வியாழன், 25 ஏப்ரல், 2013

இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வழிபாட்டு முறைகளை மையமாக வைத்து ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ என்ற நூல் ‘சைவசித்தாந்த பண்டிதர்’ ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மாவினால் எழுதி வெளியிட்டு வைக்கப்பட்டது. விழா கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ‘கிரியா கிரமஜோதி’ பிரம்மஸ்ரீ இலக்சுமி காந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜீ சர்வரூபானந்த மகராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இதில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தா டி. எம். சுவாமிநாதனும் கலந்து கொண்டார். வெளியீட்டுரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் நிகழ்த்தினார். ஆய்வுரையை ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா நிகழ்த்த விதந்துரைகளை அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் சின்னத்துரை தனபாலா, கண்டி இந்து மாமன்ற உபசெயலாளர் பொன் இராஜநாதன், வங்கியாளர் மு. சதானந்தன், கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய ஆசிரியை திருமதி வளர்மதி சுமாதரன் ஆகியோரும் நிகழ்த்தினர். ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ நூலில், முதல் வணக்கம் செலுத்தும் விநாயகர் தொடக்கம், சிவதரிசனபலனை தந்தருளுமாறு நாம் வேண்டும் சண்டேஸ்சுவரர் வரை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து ஒவ்வொரு தெய்வங்கள் பற்றியும் மிக விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இறைவனுக்கு சாத்தும் பத்திரபுஸ்பங்கள் இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது வாரிசுகளோடு இந்து மதத்தைப் பற்றி கூறுவதற்கேற்ற முறையில் விரதங்கள், உற்சவ தினங்கள், தோஷபரிகாரங்கள் என்பன எல்லாம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. ஆன்மீகக் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள், சித்த மருத்துவம், இவை மூன்றும் ஒருசேர உள்ளடக்கப்பட்ட நூலாகவும் இது விளங்குகின்றது. இலங்கை வங்கியின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரியான ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மா இவரது ஆன்மீக வாழ்வில் பல அரிய சாதனைகளை புரிந்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஓர் அம்சம்தான் அவரது இந்த நூல் வெளியீடாகும். இந்நூலை அனைவரும் கற்று பயன் பெறுவதுடன் நூலாசிரியரது ஆன்மீக பயணம் இன்னும் தொடர வேண்டி அனைவரும் பிரார்த்திப்போமாக! திருமதி வளர்மதி சுமாதரன் ஆசிரியை - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்

ஸ்ரீ துர்க்காதேவி

கே.ஈஸ்வரலிங்கம் 9972) துர்க்காதேவியின் தோற்றங்கள் எத்தனை? ஒன்பது 9973) துர்க்காதேவியின் ஒன்பது தோற்றங்களையும் தருக. வந்ஹி துர்கா, வனதுர்கா, ஜலதுர்கா, ஸ்தூல துர்கா, விஷ்ணுதுர்கா, பிரும்ம துர்கா, ருத்ர துர்கா, மகா துர்கா, சூலினி துர்கா 9974) வந்ஹி என்றால் என்ன? நெருப்பு 9975) நெருப்பின் வாதையைப் போக்கி நம்மை குளிர்விப்பவள் யார்? வந்ஹி துர்கா 9976) தேஜஸ¥ம் சக்தியும் தருபவள் யார்? வந்ஹி துர்கா 9977) காட்டில் வழி தெரியாமல் துன்புறுபவர்களுக்கு வழிகாட்டி பத்திரமாக வெளிக் கொணர்ந்து காப்பவள் யார்? வனதுர்கா 9978) நீரில் மூழ்கித் தத்தளிப்பவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பவள் யார்? ஜலதுர்கா 9979) ஜலதுர்காவை தாராதேவி என யார் வணங்குபவர்கள்? பெளத்தர்கள் 9980) நெருக்கடி நேரத்தில் பயத்தைப் போக்கி மங்கலம் தரும் தேவி யார்? விஷ்ணு துர்கா 9981) விஷ்ணு துர்காவை வேறு எவ்வாறு அழைப்பார்கள்? சாந்தி துர்கா 9982) திரிபுர சம்ஹார காலத்தில் சூலாயுதம் ஏந்தி நின்றவள் யார்? சூலினி துர்கா 9983) சூலினி துர்கா யாருக்கு துணையாக சூலாயுதம் ஏந்தி நின்றாள்? சிவனுக்குத் துணையாக 9984) அமிர்த மதன காலத்தில் அசுரர்களைத் தவிர்த்து தேவர்களுக்கே அமிர்தம் கிடைக்கும்படி செய்த மோகினி உருவம் தாங்கியவள் யார்? ஆசூரி துர்கா 9985) குண்டலினி யோகத்தில் ஈடுபட்டிருக்கும் யோகிகளுக்கு, இதய கமலத்தில் ஞான ஒளியாகத் திகழ்பவள் யார்? தீப துர்கா 9986) லவணாசுரனை அழிக்க இராமனுக்கு சக்தி கொடுத்தவள் யார்? லவண துர்கா

புதன், 10 ஏப்ரல், 2013

வாஸ்து சாஸ்திரம்

கே.ஈஸ்வரலிங்கம் 9953 கட்டடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும் சொல் எது? வாஸ்து 9954 ஒரு நிலத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறை எது? வாஸ்து சாஸ்திரம் 9955 வாஸ்து சாஸ்திரம் பற்றி வேதங்களில் எத்தனையாவது வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது? நான்காவது வேதத்தில் நான்காவது வேதம் எது? அதர்வணவேதம் 9956 வேதத்தில் வாஸ்து சாஸ்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது? கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் 9957 வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம் என்ன? மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்வதுடன் கட்டப்படுகின்ற கட்டடம் மனிதன் இயற்கையுடனும் இப்பிரபஞ்சத்தின ஒழுங்குடனும் இணைந்து போவதற்கு உதவுவதுமாகும். 9958 வாஸ்து பூமி பூஜையின் அடிப்படை தத்துவம் என்ன? ஒரு கட்டடமொன்று கட்டப்படும் முன்பு மண்ணின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே. 9959 அதர்வ வேதம் தவிர வேறு எந்த நூலில் வாஸ்து ஸ்திரம் பற்றி எழுதப்பட்டுள்ளது. பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூலில் 9960 பிருஹத் சம்ஹிதை என்னும் சமஸ்கிருத சோதிட நூல் யாரால் ஆக்கப்பட்டுள்ளது? வராஹமிஹிரரால் 9961 தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுந்த நூல்கள் எவை? மயமதம், மானசாரம், விஸ்வகர் மீயம் 9962 மயமதம் யாரால் எழுதப்பட்டது? மயனால் 9963 மானவிரம் யாரால் எழுதப்பட்டது? மானசாரரால் 9964 விஸ்வகர் மீயம் யாரால் எழுதப்பட்டது? விஸ்வகர்மாவால் 9965 கட்டடம் கட்டுவதற்கான மனையில் கட்டடத்தின் அமைவிடம் நோக்கும் திசை மற்றும் கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எது? வாஸ்து புருஷ மண்டலம் 9966 வாஸ்து புருஷ மண்டலம் என்பது என்ன? ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவம். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு யார் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது? பல்வேறு தேவர்கள் 9967 இம்மண்டலத்தின் மையப்பகுதிக்கு யார் அதிபதியாக உள்ளார்? வேதகால முழுமுதற்கடவுள் 9968 வேதகால முழுமுதற் கடவுள் யார்? பிரம்ம தேவன் 9969 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் யாருக்கு உரியவை? பிரம்ம தேவனுக்கு 9970 முக்கியமான திசைகள் எத்தனை? எட்டு 9971 இந்த முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்களை என்னவென்று அழைப்பார்கள் அட்ட திக்கிப் பாலர்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(9948) இல்லங்களில் பூஜைக்கு வைக்கக்கூடாத படங்கள் எவை? கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்த்தி இருக்கும் முருகன் படம், தனித்த காளி, சனீஸ்வர பகவானின் படம், நவ கிரகங்களின் படம், தலைவிரி கோலங்களில் உள்ள அம்பிகை படங்கள். (9949) சுபகாரியங்களை நடத்த ஏன் எல்லோரும் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும் போது சுப நிகழ்ச்சிகள் குறைவின்றி – சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையை தேர்ந்தெடுக்கின்றனர். (9950) பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? குத்து விளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது. (9951) சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்சி, மாலையும் துளசி மாலையும் அணிந்து செல்வது ஏன்? வனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர துளசியின் கரையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கின்றார். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. கார்த்திகை மாதம் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும் இந்த துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. ஐயப்ப பக்தர்கள் உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹா விஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். (9952) ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாத சந்தர்ப்பங்கள் எவை? நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812