திங்கள், 24 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(யாகம்)


8320 யாகம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

அர்ப்பணித்தல்.


8321 யாகத்திற்கு உரிய பொருளை விரிவாக கூறுவதானால் எவ்வாறு கூறலாம்?

பொருட்களில் புனிதமானவைகள் என கருதக் கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும்.


8322 பஞ்சயெக்கியங்களைத் தருக?

தெய்வயெக்கியம், பிதுர்யெக்கியம், மனுஷயெக்கியம், பூதயெக்கியம், பிரம்மயெக்கியம்.


8323 தெய்வயெக்கியம் என்பது என்ன?

தினசரி கடவுளை வழிபடுவது.


8324 பிதுர்யெக்கியம் என்பது என்ன?

பெற்றோரை அன்றாடம்

வணங்குவது.


8325 மனுஷயெக்கியம் என்பது என்ன?

நலிந்தோருக்கு தொண்டு செய்வது.


8326 பச்சை புல்லையும் படர்ந்து நிற்கும் கொடியையும் ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும் களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது என்ன எக்கியம் ஆகும்?

பூதயெக்கியம்.


8327 அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷிகளையும் தெளிவைக் கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது என்ன எக்கியம்?

பிரம்மயெக்கியம்


8328 இந்த ஐந்து யாகத்தையும் யார் செய்யலாம்?

யார் வேண்டுமானாலும் செய்யலாம்.


8329 இந்த ஐந்து யாகத்தையும் செய்பவன் என்னவாகிறான்?

உண்மையான மனிதனாகிறான்.

திங்கள், 17 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(சடங்குகள்)


8313) ஒரு பொருளை தூய்மை அல்லது புனிதப்படுத்தும் வழிமுறைகளுக்கு என்ன பெயர்?

சடங்குகள்

8314) புனிதப்படுத்துவதால் எத்தனை வகை நன்மைகள் உள்ளன?

இரு வகை

8315) புனிதப்படுத்துவதால் ஏற்படும் இரு நன்மைகளையும் தருக?

அதன் புனிதத் தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.

8316) சடங்குகளின் பயன்கள் எவ்வாறு அமையலாம்?

கண்களுக்கு புலனாகும் படியும் புலனாகாதபடியும் அமையலாம்.

8317) ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் அதிலுள்ள அழுக்குகள் மறைந்து பிரகாசம் பெறலாம். இது என்ன பயன்?

கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு

8318) ஒரு பொருள் மந்திரம் ஏற்றப்பட்ட ரோல் என்னவாகும்?

புனிதம் பெறும் இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்துகொள்ள முடியாது. மாறாக உணர முடியும்.

8319) சடங்குகள் மூலம் மனிதன் தன் உடம்பை என்ன செய்து கொள்ளலாம்?

புனிதப் படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 10 ஜனவரி, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


(மஞ்சள்)


8302) மங்கலப் பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது எது?

மஞ்சள்


8303) மஞ்சள் இருக்கும் இடத்தில் யார் வாசம் செய்வதாக கூறப்படுகிறது?

திருமகள்

8304) சுமங்கலப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக் கொள்வது ஏன்?

அதில் திருமகள் வாசம் செய்வதால்

8305) புத்தாடை அணியும் போது அதில் என்ன தடவப்படுகிறது?

மஞ்சள்

8306) எந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதழ் என்றாலும் அதில் என்ன தடவி கொடுக்கிறோம்?

மஞ்சள்

8307) அட்சதைக்கு எடுக்கப்படும் அரிசி எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?

முனை முறியாத அரிசாக இருக்க வேண்டும்

8308) அட்சதை தயாரிக்கும் போது என்ன சேர்க்கப்படுகிறது?

மஞ்சள்

8309) சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும் போது அவர்களுக்கு என்ன கொடுப்பது வழக்கம்?

மஞ்சள், குங்குமம்

8310) சுமங்கலிகளுக்கு இவ்வாறு மஞ்சள் குங்கும் அளிப்பது ஏன்?

அவை மங்கலத்தின் அடையாளம் என்பதால் ஆகும்.

8311) பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் எதனை கட்டி அடுப்பில் ஏற்றுவார்கள்?

மஞ்சள் கிழங்கு செடியை


(கரும்பு)


8312) பொங்கலில் மஞ்சளைப் போல் கரும்பு முக்கிய இடத்தை பெறக் காரணம் என்ன?


கரும்பு இனிமையின் அடையாளம் அடி முதல் நுனி வரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக் கரும்பு உப்பு சுவையுடையது. அடிக் கரும்பு தித்திப்பாய் இனிக்கும். இதன் மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால் தொடக்கத்தில் உப்புத் தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் அதன் முடிவில் கரும்பு போல இனிமையைத் தந்திடும்.

கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம்.

அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்

திங்கள், 3 ஜனவரி, 2011

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்



பஞ்சாங்கம்

8292. நட்சத்திரங்கள் எத்தனை உள்ளன? 27


8293. 27 நட்சத்திரங்களையும் தருக!

அச்சுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.


8294. ராசிச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட எத்தனை பகுதிகளை குறிக்கும்? 27


8295. இவ்வாறு 27 பகுதிகளைக் குறிப்பது எவை? நட்சத்திரங்கள்


8296. நட்சத்திரம் எப்படி கணக்கிடப்படுகிறது?

சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக் கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது


8297. சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப் பகுதி என்னவென்று கூறப்படுகிறது?

யோகம்


8298. கரணம் என்பது என்ன?

ஒரு திதியின் முற்காலம் பிற்காலம் ஆகியவையே கரணம் எனப்படும்.


8299. கரணம் திதியின் எந்தளவு பங்கு கொண்டது?

கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும்.


8300. திதிகள் எத்தனை? 30


8301. முப்பது திதிகளுக்கும் எத்தனை கரணங்கள் உள்ளன?

60

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812