திங்கள், 20 செப்டம்பர், 2010


அறநெறி அறிவு நொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர்/ ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

ஆய கலைகள் 64

7982) நீரில் நடத்தலை என்னவென்பர்? ஜல ஸ்தம்பம்

7983) காற்றில் நடத்தலை என்னவென்பர்? வாயு ஸ்தம்பம்

7984) திட்டி ஸ்தம்பம் என்பது எதனை? கண் பயிற்சி

7985) வாக்கு ஸ்தம்பம் என்பது என்ன? வாய்ப் பயிற்சி

7986) சுக்கில ஸ்தம்பம் என்பது என்ன? இந்திரியக்கட்டு

7987) கன்ன ஸ்தம்பம் என்பது என்ன? மறைந்தவற்றைக் காணுதல்

7988) கடக ஸ்தம்பம் என்பது என்ன? யுத்த ஆயுதங்களை வசீகரித்தல்

7989) அவஸ்தைப் பிரயோகம் என்பது என்ன? ஆத்மாவை இயக்குதல்

விநாயகர் விரதம்
7990) மும்மணிகளைப் போல் விநாயகருக்குரிய மூன்று சிறப்பான விரதங்களைத் தருக? சுக்கிர வார விரதம், சதுர்த்தி விரதம், விநாயக ஷஷ்டி விரதம்.

7991) வாரந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சுக்கிரவார விரதம்

7988) மாதந்தோறும் அனுஷ்டிக்கும் விரதம் எது? சதுர்த்தி

7992) வருடத்தில் ஒரு தடவை அனுஷ்டிக்கும் விரதம் எது? விநாயக ஷஷ்டி விரதம்

7993) சுக்கிரவார விரதம் எப்போது அனுஷ்டிக்கப் படுகிறது? வெள்ளிக்கிழமை தோறும்

7994) இந்த விரதத்தை எப்போது ஆரம்பிப்பது நல்லது? வைகாசி மாத வளர்பிறையில் வரும் முதலாவது வெள்ளிக்கிழமையில்

7995) இவ்விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்கலாம்? இரவு ஒரு நேரம் பால் பழம் அல்லது பலகாரம் உட்கொள்வது நன்று. இயலாதவர்கள் ஒரு நேர உணவு உண்டு விரதமிருக்கலாம்.

7996) விநாயகப் பெருமான் உற்பவமானது எப்போது? விநாயக சதுர்த்தியன்று

7997) இந்த விரதத்தை எப்போது அனுஷ்டிக்க வேண்டும்? ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தித் திதியன்று

7998) அந்த நாளில் சதுர்த்தி எந்த வேளையில் நிற்க வேண்டும்? மத்தியானத்தில்

7999) ஆவணி சதுர்த்தி விரதம் பற்றி எந்த புராணத்தில் சிறப்பித்து கூறுப்பட்டுள்ளது? கந்தபுரணத்தில்

8000) இந்த விரதத்தைப் பற்றி பஞ்சபாண்டவர் களுக்கு உபதேசித்தது யார்? சூத முனிவர்

8001) பாண்டவர்களுக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது எதனால்? துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால்

7999) பாண்டவர்கள் காட்டிலே மிகுந்த கஷ்டமும் மன வேதனையும் அடைந்திருக்கும் நிலையில் யாரை சந்திக்கிறார்கள்? சூத முனிவரை

8000) சூதமுனிவரிடம், தமது கஷ்டங்கள் நீங்கி சுகமாக வாழ வழி கேட்டவர் யார்? தருமர்

8001) அதற்கு வழியாக சூதமுனிவர் உபதேசித்தது எதனை? விநாயக சதுர்த்தி விரதத்தை

8002) சூதமுனிவர் தருமரிடம் வேறு என்ன கூறினார்? இந்த விரதத்தை அனுஷ்டித்து பயன் பெற்ற வர்களின் வரலாற்றை.

8003) இந்த விரதத்தை அனுஷ்டித்து தமயந்தி அடைந்த பலன் என்ன? நளனை அடைந்தது.

8004) கிருஷ்ணர் அடைந்த பயன் என்ன? ஜாம்பவதியையும் சியமந்தக மணியையும் பெற்றுக் கொண்டது.

8005) இராமன் அடைந்த நன்மை என்ன? சீதையை மீட்டது

8006) இந்திரன் அடைந்த பயன் யாது? சுரப் பகையை வென்றது

8007) பகீரதன் பெற்ற பலன் யாது? கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது.

8008) இந்த விரதத்தை பாண்டவர்கள் அனுஷ்டித்ததால் அடைந்த பயன் என்ன? உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தை பெற்றது.

8009) இஷ்டசித்திகளை பெற, நினைத்த காரிய சித்தியை விரும்புவோர் எந்த விரதத்தை கைக்கொள்ளலாம்? விநாயக சதுர்த்தி விரதத்தை

8010) விநாயக சதுர்த்தி அன்று முதன் முதலில் என்ன செய்ய வேண்டும்? அதிகாலையில் துயிலெழுந்து நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடு பட வேண்டும்.

8011) மத்தியானம் உணவு உண்ணலாமா? ஒரு பொழுது உண்ணளாம்

8012) இந்த உணவில் எந்த எண்ணெய் சேர்க்கக் கூடாது? நல்லெண்ணெய்

8013) இரவில் உணவு உண்ணலாமா? பட்டினி இருக்க முடியாதவர்கள் பால் பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

8014) விநாயக சதுர்த்தி பூஜையின் போது நிவேன தனங்களாக படைக்கக் கூடியவை எவை? அறுசுவை உணவும் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை.

8015) இவை ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையாக நிவேதனம் செய்ய வேண்டும்? 21. (வெள்ளரிப் பழத்தை 21 துண்டுகளாக வெட்டி வைக்கலாம்)

8016) விநாயக சதுர்த்தி பூஜையில் இடம்பெறும் இன்னொரு முக்கிய அம்சம் என்ன? 21 பத்திரம், 21 புஷ்பம், 21 அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சனை செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812