திங்கள், 28 மே, 2018

தீபாராதனை

தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.


கற்பூர தீபாராதனைகள் எதனை உணர்த்துகின்றன?
கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது.


சாப்பிட்ட பின்பு குளிக்கலாமா?

காலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்து குளித்தபின்பே சாப்பிடவேண்டும். எக்காரணத்திற்காகவும் சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாது. சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு வெப்பம் அவசியம் தேவை. சாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும். எனவே செரிப்பதற்கு நேரமாகும். வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும். காலப்போக்கில் பசியும் எடுக்காது. இதனால் தான் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர். இதையே பெரியோர் குளிக்கும் முன் சாப்பிட்டால் போஜனம் கிடைக்காது எனவும் சொல்லி வைத்தனர்.


வால்மீகி இராமாயணத்திற்கும், தமிழில் கம்பர் எழுதிய இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?

வால்மீகி இராமனை மனிதப்பண்புகளில் சிறந்தவனாக வைத்துப் பாடினார். கம்பர் தெய்வமாகவே கொண்டு இலட்சிய நாயகனாக்கினார்.

திருமதி, ஸ்ரீமதி, சௌபாக்யவதி இவை மூன்றில் ஒரு பெண்ணை குறிப்பிடும்போது எது பொருத்தமாக இருக்கும் ?

முன்பெல்லாம் எல்லாப் பெண்களையும் ஸ்ரீமதி என்றும், தம்மினும் வயது குறைந்தவர்களை சௌபாக்யவதி என்றும் சொல்லி வந்தார்கள். ஸ்ரீமதி என்பது வடமொழியாக இருப்பதால் தமிழாக்க வேண்டுமென்று கருதிய சிலர் திருமதி என்று எழுதுகிறார்கள். ஸ்ரீமான் என்பதை திருவாளர் என்று மொழி பெயர்த்தார்கள். அது பழைய இலக்கியத்தில் கண்ட சொல்தான். ஆனால், ஸ்ரீமதி என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு திருமதி அல்ல ; திருவாட்டி என்பதே சரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812