புதன், 14 அக்டோபர், 2020

Navarathri 17.10.2020

நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள். விரதமுறை: நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாகக் கருதி வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்ததால் இவளை, சாமுண்டா என்றும் அழைப்பர். இவள் நீதியை காக்க கோபமாக இருக்கிறாள். இவளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும். இரண்டாம் நாள் அம்பிகையை வாராஹியாக வழிபடவேண்டும். இவளுக்கு தயிர்ச்சாதம் படைத்து வணங்க வேண்டும். மூன்றாம் நாள் அம்பிகையை இந்திராணியாக வணங்க வேண்டும். அரச பதவிகள், அரசு பதவிகள் அனைத்தும் இவள் அருளாலேயே கிடைக்கும். இவளுக்கு எலுமிச்சை சாதம் படைக்க வேண்டும். நான்காம் நாள் அம்பிகையை வைஷ்ணவியாக கருதி வழிபட வேண்டும். இவளை விஷ்ணு சக்தி என்பர். இவளுக்கு கல்கண்டு சாதம் படைக்க வேண்டும். ஐந்தாம் நாள் அம்பாளை திரிசூலம், பிறைசந்திரன், பாம்பு ஆகியவை தரித்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். இவளை மஹதீ என்றும் அழைப்பர். சர்வமங்களம் தரும் இவள் தர்மத்தின் திருவுருவமானவள். உழவர்கள், உடலுழைப்பு கொண்டவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும் வரத்தைத் தருபவள். இவளுக்கு பால் பாயசம் படைக்க வேண்டும். ஆறாம் நாள் நாள் அம்பாளை மயில் வாகனத்துடன், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்பர். இவள் தைரியத்தை அருளுபவள். பாவங்களைப் போக்குபவள். குமார கண நாதம்பா என்றும் இவளை அழைப்பர். இவளுக்கு சித்ரான்னம் படைக்க வேண்டும். ஏழாம் நாளில் இருந்து அம்பிகையை கல்வி தெய்வமாக கருதி வழிபட வேண்டும். இதன் முதல் கட்டமாக அவளை வித்யாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரையை ஆசனமாகக் கொண்டு, தாமரை மலரேந்தி, யானைகளை இருபுறமும் நிறுத்த வேண்டும். இவளது கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வஜ்ராயுதம், தாமரை, வில், கமண்டலம், தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, சக்கரம், மணி, அமுதகலசம், பாசம், சூலம் ஆகியவை இருக்க வேண்டும். இவளுக்கு பால் அன்னம் நிவேதனம் வைக்க வேண்டும். எட்டாம் நாளில் அம்பிகையை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். இவள் சரஸ்வதி வடிவம் தாங்கியவள். அன்ன வாகனம் அமைத்து, அதில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி, வெள்ளைத் தாமரை மேடை அமைத்து, அதில் சரஸ்வதியாக அம்பிகையை அலங்கரித்து அமர்த்த வேண்டும். வீணை இருக்கக்கூடாது. கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். விரல்களை சூசிஹஸ்தம் என்னும் நிலையில் வைக்க வேண்டும். அதாவது ஆள்காட்டி விரல் மட்டும் விரிந்திருக்க மற்ற விரல்கள் மடங்கியிருக்க வேண்டும். இவ்வுலகம் பொய்யானது, அவ்வுலகம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது என்ற ஞானத்தை இந்த முத்திரை பக்தர்களுக்கு உணர்த்தும். இவளுக்கு புளியோதரை நிவேதனம் செய்ய வேண்டும். அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். இந்நாளில் அம்பிகையை நரசிம்ஹியாகவும் அலங்கரிப்பதுண்டு. இவளுக்கு வெண்பொங்கல் படைக்க வேண்டும். நவராத்திரி பிரார்த்தனை: நவராத்திரி நாட்களில் மாலைவேளையில் பக்தி சிரத்தையோடு, அம்பாள் முன்னிலையில் இதனைப் படிப்பவர்கள் அம்பிகை அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812