ஞாயிறு, 11 ஜூலை, 2010

உடப்பு தீ மிதிப்பு

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்த சாரதி, ஸ்ரீ திரெளபதா தேவி தேவஸ்தானத்தின் மகோற்சவம் 10ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் 11 ஆம் திகதி 11 மணிக்கு உட் கொடியேற்றமும் 15 ஆம் திகதி காலை 9 மணிக்கு வெளிக் கொடியேற்றமும் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மகாபாரதக் கதை ஆரம்பமாகும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணிக்கு இங்கு ஸ்ரீ திரெளபதாதேவி சுயம்வரமும் 22 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி திருக்கல்யாணமும் 23 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையும் 24 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஸ்ரீ திரெளபதாதேவி துகிலுரிதலும் 25 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பாண்டவர் வனம் புகுதலும் 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுணன் தவநிலையும் 27 ஆம் திகதி காலை 7 மணிக்கு வீரபத்திரர் அபிஷேகமும் விசேட பூஜையும் உள் வீதி வெளி வீதி உற்சவமும் அக்கினிக் குண்டக் காவலும் மாலை 4 மணிக்கு தேத்தரசன் கோட்டை பிடித்தலும் 28 ஆம் திகதி காலை 6 மணிக்கு செந்தழல் மூட்டும் திருமிகு காட்சியும் பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்ரீ திரெளபதா தேவி வாது முடிப்பும் விசேட வசந்த மண்டப பூஜையும் இரவு 7 மணிக்கு அனற் குளத்தில் அன்பர்கள் நடனமிடும் அதியற்புத பக்திப் பரவசம் மிக்க தீ மிதிப்பாகிய பூமிதிப்பு உற்சவமும் இடம்பெறும்.

29 ஆம் திகதி இரவு 7 மணிக்கு அன்னை ஸ்ரீ திரெளபதாதேவி ஊர்வலமும் 11 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் 12 மணிக்கு கொடி இறக்கமும் மாவிளக்கு பூஜையும் உற்சவமூர்த்திகள் அம்பாள் தத்தம் யதாஸ்தானம் எழுந்தருளலும் மங்களப் பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பத்மஜெயராம குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெறும், உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம பூசகர் முத்தையா பரந்தாமன் பூசகர் கரகம் எடுப்பார். இவ்வாலயத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 7 மணிக்கு பாற் குடப் பவனியுடன் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.

விசேட உற்சவ தினங்களில் மாலை 5.30 மணிக்கு அருள்மிகு திரெளபதை அம்மன் கரக உற்சவம் ஆலயத்திலிருந்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அருள்கூடி வரும் அற்புதக் காட்சி இடம்பெறும்.

விசேட உற்சவ தினங்களில் காலை 9 மணிக்கு அபிஷேகமும் தொடர்ந்து பூஜையும் மாலை 7 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் விநாயகர், ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமானின் அலங்கார பவனியும் மேள வாத்திய இன்னிசை விருந்துடன் ஊர்வலமும் நடைபெறும். விசேட தினங்களில் உடப்பூர் நாடக மன்றங்களின் பல் சுவை நாடகங்களும் இடம்பெறும்.

ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ திரெளபதாதேவி தேவஸ்தானத்தின் 108 அடி தவதள இராஜ கோபுரத் திருப்பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு 7 மணிக்கு பூமிதிப்பாகிய தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812