திங்கள், 19 ஜூலை, 2010

அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர்/ ஸ்தாபகர், தமிழர் நற்பணி மன்றம்

இறை உருவங்களுக்கு அணிகலன்கள்

6968) இந்து மத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிக்கலன்களாகி இருப்பவை எவை?

மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை.

6969) இந்த அணிகலன்களில் தலைக்கு மேல் அணியக் கூடியது எது?

மகுடம்

6970) மகுடங்களின் வகைகளைத் தருக.

கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம்.

6971) இந்த மகுடங்களில் திருமாலின் தலையில் இடம்பெறுவது எந்த மகுடம்?

கிரீட மகுடம்.

6972) தேவியர் மற்றும் முருகன், கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

கரண்ட மகுடம்

6973) சடையையே மகுடம் போல் அமைப்பதை என்னவென்று கூறுவர்?

சடா மகுடம்

6974) சடா மகுடம் எந்த தெய்வத்துக்கு அமைக்கப்படும்?

சிவனுக்கு

6975) மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு அமைக்கப்படும் மகுடம் எது?

ஜீவால மகுடம்

6976) ஜீவால மகுடத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

தீக்கிரீடம்

6977) காதில் அணியப்படும் அணிகலனை என்னவென்பர்?

குண்டலம்

6978) குண்டலம் எத்தனை வகைப்படும்?

இரண்டு

6979) அந்த இரண்டு வகையான அணிகலன்களையும் தருக.

பத்ர குண்டலம், மகர குண்டலம்

6980) இதில் விஷ்ணுவுக்கு அணிவிக்கப்படும் காதணியை எவ்வாறு அழைப்பர்?

மகர குண்டலம்

6981) சிவபெருமானின் காதணிகளாக இடம்பெறுபவை எவை?

பத்ர குண்டலமும் தோடும்

6982) சிவபெருமானின் எந்த காதில் பத்ர குண்டலம் விளங்கும்?

வலது காதில்

6983) சிவனின் இடது காதில் தோடு இடம்பெறுவது ஏன்?

சிவனின் இடது புறம்பாதி உடல், சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டிய இடது காதில் தோடு இடம்பெறுகிறது.

6984) அணிகலன்களில் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலனை என்னவென்பர்?

கண்டமாலை

6985) கண்டமாலையை வேறு எவ்வாறு அழைப்பர்?

கண்டிகை

6986) கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையை என்னவென்பர்?

ஆரம்

6987) இறைவனின் மேற்கையின் நடுவில் அணியப்படுவது எது?

கேயூரம்

6987) இடது தோளிலிருந்து வலப்புற இடுப்புவரை காணப்படுவது எது?

பூனூல்

6989) இந்த பூணூலை என்னவென்று அழைப்பர்?

யக்ஞோபவிதம்

6990) மார்பிற்குக் கீழும் உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலன் எது?

உதிரபந்தம்

6991) ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு என்னவென்று கூறப்படும்?

சன்னவீரம்

6992) சன்னவீரம் எந்த தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும்?

வீரத்துடன் தொடர்புடைய ஆண், பெண் தெய்வங்களுக்கு

6993) இதற்கு உதாரணமாக சில தெய்வங்களின் பெயர்களைத் தருக.

சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப் பிராட்டி.

6994) ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது எது?

கடிசூத்திரம்

6995) கடிசூத்திரத்தின் நடுவில் அமைக்கப்படுவது என்ன?

சிங்கம் அல்லது யாளி முகம்

6996) சிலம்பு எனும் அணிகலன் யாருக்கு உரியது?

மகளிருக்கு

6997) ஆடவருக்கு உரிய அணிகலன் எது?

கழல்

6998) இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் வேறு எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

தலையணி வகை, கைவிரலணி வகை, இடையணி வகை, துடையணி வகை, பாத அணி வகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812