திங்கள், 26 ஜூலை, 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

(நவராத்திரி)


6999) எமனின் இரண்டு கோரைப் பற்கள் என ஞான நூல்கள் கூறுவது எந்த காலங்களை?

கோடை காலத்தையும் மழை காலத்தையும்

7000) இந்த கோடை, மழை காலங்களிலிருந்து நம்மை காப்பவள் யார்?

அம்பிகை

7001) அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் விழா எது?

நவராத்திரி

7002) அகிலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களிலும் அம்பிகை இருக்கிறாள் அவள் கருணையில் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளங்குவது எது? கொலு

7003) கொலுப் படிகள் எத்தனை அமைக்க வேண்டும்?

9, 7, 5 என ஒற்றைப் படையில்

7004) கீழிருந்து முதல் படியில் எவற்றை வைக்க வேண்டும்?

ஓரறிவு உள்ள உயிரினங்களின் பொம்மைகளை

7005) ஓரறிவுள்ள உயிரினங்கள் எவை?

செடி, கொடி, மரங்கள், பூங்கா, சிறிய அளவிலான தோட்டம்

7006) இரண்டாவது படியில் எவற்றை வைக்க வேண்டும?

இரண்டறிவுள்ள உயிரினங்களின் வடிவங்களை

7007) இரண்டறிவு உள்ள உயிரினங்கள் எவை?

அட்டை, நத்தை, சங்கு போன்ற ஊர்ந்து

செல்லும் உயிரினங்கள்

7008) மூன்றாவது படியில் வைக்க வேண்டிய எவை?

மூன்று அறிவு உயிரினங்கள்

7009) மூன்று அறிவு உயிரினங்களை எவை?

கரையான், எறும்பு

7010) நான்காவது படியில் வைக்க வேண்டிய நான்கு அறிவுள்ள உயிரினங்கள் எவை?

வண்டு, பறவை.

7011) ஐந்தாவது படியில் வைக்க வேண்டிய ஐந்து அறிவுள்ள உயிரினங்கள் எவை?

பசு முதலான விலங்கினங்கள்.

7012) ஆறாவது படியில் இருக்க வேண்டிய ஆறறிவுள்ள ஜீவராசிகள் எவை?

மனித வடிவங்கள், வாத்திய கோஷ்டி, பொம்மைகள்

7013) ஏழாவது படியை அலங்கரிக்க வேண்டியவை எவை?

மகான்கள், ஞானிகளின் உருவங்கள்

7014) எட்டாவது படியில் இடம்பெற வேண்டியவை எவை?

தெய்வ அவதாரங்கள், தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்

7015) பூர்ண குடுபத்துடன் அம்பிகை திருவுருவம் மட்டும் இருக்க வேண்டியது எத்தனையாவது படியில்?

ஒன்பதாவது படி உச்சியில்

7016) கொலு மண்டப அமைப்பு முறை எதனை விளக்குகின்றன?

அம்பிகையின் அருளாட்சியின் கீழ் தான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன் அவை படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்து மேன்மை அடைகின்றன என்பதை விளக்குகின்றன.

7017) நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

அஷ்டமி அன்று மட்டுமாவது அவசியம் பூஜை செய்ய வேண்டும்.

7018) இரண்டு வயதுள்ள ஒரு பெண்ணை குமாரி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?

நவராத்திரியின் முதல் நாளன்று

7019) அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரியாக இருக்க வேண்டுமா?

இல்லை. யாரோ ஒரு பெண்ணை குமாரியாக உருவகப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்.

7020) இவ்வாறு குமாரியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

ஏழ்மை நீங்கும், ஆயுள் பலப்படும், செல்வம் பெருகும்.

7021) நவராத்திரியின் இரண்டாவது நாளில் என்ன செய்ய வேண்டும்?

3 வயதுள்ள பெண்ணை திரி மூர்த்தி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.

7022) திரிமூர்த்தியை பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?

அறம், பொருள், இன்பம், நீண்ட ஆயுள் உண்டாகும்.

7023) மூன்றாவது நாளன்று என்ன செய்ய வேண்டும்?

4 வயது பெண்ணை கல்யாணி என்ற பெயரில் பூஜை செய்ய வேண்டும்.

7024) இதனால் ஏற்படும் பலன் என்ன?

கல்வி ஞானம் பெருகும்

7025) ஐந்து வயது பெண்ணை ரோகிணி என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டியது எப்போது?

நான்காவது நாளன்று

7026) ரோகிணி பூஜை தரும் நன்மை என்ன?

நோய்களைப் போக்கி ஆரோக்கிய வாழ்வு தரும்.

7027) ஐந்தாவது நாளன்று செய்ய வேண்டியது என்ன?

6 வயதுள்ள பெண்ணை காளிகா என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும்.

7028) காளிகா பூஜை தரும் பலன் என்ன?

பகைவர்களை வெல்லும்

7029) நவராத்திரியின் ஆறாவது நாளில் செய்யக் கூடியது என்ன?

7 வயது பெண்ணை சண்டிகா என்ற பெயரால் பூஜை செய்தல்.

7030) சண்டிகா பூஜை அளிக்கும் பலன் என்ன?

செல்வச் செழிப்பைத் தரும்.

7031) ஏழாவது நாளில் வழிபடக் கூடியது யாரை?

8 வயதுள்ள பெண்ணை சாம்பவி என்ற பெயரில்

7032) சாம்பவி பூஜையால் விளையும் நன்மை என்ன?

அரசாங்க பதவிகளை கொடுக்கும். பகைமையை வேரறுக்கும்.

7032) எட்டாவது நாளன்று வழிபடக் கூடியவள் யார்?

9 வயது பெண். துர்க்கை என்ற நாமத்தில்.

7033) துர்க்கை பூஜை அளிக்கும் திருவருள் என்ன?

கஷ்டமான காரியங்களை சிரமமின்றி செய்யும் சக்தியைக் கொடுக்கும்.

7034) ஒன்பதாவது நாளுக்குரியவள் யார்?

10 வயதுள்ள சுபத்ரா

7035) சுபத்ரா பூஜையால் ஏற்படும் பலன் என்ன?

புலனடக்கம் உண்டாகும்.

திங்கள், 19 ஜூலை, 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்

இறை உருவங்களுக்கு அணிகலன்கள்

6968) இந்து மத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிக்கலன்களாகி இருப்பவை எவை?

மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.

6969) இந்த அணிகலன்களில் தலைக்கு மேல் அணியக் கூடியது எது?

மகுடம்

6970) மகுடங்களின் வகைகளைத் தருக.

கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்.

6971) இந்த மகுடங்களில் திருமாலின் தலையில் இடம்பெறுவது எந்த மகுடம்?

கிரீட மகுடம்.

6972) தேவியர் மற்றும் முருகன், கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

கரண்ட மகுடம்

6973) சடையையே மகுடம் போல் அமைப்பதை என்னவென்று கூறுவர்?

சடா மகுடம்

6974) சடா மகுடம் எந்த தெய்வத்துக்கு அமைக்கப்படும்?

சிவனுக்கு

6975) மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

ஜீவால மகுடம்

6976) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

தீக்கிரீடம்

6977) காதில் அணியப்படும் அணிகலனை என்னவென்பர்?

குண்டலம்

6978) குண்டலம் எத்தனை வகைப்படும்?

இரண்டு

6979) அந்த இரண்டு வகையான அணிகலன்களையும் தருக.

பத்ர குண்டலம், மகர குண்டலம்

6980) இதில் விஷ்ணுவுக்கு அணிவிக்கப்படும் காதணியை எவ்வாறு அழைப்பர்?

மகர குண்டலம்

6981) சிவபெருமானின் காதணிகளாக இடம்பெறுபவை எவை?

பத்ர குண்டலமும் தோடும்

6982) சிவபெருமானின் எந்த காதில் பத்ர குண்டலம் விளங்கும்?

வலது காதில்

6983) சிவனின் இடது காதில் தோடு இடம்பெறுவது ஏன்?

சிவனின் இடது புறம்பாதி உடல், சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டிய இடது காதில் தோடு இடம்பெறுகிறது.

6984) அணிகலன்களில் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலனை என்னவென்பர்?

கண்டமாலை

6985) கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?

கண்டிகை

6986) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்பர்?

ஆரம்

6987) இறைவனின் மேற்கையின் நடுவில் அணியப்படுவது எது?

கேயூரம்

6987) இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவது எது?

பூனூல்

6989) இந்த பூணூலை என்னவென்று அழைப்பர்?

யக்ஞோபவிதம்

6990) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் எது?

உதிரபந்தம்

6991) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு என்னவென்று கூறப்படும்?

சன்னவீரம்

6992) சன்னவீரம் எந்த தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும்?

வீரத்துடன் தொடர்புடைய ஆண், பெண் தெய்வங்களுக்கு

6993) இதற்கு உதாரணமாக சில தெய்வங்களின் பெயர்களைத் தருக.

சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப் பிராட்டி.

6994) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது எது?

கடிசூத்திரம்

6995) கடிசூத்திரத்தின் நடுவில் அமைக்கப்படுவது என்ன?

சிங்கம் அல்லது யாளி முகம்

6996) சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?

மகளிருக்கு

6997) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?

கழல்

6998) இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் வேறு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

தலையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, பாத அணி வகை.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

உடப்பு தீ மிதிப்பு

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்த சாரதி, ஸ்ரீ திரெளபதா தேவி தேவஸ்தானத்தின் மகோற்சவம் 10ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் 11 ஆம் திகதி 11 மணிக்கு உட் கொடியேற்றமும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு வெளிக் கொடியேற்றமும் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மகாபாரதக் கதை ஆரம்பமாகும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணிக்கு இங்கு ஸ்ரீ திரெளபதாதேவி சுயம்வரமும் 22 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி திருக்கல்யாணமும் 23 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையும் 24 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி துகிலுரிதலும் 25 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பாண்டவர் வனம் புகுதலும் 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுணன் தவநிலையும் 27 ஆம் திகதி காலை 7 மணிக்கு வீரபத்திரர் அபிஷேகமும் விசேட பூஜையும் உள் வீதி வெளி வீதி உற்சவமும் அக்கினிக் குண்டக் காவலும் மாலை 4 மணிக்கு தேத்தரசன் கோட்டை பிடித்தலும் 28 ஆம் திகதி காலை 6 மணிக்கு செந்தழல் மூட்டும் திருமிகு காட்சியும் பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்ரீ திரெளபதா தேவி வாது முடிப்பும் விசேட வசந்த மண்டப பூஜையும் இரவு 7 மணிக்கு அனற் குளத்தில் அன்பர்கள் நடனமிடும் அதியற்புத பக்திப் பரவசம் மிக்க தீ மிதிப்பாகிய பூமிதிப்பு உற்சவமும் இடம்பெறும்.

29 ஆம் திகதி இரவு 7 மணிக்கு அன்னை ஸ்ரீ திரெளபதாதேவி ஊர்வலமும் 11 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் 12 மணிக்கு கொடி இறக்கமும் மாவிளக்கு பூஜையும் உற்சவமூர்த்திகள் அம்பாள் தத்தம் யதாஸ்தானம் எழுந்தருளலும் மங்களப் பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பத்மஜெயராம குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெறும், உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம பூசகர் முத்தையா பரந்தாமன் பூசகர் கரகம் எடுப்பார். இவ்வாலயத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 7 மணிக்கு பாற் குடப் பவனியுடன் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.

விசேட உற்சவ தினங்களில் மாலை 5.30 மணிக்கு அருள்மிகு திரெளபதை அம்மன் கரக உற்சவம் ஆலயத்திலிருந்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அருள்கூடி வரும் அற்புதக் காட்சி இடம்பெறும்.

விசேட உற்சவ தினங்களில் காலை 9 மணிக்கு அபிஷேகமும் தொடர்ந்து பூஜையும் மாலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் விநாயகர், ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமானின் அலங்கார பவனியும் மேள வாத்திய இன்னிசை விருந்துடன் ஊர்வலமும் நடைபெறும். விசேட தினங்களில் உடப்பூர் நாடக மன்றங்களின் பல் சுவை நாடகங்களும் இடம்பெறும்.

ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திரெளபதாதேவி தேவஸ்தானத்தின் 108 அடி தவதள இராஜ கோபுரத் திருப்பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பூமிதிப்பாகிய தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

திங்கள், 5 ஜூலை, 2010

அறநெறி அறிவு நொடி



கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்



6933) பசு பாலாகக் கொடுப்பது எதனை? அதன் இரத்தத்தை

6934) பசுவின் தோல் எதற்கு உதவும்? மேளம் செய்ய

6935) தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குண மும் புரதங்களும் எதில் உள்ளது. பசும் பாலில்

6936) ஆட்டுப் பாலில் புரதங்கள் இல்லையா? ஆட்டுப் பாலில் கூடுதலான புரங்கள் இருப்பதாக கூறினாலும் அது ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பசும்பால் உடனடியாக செரிக்கும்.

6937) இறைவனின் திருமேனி மீது தானாகவே பால் சுரக்கும் வகையைச் சேர்ந்த பசு எது? காராம் பசு

6938) சில ரகமான புற்களை மட்டும் சாப்பிடும் பசு எது? காராம் பசு

6939) காராம் பசு எந்தத் தன்மையுடைய புற்களை மட்டும் உண்ணும்? மூலிகைகளுக்கு ஒத்த தன்மையுடைய புற்களை மட்டும் அது உண்ணும். கடைகளில் விற்கப்படும் தீவனங்களை அது விரும்பாது உண்ணாது

6940) காராம் பசு தவிடு, புண்ணாக்கு உள்ளிட் டவை கலந்த புளித்த நீரை குடிக்குமா? அவற்றையும் குடிக்காது.

6941) கிரஹப் பிரவேசத்தின்போது வீட்டிற்குள் பசுவின் சிறுநீரை தெளிப்பார்களே இது ஏன்? அது மருத்துவ குணம் மிக்கதாக இருப்பதாலே

6942) பசுவின் சிறுநீரை என்னவென்று அழைப்பர்? கோமியம்

6943) கிரஹப் பிரவேசத்தின்போது பசுவை வீட்டைச் சுற்றி வலம் வர வைத்து அதனை வீட்டிலேயே சிறுநீர் கழிக்க வைப்பது ஏன்? அந்த வீட்டிற்கு இறைவன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

6944) சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை என்னவென்று கூறுவர்? திதி

6945) குறிப்பிட்ட நீதி நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனை என்னவாக கருதுவர்? கரி நாளாக

6946) கரி நாளன்று நல்ல காரியங்களை துவக்கினால் என்ன நடக்கும்? அது விருத்திக்கு வராது.

6947) சுப காரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும் புத்தாடை புனையும் பொழுதும் நிச்சயதார்த்தம் செய்து எழுதும் பத்திரத்திலும் ஒரு ஒரத்தில் அல்லது நான்கு ஓரங்களிலும் மஞ்சளைத் தடவுகின்றோம் இது ஏன்? மஞ்சள் மங்களமானது என்பதாலாகும்.

6948) திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் எனக் கூறுவதன் அர்த்தம் என்ன? நெல், கரும்பு போன்ற பயிர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அறுவடையை கொடுத்துவிடும். ஆனால் திருமணம் என்பது அனைத்து காலத்திலும் பிரச்சினைகளை சமாளித்து அறுவடை கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக அறுவடை அளிக்கக்கூடிய ஒன்று. கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.

6949) திதிக்கு எதிரே உள்ள பாகையை என்ன வென்பர்? நட்சத்திரக் கணக்கு

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812