திங்கள், 28 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8383. சிவனுக்கு சமமான நிலையில் சக்தி அமையும் போது அது எவ்வாறு போற்றப்படுகிறது?

பராசக்தி

8384. சக்திக்குரிய மதம் எது?

சாக்தம்

8385. சக்திக்கு தனி மதம் உருவாகக் காரணம் என்ன?

புறச்சமயங்களின் தாக்குதல்

8386. பெண்ணுக்கு முதன்மை கொடுக்கும் மதம் எது?

சாக்தம்

8387. சைவம் எந்த நிலையில் சக்திக்கு இடம் கொடுத்துள்ளது?

தத்துவ நிலையில்

8388. அம்பாள் வழிபாட்டிற்கு மிக முக்கியமானது என்ன?

கோடுகளாலான யந்திர வழிபாடு

8389. சக்தி வழிபாட்டில் யந்திர வழிபாட்டை என்னவென்பர்?

ஸ்ரீசக்கர பூஜை

8390. ஸ்ரீசக்கர பூசையை வேறு எவ்வாறு அழைப்பர்?

ஸ்ரீ வித்யோ பாசளை

8391. ஸ்ரீசக்கர பூசை எத்தனை வகைப் படும்?

மூன்று

8392. இலங்கையில் காணப்படுவது என்ன யந்திர பூசை?

பூப்பிரஸ்தார யந்திர

8393. இவ்வழிபாட்டின் அடிப்படையில் சிவனாலயங்களில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யும் போது என்ன செய்யப்படும்?

திருவுருவங்களுக்கு கீழ் யந்திரம் வைத்து மருந்து சார்த்தப்படும்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

>
கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8370) மகா சிவராத்திரி எப்பொழுது வரும்?

மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை

மிக்க மகா சிவராத்திரி ஆகும்.

8371) சிவராத்திரி விரதம் எத்தனை வகைப்படும்?

ஐந்து

8372) ஐந்து வகையான சிவராத்திரிகளையும் தருக?

1. மகா சிவராத்திரி

2. யோக சிவராத்திரி

3. நித்திய சிவராத்திரி

4. பட்ஷிய சிவராத்திரி

5. மாத சிவராத்திரி


8373) ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு வருவது என்ன?

மாத சிவராத்திரி

8374) சிவராத்திரியன்று எத்தனை ஜாம பூஜை நடைபெறும்?

நான்கு ஜாம பூஜை

8375) முதல் ஜாமத்தில் என்ன அபிஷேகம் நடைபெறும்?

பஞ்ச கவ்விய அபிஷேகம்

8376) இரண்டாம் ஜாமத்தில் என்ன அபிஷேகம் நடைபெறும்?
பஞ்சாமிர்த அபிஷேகம்

8377) மூன்றாம் ஜாமத்தில் நடத்தப்படும் அபிஷேகம் என்ன?

தேன் அபிஷேகம்

8378) நான்காம் ஜாமத்தில் நடத்தப்படும் அபிஷேகம் என்ன?

கருப்பஞ்சாறு அபிஷேகம்

8379) முதலாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

பொங்கல்

8380) இரண்டாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

பாயாசம்

8381) மூன்றாம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

நெய்யும் மாவும் கலந்து நிவேதனம்

8382) நான்காம் ஜாமத்தில் என்ன நிவேதனம் செய்யப்படும்?

வெண் பொங்கல்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8352) ஆனி மாத தேய் பிறை ஏகாத சியை என்னவென்று அழைப்பர்?

அபரா

8353) ஆடி மாத வளர்பிறை ஏகா தசி எவ்வாறு அழைக்கப்படும்?

தயினி

8354) ஆடி மாத தேய்பிறை ஏகாதசி எவ்வாறு அழைக்கப்படும்?

யோகினி

8355) ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி எவ்வாறு அழைக்கப் படும்?

புத்ரதா

8356) ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி எவ்வாறு அழைக்கப்படும்?

காமிகா

8357) புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசியை என்னவென்று அழைப்பர்?

பத்மநாபா

8358) புரட்டாசி மாத தேய்பிறை ஏகா தசியை என்னவென்று அழைப்பர்?

அஜா

8359) ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசியை என்னவென்று கூறுவர்?

பாபாய் குசா

8360) ஐப்பசி மாத தேய்பிறை ஏகாத சியை என்னவென்று கூறுவர்?

இந்திரா

8361) கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை என்னவென்று அழை ப்பர்?

ப்ரமோதினீ

8362) ப்ரமோதினீ ஏகாதசியை வேறு எவ்வாறு அழைப்பார்?

கைசிக.

8363) கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசியை என்னவென்பர்?

ரமா

8364) வருடத்தில் கூடுதலாக வரும் 25 ஏகாதசி எது?

கமலா

8365) கமலம் என்றால் என்ன?

தாமரை

8366) தாமரை மலரில் இருந்து அருள் தருபவள் யார்?

மகாலட்சுமி

8367) இந்த நாளில் மகாலெட்சுமியை பூஜித்தால் ஏற்படும் பலன் என்ன?

நிலையான செல்வம் நிரந்தரமாக

வீட்டில் இருந்து வரும்

8368) மார்கழி மாத வளர்பிறை ஏகாத சியை என்னவென்று அழைப்பர்?

வைகுந்த ஏகாதசி

8369) மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியை என்னவென்று அழைப்பர்?

உற்பத்தி ஏகாதசி

திங்கள், 7 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

அறநெறி அறிவு நொடி
கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


ஏகாதசி


8340) பங்குனி தேய்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பார்கள்?

விஜயா

8341) பங்குனி வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஆமலகீ

8342) சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி என்ன பெயரில் அழைக்கப்படுகிறது.

காமதா

8343) சித்திரை தேய்பிறை ஏகாதசி எவ்வாறு அழைக்கப்படும்?

பாபமோசனிகா

8344) விஜயா ஏகாதசியில் எவ்வாறு பிரார்த்திக்கலாம்?

7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் போல் வைத்து மகா விஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.

8345) காமதா ஏகாதசியில் ஏற்படும் பயன் என்ன?

திருமண யோகம் ஏற்படும்.


8346) பாபமோசனிகா ஏகாதசியில் விளையும்

நன்மை என்ன?

பாபத்தை போக்கும், நல்ல பேற்றினை அளிக்கும், துரோகிகள் விலகுவர்.

8347) வைகாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

ரோஹினீ

8348) வைகாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

வருதினீ

8349) ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி என்ன?

நிர்ஜனா

8350 )நிர்ஜனா ஏகாதசியை வேறு எவ்வாறு அழைப்பர்?

பீம ஏகாதசி

8351) ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வதை எவ்வாறு கூறுவர்.

பீம பூஜை

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



ஏகாதசி

8330) தை மாத வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

புத்ரா

8331) இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?

புத்ரபாக்யம் கிடைக்கும்

8332) புத்ரா ஏகாதசியை வேறு எவ்வாறு அழைப்பர்?

சந்தான ஏகாதசி

8333) தை தேய்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஸபலா

8334) ஸபலா ஏகாதசி அன்று என்ன செய்யலாம்?

பழதானம் செய்யலாம்.

8335) ஸபலா ஏகாதசியில் பழதானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

8336) மாசி மாத வளர்பிறை ஏகாதசியை எவ்வாறு அழைப்பர்?

ஐயா

8337) ஐயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் ஏற்படும் நன்மை என்ன?

அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும் வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நன்மை விட்டு நீங்கும்.

8338) மாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை என்னவென்று அழைப்பர்?

ஷட்திலா

8339) ஷட்திலா ஏகாதசி அன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் ஏற்படும் பலன் என்ன?

பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812