது?

கி. பி. 670 ஆம் ஆண்டில்

8175) திரெளபதை அம்மன் வழிபாடு எப்போது தோற்றம் பெற்றது?

கி. பி. 670 ஆம் ஆண்டு

8176) யாருடைய ஆட்சி காலத்தில் தோற்றம் பெற்றது?

பல்லது மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில்

8177) திரெளபதை அம்மன் வழிபாடு தோற்றம் பெற்றது எவ்வாறு? கோயில்களிலே மகாபாரதக் கதையை படிக்கச் செய்ததன் மூலம்.

8178) முதலாம் பரமேஸ்வரவர்மன், கோயில்களில் பாரதக் கதையை படிக்கச் செய்தது எதற்காக?

போருக்கு ஏராளமான வீரர்கள் தேவைப்பட்டதால் மக்களுக்கு உணர்ச் சியை ஊட்டி அவர்களைப் போரிலே ஈடுபட வைப்பதற்காக!

8179) இலங்கையில் திரெளபதை அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களைத் தருக?

புத்தளம் மாவட்டத்தில் உள்ள உடப்பு, முந்தல், ஆகிய ஊர்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள மண்முனை, பாண்டி ருப்பு, புளியந்தீவு, போரதீவு ஆகிய ஊர்களிலும்.

திங்கள், 8 நவம்பர், 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர், ஸ்தாபகர்,

தமிழர் நற்பணி மன்றம்


8146 மகா விஷ்ணு எத்தனை முறை மோகினி ரூபம் எடுத்தார்?

மூன்று முறை.

8147 திருபாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து தேவர்களுக்காக பெற்றுக் கொடுப்பதற்காக விஷ்ணு பகவான் என்ன வடிவம் எடுத்தார்?

மோகினி.

8148 பஸ்மா சூரனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வரம் தந்து அருள, அந்த வரத்தாலேயே சிவபெருமானை அந்த அசுரன் பஸ்மம் செய்ய முற்பட்ட பொழுது மோகினி ரூபம் எடுத்து அந்த அசுரனை அழித்தவர் யார்?

விஷ்ணு பகவான்.

8149 தன்னைக் காப்பாற்றிய மோகினியை காணும் ஆவலில் இருந்த சிவபெருமான், மோகினி யின் அழகில் மயக்கம் கொண்டதன் காரணமாக யாரின் வரலாறு நிகழ்ந்தது?

ஐயப்பனின்.

8150 ஞான மார்க்கத்தையும் பக்தி மார்க்கத்தையும் கைவிட்டு கர்ம மார்க்கத்தில் சென்ற வனதுர் ஷிகிளை நல்வழிப்படுத்த பிக்ஷ¡டன ரூபம் எடுத்தவர் யார்?

சிவபெருமான்.

8151 திருமால் என்ன ரூபம் எடுத்தார்?

மோகினி ரூபம்.

8152 ‘ஐயப்பன்’ என்ற பெயர் எதில் இருந்து வந்தது?

சூரியன் என்பதிலிருந்து.

8153 ‘சூரியன்’ என்பதற்கு என்ன பொருள்?

மதிக்கத்தக்கவர்.

8154 ‘தாதா’ என்பதன் அர்த்தம் என்ன?

தந்தை.

8155 ‘ஐயப்பன்’ என்றானது எது?

சூர்ய தாதா.

8156 தமிழ் நாட்டில் ‘சாத்தன் ஐயனார்’ என்ற பெயரில் நெடுங்காலமாக வணங்கி வருவது யாரை?

ஐயப்பனை.

8157 பரபிரம்மமாக திகழ்பவர் யார்?

ஐயப்பன்.

8158 ஐயப்பனை சரணடைவதற்கு காரணம் என்ன?

பக்தர்களது நிலைக்கு ஏற்ப ரூபியாகவும் அரூபியாகவும் சகுணராகவும் நிர்குணராகவும் காட்சி தருவதால்.

8159 ‘அஹம் பிரம்மாஸ்மி’ எனப்படும் அத்வைத் போதம் பெறுகின்றவர்கள் யார்?

ஐயப்ப பக்தர்கள்.

8160 பகவானை அடைய சிறந்த வழி எது?

சரணாகதி.

8161 ஸ்ரீ ‘தர்ம சாஸ்தா’ என்பதன் பொருன் என்ன?

தர்மத்தின் காவலன்.

திங்கள், 1 நவம்பர், 2010

றநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

(தில்லையம்பலவாணனின் தாண்டவச் சிறப்பு)

8122. சந்தியா தாண்டவம் என்பது எதனை?

புஜங்க லளிதத்தை

8123. புஜங்க லளிதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

பிரதோஷ நடனம்

8124. பிரதோஷ நடனத்தில் முக்கிய இடத்தை வகிப்பது எது?

பாம்பு

8125. காத்தல் தாண்டவத்தின்போது சிவனின் கையில் கோடரி உண்டு. இது எதனை குறிக்கிறது?

கடவுளின் பேராற்றலையும் சத்தியத்தையும்.

8126. அழித்தல் தாண்டவமூர்த்தியின் சிறப்பு என்ன?

கைகளில் துடியும் தீச்சுடரும் மாறியிருப்பது தான்.

8127. தாண்டவ உருவங்களில் வலக்கையில் காணப்படுகின்ற துடி எந்தக் கையில் காணப்படும்? இடக்கையில்.

8128. இடக்கையில் காணப்படுகின்ற தீச்சுடர் எந்தக் கையில் காணப்படும்?

வலக்கையில்.

8129. அழித்தல் தாண்டவ மூர்த்தியில் எதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது?

தீச்சுடருக்கு.

8130. அழித்தல் செயலை அதாவது ஆன்மாக்களை இளைப்பாற்றும் செயலை குறிப்பது எந்தத் தாண்டவம்?

அழித்தல் தாண்டவம்.

8131. மறைத்தல் தாண்டவத்தில் பெருமானின் கைகளில் காணப்படுகின்றவை எவை?

துடி, சூலம், தீச்சுடர், பாம்பு, பாசம்.

8132. இதில் முதன்மை பெறுவது எது?

பாசக்கயிறு

8133. பாசக்கயிறு முதன்மை பெறுவதற்கு காரணம் என்ன?

இடக்கை வலக்கை இரண்டினாலும் பாசக்கயிற்றை பிடித்துக் கொண்டு அதை தலைக்கு மேல் தூக்கியிருப்பதே முதன்மை பெறக் காரணம்.

8134. உயிர்களை மென்மேலும் வினை செய்வதில் அழுத்தி அதன் மூலமாக உயிர்களுக்கு இருவினை செய்யும் மலபரிபாகமும் ஏற்படச் செய்வதற்காக மணத்தல் செயலை இறைவன் செய்கிறார் எனும் சாத்திரக் கருத்தை விளக்குவது எந்தத் தாண்டவம்?

மறைத்தல் தாண்டவம்.

8135. அருளல் தாண்டவத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

காளி தாண்டவம், சண்ட தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், அனுக்கிரக தாண்டவம்.

8136. அருளல் தாண்டவத்தில் உள்ள தனிச் சிறப்பு என்ன?

குஞ்சிதபாதமாகிய தூக்கிய திருவடியும் கஜஹஸ்தமாகிய நீட்டிய கையும் தாண்டவ பெருமானின் தலைக்கு மேல் இருத்தலாகும்.

8137. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களுடன் இருந்த ஆன்மாவை அவற்றினின்று பிரித்தெடுத்து அதனைத் தூய்மையும் ஒளியும் உடையதாகச் செய்து உயர்ந்த பேரின்ப நிலையை அடையச் செய்வதை உணர்த்துவது எந்தத் தாண்டவம்?

அருளல்

8138. ஊன்றிய பாத்தின் கீழுள்ள முயலகன் எதைக் குறிக்கின்றது? மும்லங்களை

8139. தூக்கி திருவடி எதைக் குறிக்கிறது?

மலம் நீங்கித் தூய்மையடையப் பெற்ற ஆன்மாவைக் குறிக்கின்றது.

8140. ஐந்தொழில்களையும் ஒரே உருவத்தில் அமைத்துக் காட்டுவது எது?

ஆனந்தத் தாண்டவம்.

8141. ஆனந்தத்தாண்டவத்தில் துடி ஏந்திய கை எதைக்காட்டுகிறது?

படைத்தல்

8142. அபயகரம் எதைக் காட்டுகிறது?

காத்தல்

8143. ஊன்றிய திருவடி எதைக் காட்டுகிறது?

மறைத்தல்

8144. தூக்கிய திருவடி எதைக்காட்டுகிறது?

அருளல்

8145. தீச்சுடர் எதைக் காட்டுகிறது?

அழித்தல்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812