செவ்வாய், 12 ஜூன், 2012

கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் பிரதோஷம் 9209) பிரதோஷ விரதம் யாருக்கு உகந்தது, சிவபெருமானுக்கு 9210) பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன் என்ன? சகல செளபாக்கியங்களையும் தரும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும், எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். 9211) ஒவ்வொரு மாதமும் எத்தனை பிரதோஷம் வரும்? இரு. 9212) அந்த இரு பிரதோஷமும் எப்போது வரும்? வளர் பிறையில் ஒன்றும் தேய்பிறையில் ஒன்றும். 9213) பிரதோஷம் என்பது எத்தனை நாழிகை? ஏழரை 9214) பிரதோஷ காலம் எது? திரயோதசி நாளில் சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும். 9215) பிரதோஷ காலத்தை நேரத்தில் குறிப்பிடுவதாக இருந்தால் எவ்வாறு குறிப்பிடலாம்? மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை. 9216) வளர்பிறையிலோ தேய்பிறையிலோ மாலை வேளையில் திரயோதசி வந்தால் அதனை எவ்வாறு அழைப்பர்? மஹா பிரதோஷம். 9217) சனிக்கிழமைகளில் வந்தால் அதனை என்ன பிரதோஷம் என்று கூறுவார்கள்? சனிப் பிரதோஷம். 9218) சிவபெருமான் நஞ்சை உண்டது ஏன்? தேவர்களின் துன்பம் போக்க. 9219) சிவபெருமான் கயிலாய மலையில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையில் திரு நடனமாடியது எப்போது? பிரதோஷ காலத்தில். 9220) பிரதோஷ காலத்தில் சிவபெருமான் திருநடனம் புரிந்தது எதற்காக? அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ. 9221) பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் வழிபடும் போது எதனை செய்வது விசேட பலனைத் தரும்? சோம ஆக்த பிரதட்சணம் 9222) பிரதோஷ காலத்தில் சிவபெருமானை எந்த கோலத்தில் வழிபடுவதுசிறப்பு? நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடும் கோலத்தில். 9223) சிவாலயத்தில் நந்தி பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்தவழியே திரும்பி வந்து நந்தி தேவரை வணங்கி வலப்புறமாக கோமுகி வரை வந்து, மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் கொம்புகளுக்கி டையே சிவபெருமானை வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வணங்கும் ஷி(சிlழி என்ன பெயர்? சோம சூக்த பிரதட்சணம். 9224) சோமசூக்த பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன் என்ன? ஒரு வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். 9225) சனிப் பிரதோஷ தினத்தில் இந்த சோம சூக்த பிரதட்சணம்செய்தால் கிடைக்கும் பலன் என்ன? ஐந்து வருடத்திற்கு ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812