செவ்வாய், 19 ஜனவரி, 2016

(14311) கோயில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்?


சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறுகையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.
இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் கட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின் இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும்.
(14312) ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
(14313) சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?
சுவாமிக்கு சாத்த வேண்டும் என பக்தர்கள் காணிக்கையாக வஸ்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதுவே கூடுதலாக சேர்ந்து விடுகிற பொழுது வீணடிக்காமல் இருக்க ஏலத்தில் விடுகிறார்கள். இதன் மூலம் மூன்று வழிகளில் பயன் கிடைக்கிறது.
பக்தர்களின் வஸ்திர காணிக்கை நிறைவேறுகிறது. ஏலத்தின் மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. வஸ்திரங்கள் வீணாகாமல் மற்றவர்கள் உபயோகிக்கவும் முடிகிறது. சுவாமிக்குப் படைக்கப்படும் நிவேதன பிரசாதத்தை உண்பது போல, சுவாமிக்கென பக்தியோடு அணிவிக்கும் வஸ்திரங்களையும் உபயோகிக்கலாம்.
(14314) வியாழக்கிழமைகளில் மெளனவிரதம் இருப்பது ஏன்?
மெளனமாக இருந்து பழகினால் மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மெளனம்) என்பது ஞானவரம்பு என்று ஒளவையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி மெளன மொழி. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார்.
(14315) தட்சிணாமூர்த்திக்குரிய வேறு பெயா்கள் என்ன?
ஊமைத்துரை, மெளனச்சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812