திங்கள், 25 மே, 2015

(11349) வி என்றால் என்ன?

பட்சி (மயில்) (11350) சாகன் என்றால் என்ன? சஞ்சரிப்பவன் (11351) விசாகன் என்று அழைப்பது யாரை? முருகனை (11352) முருகனை விசாகன் என்று அழைப்பது ஏன்? மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து எந்த கடலில் போர் புரிந்தார்? திருச்செந்தூரில் (11353) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து தரையிலே போர் புரிந்த இடம் எது? திருப்பரங்குன்றம் (11354) முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து வானத்திலே போர் புரிந்த இடம் எது? திருப்போரூர் (11355) போரின் பெயரால் இந்த ஊருக்கு ஏற்பட்ட பெயர் என்ன? போரூர் (11356) பழங்காலத்தில் இத்தலத்தை எவ்வாறு அழைத்தனர்? சமராபுரி, யுத்தபுரி (11357) ஸ்ருதி என்றால் என்ன? ரிக், யஜுர். சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். வேதம் என்ற சொல்லுக்கு சத்தியமான தத்துவத்தை அறியச் செய்யும் அறிவின் மூல இருப்பிடம் என்று பொருள். வேதம் எந்த மனிதராலும் உருவாக்கப்படவில்லை. அநாதி காலம் தொட்டே இருந்து வருகிறது. கடவுளின் சுவாசக் காற்றாக விளங்குகிறது. பிரம்மா, வேதத்தைக் கொண்டே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். வேதத்திற்கு ச்ருதி (ஸ்ருதி) என்ற பெயருண்டு, ச்ரோத்ரம் என்ற சொல்லுக்கு காது என்று பொருள் சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை ஸ்ருதி என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812