திங்கள், 4 ஜூன், 2012

அறநெறி அறிவுநொடி கே. ஈஸ்வரலிங்கம், தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம் (பொட்டு) 9188) பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பது எது? பொட்டு 9189) முகத்தின் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை என்னவென்பர்? நெற்றிப் பொட்டு 9190) மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் எது? நெற்றிப் பொட்டு 9191) யோகக் கலை இதனை எவ்வாறு அழைக்கிறது? ஆக்ஞா சக்கரம் 9192) எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் எதனை வெளிப்படுத்தும்? சக்தியை 9193) மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை எவை? முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் 9194) இதனை உணர்த்தக்கூடிய செயலொன்றை கூறலாமா? நம் மனம் கவலையால் வாடும்போது தலைவலி அதிகமாவது அதனால்தான். 9195) நெற்றியில் இடப்படும் திலகம் என்ன செய்கிறது? அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது 9196) வேறு என்ன செய்கிறது? நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. 9197) வட்ட வடிவ முகத்துக்கு எந்த வடிவிலான பொட்டு பொருத்தமானது? நீளமான பொட்டுகள் 9198) நீளமான பொட்டு எவ்வாறான அழகை தரும்? இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியது போல் அழகு தரும். 9199) இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால் எந்த இடத்தில் பொட்டு வைக்க வேண்டும்? புருவங்களுக்கு மத்தியில் 9200) இதய வடிவ முகம் கொண்டவர்கள் எந்த பொட்டை இட்டுக்கொண்டால் முகம் அழகாக இருக்கும்? குங்கும பொட்டை 9201) இவர்களது முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டக் கூடியது எந்த வடிவிலான பொட்டு? சிறிய அளவில் நீளமான ஸ்டிக்கர் பொட்டுக்கள் 9202) ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் எந்தப் பகுதியில் எந்தப் பொட்டு வைத்தால் அழகு அதிகரித்து காட்டப்படும்? புருவத்திற்கு மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைத்தால் 9203) இவர்களுக்கு நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தால் என்ன நடக்கும்? வசீகரமாக இருக்கும் 9204) சதுர முகம் உள்ளவர்கள் எந்த வடிவமான பொட்டுகளை வைக்கலாம்? அகலம் அதிகமுள்ள பொட்டுகளை 9205) வேறு எந்த வடிவமான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்? உருண்டை மற்றும் முட்டை 9206) வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் இவர்களுக்கு எப்படி இருக்கும்? எடுப்பாக இருக்கும் 9207) முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு எந்த பொட்டுகள் பொருந்தும்? எல்லா வகை பொட்டுகளும் 9208) இவர்களது நெற்றி அகலமாக இருந்தால் எந்த வடிவ பொட்டு பொருந்தும்? நீளமான, முக்கோண பொட்டுகள் 9209) அகலமான நெற்றியாக இருந்தால் இவர்கள் எங்கு பொட்டு வைக்க வேண்டும்? புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல். ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிN~கம்; கொழும்பு, ஆமர்வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ்ஷ மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 10ம் திகதி காலை 7.15 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 08ம் திகதி காலை 7 மணி முதல் மறுநாள் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். இன்று 4ம் திகதி கர்மாரம்பம், விநாயகர் வழிபாடு, மஹா கும்பாபிஷேகம் ஆச்சார்ய வர்ணம், தேவ பிராமண அனுஞ்ஞை, ஸ்ரீ மஹா காளி அனுஞ்ஞை, பரிவார மூர்த்திகள் அனுஞ்ஞை திரவிய சுத்தி திரவிய யாகம், தனிபூஜை, ஸ்தல விருட்ச பூஜை, யந்திர பூஜை, பேரீதாடணம், மஹா கணபதி ஹோமம், நூதன மூர்த்திகள் பூர்வாங்க கிரியை, நூதன மூர்த்திகள் கிரம பிரதட்சணம் என்பன நடைபெறும். நாளை 5ம் திகதி காலை 8 மணிக்கு குபேர சம்புடித தனகர்ச்சனை மஹா லட்சுமி ஹோமம், யந்திர பூஜை, தீபாராதனை என்பனவும் அன்று மாலை 5 மணிக்கு கிராம சாந்தி, பிரவேச பலி என்பனவும் இடம்பெறும். எதிர்வரும் 7ம் திகதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பூமிதேவி பூஜை, கங்கா பூஜை, கோ பூஜை, சூரிய அக்னி சங்கிரணம், மிருத் சங்கிரகணம் என்பனவும் 8ஆம் திகதி மாலை 3 மணிக்கு அங்குரார்ப்பணம், சிவாச்சார்ய இரட்சாபந்தனம் என்பனவும் நடைபெறும். எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும். பிரம்மஸ்ரீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் திருக்கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ சுசீந்திர குமார குருக்கள், உதவி அர்ச்சகர் பிரம்மஸ்ரீ வை. திருக்குமர சர்மா, பால சண்முகக் குருக்கள், லட்சுமி காந்த கேதீஸ்வர குருக்கள், சுதாகரக் குருக்கள், விக்னேஸ்வர குரக்கள், பைரவமூர்த்தி குருக்கள், தியாகராஜ குருக்கள், சிவபாலக் குருக்கள், அந்தர்ராம் குருக்கள், பிரபாகர குருக்கள், கு.க. வைத்தீஸ்வர குருக்கள், ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். எதிர்வரும் 10 ம் திகதி காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்றுமாலை 5 மணிக்கு சாயரட்சை, வசந்த மண்டப தீபாராதனை, திருமாங்கல்ய தாரணம் திருவூஞ்சல், நாட்டியாஞ்சலி, ஸ்வாமி வீதி, பிரதர்சனம் பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812