திங்கள், 24 செப்டம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் 9429) பஞ்ச சபைகள் எவை? ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை 9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு 9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம் 9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை 9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம் 9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை 9435) பஞ்ச தாண்டவங்களும் எவை? ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம் 9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர் 9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர் 9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை 9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி 9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண். 9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை 9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை 9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை 9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை 9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம் 9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது? நித்தியபூஜை 9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை

திங்கள், 17 செப்டம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் 9414) விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா? கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்து பூசிக் கொள்ள வேண்டும். 9515) புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைக்கலாமா? கூடாது 9416) புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்றவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்? தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். அதன்பின் காலைக் கழுவலாம். மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிக்கலாமா? தவிர்ப்பது நல்லது 9417) சோப், ஷாம்போ போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்கலாமா? கூடாது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் தலையில் சிறிது தண்ணீரை தெளித்தபின் போகலாம். 9418) ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் செய்யக்கூடாதவை எவை? மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்து குளித்தல், புதுத் துணி உடுத்தல், பெரியவர்களுக்கு திதி கொடுத்தல். 9419) தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெளியூர் பயணம் செய்யலாமா? கூடாது 9420) தெய்வ காரியங்களுக்கு முதலில் செல்ல வேண்டியது கணவனா, மனைவியா? கணவன் 9421) மனைவி எதற்கு முதலில் செல்வது நல்லது? இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு 9422) எவற்றின் மீது உட்காரக்கூடாது உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் 9423) கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாதவை எவை? சாப்பாடு, உப்பு, நெய், (கரண்டியை பாவிக்கலாம்) 9424) இடது கையால் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது. 9425) நாம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது ஆலயத்தில் சற்று நேரம் அமர்ந்து விட்டு வருகிறோம். எல்லா ஆலயங்களிலும் இவ்வாறு அமர்ந்துவிட்டு வர வேண்டுமா? இல்லை. சிவாலயங்களில் மட்டுமே அவ்வாறு அமர்ந்துவிட்டு வரவேண்டும் 9426) இது ஏன்? நம்மைப் பின் தொடர்ந்து சிவனுடைய பூதகணங்கள் நம் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். 9427) விஷ்ணு கோயில்களில் தரிசனம் செய்தபின் அமர்ந்துவிட்டு வரலாமா? கூடாது 9428) விஷ்ணு கோயில்களில் ஏன் இவ்வாறு அமர்ந்துவிட்டு வரக்கூடாது என்கிறார்கள்? ஏனென்றால் அப்போது தான் லட்சுமி நம்முடன் வீட்டிற்கு வருவாள். அதிர்ஷ்டம் பொங்கும் என்பது ஒரு கருத்து.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி குபேரனுடன் தொடர்புகொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகா லட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது. லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது. ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய (உருவம் அல்ல) உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகா லட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம். தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம். லட்சுமி விரதங்கள் மகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை ‘மகாலட்சுமி பஞ்சமி’ என்று அழைப்பர். அன்று முதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச் சிறந்தது. இதேபோன்று கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமியை ‘ஸ்ரீ பஞ்சமி’ என்று அழைப்பார்கள். அன்றும் மகாலட்சுமியை மனமுருகி வணங்கி அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெறலாம். வாசலில் மாக்கோலமிடுவது ஏன்? மகாலட்சுமி என்றென்றும் நம்மோடு இருந்து நல்லருள் புரியவும் நம்மை விட்டு நீங்காதிருக்கவுமே ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து நீராடி வாசலில் மாக்கோலமிட்டு மகாலட்சுமியை நம் இல்லங்களுக்கு வரவேற்க வேண்டும். அதேபோன்று வீட்டின் தலைவாயிலைத் துடைத்து படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து மகாலட்சுமியை நினைத்து போற்றி பூஜிக்க வேண்டும். மகா லட்சுமி வீட்டு வாயில்களில் ஐந்து வடிவங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆகவே தினமும் வீட்டு வாயிலைத் துப்புரவு செய்து கோலமிடுவதாலும் மாவிலைத் தோரணம், மாலைகள், வாழைகள் கட்டுவதால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியுறுவாள். சந்தனம், பன்னீர் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தரும் அனைவரையும் பன்னீர் தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகை ததும்ப வரவேற்க வேண்டும். சந்தனம் திருமகளோடு அவதரித்து ஐந்து மரங்களில் ஒன்றாகும். அவரை யானை துதிக்கையால் நீராட்டுவதை பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது. இதனால் லட்சுமி தேவி அந்த சுப கைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம். குளத்தைக் காப்பது குல தெய்வங்களேயாகும். ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டு வருவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலோங்கும். பூஜிக்கத் தகுந்த மகா பாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப் பெண்மணிகள். இவர்கள் கிரக லட்சுமியாகத் திகழ்பவர்கள். ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச் சொல் கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும். இல்லங்களில் செல்வம் பெருகும். குங்குமம் குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். - ஈ. ஆகாஷ் கே. ஈஸ்வரலிங்கம் 9386) சனிக்கிழமை எந்தெந்த நட்சத்திரங்கள் வந்தால் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல? ரேவதி, புனர்பூசம், பூசம், உத்தராடம், அஸ்தம், ரேவதி. 9387) திதி என்பது எந்த மொழிச் சொல்? வடமொழிச் சொல் 9388) திதி என்ற சொல்லுக்குரிய அர்த்தம் என்ன? தொலைவு 9389) திதி என்பது என்ன? வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயர். 9390) மொத்தம் எத்தனை திதிகள் உள்ளன? 15 9391) பதினைந்து திதிகளையும் தருக? பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி. 9392) சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும் திதிகள் எவை? அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளும் 9393) ஞாயிற்றுக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? அஷ்டமி 9394) திங்கட்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? நவமி 9395) செவ்வாய்க்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? சஷ்டி. 9396) புதன்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? திரிதியை 9397) வியாழக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? ஏகாதசி 9398) வெள்ளிக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? திரயோதசி 9399) சனிக்கிழமை எந்த திதி வந்தால் நற்பலன் தரும்? சதுர்த்தசி 9400) ஞாயிற்றுக்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக்கூடாது? சதுர்த்தசி 9401) திங்கட்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது சஷ்டி 9402) செவ்வாய்க்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது? சப்தமி 9403) புதன்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது? துவிதியை 9404) வியாழக்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக் கூடாது அஷ்டமி 9405) வெள்ளிக்கிழமை எந்த திதி வந்தால் சுப காரியங்கள் செய்யக்கூடாது? நவமி 9406) சனிக்கிழமை எந்த திதி வந்தால் சுபகாரியங்கள் செய்யக்கூடாது சப்தமி

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812