திங்கள், 30 ஏப்ரல், 2012

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் சடங்குகள் 9113) மனித பிறவியில் எத்தனை கட்டமாக கிரியை செய்கின்றனர்? மூன்று 9114) அந்த மூன்று கட்டங்களையும் தருக? பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் 9115) பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என நடத்தப்படும் சடங்குகளை என்னவென்பர்? கிரியை 9116) பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் செய்யப்படும் சடங்கு என்ன? பும்ஸவனம் 9117) கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு எது? பும்ஸவனம் 9118) கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு என்ன? சீமந்தம் 9119) குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டி செய்யப்படும் சடங்கு என்ன? சீமந்தம் 9120) இந்த சீமந்த சடங்கு தற்போது என்னவாக நடத்தப்படுகிறது? வளைகாப்பு 9121) குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு என்ன? ஜாதகர்மம் 9122) இதன்போது என்ன செய்யப்படும்? தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர். 9123) குழந்தைக்கு நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை எது? ஜாதிகாமம் 9124) குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சியை என்னவென்பர்? நாமகரணம் 9125 முதல் முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்கச் செய்யும் கிரியை எது? நிஷக்ராமணம் 9126) ஆறு மாதத்தில் சோறும் நெய்யும் தயிரும் தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பதை என்னவென்பர்? அன்னப்பிராசனம் 9127) பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் சடங்கு என்ன? வித்தியாரம்பம்
அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் சடங்குகள் 9113) மனித பிறவியில் எத்தனை கட்டமாக கிரியை செய்கின்றனர்? மூன்று 9114) அந்த மூன்று கட்டங்களையும் தருக? பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் 9115) பிறப்பிற்கு முன், பிறந்த பின், இறந்த பின் என நடத்தப்படும் சடங்குகளை என்னவென்பர்? கிரியை 9116) பெண் கருவுற்ற மூன்று மாதத்தில் செய்யப்படும் சடங்கு என்ன? பும்ஸவனம் 9117) கருவில் இருக்கும் சிசுக்கு எந்த ஊறும் உண்டாகாதவாறு இறைவனை பிரார்த்திக்கும் சடங்கு எது? பும்ஸவனம் 9118) கருவுற்ற பெண்ணுக்கு நான்கு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யும் சடங்கு என்ன? சீமந்தம் 9119) குழந்தையின் நலன் பொருட்டு சில தேவர்களை வேண்டி செய்யப்படும் சடங்கு என்ன? சீமந்தம் 9120) இந்த சீமந்த சடங்கு தற்போது என்னவாக நடத்தப்படுகிறது? வளைகாப்பு 9121) குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் சடங்கு என்ன? ஜாதகர்மம் 9122) இதன்போது என்ன செய்யப்படும்? தேனும் நெய்யும் கலந்து தேவதைகளுக்கு நிவேதிப்பர். 9123) குழந்தைக்கு நீண்ட ஆயுள், புத்தி கொடுக்க பிரார்த்திக்கும் கிரியை எது? ஜாதிகாமம் 9124) குழந்தைக்கு தந்தை வழியிலோ அல்லது தாய் மரபிலோ இறைவன் திருநாமத்தையோ பெயராக சூட்டி மகிழும் நிகழ்ச்சியை என்னவென்பர்? நாமகரணம் 9125 முதல் முறையாக குழந்தையை வீட்டை விட்டு வெளியில் கொண்டு வரும் பொருட்டு, குழந்தையின் யாத்திரைகள் அனைத்தும் மங்களமாக இருக்கச் செய்யும் கிரியை எது? நிஷக்ராமணம் 9126) ஆறு மாதத்தில் சோறும் நெய்யும் தயிரும் தேனும் கொடுத்து குழந்தை நீண்டு வாழ பிரார்த்திப்பதை என்னவென்பர்? அன்னப்பிராசனம் 9127) பள்ளியில் சேர்க்கும் நாளில் செய்யப்படும் சடங்கு என்ன? வித்தியாரம்பம்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


சூரியன்
9089) பிரம்மன் - விஷ்ணு - சிவன் ஆகிய மும் மூர்த்திகளின் பிரதிநிதியாக விளங்குபவன் யார்?
சூரியன்
9090 கண்ணாரக் காணக் கூடிய ஏக மூர்த்தியாக விளங்குபவன் யார்?
சூரியன்
9091) சூரியனின் நிறம் எது?
இருண்ட சிவப்பு
9092) சூரியன் எந்தப் பூவின் நிறத்தை உடையவன்?
செம்பருத்திப் பூவின்
9093) கச்சியப்பரின் புதல்வனாக விளங்குபவன் யார்?
சூரியன்
9094) ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார்?
சூரியன்
9095) ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் சூரியன் என்று எதில் கூறப்பட்டுள்ளது?
யட்சப்பிரச்சன்னத்தில்
9096) ஆன்மாவை பிரதிபலிப்பவன் எவன்?
சூரியன்
9097) நவக்கிரகங்களில் அரசன் யார்?
சூரியன்
9098) ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டு மானால் ஜாதகத்தில் என்ன அமைய வேண்டும்?
சூரிய பலம்
9099) கதிரவன் நிலை பெறும் இடம் எது?
சதயம் எனும் பிரமாதம் ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான்
9100) இராமன், இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றது எந்த மந்திரத்தால்?
ஆதித்ய ஹிருதய
9101) சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
சரீர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியும்
9102) வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம் எது?
காயத்ரி
9103) காயத்ரிக்கு உரியவன் யார்?
கதிரவன்
9104) ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் எது?
ஜனன லக்னம்
9105) முதல் பாவத்திற்குக் காரகன் யார்?
சூரியன்
9106) சுயநிலை, சுய உயர்வு, செல்வா க்கு, கெளரவம், ஆற்றல், வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்ன டத்தை நேத்திரம், உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு முதலியவற் றின் காரகன் யார்?
சூரியன்
9107) பிதுர்காரகன் யார்?
சூரியன்

9108) சூரியனது குணம் எது?
சாத்வீகம்
9109) கதிரவனின் திக்கு எது?
கீழ்த்திசை
9110) சூரியன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் ஏற்படும் நன்மை என்ன?
ராஜரீக வாழ்வு உண்டாகும்
9111) சாம, தான, பேத, தண்ட உபாயங்களில் சூரியனைச் சார்ந்தது எது?
தண்ட
9112) ஆதவனின் அதிதேவதை யார்?
அக்னி.

கே. ஈஸ்வரலிங்கம், 

தலைவர்/ஸ்தாபகர் 

தமிழர் நற்பணி மன்றம்


சூரியன்
9089) பிரம்மன் - விஷ்ணு - சிவன் ஆகிய மும் மூர்த்திகளின் பிரதிநிதியாக விளங்குபவன் யார்?
சூரியன்
9090 கண்ணாரக் காணக் கூடிய ஏக மூர்த்தியாக விளங்குபவன் யார்?
சூரியன்
9091) சூரியனின் நிறம் எது?
இருண்ட சிவப்பு
9092) சூரியன் எந்தப் பூவின் நிறத்தை உடையவன்?
செம்பருத்திப் பூவின்
9093) கச்சியப்பரின் புதல்வனாக விளங்குபவன் யார்?
சூரியன்
9094) ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார்?
சூரியன்
9095) ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் சூரியன் என்று எதில் கூறப்பட்டுள்ளது?
யட்சப்பிரச்சன்னத்தில்
9096) ஆன்மாவை பிரதிபலிப்பவன் எவன்?
சூரியன்
9097) நவக்கிரகங்களில் அரசன் யார்?
சூரியன்
9098) ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டு மானால் ஜாதகத்தில் என்ன அமைய வேண்டும்?
சூரிய பலம்
9099) கதிரவன் நிலை பெறும் இடம் எது?
சதயம் எனும் பிரமாதம் ரூபத்தில் கதிரவன் நிலை பெறுவான்
9100) இராமன், இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றது எந்த மந்திரத்தால்?
ஆதித்ய ஹிருதய
9101) சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
சரீர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியும்
9102) வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம் எது?
காயத்ரி
9103) காயத்ரிக்கு உரியவன் யார்?
கதிரவன்
9104) ஜாதகத்தில் முக்கியமான முதல் பாவம் எது?
ஜனன லக்னம்
9105) முதல் பாவத்திற்குக் காரகன் யார்?
சூரியன்
9106) சுயநிலை, சுய உயர்வு, செல்வா க்கு, கெளரவம், ஆற்றல், வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்ன டத்தை நேத்திரம், உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு முதலியவற் றின் காரகன் யார்?
சூரியன்
9107) பிதுர்காரகன் யார்?
சூரியன்

9108) சூரியனது குணம் எது?
சாத்வீகம்
9109) கதிரவனின் திக்கு எது?
கீழ்த்திசை
9110) சூரியன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் ஏற்படும் நன்மை என்ன?
ராஜரீக வாழ்வு உண்டாகும்
9111) சாம, தான, பேத, தண்ட உபாயங்களில் சூரியனைச் சார்ந்தது எது?
தண்ட
9112) ஆதவனின் அதிதேவதை யார்?
அக்னி.

திங்கள், 16 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்

(அட்டமா சித்திகள்)

9067) அட்டமா சித்திகள் எவை?

அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

9068) அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல் எது?

அணிமா

9069) மலையைப் போல் பெரிதாதல் எது?

மகிமா

9070) காற்றைப் போல் இலேசாய் இருத்தல் எது?

இலகிமா

9071) மலைகளாலும் வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாய் இருத்தல் எது?

கரிமா

9072) மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய அவற்றைப் பெறுவது எது?

பிராத்தி

9073) கூடு விட்டு கூடு பாய்தல் எது?

பிரகாமியம்

9074) நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்து வதை என்னவெண்பர்?

ஈச்சத்துவம்

9075) அனைத்தையும் வசப்படுத்தும் செயலை என்ன வென்பர்?

வசித்துவம்

(சித்ரா பெளர்ணமி)

9076) ஒரு தடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்த அன்னை யார்? பார்வதி தேவி

9077) இந்த ஓவியத்தை பார்த்து பார்வதி தேவியின் தோழியர்கள் என்ன கூறினார்கள்? உயிர் கொடுங்கள் என்று வேண்டினர்

9078) அன்னை உமையாள் சித்திரத்திற்கு என்ன செய்தாள்?

உயிர் ஊட்டினாள்

9079) உயிர் ஊட்டியதும் இந்த சித்திரம் என்னவாக மாறியது?

அழகான இளைஞனாக

9080) உமையாள் இந்த இளைஞனுக்கு என்ன பெயர் சூட்டினார்?

சித்ர குப்தன்

9081) சித்ர குப்தன் என்று பெயர் சூட்டக் காரணம் என்ன?

சித்திரத்தில் இருந்து வந்ததால்

9082) உமையாள் பின்பு சித்ர குப்தனை என்ன செய்தாள்?

சிவபெருமானிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறி அவருக்கு ஏதாவது பொறுப்பைக் கொடுக்குமாறு கூறினார்.

9083) அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல உதவியாக ஒருவர் வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர் யார்?

எமதர்மராஜன்

9084) சிவபெருமான் உடன் என்ன செய்தார்?

சித்ரகுப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார்.

9085) பாவ புண்ணிய கணக்குகள் எப்போது எழுதப்படுகிறது?

ஒவ்வொரு சித்ரா பெளர்ணமி அன்றும்

9086) சித்ரா பெளர்ணமி அன்று விரதத்தை ஆரம்பித்து என்ன செய்ய வேண்டும்?

சித்ரா குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்

9087) பெளர்ணமி நிலவு உதயமானதும் என்ன செய்ய வேண்டும்?

சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு பூஜைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில் கொப்பி இவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

9088) உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதம் இருந்தால் என்ன நடக்கும்?

சித்திரகுப்தன் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தை குறைத்தும் எழுதுவார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

இறை திருவுருவங்கள்

9029) கிடந்த கோலம் எத்தனை வகைப்படும்?

இரு வகைப்படும்

9030) அந்த இருவகை கிடந்த கோலங்களையும் தருக

சமசயனம், அர்த்த சயனம்

9031) சமசயனம் என்பது எதனை?

கிடந்த கோலத்தில் கிடத்தலை

9032) அர்த்த சயனம் என்பது எதனை?

பகுதிக் கிடத்தல்

9033) கிடந்த கோலம் எந்த தெய்வத்துக்கு உரித்தான கோலம்?

விஷ்ணுவுக்கு

9034) அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது எந்த சயனம்?

சமசயனம்

9035) அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது எந்த சயனம்?

அர்த்தசயனம்

9036) கூத்தாடிய கோலம் எந்த தெய்வ சிற்பங்களுக்கு உரியதாக உள்ளது?

சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம்.

அட்ஷய திருதி

9037) அட்சய திருதியை எப்போது வரும்?

சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள்

9038) அட்சய திருதியை அன்று என்ன செய்வது நல்லது?

ஆலயங்களுக்குச் சென்று இறையருள் பெறுவது நல்லது

9039) அன்று நல்லது செய்தால் என்ன நடக்கும்?

நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார்.

9040) க்ஷயம் என்றால் என்ன?

தேய்தல், குறைந்து போதல், மறைதல்.

9041) அக்ஷயம் என்றால் என்ன?

வளர்தல், நிறைதல்.

9042) திருதியை என்றால் என்ன?

மூன்றாவது நாள் என்பதாகும்.

9043) திதி என்பது என்ன?

நாள், தினம்

9044) திதிகளில் சிறப்புப் பெற்றது எது?

அட்சய திருதியை

9045) திதிகளில் சிறப்புப் பெற்றது அட்சய திருதியை என்று கூறியவர் யார்?

மகாகவி காளிதாசர்

9046) அட்சயம் என்றால் என்ன?

வளருதல்

9047) அள்ள அள்ள வளர்ந்து கொண்ட பாத்திரம் எது?

அட்சய பாத்திரம்

9048) அள்ள அள்ள வளர்வது அட்சய பாத்திரம் போல் அட்சய திருதி என்பது எது?

செல்வத்தை மென்மேலும் வழங்கக் கூடியது.

9049) அட்சய திருதியையன்று பூஜிக்க வேண்டிய தெய்வங் கள் எவை?

மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னபூரணி, கலைமகள், குபேரன்.

9050) கண்ணன் அவலை என்ன சொல்லி சாப்பிட்டார்?

அட்சயம்

9051) கண்ணன் அட்சயம் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டதால் என்ன நடந்தது?

அஷ்ட லட்சுமிகளும் குசேலர் வீட்டிற்கு வந்ததாகக் கதை.

9052) இந்த சம்பவம் நடந்தது எந்த தினத்தில்?

அட்சய திருதியை தினத்தில்

9053) அட்சய திருதியை அன்று குசேலர் சரித்திரத்தைப் பார்த்தால் என்ன நடக்கும்?

குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஜதீகம்.

9054) மஹாலட்சுமி மஹா விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் எது?

வளர்பிறை திருதியை

9055) அமாவாசையாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன் வளர்பிறையாக மாறக் காரணமானவர் யார்?

சிவன்

9056) சிவன் ஆசியளித்த தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இணைந்து என்னவாக சிறப்புற்றது?

அட்சய திருதியையாக

9057) குலேசன் சரித்திரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர் யார்,

குசேலர்

9058) குசேலர் கிருஷ்ணருக்கு என்ன கொடுத்தார்?

அவல்

9059) மஹாபாரதத்தில் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவர் யார்?

துச்சாதனன்

9060) துச்சாதனன் துயில் உரிய ஆரம்பித்தவுடன் பாஞ்சாலி என்ன செய்தாள்?

தன் மானம் காக்க கதறி அழுதாள்.

9061) அவளின் அபயக் குரல் கேட்ட கண்ணன் என்ன செய்தான்?

அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன்னான்.

9062) கண்ணன் அட்சயம் என்று சொன்னவுடன் என்ன நடந்தது?

திரெளபதியின் புடவை குறைவில்லாமல் வளர்ந்தது.

9063) இந்த சம்பவம் நடந்த தினம் எது?

அட்சய திருதியை அன்று

9064) அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் எது?

திருதியை தினம்

9065) பாண்டவர்கள் காட்டில் இருந்தபோது அன்ன பஞ்சம் தீர்க்க கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினம் எது?

திருதியை தினத்தில் தான்

9066) குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினம் எது?

திருதியை தினம்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

இறை திருவுருவங்கள்

9022) கோயில்களில் இறைவனின் திருவுருவங்களை எந்த கோலங்களில் படைப்பர்?

நின்ற, இருந்த, கிடந்த மற்றும் கூத்தாடிய
கோலங்களில் படைப்பர்.

9023) இவற்றில் நின்ற கோல இறையுருவை என்னவென்று கூறுவர்?

ஸ்தானகமூர்த்தி என்று

9024) ஒரு காலை மடக்கி ஒரு காலை கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை என்னவென்று கூறுவர்?

சுகாசனமூர்த்தி என்று

9025) கிடந்த கோலத்தில் இருக்கும் இறையுருவை என்ன வென்று கூறுவர்?

சயனமூர்த்தி என்று

9026) நடனமாடும் கோலத்தில் உள்ள இறையுருவை என்னவென்று கூறுவர்?

நிருத்தமூர்த்தி என்று

9027) சிற்பங்களில் இருந்த கோலத்தில் எத்தனை ஆசனங் கள் பயன்படுத்தப்படுகின்றன?

ஆறு ஆசனங்கள்

9028) சிற்பங்களில் பயன்படுத்தப்படுகின்ற அந்த ஆறு ஆசனங்களையும் தருக.

சுகாசனம், வீராசனம், பத்மாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், லலிதாசனம் என்ற ஆறு ஆசனங்கள் சிற்பங்க ளில் பயன்படுத்தப்படுகின்றன.

9029)கிடந்த கோலம் எத்தனை வகைப்படும்?

இரு வகைப்படும்

9030)அந்த இருவகை கிடந்த கோலங்களையும் தருக

சமசயனம், அர்த்த சயனம்

9031)சமசயனம் என்பது எதனை?

கிடந்த கோலத்தில் கிடத்தலை

9032)அர்த்த சயனம் என்பது எதனை?

பகுதிக் கடத்தல்

9033)கிடந்த கோலம் எந்த தெய்வத்துக்கு உரித்தான கோலம்?

விஷ்ணுவுக்கு

9034)அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது எந்த சயனம்?

சமசயனம்

9035)அடி முதல் இடைவரையுள்ள உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது எந்த சயனம்?

அர்த்தசயனம்

9036)கூத்தாடிய கோலம் எந்த தெய்வ சிற்பங்களுக்கு உரியதாக உள்ளது?

சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம்.

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம்

மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டியையும் நுவரெலியாவையும் இணைக்கும் நகரமாக விளங்கும் கம்பளை நகரில் கோவில் கொண்டு ஆன்ம கோடிகளைக் காத்து இரட்சிக்கும் லோக மாதாவாகிய அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் கடந்த 27 ஆம் திகதி கரகஸ்தாபனத்துடன் ஆரம்பமாகியது. இங்கு தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகின்றது. இங்கு தினமும் காலை 9 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.30 மணிக்கு விசேட பூஜையும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 04 ஆம திகதி நடைபெறுவதுடன், தீர்த்தத் திருவிழா 5 ஆம் திகதி நடைபெறும். இவ் ஆலயத்தில் திருவிழா காலத்தில் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

கம்பளை எனும் பெயரைப் பெறுமுன் இந்நகர் “மகா வலிகம்” உறுவேலகம் என்றெல்லாம் விளிக்கப்பட்டுள்ளது. இடத்தால் நதிக்கும் நதியால் இடத்திற்குமாக இக் காரணப் பெயர் வழக்கத்தில் பழக்கமாகி ஐக்கியமாகிவிட்டது. கங் + பல, (நதியில் + ஏறு இறங்குதுறை) = கம்பொல எனப் பெயர் மாறியது. 1860 ம் ஆண்டளவில் இங்கிருந்து தமிழ்நாடு சென்ற சிலரிடம் தனது தங்கை மகனை அதாவது காளிமுத்துவை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார் அவரது மாமனார்.

1866/67 களில் எட்டே வயது நிரம்பிய காளிமுத்துவை இவர் நம்பிக்கையான நபர் மூலம் அழைத்து வரச் செய்தார். காளிமுத்து தேவரோடு வந்த 10, 15 பேரைக் கொண்ட குழுவில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாண்டித் தேவர், வேலுத் தேவர், குப்புசாமித் தேவர் ஆவர். இதில் பாண்டித் தேவர், “ஓர் வேல்” தோட்டத்திலும், வேலுத் தேவர் “சமர்செட்” தோட்டத்திலும் தங்கிவிட குப்புசாமித் தேவரும் நாகலிங்கத் தேவரும் வேறு தோட்டங்களிலும் குடியேற காளிமுத்து தேவர் கம்பளையிலேயே தங்கிவிட்டார்.

அமரர் காளிமுத்துத் தேவரும் அவரது நண்பர்களும் மாலை வேளைகளில் விளையாடுவது வழக்கம். தற் சமயம் கோயிலிருக்கும் இடம் முன்பு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக இருந்தது. இவ் விடத்தில் விளையாடுவது வழக்கமாகும். அவ்விடயத்தில் சூரியகாந்திச் செடிகளை வெட்டி ஒரு பக்கமாக இழுத்துக் குவிக்கத் தலைப்பட்ட போது காளிமுத்து வெட்டி வேரோடு இழுத்த சூரியகாந்திச் செடியின் அடியில் ஏதோ இலிங்கம் போன்ற ஒரு பொருளைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.

செய்தியறிந்த ஏனையவர்கள் அவ் விடத்தை வந்து பார்வையிட்ட போது அங்கு ஓர் இலிங்க வடிவினைக் கொண்ட ஒரு பொருளிருப்பதைக் கண்டனர். அதனை அடிப்படையாகக் கொண்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பளையைச் சேர்ந்த முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளர் ஏ. சொக்கலிங்கம் இந்தத் தகவல்களை வழங்கினார். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பல வருட காலமாக ஆலய பரிபாலன சபையின் தலைவரான சிவன் ஞானசேகர் தலைமையில் பல திருவிழாக்களை கண்டு வருகிறது.

கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

எழில் கொஞ்சும் மத்திய மாகாணத்தின் தலைநகரமான கண்டி மாநகரிலே கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஆலயம் ஸ்ரீ செல்வ விநாயகர் பெருமாள் ஆலயம். இவ்வாலயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சோமசுந்தரேஷ்வர சுவாமிகளின் பங்குனி உத்தர மகோற்சவம் கடந்த 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இங்கு எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆனந்த வல்லி சமேத சந்திரசேகர பெருமானின் வெளி வீதி வலம் வந்து அருள்பாலிப்பார். அதனைத் தொடர்ந்து பால்குட பவனியும் இடம்பெறும்.

அன்று காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சமுக விநாயகருக்கும், ஸ்ரீ சோமஸ்கந்தருக்கும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாத பெருமானுக்கும் விசேட அஸ்டோத்திர சத சங்காபிஷேகமும், விசேட அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை விசேட மேளக்கச்சேரியும் பஜனையும் பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 6 மணி முதல் வசந்த மண்டப பூஜையும் சுவாமிகள் உள் வீதி வலம் வருதலும் இடம் பெறும். அன்று இரவு 7.30 மணியளவில் பஞ்சரதத்தில் எழுந்தருளி இரத பவனி இடம் பெறும்.

இந்த ரத பவனி கோவிலிலிருந்து புறப்பட்டு பேராதனை வீதி வழியாக வந்து வடுகொட பிட்டிய வீதி வழியாக கொழும்பு வீதி, கொட்டுக்கொடல்ல வீதி, கந்த வீதி, மாநகர சபை சந்தி, திருகோணமலை வீதி வழியாக கொட்டுக்கொடலை வீதி மேல் பக்கம் சென்று தலதா வீதி கீழ் பக்கம் மணிக் கூண்டு ஊடாக பேராதனை வீதி, வெம்பிளி தியேட்டர் சந்தி வரை வந்து ஆலய வெளி வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும்.

பஞ்சரத பவனியில் கலந்து கொள்ளும் சகல அடியார்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆலய வரலாறு

பதினேழாம் நூற்றாண்டின் முற் பகுதியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் ஒரு பெரியகுளம் இருந்தது. அக்குளத்தின் அருகே ஓர் அரச மரமும் அதன் பக்கத்தில் குன்று ஒன்றும் அமைந்திருந்தன.

அக்குளத்தில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பது வழக்கமாக இருந்தது. குறிப்பாக அக்கால இராசதானியைச் சேர்ந்த பிரமுகர்களின் துணிகளை அக்குளத்திலே சலவை செய்ததாக அறியப்படுகிறது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி ஸ்ரீ குருசாமி என்பவரும் அவரது உதவியாளர் ஒருவரும் அக் குளத்தின் அருகில் சிறிது காலம் தற்காலிகமாகத் தங்கி இருந்தனர். ஒரு நாள் சுவாமி ஓர் அதிசயமான கனவு கண்டார். விநாயகர் சிலையொன்று குளத்தின் குன்றின் அடிப்பாகத்தில் இருப்பது அவரது கனவில் தோன்றியது.

மறு நாள் சுவாமி அயலவர்களை குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது கனவில் தோன்றியவாறே அங்கு விநாயகர் சிலை இருப்பதைக் கண்ணுற்றார். சிலையின் முன்புறம் மணலில் குப்புறப் புதைந்தவாறு இருந்தது.

சிலையின் முதுகுப் புறத்தை சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கும் சலவைக் கல்லாகப் பாவித்தனர். சுவாமியவர்கள் அந்த விநாயகர் சிலையை மக்களின் உதவியோடு எடுத்து வந்து, தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். முன்பு அழுக்கு நீக்குவதற்கு கருவியாகப் பயன்பட்ட விநாயகர் அன்று முதல் அடியார்களின் அக அழுக்குகளை நீக்கும் கர்த்தாவாகி அருள்பாலித்து வருகின்றார். இப்படி பல வரலாறுகளைக் கொண்ட இவ் ஆலயம் கண்டி நகரிலே புகழ் பெற்ற இந்து ஆலயமாக இருந்து வருகிறது.

பங்குனி உத்திரம்

திருமண விரதம்

பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்கவேண்டும் இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகா விஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அடையலாம்.

பங்குனி உத்தர நன்னாளில் சிறப்பு: இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத் ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது. ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது. அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்தர நன்னாளில்தான்.

சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு இந்த பங்குனி உத்தரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான் மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.

அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனைப் படைப்பதாக கூறினார்.

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரம்

திருமண விரதம்

பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்கவேண்டும் இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகா விஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும் சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அடையலாம்.

பங்குனி உத்தர நன்னாளில் சிறப்பு: இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத் ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது, இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது. ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது. அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்தர நன்னாளில்தான்.

சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு இந்த பங்குனி உத்தரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான் மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.

அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனைப் படைப்பதாக கூறினார்.

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812