திங்கள், 1 ஏப்ரல், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(9948) இல்லங்களில் பூஜைக்கு வைக்கக்கூடாத படங்கள் எவை? கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுதபாணி, தலைக்கு மேல் வேல் உயர்த்தி இருக்கும் முருகன் படம், தனித்த காளி, சனீஸ்வர பகவானின் படம், நவ கிரகங்களின் படம், தலைவிரி கோலங்களில் உள்ள அம்பிகை படங்கள். (9949) சுபகாரியங்களை நடத்த ஏன் எல்லோரும் வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும் போது சுப நிகழ்ச்சிகள் குறைவின்றி – சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையை தேர்ந்தெடுக்கின்றனர். (9950) பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா? குத்து விளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது. (9951) சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்சி, மாலையும் துளசி மாலையும் அணிந்து செல்வது ஏன்? வனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர துளசியின் கரையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கின்றார். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. கார்த்திகை மாதம் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும் இந்த துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. ஐயப்ப பக்தர்கள் உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹா விஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். (9952) ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்கக் கூடாத சந்தர்ப்பங்கள் எவை? நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812